Pages

Thursday, April 28, 2011

அபியும் அஷ்வினும் - என்னைக் கொஞ்சம் மாற்றி

அபியும் அஷ்வினும் -01 இங்குபோய் முதல்காண்க

அன்றைய இரவுப்பொழுது அஷ்வினுக்கு மட்டும் இன்பப் பொழுதாகவே இருந்தது. அவனை அவனுக்கே நம்பமுடியாமல் இருந்தது. நானா இப்படி.. காதல் யாரைத் தான் விட்டுவைத்தது என்று புலம்பிக்கொண்டு நித்திரையில் அவன் என்னென்னவோ கற்பனையில் ஆழ்ந்தான்..

கடந்தவாரத்துக்கு முதல்வாரம் தான் இருக்கும், தியேட்டரில் ஆயுத எழுத்து படத்தைப் பார்த்துவிட்டு மாதவன் கெட்டப்பில் முடிவெட்டி சிக்கெரட் ஊதிக்கொண்டு அரவிந்திடம் வந்து "ஐம்பது மில்லிலீட்டர் வைனுக்கு ஆசைப்பட்டு வைன்சொப்பையே விலைக்கு வாங்ககூடாது" என்று நண்பனிடம் சொன்ன அந்த டயலொக்கையும் சொல்லும்போதுதான் அப்படியொரு சீன் வந்துபோனதை அரவிந்த் ஞாபகப்படுத்திக்கொண்டான். இப்படியாக காதலை தொலைதூரக் கண்ணால் பார்த்தவனுக்கு யாரால் காதல் இனிப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிய அரவிந் மனது துடித்தது. மற்றவரின் காதல் உணர்வுகளை யார் யாயாரொடு காதல் கொள்கிறார்கள் என்பதை அறிவதில் ஒவ்வொருவருக்கும் விரைவான உணர்வு இருக்கத்தான் செய்யும். அரவிந் மட்டும் வித்தியாசமானவனா??? இரவுப்பொழுது இவனுக்கு தேவையில்லாமல் நகர்ந்தது.

அத்தனை ஸ்பரிசங்களையும் சொல்லிக்கொண்டு அந்த இலைகளின் நுனிகளில் ஐஸ்கட்டியாய் இருந்த பனித்துளியைக் கரைத்து தனது ஒளிக்கீற்று விரல்களால் துவம்சம் செய்துகொண்டு வந்த சூரியனைக் கண்டதும் "ஓ.. விடிந்துட்டுது.. நேரமாகிட்டு வெளிக்கிடணுமே." என்று விரைவாக்கிய காலைக்கடனும் விரிவுரைகளுக்கு காலைச்சாப்பாடையும் அடுத்த மணித்தியாலத்துக்கு ஒதுக்கிக்கொண்டு வெளிக்கிட்ட அஷ்வினுக்காக சைக்கிளை ஓட்டுவதற்கு காத்திருந்தான் அரவிந். அவன் வழமையாக அவ்வளவு நேரம் காத்திருக்கமாட்டான். ஆனால் இன்று அஷ்வினின் காதலியா கனவுக்காதலியா என்பதை அவனுக்கு காட்டும் நாள் அல்லவா. நண்பனின் வருகை." டேய் கெதியா வாடா" (கெதியா- விரைவா). "நாம மட்டுந்தான் லேட்" என்று சொல்லி இருவரும் விரிவுரைகளுக்கு செல்ல...
அதுகாலும் எதுவும் பேசாக ஊமையாய் இருவரும் அந்தக் காதலைப்பற்றி.
அவளைப்பார்த்த அந்தக்கணத்தில் அவள் பார்த்து திரும்பிய அந்த பார்வையில் சிக்கலில் சிக்கிய இவர்களா? இவர்கள் இருவருமா அழுகிய பழத்தில் துடிக்கும் புழுக்கள்,,? இன்னும் அந்த சந்தேகம். "அவளை இவன். இல்லை. ஆனா ஏன் அப்படியொரு பார்வை? இதன் விஷமம் என்ன?" அரவிந்துக்கு அந்தப் பாடம் விளங்காமலே முடிவுற்றது.

அந்த கேள்வியை அவிழ்க முற்பட்டபோது " அஷ்வின் நீ புதுசா போன் வாங்கினா நம்பரை சொல்லமாட்டியா எனக்கு? எங்கெட்டெல்லாம் தரமாட்ட.. ம்ம்ம்.. " என்று அபிவர்ணா சொல்ல.
"இல்ல அபி நேற்றுத் தானே வாங்கினேன். இண்டைக்குத்தானே தரணும். அதான் கொஞ்சம் வெயிட் பண்ணு. நான் மிஸ்ட் கோல் எடுக்கிறேன்" என்று தொடர்பை தொலைபேசியின் வழியே ஆரம்பிக்க.
அரவிந்துக்கு அடேய் போன் வாங்கி மூன்று நாளாச்சு இப்படி உல்டாவுட்டு ஆரம்பிக்கிறானே.. ஆனாலும் அபி ஏற்கனவே யாரோ தனது சொந்த மச்சான் பிரவீனைக் கல்யாணம் பண்ணப்போவதாயும் அவனுக்கும் இவளுக்கும் ஏற்கனவே நிச்சயம் பண்ணியாச்சு எண்டு சொன்னது எல்லோருக்கும் தெரியுமே. "ஏன் அவள் இவன். ஒரே குழப்பமா இருக்கே"..

இதெப்படி சரியாகும். அது ஊர் அறிந்த விடயம். பிரவீனும் அடிக்கடி ஹோஸ்டலுக்கு வந்து அவளைச் சந்திப்பான். இதுக்குள்ள இவன் ஏன் இவளுடன்...

"அரவிந், அபி போன் பண்ணுறாள்" என்று பின்னேரம் அரவிந்தோட கதைச்சுக் கொண்டிருக்கும்போது சற்று விலகி ஓடினான் அஷ்வின் அபியோட கதைக்க.

" அஷ்வின் எப்படி இருக்க. ஏன் இண்டைக்கு ஒருமாதிரியா இருந்த. இஞ்சே இனிமேல் நீ குடிக்கிற கொறைச்சிடு. அப்பதான் பிறகு நீ குடியைவிடுறத்து லேசா இருக்கும். சரியா? "

"ம்ம்.. பிறகு சொல்லு... நீ சொன்ன பிறகு இப்ப குடிக்கிற சரியான குறைவு அபி. விட்டாச்சு எல்லாத்தையும் விடணும்."

என்றெல்லாம் என்னனவோ கதைச்ச பிறகும் அஷ்வினுக்குள்ள அந்த கேள்வி ஏன் இவள் இப்படி நெருக்கமாகிறாள். உண்மையில் என்னைக் காதலிக்கிறாளா. இல்லை காதலிப்பதாய் நடிக்கிறாளா? இவளுக்கு ஏற்கனவே நிச்சயம் பண்ணினவன் இருக்கும்போது என்னுடன் ஏன் இந்த .... பரிதாபம்.?? இல்ல.. அன்பு.. இது காதலா.. நட்பா??? என்று தடுமாறிய அவனுக்கு அவள்மேல் ஒரு ஈர்ப்பு என்னவென்று சொல்லமுடியாத அந்த "அது"...

அவனுக்குள் எத்தனை மாற்றம். மொடலான ரீசேட்,முடிவெட்டி சேவ் பண்ணி,செல்போன், குறுச்செய்தியாய் கவிதைகள், படிக்கணும் அவளுக்காக, சிக்கெரெட் விடணும் அவளுக்காக....அத்தனையும் அவளால்.
அவளேதான் அந்த சிறகுகளை தந்தாள். எல்லாம் மாற்றம். காதலில் தீர்ப்புகளா இவை. இந்த அவள் செய்த அந்த இனம்புரியாத அன்பு, கரிசனம், இதற்கு யாரைக்கேட்பேன். அவளே சொல்லித் தொலைக்கட்டும்.
அவள் இல்லாமல் இனி......வேண்டாம். அவள் ஸ்பரிசம் உள்ளத்தை இனிப்பாக்கும். அவள் பேச்சினால் கொள்ளை கொள்ளளட்டும். அவளுக்காக எல்லாம் மாறட்டும். என்றென்று அவனுக்குள் உருவான அந்த எண்ண அலைகளை கட்டுப்படுத்துவது கஸ்டமாகவே தெரிந்தது.

அந்தநேரத்திலும் வானொலியைத் திறக்க அவனுக்கென்றேதான் ஒலிக்க ஆரம்பித்தது
"புதுவித அனுபவம்
நொடியினில் பெருகிடும்
இருவரின் உயிரையும்
அள்ளி அள்ளி பருகுதே"
என்று ஆரம்பிக்கும் அந்த பாடல்..

என்னைக் கொஞ்சம் மாற்றி...

Wednesday, April 27, 2011

இது ஸ்டேடஸ் - 13

"கேட்காமலே கொட்டிவிட்டுச் சென்றது மழை
இடையிடையே கேலிச்சிரிப்பு மின்னல்களாய்
இடிந்துகொண்டிது வானம்
இடி இடித்தது நெஞ்சுக்குள்
மயான அமைதி இப்பொழுது..."

"நானும் நாணயமும் ஒன்று தான்.
தலையாயும் பூவாயும்.
யாருக்கும் தலைவனாயும், வாலாகாவும் இருக்க பிடிப்பதில்லை...
நாணயம் வெளிப்படும்போது
நான்
பூவாயும்
தலையாயும்..."

"ஆயிரம் மின்னல்கள்
மழையா இல்ல
வானம் இடிந்து விழுதா
மின்வெட்டு
கும் இருட்டு
இதமான சுவாத்தியம்
..... சற்று மழை ஓய்கிறது
மின்னல், மின்வெட்டு தொடர்கிறது."

"இன்றை நாள் மிகவும் மோசமாகவே விடிந்திருக்கு.
மகிழ்ச்சிப்படுத்த முயற்சிக்கிறேன்."

"ஒரு கடவுள் இறக்கும் பொழுதுகளை கடக்கும் நேரம் இன்னொரு கடவுள் உயிர்பித்த நாளும் நினைவுபடுத்தப்படுகிறது.
கடவுளும் மனிதனும் ஒன்று என்பது நிரூபணமாகும் தருணமா இது
இல்லை. இன்னொரு கடவுள் என யாராவது உதமாகும் நிலையா???""

"பூசப்படும் சீமெந்தில்
சுவர் சிரிக்கும்.
எனது வியர்வையின்
வெப்பத்தில் குடும்பம் வெளிக்கும்.
- சாந்துப்பூச்சுக்காரர்-"

"ஆயிரம் கனவான வெற்றி எண்ணங்களைவிட ஒரு சில நிஜமான தோல்விகளில் வாழ்க்கை வாழப்படும்."

இன்றைய படங்கள்

இந்துக்கல்லூரி கலையரங்கில் பேராசிரியர் மெளனகுரு அவர்களின் நெறியாள்கையில், நாடக அரங்கியல் பாடசாலை ஆசிரியர்களும், கிழக்குப்பல்கலைக்கழக விபுலாநந்தா நிறுவகமும், GTZ தொண்டர் நிறுவனத்தின் அனுசரணையோடு அரங்கேற்றிய மனம் மாறிய மன்னர்கள் என்ற வடமோடிக் கூத்தின் சில நிழல்படங்கள். அற்புதமான நிகழ்வு. நல்லதொரு நிகழ்வாக அரங்கேறிது மகிழ்ச்சி. அத்துணை விற்பன்னர்களுக்கும் நன்றி.
"வாழ்க கூத்து மரபு"

Saturday, April 23, 2011

அபியும் அஷ்வினும் -01

அத்தனை வெப்பத்தையும் உள்வாங்கிக்கொண்டு எதை எதையோ யோசிச்சுக்கொண்டிருந்தான் அஷ்வின்.
அப்பொழுதுதான் புறஊதாக்கதிர்களைத் தடுக்கும் கண்ணாடியாய் அவள் அங்கு நடந்துகொண்டிருந்ததை அவனும் அவன் கண்களையும் தவிர வேறு யாரும் பார்க்கவில்லை என எண்ணி பெருமூச்செறிந்து ஏதோ உற்றவனாய் மரத்தடியில் சாத்தி வைக்கப்பட்டிருந்த தனது நீலச் சைக்கிளையும் கவனிக்காமல் எழுந்து நடக்க எத்தனித்துக்கொண்டிருந்தான்.

சட்டென்று அவள் உசுப்பிய பார்வையில் பக்கென்று சிக்கி அஷ்வின் சுருண்டுபோனான். "அவள் அழகி.
அவள் வேண்டும்.
அவள் எனக்காக வேண்டும்.
என்னைக்கொல்லும் சிறுக்கி.
எனக்கான காதல் கிறுக்கி..." என்றெல்லாம் சொல்லியவனாய் தனது நண்பனைத் தேடி ஹொஸ்டலுக்கு போனான்

"டேய் கதவைத்திறடா அரவிந்" என்ற ஆவலான தேவையை அவசரப்படுத்திய அஷ்வினின் குரல் தடுமாறாமால் வந்ததைக் கண்டு அரவிந் கதவைத்திறந்து " என்ன தொர ஓடி வாற"
"டேய் நான் இனி.... நேற்று நீ வாங்கிய அந்த ரீசேட் எங்கடா.. ஆ... அந்தா இருக்கு.. வெயிட் " என்று சட்டென அரவிந்தின் ரீசேட்டை போட்டுட்டு அந்த கறுப்பு கூலிங்கிளாசையும் போட்டுக்கிட்டு "ஹேய், டேய் ஷாருக்கான் எப்படி இருக்காரு. மன்மதன் அன்புக் கமல், ம்ம்ம்.... விக்ரம்.. எப்படிடா இருக்கன் சொல்லு. வடிவா இருக்கேனா இல்லை இன்னும் அழகாக..." என இழுத்துக்கொண்டிருக்க.
இதெல்லாம் பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருந்த அரவிந் இவன் யாரோ ஒரு பொண்ண பாத்திட்டான். ம்ம்ம்.. இதுக்கு இன்னும் இவன் மொடலாகணுமே... சீ சீ இவனுக்கு இது தான் சான்ஸ். காதல்களையில் காளையிவன்.
" என்னடா மைண்ட் வொயிஸ் பலமா இருக்கு"

"மூஞ்சப்பாரு முதல்ல தலைமுடிய வெட்டு சேவ் பண்ணக்க பிறகு சாருக்கானா சகீர்கானா எண்டு யோசி, சிக்கிரட் பத்திறத கொறச்சிட்டு குடிக்கிறதையும் நிப்பாட்டு."
"அட்வைஸ்.. ம்ம்ம் நாளைக்கு அவள் பக்கதில போவாள், நீ பார்க்காம போவ...
பாரு கூல்பார்..
ஒற்றை ஐஸ்கிறீம்...
சுவைக்கும் இரண்டு உள்ளங்கள்
உருகும் காதல்" என்று சொல்லி காதல் எண்ணக்களை விளக்கிக்கொண்டிருந்தான் அஷ்வின்.
சொல்லிக்கொண்டிருக்கும் போதே அரவிந் "சரி முதல்ல அவள் பேரு என்ன? ஒன்றும் சொல்லாம மொட்டையா நீ மட்டும் லவ் பீலிங்ல இறங்கினா"
" பொறு பொறு நாளைக்கு காட்டுறன் இப்ப சலூனுக்கு(தலைமுடிவெட்டுமிடம்) போயிட்டு வாறன். இண்டைக்கு பார்ட்டிக்கு நான் வரல்ல" என்று அஷ்வின அவசர அவசரமாக ஓடினான்..
சைக்கிள் வேகமாக மிதித்தானோ என்னவோ அவன் மனம் மட்டும் சில்லுகளாய் சுழன்றுகொண்டிருந்தது. காதல் சாவாரி போவதாய் உணர்ந்தான். அங்கே அவனை என்னமோ ஏதோ செய்துகொண்டிருந்தது. இவனும் போக அவளும் அங்கே எங்கோ போவதற்காக வந்துகொண்டிருந்தாள்..இது குவியமில்லாத காட்சிப்பிழையா. இல்ல உருவமில்லாத உருவமா அவள் ஏனோ இங்கே. இந்தப்பாட்டு அந்த கூல்பாரில் சத்தமாக ஒலித்துக்கொண்டிருந்ததை அவன் காதுகளை ஏனோ இன்னும் ஒரு இன்பநிலைக்கு கொண்டுபோனதை எண்ணி புன்சிரிப்பு அவனுக்குள்

Thursday, April 21, 2011

சிதறும் சில்லறைகள் - 15


இன்றைய நாள்
பாவேந்தர் பாரதிதாசன் நினைவுநாள் - 21-04-2011
இதை எனக்கு ஞாபகப்படுத்தியது முனைவர் மு. இளங்கோவன். நன்றி அவருக்கு. அவர் வலைத்தளத்தில் எழுதியதை இங்குபோய்க் காண்க முனைவர் மு. இளங்கோவன்

இதுகூட இப்பொழுதுகளில் ஞாபகத்துக்கு வருவதில்லை. அவ்வளவு தமிழ்ப்பற்றாளர்கள் நாம்.

அவர்கவிதையில் யாவரும் அறிந்த அந்த தமிழுக்கு என்ன பெயர்?

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணம் என்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர் இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

------பாரதிதாசன் கவிதைகள்

பிடித்த பாடல்
அண்மையில் ஒரு நண்பர் அண்மைய புதுப்பாடல்களில் நல்லபாட்டு எது என்று கேட்க வேறொரு நண்பர் பகிர்ந்தார் குள்ளநரிக்கூட்டம் திரைப்படத்தில் கார்த்திக் சின்மயி பாடிய பாடலை. கேட்டேன் பிடிக்குது அந்த மெல்லிசை. புதியதொரு இசையமைப்பாளர் செல்வகணேஸ் (எனக்கு புதுசு) இவரது இந்த விழிகளிலே என ஆரம்பிக்கும் இந்த பாடலின் வரிகளுக்கு அற்புதமான குரலால் வசியப்படுத்தியிருக்கிறார்கள் பாடகர்கள். இசை இனிமை.

விழிகளிலே



ஒரு ஸ்டேடஸ்

"எனக்குதவணும் என்று யாருக்கோவுக்காக கஸ்டப்படாதே.
யாருக்கோவாக உன்னை இழக்க நான் தயாரில்லை.
எனக்கான அன்பை நான் தவறிவிடுவேன்.
அன்பு நிரந்தரம்"

நாம் யாரோ ஒருவருடன் நட்பு வைத்திருப்போம். ஆயினும் சில நேரங்களில் குறித்த நண்பரிடம் யாரோ ஒருவருக்காக நாம் ஒரு உதவி கேட்போம். அவ்வுதவியை செய்ய ஒப்புக்கொள்வதா இல்லையா? ஒப்புக்கொள்ளாவிட்டால் நம்ம நண்பர் நம்மளை வெறுத்துவிடுவாரே அல்லது நட்பின் இடைவெளி கூடிவிடுமே என்றெல்லாம் யோசிக்கத்தோன்றும். சிலவேளை அதுவே நட்பின் முறிவுக்கு காரணம் கூட ஆகலாம். ஆனால் இடையில் வந்த யாரோ ஒருவருக்காக நாம் ஏன் நமது நண்பரின் நட்பை இழக்கவேண்டும். ஆதலால் நண்பர்களிடம் உதவிகேட்கும் போது கவனமாகவும் அவதானமாகவும் வெளிப்படையாகவும் இருத்தல் வேண்டும்.
தெளிவான மனதுடனும் சிந்தனையுடனும் நட்பின் முகவரிகளை அடயாளம் கண்டுகொள்ளவேண்டும். ஒரு முறை உதவிசெய்யாவிட்டால் ஒருமுறையேனும் உதவிசெய்யாமல் போய்விடுமா என்ன. பின்னர் நாம் கேட்ட உதவியைவிட பன்மடங்கு உதவி பரிமாறிக்கொள்ளலாம் இல்லையா.
அன்பு நிரந்தரம்.

புத்தகம்

இந்திரா பிரியதஷ்சினியின் இரண்டாவது நிழல் புத்தகம் வாசித்தேன்.ஒரு குடும்ப நாவல். நல்லதொரு எழுத்தாடல். வித்தியாசமாக இயல்பான விடயங்களை இலகுவாக சொல்லியிருக்கிறார். அங்கங்கே கொஞ்சம் அலசல். இன்னும் அழகாக நகர்த்தியிருக்கலாம் முடிவை. காரணம் முடிவில் அவசரமாக்கப்பட்ட உணர்வு. ஆனாலும் நெஞ்சில் நிற்கும் ஒரு கதைவடிவம். அன்பும் அரவணைப்பும் இல்லாதபொழுதுகளில் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி சொல்லும் நாவல். குற்றங்களில் கூடியது அடுத்தவரை துன்புறுத்தி இன்பம் காணுதல் என்பதையும் அன்பின் தேவையையும் சொல்லியிருக்கும் விதம் அழகு.

ஒரு குறும்படம்
நண்பேன்டா....

Tuesday, April 19, 2011

நிலா மறைத்த மேகம்


பொன்மணலில்
இருட்டு கால்கள்
அடம்பன்கொடியும் சிக்கியது
தவறிவிழ மீசையில்லை

அதட்டும் கடலலை
மோதிவிளையாடும்
நண்டுக்கால்கள்
நிலாச்சோறு தின்னத்தான்
இத்தனை எடுப்புகள்

வருகிறாள் அவள்
வருகையில்
எத்தனை சுகம்
கண்களுக்கா
மனசுக்கா
பார்வை ஒன்றே போதும்

முரட்டு மின்னல்கள்
பொன்மகள் வருகையில்
தடங்கல்கள்

அவள் உலா வருகிறாளா
இருட்டிவிட்டது
இருண்டுவிட்டது மனசு
நிலா மறைத்த மேகம்
ஒழிக!!!


Saturday, April 16, 2011

இது ஸ்டேடஸ் - 12

"சாமிபடத்து பூக்களைவிட பூக்களை
பூட்டிக்கொண்டிருக்கும் மரமும் பூக்களும் அழகு.
அதிகநேரம் துளிர்த்துக்கொண்டிருக்கும்
பூக்களும் நமது மனமும்."

"ஒருமுறை எடுக்கும் முடிவு கூட தெளிவாக இருந்தால் திருப்தியும் நிம்மதியுமாய் இருக்கும். எடுத்தேன் நிம்மதிக்கிறேன்."

"கருப்பு நாட்களை கடந்துபோகிறேன்..
வெள்ளிக்காசுகள் தான் வாழ்க்கையா
அன்புக்கொலுசுகள் தான் ஆராதனையா"

"ஒவ்வொரு முறை தவறிவிழும்போதுதான் தெரிகிறது எத்தனை முறைகள் எத்தனித்திருக்கிறேன் என்று"

"ஆயிரம் வேதனைகள் சுழட்டி அடித்தாலும் ஆறுதல் சொல்லும் குரல்கள் கழுவிவிட்டுச்செல்லும் அழுக்குகளையும் அடுக்கிவிட்டுச்செல்லும் அன்புகளையும்"

படித்தது பிடித்தது

"தியாகத்தில் விளைவது கசப்பான மன உணர்வும் விரக்தியான மனநிலையும்"

"மற்றவர்கள் உங்களை விட சிறப்பாகச் செயல்ப்படுதாக எண்ணாதீர்கள். ஒவ்வொரு நாளும் உங்கள் பழைய சாதனைகளை மிஞ்சுங்கள், நீங்கள் கண்டிப்பாய் வெற்றி பெறுவீர்கள். காரணம் வெற்றி என்பது நீங்கள் உங்களுடன் நடத்தும் போராட்டம்"

"நட்பின் நேர்த்தி பேசுவதும் பேசுவதைக் கேட்பதும் மட்டுமல்ல.
மெளனத்தைப் பகிர்ந்து கொள்வதும் கூட"

"உரையாடலில் அறிவைப் பகிர்ந்துகொள்கிறீர்கள்
வாதத்தில் அறியாமையைப் பகிர்ந்துகொள்கிறீர்கள்"

ஒரு படம் சீரழிக்கிறோம்
எமது கடற்கரையோரத்தில் கரையோரக்கம்பளமாக இப்பொழுது சவுக்கு மரக்கரன்றுகள் தடுப்புமரங்களாக இருக்கின்றன. ஆனால் இவற்றை பல்வேறு தீயவொழுக்க விடயங்களுக்காகவும் பயன்படுத்துவது வேதனையான விடயம் அதைவிட அதை வெட்டி வெறுமையாக்குவது அதைவிடக் கொடுமையான விடயம். தண்டனைகளைவிட இம்மரங்களின் தேவைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுதல் வேண்டுமென்பதே நமது விருப்பம்.
சில படங்கள் பார்வைக்கு



Friday, April 15, 2011

தலை, இசை நகையுடன் இனியபொழுது

எனக்கு பிடித்த இரு ஹீரோக்கள் இணைந்து வழங்கும் பேட்டி. அற்புதமான தமிழ். ஆங்கிலம் குறைவுபட்ட மகிழ்ச்சி.
பிடிக்கிறதா எனது விருப்பத்துக்குரியவரின் இனிய பேட்டி:

டாக்டர் அப்துல் கலாம்



அதே டாக்டர் கலாம் இந்தப்பேட்டியில் பல விடயங்களை சொல்லியிருக்காரு. என்னால் இங்கு விவசாயிகள் பற்றியும் விவசாயிகளின் விளைபொருட்களைப்பற்றியும் கருத்துரைப்பது ஏற்றுக்கொண்டு செயல்படுத்ததோன்றுது.


இங்கு ஒரு இசையும் நகையும் சந்திக்கும் கலைப்பொழுது நிறைய விடயங்களைச் சொல்லும் பேட்டி

சித்திரையும் சிதறிப்போகும்(ன) மகிழ்வும்

முதல்ல சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் அனைத்து உள்ளங்களுக்கும்.
வருடங்கள் நகருதல் இயற்கையின் தோற்றப்பாடு. வருஷங்கள் புதுசு புதுசாவது நமது மனது வெளிச்சம் காணவேண்டும் என்கிற எண்ணத்தில்.

எந்த நிகழ்வாயினும் நாம் அதை சிறப்பாக கொண்டாடவேண்டியது தேவையும் அவசியமும். இதற்காகவே நமக்குள் நாம் உருவாக்கிக்கொண்ட பண்டிகைகளும் விழாக்களும். ஆயினும் அவை சமய, கலாசார, இனம் சார்ந்து இருப்பது வழமை. இதற்கு உதாரணமாக "சித்திரைப் புதுவருட" தினத்தைச் சொல்லலாம். இது கூட ஒரு தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்வது சற்று கஸ்டமாக இருக்கிறது. காரணம் தமிழ் என்பது மொழியை அடயாளப்படுத்துகிறதா? அப்படியானால் தமிழ் பேசும் மற்றய சமயத்தவர்கள் கொண்டாடமறுப்பதேன்? இல்லை எனில் இனம் சார்ந்ததா என்றால் அதே கேள்வி!!!

ஆக இதுவும் தமிழ்கலந்த இந்து சமயப்பண்டிகையே. எவ்வாறாயினும் பண்டிகை அல்லது விழா என்று வரும்போதே நமது மனதுக்கு இன்பமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக அமையவேண்டும். இல்லையேல் அமைத்துக்கொள்ளவேண்டும்.

என்னைப்பொறுத்தவரையில் இங்கு மகிழ்ச்சி என்பது எதைக் குறிக்கிறது என்பது சற்று சஞ்சலப்பட வைக்கிறது. காரணம் இதற்கு முந்தைய காலப்பகுதியில் அதாவது இலங்கையின் உள் நாட்டு யுத்தத்துக்கு முன்னர் இவ்விழாக்கள் பண்டிகைகள் மிகவும் சிறப்பாக கலாசார சமய விழுமியங்களின் வெளிப்பாடக அமைந்திருப்பதைக் காணக்கூடியதாக இருந்திருக்கிறது. இதற்காக பல அரங்கேற்ற நிகழ்வுகளும் விளையாட்டு போட்டிகளும் கலை கலாசார போட்டிகளும் அரங்கேறியுள்ளன. சான்றாக இந்த காணொளியில் வரும் குரல்வழியினூடு கேட்டுப்பாருங்கள்.
மட்டக்களப்பில் சித்திரை



ஆனால் இப்பொழுதுகளில் இந்த விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தாற்போல் இளைஞர் மற்றும் பெரியோர்களிடம் இருப்பது "குடியும் குடித்தனமும்" - அல்ககோல் பாவனை. ஆம் இப்போது (அதிகரித்த) இந்த மதுபான அதிமிஞ்சிய பழக்கமும் கெட்டுப்போகும் இளஞர்களின் அதனோடிணைந்த பாலியல் நடத்தைகளும்.

இப்பொழுது விருந்து (பார்ட்டி - party) என்று பொருள் பொதிந்த இந்த குடிப்பாவனை மட்டுமே என்கிற எண்ணம் மட்டுமே.
விருந்து அல்லது விருந்துபசாரம் என்பது ஓய்விலாமல் உழைத்து இயந்திர வாழ்க்கையில் ஓட்டிச்செல்லும் வாழ்க்கையில் தொடர்பாடலுக்காகவும் சமூகமயப்படுத்தலுக்காகவும் மனமகிழும் பொழுதுபோக்குக்காகவும் ஒன்றாக சேர்ந்து மகிழ்வுறும் நிகழ்வு. இது வழமையில் விருந்துணவுடன் குடிபானங்களுடன் சங்கீத நடன நிகழ்வுடன் நடைபெறும்.

ஆனால் இந்நிகழ்வில் பங்குகொள்வோர் மற்றவர்களை காயப்படுத்தக்கூடாது, எந்த இடைஞ்சலும் மற்றவர்களுக்கு வழங்கக்கூடாது என்பதில் கவனமாகவும் பொறுப்பாடாகவும் இருத்தல் வேண்டும். இல்லையேல் எந்த சந்தோசம் வேண்டும் என்று விரும்பினார்களோ அது கிடைக்காமல் அதற்கு மாறான கஸ்டங்களே வந்து சேரும்.

ஆனால் இப்பொழுது கிராமங்களில் இது வெறும் மதுபாவனையோடு மட்டும் அடிக்கடி நடைபெறுவதால் இதற்கு விருந்து அதாவது பார்ட்டி என்று சொல்வதா இல்லை 'குடித்தல்' என்ற சொல்வதா? இன்றைய காலத்தை நோக்கும் போது இன்னும் ஐந்து அல்லது சில வருடங்களிலே மதுப்பாவனை குறைந்த அல்லது ஏனைய ஒழுக்கமுள்ள பிள்ளைகளை (பெண், ஆண்) இனம் காண்பது இந்த அநாகரிக வளர்ச்சி என்று சொல்லும் ஒரு ஸ்டைலில் கிராமங்கள் வளருகின்றது. சந்தோசங்கள் எது என்பதைத் தவிர்த்து.

போர் என்ற போக்கில் வாழ்ந்த சமுதாயமா நாங்கள். இல்லை இதற்காகவா இவ்வளவு ஆசைகளை அடக்கிவைத்து இன்பம் காணுகிறோமா என்ற எண்ணம் பெரியவர்கள் மனதில் எழுவதை அவர்களுடன் உரையாடும் போது தெரிகிறது.

ஆனால் எமது கலாசார விழுமியங்களின் வெளிப்பாடாக இருக்கும் கவை கலாசார நிகழ்வுகள் என்பது ஒரு சமுதாயம் சார்ந்த மக்களுடன் பழகும் செயற்பாடு(Socialization)என்பதில் நின்று விலகி எமது போட்டி என்ற முனைப்பில் மற்றவர்களுடன் பிரச்சனைக்குள்ளாகி சந்தோசம் காண்பதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. ஒவ்வொருவரும் வெவ்வேறு சிந்தனைகளில் வித்தியாசமாக யோசித்து பல்வேறு விடயங்களை செய்யலாம். அதைவிடுத்து இந்த சித்திரைப் புத்தாண்டில் எங்கள் பிரதேசம் எல்லாம் 'தீ' இருப்பது விளையாட்டு ஒன்றே.
ஏனைய கலை நிகழ்வோ, கச்சேரிகளோ, கூத்து, கொம்புமுறி, நாட்டிய நாடக நிகழ்வுகளோ இடம்பெறுவது குறைவு என்பதை விட இல்லை என்றே சொல்லலாம். சின்னஞ்சிறிய பிள்ளைகளை ஊக்கிவிக்கும் பல நிகழ்வுகள், பாடசாலை மாணவர்களை ஊக்கப்படுத்தும் கலாசார போட்டி நிகழ்வுகள்... இப்படி இன்னோரன்ன நல்ல நிகழ்வுகளை நாம் மறந்துவிடுகிறோம். இவ்வாறான பல விடயங்களை சொல்லிச் செயற்படுத்தும் நோக்கில் நாம் தவறுகின்றோம். இதைப்பற்றி கதைக்கக்கூட நமக்கு நேரம் போதாமல் இருக்கும். இந்த அவசரப்பொழுதுகளில் நாம் வாழ்ந்துவருகிறோம். அல்லது யார் எப்படி செயல்படுத்துவது என்ற கேள்வி. நமக்கென்ன இதெல்லாம் நமக்கு வேண்டாக வேலை என்கிற அசமந்தத் தன்மை.
நமது சிந்தனையை சற்று அகலப்படுத்தும் போது விளங்கும் சிதறிப்போகின்ற மகிழ்ச்சி எதுவென்றும், எப்படியென்றும்


நாம் எதில் இன்பம் காண்கிறோம் என்பது மற்றவர்களின் இன்பத்தை சந்தோசத்தைக் கெடுப்பதிலா என்பதை நமக்கு மற்றவர்களிடமிருந்து வரும் இடைஞ்சல்களே போதும் யோசித்து செயற்படுவதற்கு.

எந்த விழா செய்யினும் நிகழ்வு செய்யினும் கவனமாக செய்யவேண்டும் என்பதை உணரவேண்டும்.
சேர்ந்து செயல்படுவோம்



Thursday, April 14, 2011

டூயட் கவிதைகள் - 01

இன்றுமுதல் மற்றொரு ஆரம்பம் இது டூயட் கவிதைகள் என்று ஆரம்பிக்கிறது. அவ்வப்போது வந்துசேரும். பல்வேறுவிதமாக வரும். இன்று ஒரு வித்தியாசம்.

அவன்:

ஆயிரம் கனவுகளை
தின்றிருக்கிறாய்
அத்தனையையும்
மூழ்கடித்துவிடுகிறது
உன் புன்னகை

அவள்:

நண்பர்கள் போகின்ற வழியில்
நீ மட்டும்
'திரும்பிக்கொள்வது'
போதும் எனக்கு
நள்ளிரவு மணியை கடப்பதற்கு

அவன்:

நீ பேசாத தருணங்களில்
பேசிவிடும்
ஒரு 'எஸ்.எம்.எஸ்'

அவள்:

என் பிற்கொடுப்பனவு
'பில்லில்'
உனக்கான அழைப்பே
உன் பேச்சுக்களை
காட்டிக்கொடுக்கும்

அவன்:

ஒரு பூங்கொத்து
புன்னகை
ஒரு டயரி
எஸ்.எம்.எஸ்

அவள்:
உன் பார்வைகள்
நான் பார்வைவங்கி
அழைப்புக்கள்
காதல் வழி
வலி


Wednesday, April 13, 2011

சிதறும் சில்லறைகள் - 14

இன்றைய நாள்:
இந்தியத் தமிழக சட்ட சபைத் தேர்தல் இன்று. இதற்காக நண்பரொருவர் முகப்புத்தகத்தில் எழுதிய குறிப்பு எனது எண்ணத்தையும் ஏற்றுள்ளதால் இங்கு பகிர்கிறேன்.(நன்றி மரூ)

"அடுத்த ஐந்தாண்டுக்கான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் தமிழக வாக்காளர்களுக்கு மனவருத்தத்துடனான வாழ்த்துக்கள். பில்லியன் சனத்தொகை கொண்ட நாட்டில் கோடிகளில் ஊழல் செய்தால் யார் மதிப்பது, பில்லியன்களிலேயே ஊழல் செய்வார்கள் வருகிற ஆட்சியாளர்களும்."

இன்றைய குறும்படம்:
தற்போது வேலையில்லாப் பிரச்சனை அதிகரித்துச்செல்கிறது. இந்தக் குறும்படம் எதை எதையே ஏதோ பல விடயங்களை கூறிச்செல்கிறது.
பாருங்கள்.


மாற்றம் ஒன்றே மாறாதது
நாம் பேசும் பேச்சிலும் நடையிலும் மாற்றம் வேண்டும். இல்லையேல் வாழ்க்கையின் பல பகுதிகளை வாழாமல் போகும் வெறும்பக்கங்கள் அதிகரித்துவிடும்.

நாம் பயன்படுத்தும் சொற்களுக்கு உண்மையில் எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பது நமக்கு தெரிவதில்லை. அதேபோல் அதுவே நமக்கு எவ்வளவு விபரீதமான தன்மையை ஏற்படுத்தும் என்பதும் தெரியமறுப்பது இயல்பு. நமக்கு தெரிந்த எத்தனையோ சொற்களை பேசாமல் விடுவதும் பேச வேண்டிய விடயங்களை தவிர்த்து வேண்டாத விடயங்களை அலசுவதும் நமது வழக்கமாகியிருக்கிறது. ஆயினும் ஒவ்வொரு படியிலும் எம்மால் மாற்றம் கொண்டுவரமுடியும் அதுவே நமது முன்னேற்றத்திலும் வெற்றியிலும் வாழ்க்கையில் கொண்டுவரும். இதுவும் நமது நண்பரொருவர் பகிர்ந்த குறும்படம் ஹாய் அரும்பாவூர் நன்றிங்க.



கவிதை:


நான் இருட்டில்
வாழ்கின்ற போதும்
பகல்களாய் இருக்கும்
உன்
கடைசி சிரிப்பு

நன்றி
அண்மையில் நமது சகோதரம் புலம்பெயர் உறவு நமக்கு ஒரு புகைப்படக்கருவியை(Camera)அனுப்பிருந்தார். மிகவும் மகிழ்ச்சி. நன்றி அண்ணா. இயற்கையை ரசித்து புகைப்படம் பிடிப்பதில் ஒரு ஆர்வம். இததை எப்போதும் என்மனம் விரும்பும். இதற்கு துணைநிற்கும் இக்கமெரா.


சித்திரைப் புத்தாண்டு
உண்மையில் எனக்கு இருக்கும் நீண்டகால சந்தேகம் இந்த சித்திரைப் புத்தாண்டு "தமிழ் சித்திரைப் புத்தாண்டு" என்று சொல்லுவர். உண்மையில் இது சமய சம்பந்தமான பண்டிகையா இல்லை இனம் அல்லது மொழி சார்ந்ததா? ஏனெனில் சமய சம்பந்தமானதென்றால் இது " இந்து அல்லது சைவ சித்திரைப் புத்தாண்டு" என்று வரவேண்டுமே. தமிழ் என்று வருவதனால் யார் யாரால் கொண்டாடப்படவேண்டும்.?? விவாதிக்கும் நோக்கில் அல்ல. இதையும் சேர்த்து அரசியல் லாபம் கொள்வோருக்காக கேட்டுக்கொள்வது.
என்னைப்பொறுத்தவரையில் இதை சித்திரைப் புத்தாண்டு என்று ஏற்று ஒரு இன்பநிறைப் பண்டிகையாக கொண்டாடவேண்டியதே. இதற்காக புது ஆடை புது பானை பொங்கல் என்று ஏராளமான ஏற்பாடுகள் இருந்தாலும், கொண்டாடும் போது பக்கத்து வீட்டிலும் அடுப்பெரிகிறதா என்று சற்று பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மகிழ்ச்சியில் மற்றவர்களையும் மகிழ்வுற செய்வதில் பன்மடங்கு சந்தோசம் வரும் என்பது உண்மை.

"அனைவருக்கும் இனிய சித்திரைப் புதுவருட நல்வாழ்த்துக்கள்"
இந்நாளையும் இனிய நாளாக்குக.

மற்றொரு ஆரம்பம்
எனது நண்பனொருவன் சிங்கப்பூரில் வசித்துவரும் இந்திய நண்பன். வெறும் வலைப்பதிவில் இதயம் இணைந்தவன். நல்லவன். வல்லவன். கிராமத்துக்காரன். இதுபோதும் இவனுக்கு.
கருப்புசாமி என்னும் கருப்பு, நமது கிராமத்து மாணவனொருவனுக்கு பணஉதவிமூலம் அவரது கல்விக்கு ஒரு உந்துசக்தியாக இருப்பதாக உதவுவதற்கு முன்வந்துள்ளான். இம்மாதம் முதல் இதை ஆரம்பிக்கவேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறோம். நன்றி நண்பனே.
"நீ யாருக்கோ செய்யும் உதவி உனக்கு யாராலோ வந்து சேரும்"

Saturday, April 9, 2011

சிவன் வீடு தேடியா போனாய்?

ஓடி ஓடி வாசல் வருவாயே மாமி
சிவன் வீடு தேடியா போனாய்?

'தம்பி எப்படி இருக்கான்' என்று
தவறாமல் வருவாயே !

'யோசிக்காதே எல்லாம்
நல்லாகும்' என்று சொல்வாயே
நீ எமை விட்டு சென்றாயே
நாம் மட்டும் என்னாவது ???

காலச்சக்கரத்தில் உனக்கு
இறப்பு
வாழ்க்கைச்சக்கரத்தில்
எங்களுக்கு இழப்பு

'நான் மட்டும் வராமல்
என் பேத்தியை
பார்க்காமல் போவேனோ'
என்று நீ வந்து
முந்தானையில்
மருமகளை தூக்கி
உச்சிமோந்த காட்சி
நிக்குது நெஞ்சில்
இன்னும்
உன் அன்பு மாறாமல்..

வீட்டில் யாருக்கும் வருத்தம்
என்றால் போதுமே
முதன் முதலாக தெம்பிலி,
தோடங்காய், வீவா
என்று ஆயிரம் அன்புகளை
கொண்டுவருவாயே
இன்று நீ இல்லை
கலங்குகிறோம் நினைவாலே
அஞ்சலிக்கிறோம்
உறவாலே...

எதுவேண்டும் என்று
கேட்டபோதெல்லாம்
ஒன்றும் தேவையில்லை
உங்கள் அன்பு போதும்
என்பாயே
இனி யாருக்காக
அன்பு செய்வோம்
நீ மட்டும் சென்றால்.....

ஓடி ஓடி வாசல் வருவாயே மாமி
சிவன் வீடு தேடியா போனாய்?

ஆத்ம அஞ்சலி

மாமியின் 31 ஆம் நினைவு நாளையொட்டி அஞ்சலிக்கிறோம்.


Saturday, April 2, 2011

சிதறும் சில்லறைகள் - 13

கடந்த மாதம் எழுத முடியாமல் போயிற்று. சிக்கித் தித்திக்கும் உள்ளங்களுக்கு தலைவணங்குறேன் மன்னியுங்கோ..

இன்றைய நாள்


கிறிக்கட் விளையாட்டின் உலகக்கிண்ணம் 2011 ஐ வெல்லப்போகும் அணியைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நடந்து வரலாற்றில் பதிவாகும் நாள்.


இரு அணிகளும் மிகப்பெரிய அணி என்று சொல்லுமளவுக்கு என்னால் முடியல. ஆனாலும் திறமையான வீரர்களையும் கொண்டுள்ள அணி என்பது எனது கருத்து. ஆனாலும் இலங்கை அணிக்கு அண்மைக்காலமாய் தோள் கொடுக்கும் எனது விருப்பத்துக்குரிய அஞ்சலோ மத்தியூஸ் விளையாடாதது கவலையளிக்கிறது.

ஆனாலும் முரளி, சச்சினின் இறுதி உலகக்கிண்ணப் போட்டி என்பது பார்வையாளர்களாகிய நமக்கு சற்று உற்சாகத்தை தரும். ஒவ்வொரு ஆரம்பத்துக்கும் முயற்சிகளுக்கும் திறமைகளுக்கும் வெற்றி இலக்கை எட்டி சாதனைகளோடு விடைபெறும் வீரர்களுக்கு வணக்கம்.
இவ்விளையாட்டில் விளையாட்டை விட அரசியலாய் தமிழினமாய் எடுத்துநோக்கப்படுவதை கண்டிக்கிறேன். யாரோ தெரியாத என்னவென்று கூட புரியாத நிலை வந்தாலும் கால்பந்து போட்டியை ரசித்து ஏதோ ஒரு அணிக்கு சார்பாக இருக்கும் நமது மனது கீழ்த்தர அரசியலை ஒரு விளையாட்டின் வியர்வைக்குள் கொண்டுவருவதை வன்மையாக எதிர்க்கிறேன்.

பாடலாஞ்சலி

கடந்த மாத ஆழிப்பேரலையில் சிக்கி நிலைகுலைந்து உறவுகளுக்காக இந்தப்பாட்டை சமர்பித்து அவர்களின் மீண்டுமொரு முயற்சிக்கு வெற்றிக்கு உதாரண புருஷர்களாக அமைய இருக்கவேண்டுமென்று பிராத்திக்கிறேன்.



Lyrics:-

Pray for me brother
Pray for me brother
Pray for me sister
Are you searchin’…
Pray for me brother

Lookin’ for the answers To all the questions In my life
Will I be alone Will you be there By my side
Is it something he said Is it something he did
I wonder why He is searchin’ For the answers
To stay alive

Could you ever listen Could you ever care
To speak your mind
Only for a minute For only one moment
In time

The joy is around us But show me the love
That we must find
Are you searchin’ For a reason to be kind, to be kind…
He said… Pray for me brother

Pray for me brother Pray for me sister
Pray for me brother Say
what you wanna say now
But keep your hearts open
Be what you wanna be now
Let’s heal the confusion
Pray for me brother

Don’t let me take When you don’t wanna give
Don’t be afraid Just let me live
Don’t let me take When you don’t wanna give
Don’t be afraid Say what you wanna say now
But keep your hearts open

Be what you wanna be now Let’s heal the confusion
Pray for me brother Pray for me brother
I’m ashamed ah, brother be dying of poverty
when he down on his knees its only then he prays
And it’s a shame ah, brother be dying of ignorance
cos the world is a trip and everybody’s a hypocrite
Need to stop ah , taking a look at the other
I’m not ashamed of poverty
need to be making his life better
So think about it, think about it once more
cos life is a blessing and it’s not justa show, ah
Round and round the world is spinning around

We need to be singing a prayer, we need to be singing it now
Round and round the world is turning around
We need to be singing a prayer, we need to be singing it now
Need to be feeling the power, need to be feeling the faith
We need to coming together just to win this race

Need to be feeling the power, need to be feeling the faith
We need to coming together just to win this race (2)

Are you searching for a reason to be kind ?



ஒரு ஸ்டேடஸ்
டோக்கியோ பஸ் நிலையத்தில் காணப்பட்ட வாசகம்

"இங்கே பேரூந்துகள் நிற்கும்
காலம் நிற்பதில்லை
எனவே நேரத்தை வீணடிக்காமல்
உங்கள் வேலையைக் கவனியுங்கள்.

ஒரு இணையம்

புவிநடுக்கம் பற்றிய தகவல்களை அறிய இத்தளத்துக்கு சென்றே பார்த்துக்கொள்ளுங்கோ
நிலநடுக்கம்

சிறிதாக சிதறியிருக்கிறது. மன்னிக்க..

Friday, April 1, 2011

வாழ்க்கை தவறும் படிப்பு


மேலுள்ள படம் இலங்கையின் கல்வி முறையால் சழுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை ஓரளவு சித்திரக்கிறது. ஒரு மாணவன் பரீட்சையை மட்டும் நோக்காகக் கொண்டு படித்து தனது முயற்சியினாலும் திறமையினாலும் தேடலினாலும் வெற்றிகாண்கிறான். அதேவேளை இதற்கு மாறாக வளரும் பிள்ளை என்ன மாற்றத்துக்குள்ளாகிறது என்பதை ஒரு பார்வைக்கு சொல்லியிருக்கிறேன். இதில் எவ்வாறு மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். பெற்றோர் பிள்ளை மற்றும் ஆசிரியர்கள் எவ்வாறு கல்வியால் சமுதாய சிந்தனைகளை சமுதாய மாற்றங்களை கொண்டு வரலாம் வரமுடியும் என்பதை அடுத்த பதிவில் இடுகையிடுகிறேன். அதுவரை உங்களை மேலான கருத்துக்களுக்கும் பார்வைக்கும் மட்டுமே.

சில பிடித்த ஸ்டேடஸ்கள்

"மாற்றம் ஒன்றே மாறாதது."

"எதுவும் செய்யாமல் இருப்பதை விட ஏதாவது செய்தல் பெரிது."

"நீங்கள் அசலாக பிறந்தீர்கள் ஒரு நகலாக இறக்காதீர்கள்"

" பார்வையற்ற ஒருவரிடம் நிறத்தின் பொருளை விளக்க முடிந்தவரால் வாழ்க்கையில் எதைப்பற்றியும் யாரிடமும் விளக்க முடியும்"

நேற்று வாசித்த ஒரு புத்தக வரிகள்
என்னை மிகவும் பாதித்தது
:
""என்னை வெறுப்பவர்களுக்கு நன்றி - நீங்கள் என்னை வலிமையடையச் செய்தீர்கள்.
என்னை நேசிப்பவர்களுக்கு நன்றி - உங்களால் என்னுடைய இதயம் விசாலமடைந்தது.
என்னைப் பற்றி கவலைப்படுபவர்களுக்கு நன்றி - யார் உண்மையான அக்கறை உள்ளவர்கள் என்பதை எனக்கு புரியவைத்தீர்கள்.
என்னை விட்டுச் சென்றவர்களுக்கு நன்றி எதுவுமே நிலைப்பதில்லை என்று காட்டுவித்தீர்கள்.
என் வாழ்வில் பிரவேசித்து இன்று நான் இருக்கும் நிலைக்கு என்னை ஆளாக்கியவர்களுக்கு நன்றி.."""
வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு