Pages

Sunday, May 30, 2010

திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் 2010

எமது  நண்பர் தம்பி சதீஷின் ஆரம்பம்,அசத்தல், தொடரும் வெற்றிப் பயணத்தின் முயற்சியில் சக பதிவர் சதீஷும் சில நண்பர்களும் இணைந்து...
வாருங்க



இது திரை உலகிற்கு பதிவுலகத்தின் விருதுகள்...

கைகோர்ப்போம் வாக்குப்போடுவோம்.....
வாக்களிக்க
இங்க வாங்க

Monday, May 17, 2010

கண் குருடாய்

கண்ணை
உசுப்பி உசுப்பி

தட்டுத்தடுமாறி
டோச் லைட்டை
சுவர் மணிக்கூட்டில்
கை உயர்த்தி அடிக்க
நெனைவுக்கு வந்தது
சுவர் தரையாகி
ஒருவருடம் கடந்து....

கண்ணை
தடவிப்பார்க்க
'அப்பா' என்ற மகளை
பாய் நனைத்திருப்பாள்
என்ற நெனைப்பில
வருடிய கை
தெரிந்துகொண்டது
இரத்தக்காயம்
அவள்
உடலிலும்
என்
உள்ளத்திலும்
காயப்பட்டதனால்
காய்ந்துவிடாமல்....

கண்ணை
கசக்கி கசக்கி
அண்ணாந்து
விடிஞ்சிருக்கா இல்ல
வெள்ளி பூத்திருக்கா
'கும்' எண்டு தான்
இன்னும்.....

Sunday, May 9, 2010

சில்லறைகள் நான்

உன்னுயிரன்புச்
சேர்க்கையில்
வாழ்க்கையாகிறேன்
தாயே....
நான்
உன் உயிர்
உயிர் சேர்ந்த
உயிரெச்சம்
என் வாழ்க்கை
இலக்கணமாகியது...
நான் என்றும்
உன்னோடு தாயே
வாழ்த்துக்கள் அம்மா.....

Saturday, May 1, 2010

டாக்டர் அப்துல் கலாம் சிந்தனையிலிருந்து

என்னைக் கவர்ந்த உலகத்தலைவர்களில் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் முதன்மை பெறுகிறார்.. அவரைப்பற்றிய விடயங்கள் எங்கு கண்டாலும் வாசிக்கத்தவறுவதில்லை. இவரின் சிந்தனைகள் கனவுகள் பற்றி படித்தவற்றை உங்களுடன் அவ்வப்போது பகிர்ந்து கொள்ள எண்ணியுள்ளேன். கடந்தநாட்களில் நான் கஸ்டப்படும்போதெல்லாம் என்னை ஊக்கப்படுத்திக்கொள்ளும் வாசகங்களைப் படிப்பது வழமை. அவ்வாறு படித்து பிடித்தவற்றை இடுகையிடுகிறேன். சிந்தனைகள் மனதை வளப்படுத்தும் என்ற நோக்கில் நீங்களும் வாசியுங்கள்...

இன்று சில சிந்தனைகள்..
"இதோ இந்த வார்த்தைகளை திரும்பத்திரும்பக் கூறுங்கள். இவற்றைத் தவறாமல் கடைப்பிடிப்பேன் என்று கூறுங்கள்"..


  • கல்வியில் சிறப்படைய நான் நன்றாக உழைத்துப் படிப்பேன்
  • என்னைச் சுற்றியிருப்பவர்களில் பத்துப்பேருக்கு எழுதப்படிக்கக் கற்றுக்கொடுப்பேன்.
  • என் சுற்றுப்புறத்தில் போதைப்பழக்கத்துக்கு ஆளானவர்களில் குறைந்தது ஐந்து பேரையாவது அக்கொடிய பழக்கத்திலிருந்து மீட்பேன்.
  • என்னுடைய வீட்டிலோ படிக்கிற இடத்திலோ பத்து மரக்கன்றுகளேனும் நட்டு அவை மரமாகும் வரை பாதுகாத்து வளர்ப்பேன்.
  • *துன்பப்படுகின்றவர்களில் சிலருக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்து அவர்களுடைய முகத்திலே மலர்ச்சியை ஏற்படுத்துவேன்.
  • நான் மதம்,சாதி, மொழி ஆகியவற்றின் பெயரால் நடக்கும் தீவிரவாதச் செயல்களுக்கு துணைபோக மாட்டேன்
  • நேர்மையான வழியில் நடப்பேன். மற்றவர்களும் நேர்மையாக நடந்துகொள்ள உதவுவேன்.
  • நான் நல்லவனாய் இருந்து நற்பணிகள் செய்து என் வாழ்வை மற்றவர்களுக்குச் சிறந்த உதாரணமாய்த் திகழச் செய்வேன்.
  • மனநோயாலும் பிற ஊனங்களாலும் துயர்ப்படும் சகோதர சகோதரிகளுக்கும் என்னாலான முயற்சிகளைச் செய்து அத்துயரிலிருந்து மீட்டு சாதாரண மனிதர்களாய் வாழச்செய்வேன்.
  • என் தாயத்திருநாட்டின் வெற்றியையும் என் நாட்டு மக்கள் பெறும் வெற்றியையும் நான் மகிழ்ச்சியோடு கொண்டாடுவேன்..

இணையும் நட்சத்திரங்கள்

என் எழுத்துக்களின் இதுவும் ஒரு வெற்றிதான்.
எமது ஊரில் ஒரே ஒரு விளையாட்டுக்கழகம் என்றிறிருந்த நிலைமையில் மற்றொரு விளையாட்டுக்கழகம் கால்கோள் இட்டு வளர்ச்சியுற்று வரும்வேளையில் இரு விளையாட்டுக்கழகங்களும் கீரியும் பாம்புமாய் ஆக இவர்கள் இருவரும் சேர முடியாதா என்ற எண்ணம் ஒவ்வொரு ஊர்க்குடிமகனிடமும் இருந்த அவா நாளை நிறைவேறுகிறது... அதுதான் சித்திரைப்புது வருட கலாசார விளையாட்டுவிழா 2010. இதற்காக சென்ற முறை நடைபெற்ற நிகழ்வொன்றில் எமது திரு.எஸ்.அமலநாதன் (பிரதேச செயலாளர் மண்முனைப்பற்று) அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இருவிளையாட்டுக்கழகங்களும் பேச்சுவார்த்தை நடத்தி முறுகல் நிலைமை ஏற்பட்டபோதும் அவற்றை விடுத்து இரு கழகங்களும் இணைந்திருப்பது வரவேற்கத்தக்க விடயம். இவ்விரு விளையாட்டுக்கழகத்தினருக்கும் எமது வாழ்த்துக்களும் நன்றிகளும். விளையாட்டு நிகழ்வின் அழைப்பிதழின் நகல்பிரதி ....





அனைவரையும் அன்புடன் அழைக்கும் இரு கழகங்களுக்கும் நன்றிகள் கோடி....

*இச்சிதறல்கள்.. ஒரு விளையாட்டுக்கழகத்தினைப் பற்றி எழுதிய எழுத்துத்தும் மற்றய விளையாட்டுக்கழத்துக்கு கொடுத்த எதிர்மறையான விளைவுகளும் இரண்டு விளையாட்டுக்கழகங்களை இணைக்கும் மறைமுக முயற்சியில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியே.. இவ்வாறு இவ்விரு விளையாட்டுக்கழக வர்த்தக நோக்கிலான இருகல்வி நிலையங்களும் ஒருவரையொருவர் எதிராக பேசிக்கொள்ளாமல் இணைந்து எமது ஊரின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்கி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் உரிய முன்னேற்றத்தினைக் காட்டவேண்டும் என்பதும் நமது எதிர்பார்ப்பு...
மாற்றம் வேண்டும் நல்லதாக அவை அமையவேண்டும்..என் எழுத்துக்களின் இதுவும் ஒரு வெற்றிதான்.
வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு