Pages

Monday, December 31, 2012

இது ஸ்டேடஸ் 28


31-12-2012
ஏன்டா நாளைக்கு வாழ்த்துச்சொல்ல முடிஞ்ச நம்மளுக்கு கடந்துகொண்டிருக்கும் வருசத்துக்கு நன்றி சொல்லத்தோணலயே !!!
நேற்றை நாளுக்கு நன்றி சொல்லி நாளைய நாளுக்கு வாழ்த்துச்சொல்லி இன்றைய நாளை நல்லா முடியுங்கடா.

30-12-2012
கறுப்பு படிந்த நாள்...
##மரணங்கள்#
##கொலை##காட்டுமிராண்டி##புற்றுநோய்.##
#வெட்கப்படுகிறேன்.# துக்கப்படுகிறேன்# கவலைப்படுகிறேன்#

29-12-2012
காலையில அம்மம்மாவோடு கோயிலுக்கு போனவள்,
மாமா என்று கத்திக்கொண்டு வந்து மஞ்சள் பூசிட்டாங்களாம் என்று சிணுங்கினாள் சயுரந்தி.
இப்பதானே ஆரம்பித்திருக்கிறாய் இன்னமும் ரசிக்கவேண்டி கிடக்கும்மா என்று நான்...##திருவாதிரை##மஞ்சள் நீராடல்

திருப்பள்ளியெழுச்சியின் இறுதிநாளில் மஞ்சள் குளித்து கடல்நீராடிய காலங்கள் எப்பொழுதும் மனதோடு ஈரங்களாய்.
மச்சாள்மாரைக் கண்டுபிடிப்பதற்கே உருவானதோ இந்நாள் என நினைத்த காலங்கள்.
ஆனால் பின்னைய நாட்களில் மஞ்சளுக்கு பதிலாக "சாயங்களை"(கோழிச்சாயம் என்பர் இங்கு) முகம்தெரியாவண்ணம் பூசி அசிங்கப்படுத்தினர்.##மஞ்சள் நீராடல்##

வழக்கமான நேரத்துக்கு வாற மகனோ, காதலனோ, புருசனோ வரவில்லை எண்டா, சாப்பிட்டானா இல்லையா என்றெல்லாமோ கேட்கிற அம்மாவோ, காதலியோ, பொஞ்சாதியோ கேட்கவில்லை எண்டா என்னமா கவலையா இருக்கு.##சாப்பிடல்ல## பாடசாலை வேலை

26 December
மரணங்கள் கொண்டாடப்படுவதில்லை.
உணர்வுகளின் வலியில் உள்ளத்தின் வெளிப்பாடாய்....
நினைவலைகளில் நீங்காத அத்தனை தொப்பூள் கொடிகளிலும்
நீளும் சுனாமி எனும் பிணந்தின்னி.##எங்கெங்கு காவு கொள்ளப்பட்டதோ அங்கெல்லாம் எமது கண்ணீப்பூக்களை மட்டும் காணிக்கையாக்குகிறோம்.## அஞ்சலி


22 December
சில திட்டமிடல்கள் அனைவரின் வருகைக்காக
சில திட்டமிட்ல்கள் சிலரின் வருகை தவிர்க்கைக்காக.
இயல்பாக நடைபெறுகின்ற விடயம்தான்.
## உணர்ந்தும் உணராமலும்##தெரிந்தும் சொல்லாமல்##முகாமைத்துவம்## வாழ்க்கை

21 December
எந்தக்கடவுளால், தேவதைகளால் அல்லது சாத்தான்களால் ஆசிர்வதிக்கப்பட்டதோ இன்னமும் தகர்ந்துவிடாமல் வாழுகிறது.
நாங்கள் ஏன் தவிக்கணும். வானம் உள்வரை வாழ்க்கை. காற்று உள்ளவரை மூச்சு. புதைக்கப்படுமுன் சுயமாய் சிதைக்கப்படுதல் தவறே! என்ஜாய் மச்சி

21 December
Dooms Day, Enjoy well. Fool's Day Celebration has Changed to Dec 21.
"Happy Fool's Day"

20 December
இன்னமும் சில மணித்தியாலங்கள்
காத்திருப்பு
அத்தனையும் படபடப்பு
நகரமுடியாத நரகம்
காதுகளுக்குள் இரைச்சல்
காற்று தீர்ந்துபோக மாட்டேங்குது
முட்டிக்கொண்டே இருக்கிறது கடலலை
இரவுப்பொழுதின் நிலாவை ரசியுங்கள் !
மேகம்முட்டும் காற்றைக் கிழித்து செல்ல
உரக்கக் கத்துங்கள்
அந்தச் சூரியன்
நாளையும் வரும் என்று!!

19 December
சில நண்பர்களுக்கு(?) உற்ற நண்பனாய் இருக்கிறேன். அவர்களோ உறவற்றவனாய் என்னை நினைக்கப்படுகையில் கவலைப்படுகிறேன். இது எனக்கு பழகிப்போனாலும். என்னில் மற்றவர்களுக்காக இருக்கிற(?) தன்மையானது சில எதிர்பார்ப்புக்களில் அன்பைக் கேட்டு நிற்கிறது என்பதை எண்ணிக்கொள்ள முடிகிறது. இருந்தபோதிலும் "நட்பு கொள்" அவ்வப்போது போதும். தொடர்ந்திருக்க எண்ணாதே##எனக்கு ##திருத்தி எழுதிய தீர்ப்புக்கள்##வாழ்க்கை

19 December
அனேகமாக வழங்கல்களில் சந்தோசம் அதிகம் தான். பெற்றுக்கொள்வதிலும் எடுத்துக்கொள்ளுவதிலும்.

18 December
அழகோ துயரோ
ஆர்க்கும் உயிர்ப்போ
உயிரின் துடிதுடிப்போ
ஸ்பரிசங்களின் சங்கீதங்களோ
சிலந்திவலையில் சிக்கிய ஏக்கங்களோ
மழை கவிதை கொண்டுவரும்

17 December
மழை. இடியுடனும் காற்றுடனும் தொடர்ச்சியாக. — at THETTATIVU

16 December
நீண்ட காலத்துக்குப்பிறகு எழுதி முடித்தேன். இல்லை எழுதியதை திருத்தி முடித்தேன். ## அவசர எழுத்துக்களில் பிழைகள் அதிகம்

13 December
இறக்கைகள் வலிக்கும் வரை
வானம் எனக்குமட்டும் - வலித்த
கைகளை இறக்கும்போதுதான்
பூமியின் அந்தத்தின்
ஒரு மூலையின் விளிம்பில்
இதயத்தின் ரத்தம் கொட்டப்படும் -
##வலிமிகு வாழ்க்கை##சுதந்திரக்காற்று## நான்

9 December
நனைத்துவிட்டுப் போகும் அன்புக்கு நிகர் ஏது?
நன்றி சொல்லிவிட்டாலும்
உள்ளத்துள் ஒலிக்கும் நகைச்சுவை நீ.

7 December
நான் போனால் என்ன.?
அத்தனை உருவாக்கத்தின் அத்திவாரத்தின் ஒருவனாய் இருப்பது எனக்கு போதும்.
உன்னைப்போல் இன்னமும் உருவாக்குவதே நோக்கம்.

6 December
சிலவற்றை இழக்கும் போதுதான் இன்னும் பலவற்றில் தேடல்கள் அதிகரிக்கின்றன.
பூக்களின் இலைகள் சருகுகளாக, புதிய இலைகளால் மரம் ஒளிச்சேர்க்கை செய்கிறது ##
வாழ்க்கை # இழப்பதும் # உருவாவதும்

6 December
இன்று ஒரு கலந்துரையாடல் கூட்டத்தில் ஆண்கள், ஆண் மாணவர்கள் படிக்கிற வீதம் குறைஞ்சு போச்சாம். வெளிநாட்டு மோகம்,விரைவில் உழைக்கணும் (கூலித்தொழில் செய்தாவது.), போன்ற எண்ணங்களால் ஆண்பிள்ளைகள் இன்னோரன்ன தொல்லைகளுக்குள்ளாகி கல்வியை தவறுவதாக சொல்லப்பட்டது. ##டேய் பசங்களா படிச்சிருங்கடா

6 December
ஐயப்ப சிந்தனைக்காக, வானொலியொன்றில்

"யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.
- திருமந்திரம்

காலையில் இறைவனுக்கு பச்சிலை இட்டு வணங்கியும், பசு, நாய், பூனை, காகம் போன்ற பிராணிகட்கு சிறிது உணவளித்தும், வறியார்க்கு சோறிட்டும், மற்றவர்கட்கு இன்சொல் கூறியும், நாம் வாழ்வோமாக. இதனால் எல்லா நலங்களையும் அடையலாம். உலகிற்கு நாம் உதவினால் உலகம் நமக்கு உதவுகிறது.

5 December
after two weeks am using my computer as new one. Formatted all data. Now born as new one...... but i lost my niece's many memorable photos.
## Changes ## Life pattern ## living pattern

3 December via Mobile
சில நல்ல செய்கைகளும் மற்றவர்க்கு காயம் செய்யும்.
##செய் அல்லது செய்யவிடு.##

2 December via Mobile
ஒடிந்துபோன சிறகுகளும்
ரணங்களும்
உலர்ந்த நினைவுகளில்
ஈரத்தடங்களும்
இறுதிமூச்சுவரை இருக்கும்
அஞ்சலிக்க ஏங்குவது கடமை அல்ல
எம் உணர்வு
--
ஒரு கட்டுரையை வாசித்த பின்.

1 December via Mobile
அழகிய நிலாப்பொழுதொன்று
கடந்து சென்றது... தம்பியுடையான் படைக்கஞ்ஞான்

30 November via Mobile
இருண்ட சுவரையும்
வெளிர்ச்சுவரையும்
அழகாக்க போதும்
ஓர் ஓவியம்

30 November via Mobile
தோயத் தோய
சலவை செய்தான்
தேயத் தேய
உருகி நிற்கிறது
நிலவு

30 November via Mobile
இன்னமும் சில மணித்தியாலயங்கள்..
சொல்லிய வாக்குறுதியை நிறைவேற்றத் தவறுகிறேனே..
என்னால் திருப்பித்தர இயலாமையை எப்படியும் நியாயப்படுத்த முடியாது. தவறுதல் பிழையே,
மன்னிப்பாயா? இன்னமும் முயற்சிக்கிறேன்.

29 November
மருமகள் சயுரந்தி விளையாட ஒரு கொட்டில்

27 November via Mobile
ஒவ்வொன்றும் பல என்றாக
யார் யாரோ உயிர் வாழ
தமிழ் என்கிற தாய்க்காக
தொப்பிழ்கொடி தொடுத்த
அத்தனை தாய்தந்தைகளுக்கும்
வணக்கங்கள்.!!!

26 November via Mobile
கொஞ்சமாய் ஆரம்பிக்குது காய்ச்சல்.
கடுமையாக கடுக்குது 'கட்டு.'
வலிமிகுவாக நித்திரையின்றி பாய்கொள்கிறேன். ## Starting Fever## not well ## paining

26 November via Mobile
நீ இன்னமும் வாழ்கின்றாய் என்கிற
எண்ணத்தில் வாழ்த்துக்கள்.
இல்லை என்றால் (அக) வணக்கம் உனக்காக.
தலைவன் நீ!!!

25 November via Mobile
காற்றினில் ஈரப்பதன்
கடந்துபோவது நீயா!!!
மழைத்தூறல்கள்
மனதில் கீறல்கள்...
கீற்றிடைவெளிகளில் எழுதப்படுவது "நீ"
என்கிற ஒற்றைக்
கற்றை

24 November via Mobile
கனவுகள் தின்னப்படும் பகல்கள் உண்டா
அறியமுடியவில்லை
கனவுகள் நீட்சிப்படுத்படுகவே —

24 November via Mobile
நண்பனொருவனின் சகோதரியின் கல்யாணம் சில கடமைகளோடு நான். நண்பா ! உனக்காக இதையும் செய்யத்தானே வேண்டும். அப்பா என்றிருக்க இரவுக்கும் வரட்டாம் என்கிறானே.
இப்பவே கண்ணக்கட்டுதே.


22 November via Mobile
நீ மற்றவர்க்கு எப்படியோ
தெரியாது. ஆனால் உனது முயற்சி, திறமை, கொஞ்சமாவது தொட்டுவிடும் தூரத்தில் என்னுடன்,
ஆனபடியால் உன்னையும் நான் நேசிக்கிறேன்..

18 November
நீ விட்டுச் சென்ற இடங்களில்
ஊசலாடுகிறது ...

இன்றைய படங்கள்

எனது அம்மா காலைச்சாப்பாட்டுக்கு சிலவேளை சட்டியில் சோற்றைப் போட்டு அப்படியே குழைந்து தருவா. சாப்பிட அருமையாக இருக்கும்.
Thursday, December 27, 2012

கடைசிப்பக்கம்


உமிழ்ந்து துடைத்து
உரசிச்சென்ற கண்கள்,
உதடுகள் சுருக்கி
உள்ளத்தை நெருக்கிவிடும்
புன்னகை,
கடந்துசெல்லும்போது
கரையும் நெஞ்சம்...

இரட்டைக்கதிரையில்
தோள்தடவி
'நாளையும் வரும்'
என்கிற
விடைபெறுதலில்
இருட்டை நச்சரித்து....

*'மண்டி'
கசக்கும்போது
கோப்பையில்
உதடுகள் மொய்க்கும்
தேனீர்...

இன்றைய பொழுது
கண்விழித்தபோது
நேற்றைய நாள்
கிழிக்கபட நாட்காட்டியில்
விரல்கள்...

ஒவ்வொரு கடைசிப்பக்கமும்
எழுதித்தீர்த்தபின்
முன்னெழுத்துக்களில் ஒரு
முரட்டுப்பார்வை...

வாசிக்கப்படும் போது....*தேனீர்க்கோப்பையில் வடிக்கப்படாத எஞ்சிய தேயிலையின் அடையல்பகுதிகள்Sunday, December 23, 2012

பெற்றோரே! இது உங்களின் கவனத்துக்கு...

(தமிழ்த்தந்திக்காக )

பல்கலைக்கழகம் என்ற இலக்கு சின்னப்பருவத்தில் படிக்கும்போது தெரிவதில்லை அல்லது எண்ணுவதில்லை.
ஏதோ படிக்கிறோம், அல்லது படிக்கத் திணிக்கப்படுகின்றோம், என்ற நிலையில் எமது கல்விநிலை அனேகமானோரிடம் காணப்படுகின்றது.


ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை என்ற கட்டாயத்துக்கும் பெற்றோரின் பெருமைகளுக்கும் என்றுமாய் முதலாவது திணிப்பு நாடகம் அரங்கேறுகிறது.

அப்பரீட்சையில்; பிள்ளைகளின் வயதுக்கு ஏற்ப அப்பரீட்சை போதுமானதாக இருந்தாலும், நமது நாட்டில் அனேக பிள்ளைகள் உடல், உள வளர்ச்சிகளில் முன்னேற்றம் காணப்படாதிருக்கின்ற நிலை பல பிரதேசங்களில் இருக்கின்றது.

இதற்கு எமது பிள்ளைகளின் வளர்ச்சிப்பருவங்களில் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குரிய சரியான போசணையளவு பேணப்பட்டு வளர்க்கப்படுவது குறைவு. இதற்காக இதுவரை சரியான சுகாதாரக் கட்டமைப்புக்கள் முறையாக ஆறு அல்லது ஏழு வயதுகளுக்கு மேல் இல்லை என்றே கூறத்தோன்றுகிறது.

சற்று பொருளாதார வசதி குறைந்த குடும்பப் பின்னணியில் உள்ள மாணவர்கள் இப்பிரச்சனைக்கு இயல்பாக உள்ளாக்கப்படுகின்றனர்.
நமது நாட்டில் நடுத்தர அல்லது அதற்கும் குறைந்த பொருளாதார வசதியுள்ள குடும்பத்தினரே கூடிய சதவீதத்தில் இருப்பதால், புலமைப்பரிசில் பரீட்சையானது பிள்ளைகளை மிகவும் கஸ்டத்துக்கும் அதிக மன உழைச்சலுக்கும் உள்ளாகக்கூடிய நிலையிருப்பது வருந்ததக்கதது. சாதாரணமாய் நாம் பார்க்கின்ற விடயம் இது.

இதற்கு ஒரு உதாரணமாக கடந்த பரீட்சையொன்றில் நடந்த உண்மையான விடயத்தை பகிர்கிறேன்.
'ஒரு மாணவன் வகுப்பில் கெட்டிக்காரன். அவனது பொருளாதார வசதிபடைத்த பெற்றோர் அவனை மிகவும் கஸ்டப்படுத்தியற்காக அவன் பரீட்சை மண்டபத்தில் சுட்டெண்ணை மட்டும் எழுதி விடைகளை எழுதாமல் வெறுமையாக கொடுத்திருந்தான்'. ஆய்வாக நிகழ்த்தப்பட்டதில் ஐந்தாம் தரத்தில் சித்தியெய்திய மாணவர்களில் அனேகம்பேர் உயர்தரத்தில் பல்கலைக்கழகத்தை தவறுகின்றனர்.

"பிள்ளைக்குரிய போதிய உடல் உளவளர்ச்சியையும் முறையான வழிகாட்டல்களையும் மேற்கொண்டால் எதுவும் வெற்றியே!."

ஐந்தாரம் தரத்திற்குப் பிற்பாடு பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில்; ஆறாந்தரத்தில், தமது பிள்ளைகள் மீது பெற்றோர்கள் பெருமளவில் அக்கறை செலுத்தத் தவறுகின்றனர். காரணம் கடந்தவருடம் பிள்ளையை கூடுதலாகக் கஸ்டப்படுத்தியாச்சு, ஆகவே என்னவாவது தன்னாலான செயற்பாடுகளை செய்யட்டும் என்ற மனப்பாங்கு அனேக பெற்றோரிடம் இருப்பது வழமையான விடயம். இது பெற்றோர் விடும் தவறு.
பிள்ளையின் தொடர்ச்சியான கல்வியின் தொடரறா ஒத்துழைப்பில் கவனக்குறைவு நடக்கிறது. இதனால் பிள்ளைகள் தமது மேல்வகுப்புக்களில் கஸ்டமான கற்றல்களுக்கு உள்ளாகின்றமை உள்ளங்கை நெல்லிக்கனி.


பின்னர் கல்விப் பொதுத் தராதர (க.பொ.த) சாதாரணதரப் பரீட்சைக்கு ஆயத்தமாகும் தருணம். இது பிள்ளையின் முயற்சியும் பயிற்சியும் நிறைந்த நிலையிருக்கவேண்டிய தருணம்.
ஆனால் பிள்ளைக்கு சரியான ஒத்துழைப்பும் தொடர்ச்சியான கவனமும் தரம் பதினொன்றிலேதான் அதுவும் கடைசித் தவணையிலேதான் அனேக பெற்றோரிடமிருந்து கிடைக்கின்றது. இதனால் பிள்ளைகள் மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெறத்தவறுகின்றனர்.

உண்மையில் பெற்றோரின் தொடர்ச்சியான கண்காணிப்பு தரம் ஆறிலிருந்து ஆரம்பமாகவேண்டும். பிள்ளைக்கு எழுதத்தெரிகிறதா, வாசிக்கமுடிகிறதா, ஏதாவது பிரச்சனை பிள்ளையின் கல்வியில் இருக்கிறதா? பிள்ளைகளுக்கு ஏதாவது உடலியல் அல்லது உளவியல் பிரச்சனைகள் இருக்கின்றதா,? என்றெல்லாம் பிள்ளைகளோடும் பாடசாலையில் ஆசிரியர்களோடும் கதைத்து; பிரத்தியேக வகுப்புப் பாட ஆசிரியர்களுடன் தொடர்பாடல்களை மேற்கொண்டு பிள்ளைநேயக் கல்வியை ஊட்டவேண்டும்.

அக்காலகட்டத்தில் மொழியறிவு மீது அதுவும் தான் கல்விபயிலும் தாய்மொழிமீது சரியான வாசிப்பும் எழுத்தாற்றலும் இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். காரணம் மொழியறிவில் குறைவு ஏற்படும் பட்சத்தில் பிள்ளைகள் ஏனைய பாடங்களை சரியாகக் கற்க முடியாது. மேல்வகுப்புக்களில் பிள்ளைகள் எதிர்நோக்கும் பாரிய சவாலாக இது காணப்படுகின்றது.

பிள்ளை தரம் ஒன்பதிற்கு உயரும்போதே, அடுத்தது க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை. அதன்பின்னர் பிள்ளையின் எதிர்காலம், எதிர்காலத்தில் எந்தத்துறையில் பிள்ளைகள் முன்னேற முடியும், தெரிவுசெய்கின்ற துறையில் பாடங்களின் தெரிவு எவ்வாறு அமையவேண்டும் என்றெல்லாம் பிள்ளைகளுக்கு, பெற்றோர் ஆசிரியர்களுடன் சேர்ந்து இதுபற்றிய கூடுதலான அறிவுறுத்தல்களையும் அனுபவப் பகிர்வுகளையும் பெற்றுக்கொள்ளவேண்டும்.

இது பெரும்பாலும் நடைமுறையில் இல்லை காரணம் தற்போதைய நிலையில் தரம் பத்தில் மூன்று வகை தொகுதிப்பாடங்கள் காணப்படுகின்றன. இவற்றை பிள்ளை என்ன என்ன பாடம் இப்பாடத்தை என்னால் கொண்டுசெல்ல முடியுமா என்கிற எண்ணம் எல்லாம் இல்லாமல் படித்து, பின்னர் குழப்ப நிலையடைவது கண்கூடு. இதற்காக தமது பிள்ளையின் கல்விநிலையை கண்காணிப்புடன் இருக்கவேண்டியது அத்தனை பெற்றோரினதும் தலையாய கடமை.

இதற்கு மேலதிகமாக பிள்ளைகள் தரம் ஒன்பதிலே கற்கும் போதே, தமது எதிர்கால உயர்தரக் கல்வி பற்றிய மேலெழுந்தவாரியான விளக்கமாவது பிள்ளைக்கு இருக்கவேண்டும். இதில் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கவனம் செலுத்தவேண்டியது கட்டாயம்.
உயர்தரம் பற்றிய பரந்த எண்ணப்பாங்கு பிள்ளைகளுக்கு வழங்கப்படவேண்டும்.
ஏனெனில் க.பொ.த சாதாரண தரத்தில் பிள்ளைகள் பரீட்சை எழுதியவுடனேயே உயர்தரப் பரீட்சைகளுக்குரிய பிரத்தியேக வகுப்புக்கள் ஆரம்பமாவதால் திடீரென முடிவெடுத்து (அனேகமாக நண்பர்களுடன் கூட்டாக) ஏதாவது ஒரு துறையில் (கலை, விஞ்ஞான,வர்த்தக) உயர்தரக் கல்வியைத் தொடருகின்றனர்.

இதனால் பிள்ளைகள் சரியான துறையைத் தெரிவுசெய்யாததால் பிள்ளைகள் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மிகச் சிறப்பான முடிவுகளை அதாவது பெறுபேறுகளை ஈட்டிக்கொள்ளத் தவறுகின்றார்கள். சிலபிள்ளைகள் உயர்தரவகுப்பில் முதலாம் வருட இடைநடுவே தமது கற்கை நெறியை மாற்றிக்கொள்வதும் இவ்வாறன சரியான தெளிவின்மையே.

இதன்காரணமாக மீண்டும் பெற்றோர் பிள்ளைகள் மீது தங்களது வெறுப்புணர்வுகளைச் சித்தரிக்கின்றனர். பிள்ளைகள் மீது குற்றம் சொல்லி கவலைப்படும்போதும், பிள்ளைகள் தங்களுக்கு தெரியாமல்போயிற்று இப்படியெல்லாம் பல்வேறுவிடயங்கள் இருக்குதென்று இப்பதான் எல்லாம் தெரியுது என்று சொல்லியழுவதற்கு முன்னரே திட்டமிடுங்கள் பெற்றோரே.

இதற்காக பிள்ளைகளை தரம் ஒன்பதுக்கு பிறகு சுயமான கற்றலுக்கும் கூடுதலான வாசிப்புப் பயிற்சிக்கும் ஒவ்வொரு பாடங்களின் வினாக்களுக்கான கூடுதல் பயிற்சிகளுக்கும் தெளிவான கற்றல்லுக்கும் ஆன வாய்ப்புக்களை வழங்குங்கள். அதிக நேரம் பிரத்தியேக வகுப்புக்களுக்கு பிள்ளைகளை விட்டு படித்த விடயங்களை படிப்பதற்கு நேரம் இல்லாமை என்கிற நிலைமை ஏற்படா வண்ணம் பிள்ளைகளை படிப்பியுங்கள்.

பிள்ளைகளுடன் அன்பாகவும் ஆறுதலாகவும் இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். மிகவும் கஸ்டமானதும் எளிதுமானவிடயம் கற்றலே என்று கற்றுக்கொடுங்கள். விசாலமான எண்ணப்பாங்குகளை பிள்ளைகளுக்கு ஊட்டுங்கள். பிள்ளைகளோடு சேர்ந்து பிள்ளைகளுக்காக நீங்களும் படியுங்கள். உங்களுக்கு தெரியாத பாட விடயங்களை பிள்ளைகளுக்கு வேறு சரியானவர்கள் மூலம் சொல்லிக்கொடுக்க உதவுங்கள்.

"பிள்ளைகளின் கல்வி என்பது உங்களுக்கு மட்டுமல்ல சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் அவசியமாக இருக்கின்றது."

ஒரு சமூகம் அபிவிருத்தி காணவேண்டுமெனில் முதலில் சிறுவர்களின் கல்வி விருத்தியடைய வேண்டும். ஒரு பிள்ளை தனது ஆரம்பக்கல்வியை தனது ஐந்து,ஆறு,ஏழு,எட்டு வயதுகளிலாவது மேற்கொள்ளவில்லையாயின் தனது வாழ்க்கையின் கல்விகற்றலின் பெருமான்மையை இழக்கநேரிடுகிறது.

ஆக, பெற்றோர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து பிள்ளைகளுக்கு கல்வியில், வெறுப்புணர்வு ஏற்படா வண்ணம் ஆர்வமான முறையில், கல்விகற்றலின் சில பொருத்தமான நுணுக்கங்களை சொல்லிக்கொடுக்கவேண்டும். இது ஒவ்வொருவரின் கடமை. எங்களிடம் எஞ்சியிருக்கின்ற ஒரே ஒரு ஆயுதம் கல்வி. வளருங்கள்.

Thursday, November 15, 2012

இது ஸ்டேடஸ் - 27


எந்தவொரு தயக்கத்துக்கும் முடிவெடுக்க,
இன்னொருவருடன் கதைச்சா, நாம எடுத்த முடிவின் வலிமையை நுகரலாம்.
ஒரே அலைவரிசையில் இருப்பவர்களோடு இருத்தல் சிறப்பே...!!!## Got a decision ##
மெல்லிய தூறல்களாய் ஆரம்பிக்கிறாய்
துள்ளிய ஆடுபோல் நானும் உந்துருளியில் ஆரம்பிக்கிறேன்.
— at THETTATIVU
 
இயலாமையின் வெளிப்பாடு எப்போதும் இருந்துகொண்டே இருக்கும் ஒவ்வொரு ஒப்பீடுகளின் போது...
 
எந்தவொரு சகோதரனின் தந்தையின் உடல் புதைக்கப்படும் போதும், நெஞ்சமுருகி கண்கள் கலங்கி உயிரைப் தின்றுகொள்ளும் உணர்வால், அத்தனை கண்ணீாப்பூக்களை உதிர்த்துவிடுகிறேன்.... ##ஒவ்வொரு தந்தையும் எந்தந்தையாய்
 
ஒவ்வொரு இறப்பும் ஒவ்வொரு வலியைச் சொல்லிச் செல்கிறது.
இறப்பு பற்றிய விவாதங்களை விட இறப்பின் வலி அவனவன் குடும்பத்துக்குத்தான் தெரியும். 3, 8, 31, 41 என நாட்களை கடக்கும் வரை உறவுக்காறனுகள் தெரிஞ்சவங்க வந்து போவாங்க. இதுமட்டுமே எனக்கு பிடிச்சது. ஆனால் கடைசிவரை அந்த இறப்பின் துடிப்பு நெஞ்சுக்குள் அந்தந்த குடும்பத்தின் பாரங்கள், சுமைகள் என்பவற்றை சுமக்கும் குடும்பத்தவர்களுக்குத்தான் தெரியும்.
##மாரடைப்பில் உறவுக்காரர் ஒருவரின் மரணம்##மனதெங்கும் ரணம். ##வலி அனுபவிக்கையில்.
"இராமப்பா" உங்கள் நீண்ட நித்திரை நிம்மதியடையட்டும். உங்களது குடும்பத்தோடு துயர்ப்படுகிறேன்.
 
இண்டைக்கு ஒருமாணவனின் முறைப்பாடு
" டேய் நான் படிச்சவன், என்னால படிக்காதவன் போலவும் இருக்க ஏலும், நீ படிக்காதவன் முடிஞ்சா என்னப் போல படிச்சுப்பாரு"
எண்டு திட்டுறான் சேர் என்றான்....
நான் என்ன செய்யிற எண்டுதெரியாமல் முழிச்சேன்.##படிச்சவனுக்கு திமிர் அதிகம்தான்##இனியாவது படிக்காதவன் படிக்கட்டும்
 
சிலபேர் நீண்டதூரம் பயணிக்கக்கூடியவர்கள், சிலபேர் குறுகிய தூரம் பயணிக்ககூடியவர்கள். ஆனாலும் ஒரே அளவு தூரம் கடக்கக்கூடியவர்களும் உளர்.
இவர்கள் அனைவரும் 'நேரம்' என்பதை கொண்டே கண்டுபிடிக்கப்படுகின்றனர்.
திறமை, புத்திசாலித்தனம், சோம்பல், களைப்பு, எல்லாம் எல்லைப்படுத்தப்படுகாரணி நேரத்துக்கு பிறகுதான். ##முயலும் ஆமையும் கதை.#
 
ஒருவனின் எழுத்து அவன் கொண்ட சமூகத்தினரின் எழுத்து என்பதையும் அடயாளப்படுத்தப்படுகிறதே ! என்று எண்ணிக்கொள்ள மற்றவர்களின் கண்ணீர்த்துளிகள் போதும்.
மற்றவர்களின் கண்ணீரில், எனது கண்ணீர் கரைந்துதான் போகுமா எனது வலிதந்த மற்றவர்க்கு வலி என்றால் என்கண்ணீர் பன்னீராகுமா.?
##சமகாலப் பிரச்சனை என்பதால்
 
தோள்களில் மண் பெட்டிபெட்டியாய் சுமக்கும் போதுதான் தெரிகிறது கூலிக்காரனின் உடல் வலி. அவனுக்குரிய ஊதியம் சரியாக கொடுக்கப்படணும் என்பது சுமந்துபார்த்தாத்தான் புரியுது. #மண் சுமந்தேன்#கூலியின் வலி உணர்ந்தேன்.# முதலாளிகளின் கவனத்துக்கு. ## சிலபேரின் வலியுணர்தல் — at THETTATIVU
 
சில பேர் கதைச்சுச் சென்றபின்னும் அவர்களின் நல்லஎண்ணம் மனதுக்குள் மீண்டும் மீண்டும் கதைச்சுக்கொண்டிருக்கும். ##நல்லவர்களுடன் பழகுதல் நல்லது என்று படிச்சது ஞாபகத்து.
 
சிலநேரங்களில் அன்பைவிட ஆக்ரோசமான வார்த்தைப் பிரயோகங்களுக்கு வன்மை அதிகம் தான்.
ஆனால் அன்பினால் தான் நீண்டதூரம் பயணிக்கலாம்.
வாழ்க்கை அன்பினால் வாழப்படுவதற்கே!!!.
#அன்பே சிவம் ## வாழ்க்கை
 
எத்துணை வியர்வையிலும் காய்ந்துபோகும் கடதாசியாய்..
விரல்களை விட "நா" வுக்கு வலிமை அதிகம்
சு(டப்ப)ட்ட புண்களில் சுரணை இருந்தால் சுண்டியிழுக்கட்டும்
கவனித்துக்கொள்
வேர்களில் தான் கிளைகளில் தங்கிவாழும் கூடு
தலைகொண்டவன் தலைகவிழ்ந்தவன் இல்லையே
##Feeling to favorites
 
ஒரு துக்கம் ஒன்றே போதும் ஒரு நாளைக்கு வாழ்நாள் முழுதும் ஒருவன் துக்கப்பட்ட உணர்வொன்றைத் தருவதற்கு.## தோல்வி ##அதுபற்றிய எண்ணம் ## உளறல்
 
ஒவ்வொரு முறை சுடர் ஏற்றும் போதுதான் தெரிகிறது பலமுறை இருள்களுக்குள் என்று.
 
நட்சத்திரங்கள் பூத்துக்கொண்ட வானம்.
அப்படியே இருள்கொள்ள ஊர்கொண்ட மெளனத்திலே தான்
தெரிகிறது மின்சாரம் எவ்வளவு சத்தத்தை கொடுத்து மாசுபடுத்துகிறது என்று. ##Power Cut##
— at THETTATIVU
 
சில நேரங்களில் திட்டமிட்ட விடயங்களும் திட்டமிடப்படாத அன்புத் தொல்லைகளால் நழுவிப்போகின்றன. ##அன்புக்கு வலிமை அதிகம்தான்##
 
மழைக்கவில்லை இப்பொழுது
மங்கலாய் குளிர்கிறது. கனமான இதயங்களும் இதமாகும் தருணம் இது.
— at THETTATIVU
 
அன்று நனைந்துவிடுவேன் என்று தனது சட்டையை கழற்றி போர்த்திக்கொண்டார் அப்பா - நான் குழந்தையானேன்.
எனது மழைக்கவசத்தையும் தலைக்கவசத்தையும் கழற்றி போர்த்திவிட்டேன் அப்பாவுக்கு இன்று - அப்பா என்றும் உங்களுடன்.#Raining#
Please Respect and care your parents## Thank you appa am always with u, love u appa.##
  
வாழ்க்கை என்பது யாருக்காக. கடவுளுக்காக வாழ்கிறோமா நமக்காக வாழ்கிறோமா??? காமம், கோபம்.... கடக்கணும் ஆதம நிலைபெறணும் என்று சொல்லுவது எதற்காக,,,??? அதற்கு பதிலாக கடவுளாக கல்லாக இருக்கலாம் இல்லையா,,? அதைவிட அத்தகைய உணர்வுகளும் இல்லையெனில் மனித அடயாளம் இல்லாமல் போகும் இல்லையா?? அடுத்து குரு என்பது எதற்கு ஒழுங்காக நம்மை நாங்களே உணர்ந்தால் உணரமுடிந்தால் தான் கடவுள் என்பதன் அர்த்தம் விளங்கும்

எவனொருவன் கெட்டவனாக வாழ்கிறானோ அவனுக்கே நல்லது என்பதன் அர்த்தம் விளங்கும். நல்லவன் என்பது நடிப்புக்குரியவனே. நடிக்கும் வாழ்க்கையையே நாம் கொள்கிறோம் எங்களை உணர்ந்தால் புரியும். சற்று நமக்கு வெளியே நம்மளை உற்று நோக்குங்கள். வாழ்க்கையில் நாம் எப்படி எப்படியெல்லாம் நடிக்கிறோம் என்பதை நாங்களே உணராலாம்
நான் சொல்வதில் தவறிருக்கலாம். அதற்கும் நமக்கு சார்பான எண்ணப்பாங்குகள். மாற்றமுடியாத மாறாத ஒரு வழி எண்ணம் இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தும். (கடைசி வரிகளில் கூட நான் என்னை சரிப்படுத்துவதிலே இருக்கிறது)
அன்புகொண்டு அவ்வப்போது கோபமும் அத்தனை உணர்வுளுடன் வாழ்ந்தாலே போதும். ஏன் வாழ்கிறோம் என்று இல்லாமல் நாம் வாழ்ந்தோம் என்பது நல்லதே##சொல்லத் தோன்றியதை சொல்லிப்புட்டேன்##
 
எந்தன் நினைவை நீளவைக்கும்
அத்தனை கணங்களிலும் ஓரங்களில்
துளிர்த்துக்கொண்டு தூங்காமல் துடிக்கும்
உந்தன் பார்வை- அம்மா என்ற மந்திரமே என்னை ஆளாக்குதே..
##mother's feeling #
 
நீ வேண்டும் என்றே(றோ) தீர்மானிக்கும் கணத்தில்
நீயாகவோ கடவுள் என்கின்ற புள்ளியை உனக்குள்ளாகவோ தீர்மானிக்க முடிகிறது. #நான் கடவுள்# திட்டமிடலில் நான் என்கிற உணர்வு##
 
எப்பொழுதும் அப்புறாணியாக நடிச்சுக்கொண்டு இருப்பவர்கள் சிலவற்றையாவது சாதிப்பது குறைவுதான்.## சிலபேரைப் பார்த்தால் நடிப்பது எப்படி என கற்றுக்கொள்ள முடிகிறது.## Different Life pattern
 
வலிமிகு வாழ்க்கையில் வலிக்கும் மனசு நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் அதிகம் இருக்கும்.
நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் உழைப்பது குறைவுதான். ஏதோவொரு நொண்டிச்சாட்டு இருந்துக்கிட்டே இருக்கும்## Helping Mind is less than Kindness or Sympathy## True Life
 
மகிழ்ச்சி என்பது மறந்துபோகுது அடிக்கடி. தொலைவானில் நட்சத்திரங்கள் ஒளிர்வதை அவதானிப்பது குறைவுதான்.##வாழ்க்கை.
 
சில திருப்பங்களைப் பெறவேண்டுமெனில் நீ
உன் திரும்பல்களில்தான் பெறவேண்டும் ##மாத்தியோசி
 
இயல்பாக கதைக்க முடிவதில்லை. முகத்துக்கு முன் முகச்சட்டை போட்டுக்கொண்டவர்களால்..
 
மழைதலில் பூமி
நனைதலில் நான்
## Raining
— at THETTATIVU
 
 19 October
சேட்(shirt) போட்டு இருக்கும் போது அதன் மதிப்பு மற்றவர்களுக்குத்தான் தெரியும். அது கிழியும்போது எனக்குத்தான் அதன் மதிப்பு தெரியும்..## Feeling for others ## Feeling ##as well as me
 
சில நேரங்களில் எதிர்பாராத தொலைபேசி அழைப்புக்கள் தித்திக்கும். முகமறியா நபர்களுக்கும் முகவரியை எனது தமிழ் சொல்லிக்கொடுத்துவிடும் போது கொள்கின்ற மகிழ்ச்சிக்கு எல்லையேது.
 
எந்த நிகழ்வுக்கும் கொஞ்சம் முன்னமே திட்டமிட்டால் செவ்வனே சிறப்பாக செய்துமுடிக்கலாம். வேண்டாவெறுப்புடனோ கடைசிநேரத்திலோ சின்ன வேலைகள் செய்துமுடிக்கலாம். ஆனாலும் கூட்டுமுயற்சி எப்போதும் வெற்றிபெறும். திறமையானவர்களுடனும் வேலை செய்யும்போது. ##Done a fantastic work yesterday with short period of planning## Team work sprite##
 
வாங்கோ இருயுங்கோ, என்று வரவேற்று, ஆரம்பித்து சில சில பல என கதைகள் கதைச்சு கடைசில் போயிற்று வாரன் என்று சொல்லும் போதும் வாசல் கதவுவரை வந்து போயிற்று வாங்கோ என்று சொல்லி வழி அனுப்பி வைக்கும் பண்பு எப்போதும் பிடிச்சிருக்கு. கிராமத்து மண்ணின் அழகும் உபசரிப்பும் என்றைக்கும் நிலைச்சிருக்கணும். ###ஆசிரியர் ஒருவரைச் சந்திக்கபோனேன்.## Met one of Sir in his home##
 
வாழத்துக்கள் கரிபியன்களே.!..
இலங்கை ரசிகனாய் இருந்தும் இன்றைய போட்டியில் உங்களுக்கு எனது மனதார ஆதரவு. வெற்றிபெற்றதும் மகிழ்ச்சி. நீண்ட காலத்திற்குபிறகு ஒரு உலகிண்ணம் கிடைக்கவேண்டும் என்ற அவா. இனிவரும் காலங்களிலும் பிரகாசியுங்கள்.
எங்கள் சிங்கங்கள் மீண்டும் புதுப்பித்துக்கொள்வார்கள்.
 
சில தவறுகள் திருத்தப்படுவதற்கு
சில தண்டனைக்கு
தண்டனையால் தவறு திருத்ப்படுவது குறைவு.
தண்டனையின் பயத்தினால் அதிகம்##வாழ்க்கை
 
ஆசிரியர் (நான்) என்பது நான் மட்டுமல்ல
ஒரு சமூகமும் எதிர்காலமும் எங்களிடமே (என்னிடமே)
"ஆசிரியர் தினம் Oct 6." - (இலங்கை).
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
 
 2 October
இன்று ஒரு கருத்தரங்கு ஒன்றில் " பென்சில் வாழ்க்கை"
"எப்பொழுதும் இலக்கு கூர்மையாக இருக்கவேண்டும்
கூர்மை குறையும் போது தீட்டிக்கொள்ளுங்கள்
வாழ்க்கையும் ஒரு குறிப்பிட்ட காலம்தான்
எதுவானாலும் நாம் சிறப்பாக வாழவேண்டும் மற்றவர்களுக்கும் இடங்கொடுக்க வேண்டும்."
  
சில நேரங்களில் கோபங்களுக்கு நியாயமே கிடைப்பதில்லை
 
மதம் அல்லது சமயம் என்னும் கடவுள் பெயரால் வாழ்க்கை நடத்துபவர்கள் ஏதோ ஒரு வகையில் தனது சுயமான தன்மையை வெளிக்காட்ட பயன்படுத்தும் ஒர் ஊடகமேயாகும். ஒரு வகையாக பொதுமக்களிடம் இருக்கும் பலமான "கடவுள் நம்பிக்கை" என்ற பலவீனத்தை தங்களது பலமாக எடுத்துக்கொண்டு கடவுள் வாதம் நடத்துக்கின்றதை பார்க்கும் போது அவர்களது திறமையை மட்டும் வியக்கமுடிகிறது.
 
அழகென்ற சொல்லுக்கு முருகா...
அடிக்கடி கேட்டுக்கொள்ளும் பாடல்
- பாலமுருகன் கோயில் திருவிழா நடக்குது..
 
இருக்கின்ற வரை
இயல் (பாக)
இசை (ந்துடு)
 
 26 September
விவேகானந்தரது நினைவுநாளாக பல விடயங்கள் கொண்டாடப்படுகிறது. ஆனாலும் சின்னவயசிலேயே பாதித்த வாசகம் இன்றும் இதுதான்
"நன்மை செய்யப்பிறந்தவன் நீ, நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாதிரு" - சுவாமி விவேகானந்தர்.
 
எனது உத்வேகத்தை வளர்க்கும் அந்த உள்ளங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.##நமக்காக நாம் ஆவோம்#
 
ஒருவர் நிலை அறியாமல் தீடீரென ஏதாச்சும் காரசாரமாய் கதைச்சுவிட்டால் அந்த ஒருவர் கொள்ளும் கோப தாபங்களை ஏற்றுக்கொள்ளவும் ஒரு மனசு வேணும். #இடம், பொருள், ஏவல் பார்க்கணும் என்று ஏற்கனவே தெரிஞ்சு வைச்சாலும் பிசகித்தான் போகுது
 
மனிதனால் உருவாக்கப்பட்ட கடவுளும் அதற்கு இயைவான "மதம்" என்னும் கேடயப்பொருளும் கொண்டு வாதப்பிரதிவாதங்கொள்ள வேண்டியதில்லை. நமது பிறப்பு என்பது பெற்றோரின் உயிரணுக்களின் சேர்க்கைதான். அதற்கு பிறகு பெற்றோர் வழிநடத்த பரம்பரையான வழியான ஒரு உந்
துசக்தியான அவரவர் மதமும் கடவுளும். என்னைப்பொறுத்தவரையில் இல்லாத ஒன்றுக்காக முரண் ஆவதை விட முயல் என்பதை செய்க. படித்தவன் மேதாவி எல்லாம் கொள்வதும் மதமே படிக்காதவன் பாமரன் கொள்வதும் மதமே.
 
முகம்மது நபி அவர்களை சித்தரிக்கும் காட்சியாம் (தவறு சரி என்று தெரிவதற்கு நான் முகம்மது நபி அவர்களுக்கு முன்னமே பொறந்திருக்கணும் இல்லாட்டி வாழ்ந்திருக்கணும். ஆனாலும் என்னபடம் என்ற ஆவல் வந்து அப்படியே போகுது. ##மதம் கொண்டு மதம் கொள்ளத் தேவையில்லை##என்ற எண்ணத்தால் அதைப்பார்க்கவில்லை.
  தேசியமட்டத்தில் தமிழ்மொழித் தினப்போட்டியில் 2ஆம் இடத்தை கட்டுரையாக்கத்தில் பெற்று போர்வடுக்கள் ஆறாமல் இருக்க தனது திறமையை வெளிக்காட்டிய பெருமைக்குரிய மாணவியுடன் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியருடன் நான்.
குடிதண்ணீரே சிரமப்பட்டு கிடைக்கும் இந்த கிராமத்தில் இப்பாடசாலையில் ஒரு சில மணிநேரம் இருக்க கிடைத்ததற்கே மகிழ்சியாக இருந்தது
 
இசைவிழுவது காதினில்
எங்கிருந்தோ பெய்கிறது
சாரல்
மனதில்
இசை தவறி
இடம்நுழைகிறது
இங்கே உணர்வுகளும் உயிர்கொள்ளும்
சிறகு முளைக்கும்
காற்று சிலிர்க்கும்.## Loving music ##
 
யாரோ என்று தெரியாட்டியும் எதிர்க்க போகையில் கொஞ்சம் புன்னகை ததும்பினால் மனசுக்குள்ள வார ஆனந்தம் கணமளவில் எத்தனையோமடங்கு அப்போதும் பாவப்பட்ட மனசு இப்படியே எல்லாரும் இருக்கமாட்டாங்களா 'உம்' எண்டு தொங்கப்போட்ட முகங்களை உதைச்சுவிடணும் எண்டு ... ##Smile is Great ##
 
கட்டிவிடப்பார்த்தோம் தேன்கூடு
இங்கு தேனிக்களுக்கு பஞ்சமில்லை
தேனெடுக்க பூக்களில்லை
முட்களும் முலைசுரக்கும்
முத்தங்களும்
ஓ... பாலையில் எழுந்திருக்கிறது
ஒற்றை ரோஜா
 
பொத்தி வச்ச பூவாய் வாழ்க்கை
சுத்திதிரிந்த 'காக்கா' கொத்தி தின்னுது
எச்சில் துப்பிக்கொண்டு
 
இதுவரை நமக்குள்ளே பேசி விழுங்கிக்கொண்ட அரசியலில் அல்லது அரசியல் என்றாலே ஒதுங்குதலே என்கிற எண்ணம் இருந்த நிலைியிலிருந்து சில ஒருமித்த அலைவரிசையில் அனேகம் பேர் நிற்பதை எண்ணி "ஏன்" என்று ஒரு கேள்வி விரித்தாடுகிறது##விதைகொண்ட விருட்சம்போலே..##
 
சில நேரங்களில் பாரிய இடைவெளிகளை நிரப்புவதற்காகவே
ஒர் "ஆரம்பம்" அவசியமாகின்றது.. உன்னால் முடியும் என்று உள்மனம் உறுத்துகிறது. #am on track## On your Mark, Get set, Run##
 
 7 September
நீ கல்லைக் கட்டிப்பிடித்து
கடவுளைக் காணுகிறாய்
நீ கட்டிப்பிடித்து
உயிர்ப்பிக்கும்
"உணர்வில்"
கடவுளைக் காணுகிறேன் நான்
உனக்கு
உருவம்
எனக்கு
உணர்வு
 
 7 September
புத்திகெட்டு போனவன் நெஞ்சில்
பாலை வாத்தாலென்ன
பாலையாய் நிலமானாலென்ன
உன்வீட்டு வாசல் நான்
படியேறும்போது இன்னமும்
அந்த ஓலைக்குடிசையில்
நிலவை ரசிக்க விரும்புகிறேன்
அதற்காக காவல் காக்க
போராளியாய் நிற்பேன்
கவலைப்படாதே சகோதரா
நாளையும் விடியும்
நாளை மறுநாளும் விடியும்
நீ மறுத்தாலென்ன
சூரியன் என்ன சுக்கு நூறா போகும்


எப்போதும் ஏதோ ஒரு பயம் ஏதெதுக்கோ இருந்துகொண்டே இருக்கும். இல்லை என்று மறுப்பு பொய்யாக இருக்கும்.
துணிந்து நிமிர்ந்து எழுந்து என்பதெல்லாம் அதற்குபின்தான். ##Life##

அன்பும் ஒரு போதைவஸ்துதான்.
உயிர்க்கொல்லும் உயிர்கொடுக்கும் வஸ்து தான்

கண்ணீரின் திவலைகளை
துடைத்துவிடும் கைகள்
இசைதான்
நீ பாடு நான் கேட்டுக்கிறங்குகிறேன்
இசைவழியால் உயிர்கொள்கிறேன்.

சில நேரங்களில் சில கேள்விகள் பொருத்தமற்றவையாகிவிடும். அவசரங்களால்..


சில நேரங்களி்ல் அன்புகளால் வரும் தொல்லைகள் தவிர்க்கப்படலாகாது. அன்பும் வன்முறை செய்யும். அன்பினால் அந்த வன்முறையை வெல்லவும் முடியும். ##நேசி யாசிக்கப்படுவாய்.##


எது எதுவோ நேரடியாக கேட்கும்போது கஸ்டமாக அமைந்தாலும் "நம்பிக்கை" என்பது பக்தன் கடவுள் உறவு போலவே. வெற்றிபெற்றால் நான் பக்தனாகவும் அவன் கடவுளாகவும் இருக்கிறான். ##

வாழ்வதென்பது நமக்காக மட்டுமல்ல. பிறரை வாழ்விக்க அதிலுள்ள மகிழ்ச்சிக்கு எல்லை கிடையாது ## நிறமற்ற வானவில்##சுஜாதா# புத்தகத்தின் ஒற்றையில்#


சுவீங்கம் சப்பிக்கொண்டிருப்பதும் வாழ்ந்துகொண்டிருப்பதும் ஒன்றே போல..
முற்பருவம் (ஆரம்பத்தில்) இனிக்கும் தொடர்ந்துவர சுவையே இல்லாமல் சப்பிக்கொண்டே(வாழ்ந்கொண்டே) இருக்கிறோம்

வாய்தர்க்கம் அதிகமானால் முதலில் அந்த இடத்திலிருந்து விலகுதலே முதல் வேலை. நாக்கக்கு கொஞ்சம் அவசரம் அதிகமும் கோவமும் திமிரும் கூடத்தான் இருக்கும் இல்லையா.
 
எந்தப்பிரச்சனைக்கும் வெவ்வேறு தீர்வு இருக்கும்
நமது சிந்தனைதான் ஒரே தீர்வில் நிக்கிறது. கொஞ்சம் யோசித்தால் இன்னொரு வழி தெரியும்.
 
இன்றைய  படம்
 
என் மருமகள் சாரங்கி மாமாவோட நெஞ்சினில் நித்திரை கொள்ளும் அழகு.
இன்பம் என்பது நுகருகையில் தான் தெரியும்.
 
 
 

Thursday, August 23, 2012

மனசெல்லாம் மழையே


உயிர் கொண்ட இடமெல்லாம்
நீ பயிர்கொண்டாய்
படபடத்து படருகையில்
துளிதுளித்து ஈரம் தந்தாய்

இருக்கிறேனா
இல்லையா என்றவினா
இருக்கையில் இரண்டுமில்லா
இருப்பை
மனசெல்லாம் நிறைத்துவிட்டாய்

மழை நின்றதும்
உயிர்க்கொல்லும்
மரண அமைதியாய்
மனம்

நீ
மழையாகி
உன்நினைவு அலைகளில்
அலைகிறேன்

நான்கு கண்கள்
ஒருவழியில்
இருபார்வை
இலத்திரன்கள் பயணிக்கும்
இதயத்தில் இடமளிக்கும்

இலத்திரன் பாய்ச்சலில்
இடியும் மின்னலும் தான்
மழைதூவிச் செல்லும்
மனசெல்லாம்Wednesday, August 22, 2012

இது ஸ்டேடஸ் -26

Aug 7, 2012
எத்தனை அறிவுரையும் கேட்கும்போது விளங்கிறதே இல்லை நாம் இன்னொருவருக்கு சொல்லும் வரை.##அனுபவம்##அறிவுரை

என் தந்தை, தாய் எழுதிய கடைசி எழுத்து, முதன் முதலாய் வளிமண்டல காற்றை சுவாசித்த நாள் கடக்கும்போதுதான் நிழல்களில் எந்தனை நிஜங்களில் சந்தோச ஸ்பரசங்கள்.. கண்ணீரின் தூறல்கள்.. எண்ணிக்கொள்ளப்படுகின்றன..##remembering Life##

இனிய பொழுதொன்றாய் ஆகட்டும்..##குழந்தையாகிறேன்

Aug 6,2012
அத்தனை சோகத்தையும் துவம்சம் செய்யும் வல்லமை இரண்டிடம் மட்டுமே
இசையும், குழந்தையும்

Aug 5, 2012
மனதார ஆரத்தழுவல் அவசியம். அன்பிற்கு மட்டுமே வேலி இல்லை.


4 August,2012
ஒவ்வொன்றாய் ஒவ்வொரு நாளாய் தோற்றுக்கொண்டே நகர்கிறது - வாழ்க்கை ,
வெற்றிபெறலாமென்ற எண்ணக்கிடக்கையில்.

4 August
உயிர்க்கொல்லும் நஞ்சு
உணர்வு
உயிர்கொடுக்கும் உணவு

11 July
வாழுமிதயத்தின் சுவரில் சில ஓவியங்கள் ஈரப்படுத்திக்கொண்டுதான் இருக்கும் கிழிந்த இருக்கையில்

9 July
கடவுள் அன்பு தந்தால் கடவுளுக்கு அன்பாகவும் இருங்கள்.
ஒருவர் உதவி செய்தால் அதே உதவியை அவருக்கு மாறாக செய்யாமல் உதவி தேவைப்படுகிற வேறொருவருக்கு செய்க

6 July
இன்னமும் மரண ஊர்வலம் நடத்திக்கொண்டிருக்கிறேன்.
புதைக்கவும் வழியில்லை புத்தாக்கவும் தெரியல. ##வாழ்க்கை##
நரகம் வாழ்தலில்## சொர்க்கம் கனவினில்

4 July
டேய் சத்தம் போடாதங்கடா எண்டு நான் சொல்ல "ஓகே சேர் எண்டு ஒருத்தன் சொல்ல, டேய் சத்தம் போடாதடா எண்டு இன்னொருத்தன் அவனுக்கு சொல்ல இப்படியே சத்தம் போட்டு கொண்டிருந்தானுகள். ##நானும் வகுப்பறையும்## வாழ்க்கையும்##ஈழ தமிழரும்##

17 June
அன்புள்ள 'அப்பா' உங்களுடைய சில கடமைகளை என்றோ நான் பொறுப்பெடுத்துவிட்டேன்.அவற்றில் சிலவற்றை செய்துமுடித்தும் விட்டேன். இன்னமும் உங்கள் அன்பு எனக்கு இருந்தால் போதும். விரல் பிடித்து நடந்துவர என்னால் முடியும்.##HAPPY FATHERS day##

30 June
எந்தன் கண்ணீர் துடைக்கும் விரல்கள் விரதம் இருக்கின்றனவா.... ##

19 June
உடல் தின்ற இசையா நீ
உயிர் கொல்லும் கவியா நீ
உணர்வுகள் மெய்ப்படும்போது.

17 June
கடவுள் மீது நம்பிக்கை என்பது எங்கோ ஒரு புள்ளியில் கட்டாயப்படுத்தப்படும் மற்றவர்களுக்காகவாவது. சாத்திரங்கள் கடவுளை நம்பித்தான் வாழ்கின்றன.

2 June
எந்ததேவதை ஆசிர்வதித்ததோ தெரியல ஆனா இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்குது இந்த ஹார்மோனியம்.
இன்று இசைராஜா கொண்டாடுது பிறந்தநாளை அது இளை இசையாகி##happy birthday to Ilayaraja

28 May
சில நேரம் சில மனிதர்கள் பட்டியல் என்பது நீண்டதுதான்.... அனேகமானவர்கள் அழகிய பொழுதுகளை கடக்கிறார்கள்.

26 May
எப்போதும் மற்றவர்களின் சோகம் கவலை என்பது கடுமையாகத்தான் தாக்கிக்கொள்கிறது. அதே நேரம் மற்றவர்களின் சந்தோசத்திலே ஒரு திருப்தி. முன்னயதில் கண்கள் கலங்குகிறது பின்னயதில் புன்னகை ததும்புகிறது.## Feelings for others##

29 April
ஒரே அலைவரிசையில் இருப்பவர்கள் ஒரே இரத்தமாக எண்ணப்படுவர்,தமக்குள் இன்ப துன்பங்களை பகிர்ந்து வேதனையும் சோதனையும் சாதனையையும் கடந்து

29 April
சில அழுத்தங்கள் இருக்கும்பட்சத்தில் தேவையான கட்டாய வேலைகள் கூட செய்வதற்கு இயலாமல் போகின்றன. பிரச்சனை என்ன என்பதை கண்டுபிடிப்பதற்கே பல மணித்தியாலங்கள் கடக்கின்றன. அதற்குள் தீர்வு பற்றி யோசிப்பதா. ##வாழ்க்கைப்பிழை##

28 April
உன் அழைப்புமணியின் கணங்களை கடக்கும் வரை தவிதவித்துக்கொள்ளும் மனசு
##வன்முறை செய்யும் காத்திருப்புக்கள்##

27 April
கண்கள் உகுக்கும் கண்ணீர் அத்தனை அன்புகளையும் சொல்லிவிடுமா என்று தெரியவில்லை. இன்றுமுதல் இன்னும் ஓரிரு வருட ங்களுக்கு நீ இங்கு இல்லை எனக்குள் என்றும் இருக்கிறாய் என்று துடைத்துவிடுகிறது கண்ணீரை பாவப்பட்ட மனசு.#குடும்ப சுமைதாங்கியே சென்றுவா நண்பா#

27 April
பிரிகின்றபோது அழுகையும் நினைவுகளும் வந்துவிடுகிறன. எவ்வள வுதான் மறைக்க நினைத்தாலும் முடிவதில்லை. நட்புக்கு வலிமையே அன்பின் ஆரத்தழுவலும் உயிரோட்டமான உணர்வுகளும்தான். #
சென்றுவா நண்பனே. உனதுபயணம் பாதுகாப்பாகட்டும்#

26 April
சில நேரங்களில் தொலைந்து போகிறேன். சில நேரங்களில் தொலைவாகிப் போகிறேன். உன் தேடல்களில் தான் கண்டுபிடிக்கப்படுகிறேன்

21 April
சில விடயங்களில் சிலபேருக்கு முன்னோடியாக அவர்களுக்கு புதிய விடயங்களை அறிமுகப்படுத்துபவனாக இருப்பதில் மகிழ்ச்சி.
##தன்னிலை பெருமைப்படுத்தல்##

17 April
சில நேரங்களில் ஏதோ ஒரு வகையில் அன்பினால் அதிக பாதிப்புத்தான். ஓடுகிற நீரில் எதிர் நீச்சலைப் பற்றியே எண்ணிக்கொள்ளுது பாவப்பட்ட மனசு. நழுவிற மீனாய் ஆகு என்பது சேர்ந்து வாழும் உறவுகள் சொல்லுது. நான் தரையில் துடிக்கின்ற மீனாய்.
##வெறுப்பான உலக வாழ்க்கை.##

10 April
சிலபேர் திடீரென பிடித்துப்போகின்றனர். அவர்கள் இன்னமும் இணைந்திருக்கின்றனர். சிலபேர் திடீரென விலகிவிடுகின்றனர். அவர்களும் இணைந்திருக்கின்றனர். இரண்டிலும் பெரும் வித்தியாசம்

10 April
எந்த மனக்கஸ்டத்தையும் எந்தவொரு சந்தோசத்தையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலே நகர்கிறது #முகநூலும் நண்பர்களும்#

9 April
புரிந்தும் புரியாமலும் தெரிந்தும் தெரியாமலும் என்றாலும் இருந்தும் இல்லாமல் என்பதை மட்டும் ஏற்க மறுக்குது

8 April
உன் சிரிப்பின் சப்தங்களில் எத்தனை ஈரங்களை - நான் உலர்த்திக்கொள்வது. ##சிரிப்பும் காயம் செய்யும்##

இன்றைய படம்
ஊரிலிருந்து ஒரு பின்னேரப்பொழுதொன்றில்


Sunday, April 8, 2012

இது ஸ்டேடஸ் - 25


1 March
"ஓடும் புளியம்பழமும் வாழ்க்கையை இப்பொழுது கற்றுக் கொண்டிருக்கிறேன். நகமும் சதையும் என்பதிலிருந்து பெற்றவைகளைக் கொண்டு"

1 March
"ஓடும் புளியம்பழமும் வாழ்க்கையை இப்பொழுது கற்றுக் கொண்டிருக்கிறேன். நகமும் சதையும் என்பதிலிருந்து பெற்றவைகளைக் கொண்டு"

2 March
சில இரவுகள் இறப்பதற்காக சிலநேரம் பிறப்பதற்காக
விடியல்களும் தான்..... ஆரம்பமும் முடிவும் போராட்டங்களிலே தான்
2 March
எந்தவொரு மனக்கஸ்டங்களையும் பகிர்ந்துகொள்ள நண்பனொருவன் வேண்டும்.. ஆனாலும் நண்பியிடம் ஆழ்ந்த அன்பு கிடைக்கும் நண்பனிடம் நல்ல தீர்வுக்கு வழிகிடைக்கும். ##நண்ப நண்பிகளுக்கு#

4 March
அனேகம்பேர் தங்களுக்கான ஆதாரங்களை வெளிப்படுத்தி நல்லவன் என்பதை நிரூபிக்கும் எண்ணத்தை வளர்ப்பதிலே இருக்கிறார்கள் (நானும் தான்)..
ஆனாலும் முதலாவது ஒருவன் வரணும் என்றால் இரண்டாம் மூன்றாம் என பின்னால் வருபவர்களாலே தான் முதலாவதை எட்டமுடியும்.
#வாழ்க்கைப்போக்கு##

6 March
ஏதோ தற்செயலாகக்கூட ஒரு முறையேனும் விட்டுவிலகிவிடக்கூடா தென்றே எண்ணுகின்றேன். ஆதலால் யாரோ என்றெண்ணி பச்சை நிறத்தை அழுத்துவதைவிடுத்து சிவப்பை அழுத்திவிடாதே ##நான் என்றும் உன்னுடன்##

7 March
என்னைச் சுமந்து ஆளாக்கிய அம்மா, என்னோடு ஆன சகோதரிகள், சேர்ந்து சேராமல் போன காதலி, எனக்காக ஆளாகப்போகும் மனைவி... இன்னும் என... பெண்கள் தின வாழ்த்துக்கள் நாளைய தினமும் உங்களுக்காக.

9 March
எதிர்பார்க்காமல் இனிய பின்னேரப்பொழுதொன்று கடந்துபோனது.. முகம்புரியா நண்பர்களுடன் முகம்பார்த்தோம். கைலாகு கொடுத்து விடைபெற்றோம்.. ##நட்புடன் தொடர்வோம்##

11 March
சிலநேரம் கண்களில் வழியும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடிவதில்லை அதுவாக அழு து ஆர்ப்பரித் து அடங்கிக்கொள்ளும் வரை. ##துன்பங்களும் வாழ்க்கையில் ##

12 March
காற்றில் பறந்து திரிந்த காதல் பறவையின் இறக்கை
தவறி விழுகிறது உந்தன் காலடியில்
காதலிக்க வேண்டி

12 March
எதிர்பார்த்தது தவறிவிட்டது.... இல்லை முயற்சியின் அளவு போதாமல் போயிற்று.
12 March
மற்றவரின் கண்ணீரில் எனது காயத்தை ஆற்றுகிறேன்.

14 March
இன்றைய பொழுது ஏனோ அமைதியாய் முட்டி திரண்ட கனத்த இதயத்தின் கண்கள் கலக்கத்தினாலும் என


18 March
அதிக நாட்களின் பின்னர் அமைதியான ஆளாய் இருப்ப து பிடிச்சிருக் கு. Silent ஆக இருந்தா violent ஆக இருப்பதாக சிலபே ரு சொல்லும்போ து என்னசெய்வ து. இதுவும் கடந்துபோகட்டும்...

21 March
நான் மேய்ந்ததெல்லாம்
என் ரத்தமான து
என் மடி
ரத்தத்தை பாலாக்கியது
முட்டி குடிப்பவர்களுக்கும்
கறப்பவர்களுக்கும்
என்மடி பால் சுரக்கிறது
குடிப்பதற்கோ கறப்பதற்கோ
யாரும் இல்லை என்றாலும்
என் பால் காம்புகளின் வழியே
கசிந் து சிந்துகிற து. ................
மேய்ச்சல் - கவிகோ அப்துல் ரகுமான்..##பறவையின் பாதை##வாசிக்கும் போது

23 March
வானொலிக்குயில் ராஜேஸ்வரி சண்முகம் அம்மையாரின் இறுதி நீள் நித்திரை பூரணமடையட்டும். இதய அஞ்சலி.


28 March
மெல்லிய இழையோடும் பாடல்கள் இல்லாத உலகத்தை ஏற்க மறுக்கிறது இசையோடு வாழுதல் இன்பத்தோடு இருத்தலே

30 March
நாளைய நாளை மனதை இலேசாக்கும் ஒ ரு பயணத்துக்காய் ஆயத்தமாய், கமெராவும் நானும் என முகநூல் நண்பனையும் சந்திக்க கஸ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மனதுக் கு ஒ ரு இடைவெளியாய் ##நல்லதாய் நடக்கட்டும்##

2 April
ஒவவொரு புன்னகையும் சொல்லிக்கொள்ளும் துக்கம் கலைக்கும் மருந்து என்னிடம் என்று...

2 April
இதழ்முட்டி என்றோ குனிந்து நிமிர்ந்து
இல்லை என்றும் ஓம் என்றும் சொல்லிக்கொண்டு போன கணப்பொழுதுகள் இசைக்கப்படுகின்றது மெல்லிய பாடல்களின் இசையில்

2 April
காற்று உறுமும் 'ஓசையுடன் மழை. நித்திரை இனிதாகட்டும்.

3 April
ஒவ்வொரு நாளும் ஹரிகரனின் பிறந்தநாள் வராதா.. ##வானொலிகளில் பாடல்கள்##

4 April
எதிர்பாரத சந்திப்புக்கள் அழகாய்த் தான் இருக்கும். நண்பனொருவனின் பிறந்தநாளில் அவனுடன் சாப்பாடு, உந்துருளி ஓட்டம் என இரு மணித்தியாலங்கள் கடந்தது.
##இனிமையான பொழுதொன்று கடந்து போகிறது##

5 April
உன்னோடு அலைபேசியில் பேசாத நாட்கள் என்னவோ என்னைவிட்டுப் நீ பிரிந்ததாய் உணர்கிறேன்.
ஆதலால் ஒருதரம் தவறிய அழைப்பொன்றையாவது ("மிஸ்ட்கோல்") கொடுத்துவிடு. ##நட்புக்களுக்காக##

6 April
கடக்க கடக்க கொஞ்சம் கொஞ்சமாய் நிரம்பிக்கொள்ளும்.
ஆனால் இன்னமும் நிரம்ப வேண்டிய இடைவெளி இருந்துகொண்டே இருக்கும்...##வாழ்க்கை##

7 April
எந்த நல்லவிடயத்தையும் யாரிடமும் சொல்ல எண்ணத் தோன்றலாம். அத்தனை கஸ்டங்களின் வலிகளை உணர ஓர் ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கொரு ஆணும் அவசியப்படுகிறார்கள்.

8 April
உன் சிரிப்பின் சப்தங்களில் எத்தனை ஈரங்களை - நான் உலர்த்திக்கொள்வது. ##சிரிப்பும் காயம் செய்யும்##

Friday, February 10, 2012

இது ஸ்டேடஸ் - 24

3 January
"ஏதோ ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்துமுடித்ததும். அடுத்த வேலை பற்றியே சிந்திக்கிறது மனம். ஆனால் செய்துமுடித்த வேலையின் சீர்மைப்படுத்தலை செய்யமுனைவது குறைவுதான். அதற்காக எந்தவொரு செய்துமுடிக்கப்பட்ட வேலையிலும் சீர்மைப்படுத்தலும் தொடர்ச்சியான கண்காணிப்பும் மீளாய்வும் அவசியமே."

4 January
"ஒரு sms Gap (இடைவெளிகளை) குறைத்து நம் நட்பைக் கூட்டுமெனில் ஒன்றென்ன ஆயிரமாயிரம் அனுப்புவேன்."

4 January
"கனவுகள் ஆயிரமானால் என்ன நிஜம் ஒன்று அதை இலகுவாக வென்றுவிடும்.தெரிந்தும் கனவுகளை வளர்த்துக்கொண்டு இன்னும்"

"மிதமிஞ்சிய சிரிப்புள்ளவர்களிடம் அல்லது அதீத புன்னகை சிந்துபவர்களிடம் கொஞ்சம் கவனமாகத் தான் இருக்கணும்."

"விழியோரம் வழிந்தோடும் நித்திரையே வருகிறேன் உன்னை அரவணைத்துக்கொள்ள."

5 January
"என்னதான் எண்டாலும் தவறுகளை ஏற்றுக்கொள்ள ஒரு பக்குவம் வேணும். எங்களை யாராவது தவறு செய்துள்ளீர்கள் என்று சொல்லும் போது கொஞ்சம் கோபமும் எரிச்சலும் வருவதை தடுக்க முடியாதுள்ளது. பெருந்தன்மையாய் என்ற நெனைப்பில் தவறை தவறாக ஏற்றுக்கொள்ளவேண்டி இருக்குது."

5 January
"ஒரே அலைவரிசையில் இருக்கும் போதே நண்பர்களாக்க முனைகின்றோம், ஆகின்றோம்,
றேடியோ அலைவரிசையில் சில தொழிநுட்ப கோளாறுகளால் சிலநேரம் சில இடைவெளிகள்.
நட்பிலும் அப்படித்தானா (னே).."

6 January
"சிலநேரம் நம் உறவுகளுக்காக வெட்கப்படாமல் கேட்டுக்கொள்ள முடிகிறது. நேரடியா கேட்கும்போது தடுமாற்றமான மனது இருக்கத்தான் செய்யுது. ஆனாலும் தன்னம்பிக்கை கூடுது கிடைக்குமென்று"

"சொட்டுச்சொட்டாய் கொட்டிக்கொண்டே இருக்குது
கட்டுக்கட்டாய் புத்தகங்கள் சிரிக்குது
நித்திரையும் அழைக்குது."

7 January
"பலநேரங்கள் நாம செய்கிற பிழை தெரியாமல்போயிடும் தெரிந்தோ தெரியாமலோ.. மற்றவர்கள் யாராவது சுட்டிக்காட்டினாலே நமக்கு வெளிச்சப்படும். சுயநலமாய் அதை ஏற்றுக்கொள்ள கஸ்டமாகத்தான் இருக்கும் ஆனால் தனியே இருந்து யோசித்துப்பார்க்க அது சரியென்று தோன்றும்"

7 January
"இந்த இடைவெளியை எப்படி நிரப்பப் போகிறாய்.. இடைவெளிகளால் நிறைந்து போகிறதே"

"ஏன் நீ இன்னும் கிழிந்த அந்த பனையோலைகளை உடுத்திருக்கிறாய்.
வந்து தீ மூட்டு உயிர் பிழிந்து தாறேன் உடுத்திக்கொள்"

9 January
"இடைவெளிகளை நிரப்பிக்கொள்ளும் என்றால்
இந்த இடைவெளிகளாலே வாழ்வேன்
வெளிகளில் சுத்தித்திரியும் பறவைகளுக்கு
வேலிகள் இல்லை."

11 January
"நம்மிருவருக்குமிடையே புரிந்துணர்வும் வெளிப்படையியல்பும் இல்லை என்றால்
உனக்கும் எனக்கும் ஒரு சில இடைவெளிகளைத் தோற்றுவிக்கக்கூடும். அது நடக்கக்கூடாது(டா). என்னைப்புரிஞ்சுகொள். உனக்காக என்றும் நான்"

13 January
"தேக்கி வைத்திருக்கிருக்றேன் குப்பைகளாய்.
வந்து தீயை மூட்டு.
தீப்பற்றி எரியட்டும்
இல்லை எரிந்து சாம்பலாகட்டும்"

14 January
"பொங்கலுக்கு சங்கு. மேற்கு நோக்கி குச்சி குச்சி ரயிலில் பாடசாலைக்காக"

15 January near Battaramulla, Sri Lanka
"இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள் இனிதாக மலரட்டும்."

16 January near Battaramulla, Sri Lanka
"தேநீர் இல்லா காலை இனிதே விடிந்தது".

"சில பேரின் எதிர் மறையான எண்ணங்கள் நமக்குள் நுழைவதை தடுக்கும் உணர்வை வளர்க்க வேணும். ஓ.. #நான் படும் பாடு#'

"பக்கத்துல ஒரு சோம்பேறியோட நான் படுற பாடு. டேய் கொஞ்சம் உசாராய் இரேண்டா.."

18 January
"காதலைப்பற்றி யார் சொன்னாலும் அழகாய்த்தான் இருக்குது.
காதல் மட்டும் காணாமல் போகுது."

"என் அன்பை புரிந்துகொள்ளும் அளவுக்கு உனக்கு பக்குவம் வரவில்லை. வரும்போது புரிந்துகொள்வாய் ஆழம் கண்டுபிடிப்பாய். காத்திரு காத்திருக்கிறேன்"

20 January
"புத்தகடுக்கில் இருக்கும் புத்தகப்பூச்சியாய் சில நினைவுகள்
புத்தகங்களை விரிக்கும்பொழுதும் படிக்கும்பொழுதும்
நகர்கின்றன"

21 January
"ஆயிரம் முறை தவிறானாலும் ஆன உறவு ஒன்றென உள்ளம் துள்ளும்.
ஒரு ஒன்று என்று உயிர்க்கொள்ளும். அது உன்னிடம் உள்ளம் உள்ளவரை மட்டும்"

"வாழ்க்கை நகர்கிறது நரகத்து வீதியில்
அழுத கண்ணீரில் நான் கரைகிறேன் என்னால் முடியவில்லை
அழுது தொலைகிறேன்"

25 January
"சில நினைவுகள் சில சந்தோசங்கள். சமரசங்கள். சின்னச்சின்ன கோபங்கள் சில சண்டைகள். எல்லாம் மறக்கும் அன்பு என்று சொல்லிக் கிறங்கும் ஒரு கோப்பைக்குள் மயக்கம். ஒன்று ஒன்றே நிரந்தரமாய்"

27 January
"காதலின் ஆழம் கண்களுக்கும்,
உரசிச்செல்லும் வார்த்தைகளுக்கும்,
வழுக்கிவிடும் புன்னகைகளுக்கும்..
நட்பின் ஆழம் உறவொன்றின் இலக்கணமாய்"

26 January
"ஒவ்வொரு தேடல்களும் சொல்லும் முயற்சிகளின் வெற்றிகளையும் தோல்விகளையும்."

27 January
"சில பிரச்சனைகளுக்குத் தீர்வாய் இல்லாவிட்டாலும் ஆறுதலாய் இருக்க நண்பனிடமே சொல்லி அழமுடிகிறது. அவன் எனக்காக அவனுக்காக நான்.. என் அழுகையின் முன் எழும் விரல்களாய் அவன் வார்த்தைகள்"

28 January
"உன்நெஞ்சில் நாடிமானி வைக்க லப்லப் ஆகவே இருக்கு லப் டப் கூட மறந்தே போச்சு. இதுதான் அதுவா என கேட்டுத்தொலைக்குது."

28 January
"என்னமோ ஏதோ என சில நண்பர்களை(?) முகநூலில் இணைத்து இணைந்து நான் படுற அவர்கள் படுற பாடு. யம்மா பாவம் நானும் அவர்களும். விழுங்கவும் முடியாமல் வெளியேற்றவும் முடியாத எச்சிலைப்போல தொண்டைக்குள் சிக்கிக்கொண்டு"

"ஏ. ஆர் றஃமானின் மெல்லிய இசைப்பாடல்களுடன் இந்த இரவு நகர்கிறது."

29 January
"இனிதாக காலை விடிந்துவிட்டது எனக்கு இப்பதான் தெரிந்துகொண்டது."

29 January
"நாளை வாழ்க்கையின் ஒரு தகப்பனாய் ஒரு வெற்றிக்காகச் செல்கிறேன். ##குடும்பதாங்கி##"

30 January
"காதல் அழகாய் இருப்பது காதலிக்கும்போது அல்ல காதல் விட்டுச்செல்லும்போது##"

31 January
"உனக்கான என்தொலைபேசி அழைப்பு தொல்லைபேசியாக இருக்கலாம். ஆனால் எனக்கு ஒரு நிமிடம் ஒரு செக்கனாவது உன் குரலில் ஒரு நொண்டிச்சாட்டாய் ஓரிரு வார்த்தைகளே போதும். நான் என்றும் உன்னுடன் என்றுசொல்லிக்கொள்ள.
##தவறிய அழைப்புக்களும் தவறுகின்ற அழைப்புக்களும் தடுக்கின்ற அழைப்புக்களும்##"

1 February
"பாடசாலையின் கல்லூரிதினம் மகிழ்ச்சியாக மாணவர்களுடன் நானும் மற்றொரு அழகிய பொழுது கடந்தது"

3 February
"இருவிழி உறக்கம் கொள்ளும் இருதயம் இருமிக்கொள்ளும் நினைவுகளைக் கிழித்துக்கொண்டு. ##கனவோடுதான் வாழ்க்கை##"

5 February
"மின்னல் வெட்டும் மழை , மழை நிற்க குளிர், அடைமழைக்காலமான பொழுதாய் இரவு மயான அமைதியில். ##மட்டக்களப்பு காலநிலை##"

6 February
'என்ன வாழ்க்கைடா... அப்பா அம்மா பொறுப்பு எவ்வளவு கஸ்டம். அவர்களுக்காக நான்."

7 February
ஒவ்வொரு பிரண்டும் தேவை மச்சான் ## விளம்பரம் பிடிச்சிருக்கு##

இன்றைய படம்
கடந்த முதலாந் தேதி கல்லூரி தினம் கொண்டாடப்பட்டபோது மாணவனொருவன் என்னையும் சேர்த்து எடுத்த படம்

Tuesday, January 3, 2012

இது ஸ்டேடஸ் - 23


25 December 2011
"இனிய நத்தார் தின வாழ்த்துக்கள். இந்நாளும் இனிய நாளாக இயேச பாலனின் ஆசிகளுடன்...
Happy Christmas ...."

25 December 2011
"சிலநேரங்களில் சில காத்திருப்புக்கள் வெறுப்பாயிருந்தாலும் அவசியமாய் இருப்பதால் அவஸ்தைப்படவேண்டிக் கிடக்கிறது..
##உயர் தரப்பரீட்சை முடிவுகள் வெளியாகி வெளியாகாமல்##"

"நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்... சும்மா ஒருமுறை வந்துட்ட போகுது..##சிலநேரம் சில மனிதர்கள்## சில நிகழ்வுகள்##"

"தொடர்பு அவசியப்படுவதில்லை ஆனாலும் இருவருக்கும் அவசியமான பொழுதுகளில் அழைப்புக்களை எடுப்போம்.
ஆக தொடர்பாடல் தேவைகளைப்பொறுத்தே அமைகிறது.."

"இல்லை இல்லை என்ற அந்த தொல்லை வந்துவிட்டது. இனி தொல்லை தரும் நிலையொழுங்குபடுத்தலில் இருக்கும் என நினைக்கிறேன். எது எப்படியோ சரியானதாக அமைந்தால் யாவருக்கும் நலம்"

25 December 2011
"மழையிலும் வாழ்க்கைக்கு வேண்டியவற்றுக்காய் புறப்பட்ட படகு அது. குழந்தைகுட்டிகளின் அத்தனை செலவுக்காய் புறப்பட்ட படகு விழுந்துவிட்டது. சரிந்துவிட்டது அந்த குடும்ப பொருளாதாரம்... ஆழ்ந்த அஞ்சலிக்கின்றோம். பூரண நித்திரையடையட்டும்..."
###காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒரு மீனவரின் சடலம் மீட்பு ~ Battinews.com###

28 December 2011
"
இந்த இரவை ரசிக்க
ஒரு
பிறை நிலா
கடலலை அரவத்திலும்
கடலுக்குள் சில வெளிச்ச வீடுகள்
#கப்பல்கள்#
"

29 December 2011
"ஏதாவது வேலைசெய்து முடிக்கணும் என்கிற முனைப்பில் வெளியே செல்லும்போது, புன்சிரிப்புக்களுடன் கூடிய "போயிற்று வா" என்ற வார்த்தையும் இல்லாவிட்டால் செய்யவேண்டியவை முடிக்கப்படாடாமல் போகிறது. ##உதடுகளுக்கும் உதடுகளின் உச்சரிப்புக்கும் வலுஅதிகம்##"

"பேனையை வச்சிக் கிறக்கும் அத்தனை கோடுகளிலும் எத்தனை எத்தனை சொற்களை உச்சரிக்கிறாயடி. அத்தனையும் முத்துமுத்தானவை. உன்னெழுத்துப்பயிற்சியும் ரசிக்கும் நானும்##மருமகளின் கிறுக்கல்களில் சிக்கியுள்ள நான்##"

"இல்லை இல்லை என்பார். ஆனால் அங்கு உண்டு என்பதற்கு அடயாளங்கள் இருக்கும்..##சொல்லமறுக்கும் கதை##"


30 December 2011
"சுவரெல்லாம் கோடுகள்
அத்தனையும் எழுத்துச் சிற்பங்கள்
##காலையெழுந்தவுடன் படிப்பு மருமகளுடன் நான்##"

30 December 2011
"ஆ.. இருமிக்கொண்ட மெல்லிய காய்ச்சலுடன்.. கண் முழிக்க முடியா தலைவலியுடன்.."

31 December 2011
"இன்னும் சில மணித்தியாலங்களில் முடிந்துதான் போகப்போகிறது... ஆனாலும் தித்திக்கும் நிகழ்வுகளும் மனதைச் சுரண்டும் சில சோகங்களும் இருக்கத்தான் செய்தன. இன்னும் அடுத்ததிலும் இவ்வாறே நகரத்தான் போகின்றன நாட்களும். ஆனாலும் புதுசு என்பதில் கொஞ்சமாவது மனசு இலயிக்கு பண்ணுவதை ஏற்றுக்கொள்வதில் மறுதலிப்பில்லையே. மாற்றங்கள் வேண்டி மாற்றங்கள் நோக்கி கால்களில் லாடங்களுடன் மனக்குதிரை ஓட்டப்படபோகிறது"

"கொஞ்சம் தடுமல், கொஞ்சம் காய்சல்,
காற்றிலே ஈரப்பதன் கூடிப்போச்சு.."

1 January 2012

"வந்துவிட்டதே இந்நாள், புதிய 2012 இன் முதல் நாள்..
இந்நாளையும் இனிய நாளாக மாற்றும் யந்திரமாய்
இவ்வருடத்தையும் ஆரம்பிப்போமே நலமாய்..
அனைவருக்கும் இனிய 2012 ஆம் ஆண்டு புதுவருட வாழ்த்துக்கள்"

"சாப்பிட்டவன் கோயிலுக்குள்ள போறான் மாமிசம் சமைத்த சட்டி வீட்டுக்குள்ள"

2 January 2012
"எனக்குமட்டும் ஏன் நீமட்டும் உந்துசக்தியாக மாறக்கூடாது.
மாற்று என்னையும் விசைகொண்ட யந்திரமாய்"

"நேரமுகாமைத்துவம் அனேக விடயத்தில் தேவை என்றுணர்ந்தாலும் நடைமுறையில் வழக்கத்தில் வரமறுக்கிறதே.."

"உன் ஒரு நிலைச்செய்தி உசுப்பிவிட்டுப்போகும்..ஏன்
உலைவச்சிட்டும் போகும்"

3 January 2012
"ஏதோ என் பாடசாலைக்கான எனது முதலாவது செயற்பாடு புதுவருசத்தில் சிறப்பாக முடிஞ்சிருக்குது. ஆரம்பமே சவால்களால் ஆனதும் அதை எதிர்கொள்ளவும் முடிஞ்சிருக்கு.. தொடர்ச்சியான பல அர்ப்பணிப்புக்களுக்காக நாட்களை காத்திருக்கிறேன் பல மாற்றங்களைச் செயல்படுத்த..##திருப்பதியான மனம்##"

இன்றைய படங்கள்
கடந்த 24 ஆந் திகதி கடற்கரைக்கு கனகாலத்துக்குப்பிறகு போனேன் அங்க பிடிச்ச படங்கள். தோணா என்னும் எங்க ஊர் முகத்துவாரம் கடலும் ஊரின் மழைவெள்ளமும் கலக்கும் இடம்
Sunday, January 1, 2012

நான் இன்னமும் வாழ்கிறேன்


சில்லென்ற காற்றும்
என்வீட்டுச் சுவாசமும்

கடற்கரையினில்
நனைக்கும் என் கால்களும்

வயல்வெளியில்
படமெடுக்க கமெராவும்

காதுகளை துடை(ளை)த்துவிடும்
பாடல்களும்

குழந்தைகளின் அழுகுரலும்
ஏங்கி முனையும்
என் கைகளும்

சில புத்தகங்களும்
பத்திரிகைகளும்

தவறிவிட்டுப்போன
உன் நினைவுகளும்
நீ
தவறிவிட்ட
காதல் நினைவுகளும்

இன்னும்

முகநூலின் என்னிலை
சொல்லும்
நிலைச்செய்திகளும்
சில நண்பர்களும்
அவ்வப்போது
அரட்டைகளும்

விரல்நுனியால்
இதயம் கிழிய
உலகம் காட்டும்
கண்ணாடியாய்
ஒரு
வலைத்தளமும்
போதும்
இவ்வருசமும் வாழ்ந்துடுவேன்.

புதுவருடவாழ்த்துக்களுடன்.........


வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு