Pages

Sunday, April 25, 2010

எழுத்துக்களின் ஆசிர்வாதம் அப்பாவுக்கு

தோள் மீது வளர்ந்தபோதும்
உன்
தோள்கொண்டு வளர்ந்தபோதும்
என்னோடு ஒன்றாக வளர்ந்தது
உங்கள் பாசம்

உன் உடற்பொலிவில்
ஒருசொட்டுக் குறைவு
என்றாலும்
என் உயிர்த்துடிப்பின்
இடைவெளி கூடுகிறது
தந்தையே....

ஒவ்வொரு இருமலுக்கும்
உன் அவஸ்த்தைகள்
என் விலா
எலும்புகளைத்தானே
நோகடிக்கிறது

இருமலின் எச்சிலில்
இரத்தம் வருவதாய்
சொல்லுகிறீர்கள்
உண்மையில்
இரத்தக்கசிவு
என்நெஞ்சிலிருந்து
நிமிருங்கள் தந்தையே
நான் உங்களோடு....

எதையும் தாங்கும் இதயம்
என்னிடம்- இப்போது
உங்கள் கவலைகளால்
என்
தைரியத்தின் வேர்களுக்கு
தைரியம் இல்லை

நடுநிசி கடந்தாலும்
ஒவ்வொரு இரவும்
என் நித்திரைக்குப் பின்னே
உங்கள் உறக்கம்
இன்று இருவரும்
தூக்கம்கொள்ளவில்லை
இருமிக்கொண்ட காய்ச்சலால்.....

தைரியம் ஊட்டி வளர்த்த
தந்தையே
இப்போது தைரியமாய் இருங்கள்
நாளைய விடியல்
நமக்காக உதிக்கும்
கவலைகளால் துருப்பட்டு
கலாங்காதிருங்கள்
உங்கள்
கண்ணீர் துடைக்கும்
விரல்கள் எப்போதும்
என் வேர்வைகளும்
பேனை பிடிக்கும்
விரல்களும்...

நீங்கள் எழுதிய
கடைசி எழுத்து நான்
என் ஒவ்வொரு எழுத்தின்
முதல்ரசிகன் நீங்கள்
இலேசாக இருங்கள்
எல்லோரினதும் ஆசிர்வாதம்
கொணர்கிறேன்
எழுத்துக்களாலே.......

Wednesday, April 21, 2010

உண்மையின் வேர்கள்

எத்தனையோ தடவைகள்
எதை எதையோ
எழுத நினைத்த போதும்...

எப்படியோ
சொல்ல வேண்டும் என்று
முணுமுணுத்தபோதும்...

காலைச் சுண்டி இழுத்து
கையைப்பிடித்து
தலைமேல் எறி
நெஞ்சு மேல் படர்ந்து
ஆழ ஊடுருவி
மனசு எங்கே
எண்டுணர்ந்து
துருதுருத்து
ஒழிந்து கொள்கிறது...
உண்மையின் வேர்கள்
மெளனித்து....

Monday, April 19, 2010

கடவுள் எங்கே .....பிள்ளைய பாருங்க..

ஒரு சமூகம் அபிவிருத்தி காணவேண்டுமெனில் முதலில் பிள்ளைகள் அதாவது சிறுவர்களின் கல்வி விருத்தியடைய வேண்டும்.
ஒரு பிள்ளை தனது ஆரம்பக்கல்வியை தனது ஐந்து,ஆறு,ஏழு,எட்டு வயதுகளிலாவது மேற்கொள்ளவில்லையாயின் தனது வாழ்க்கையின் கல்விகற்றலின் பெருமான்மையை இழக்கநேரிடுகிறது. அதாவது படிப்பின் மீது வெறுப்புக்கொண்டு எனக்கு படிக்க முடியாது என்ற நிலையை இது தோற்றுவிக்கின்றது. இதன்பின் இதெ பிள்ளை தனது 20-25 ஆவது வயதுகளில் திருமணம் முடித்து தான் தாயாகும் போதுதான் தான் இழந்த அல்லது தன்னால் முடியாமல் போன கல்வியை தனது பிள்ளைக்காவது ஊட்டவேண்டும் என்ற எண்ணம் 25 வருடங்களின் அந்தப்பிள்ளைக்குத் தோன்றும். இதனால் ஒரு பரம்பரை கல்வியில் இருந்து நழுவுகிறது. அடுத்த பரம்பரையிலாவது .....என்று மனசுக்குள் நினைத்துக்கொள்கிறது.. இதனால் இப்பேர்ப்பட்ட கல்வி வீழ்ச்சியினால் நாம் அல்லது நமது சமூகம் கல்வி வளர்ச்சியில் பின்னடைவை நோக்கியிருக்கிறோம்.
இதெற்கெல்லாம் ஆயிரம் காரணம் கூறுவோம். எங்களுக்கு இந்த வசதி கிடைக்கல்ல, போர், வாய்ப்புக்களும் வசதிபடைத்தவர்களுக்கு, வறுமை, ....என்றெல்லாம் அடுக்கிக்கொண்டுபோவோம். ஆனால் நமது முயற்சியில் நாம் பின்னுக்கு நிற்கிறோம் என்பது மறுக்கப்பட முடியாத ஒன்று.
இலவசக்கல்வி முறைமை இலங்கையில் இருப்பதால் இக்கல்வியினை பெற்றுக்கொள்ள நமது சமூகம் பின்னடையவேண்டிய நிலைமை உருவாகின்றது என்பது மனவேதனைக்குரிய விடயம்.
இதற்கு நமது பெற்றோரின் வாழ்வாதார பண்பு அதாவது தொழில் முயற்சி சற்றுக்குறைவாக இருப்பதனால் பிள்ளைகளை வளர்த்தெடுப்பதில் பல சிக்கல்களும் கஸ்டங்களையும் எதிர்நோக்குவது தவிர்க்கமுடியாததொன்று. இதற்காக சிறுவர்களின் கல்வி விருத்திக்கு உதவுவது அச்சிறுவர்களின் சமூகத்தின் தலையாய கடமை.
இங்க பாருங்க இரு சிறுவர்கள் நமது ஊரின் குடியிருப்புக்கு பாடசாலை விட்டுச்செல்லும் காட்சி. இவர்களின் கால்களில் வறுமையைப் பாருங்கள் புன்னகையில் என்ன தெரிகிறது என்று கடைசி வரிகளில் சொல்லியிருக்கிறேன்

எங்களால் எல்லோருக்கும் உதவிக்கொள்ள முடியாவிட்டாலும் முடிந்தவரை கல்வியில் ஆர்வமுள்ள முயற்சியுள்ள பிள்ளைகளுக்காவது உதவிக்கொண்டிருப்பமேயானால் அச்சமூகத்தின் விருத்திக்கு வித்திடுகிறதாக இருக்கும்.
"சிறுவர்களின் கல்வி விருத்தியில் கடவுளைக்காணாம்" என்பதை இச்செயற்பாட்டை நீங்களே செயல்ப்படுத்தும் பொழுது உணரலாம் சகோதரர்களே!!!
நமது வீணாண செலவுகளையாவது குறைத்துக்கொண்டு மற்றவர்களின்(சிறுவர்களின்) படிப்புக்காக உதவும் எண்ணத்தை வளர்க்கலாம். இன்று நமது கண்ணில்படும் பிள்ளைகள் படிக்க முடியாமல் போனால் அதற்கான காரணத்தைக் கேட்டுப்பாருங்கள் மனது அவஸ்த்தைப்படும் அதில் தகுந்த காரணங்களில் சிலவற்றையாவது போக்கிக்கொண்டு பிள்ளைகளின் கல்விக்கு உதவும் மனப்பாங்கை வளருங்கள் இதை மற்றவுர்களுக்கும் அறிமுகப்படுத்தி மற்றவர்களையும் ஊக்கப்படுத்துங்கள் சகோதரர்களே!!!
நாளைய விருட்சங்களாக சிறுவர்கள் இருப்பார்கள் என்றால் அவர்களிகளின் கல்விச் சூழல் வெற்றிகரமாக அமையவேண்டும். ஏனெனில் சிறுவர்கள் நாளைய நமது தேசத்தின் தூண்கள் அவர்களாலேயே நமது சமூகம் கட்டியெழுப்பப்படும்.
கடவுள் எங்கே என்று கேட்டுக்கொள்வீர்கள் என்றால் கஸ்டப்படும் அழுதுகொண்டிருக்கும் பிள்ளைகளின் சிரிப்பிலும் அவர்களின் கல்விச் சிறப்பிலும் இருக்கும் தேடுங்கள் பாருங்கள் தெரிகிறாரா கடவுள்!!!

Saturday, April 17, 2010

பாட்டு - நானும் அவனும் பட்டபாடு...

(பல்கலைக்கழக கனாகாலங்களில்.. ஹொஸ்டலில்)

நான்: "வாடா அவன் ரூமுக்கு போவோம்... "
"ஓகே..." - அவன்.

"என்ன மச்சான் radio எல்லாம் களைகட்டுது.... "
ரூம் நண்பன் "ஹிஹிஹி அது அந்த சீனியர் ரூமில சுட்டதுடா'

"ஓஓஓஓ பாட்டு மட்டும் கேக்குது ரேடியோ எங்க டா இருக்கு"

"அது உனக்கு வேவையா பாட்டு கேட்டா போச்சு.... பாட்டை மட்டும் கேளு...."
"ஓகே ஓகே.."
ஆகா... நல்ல மெலோடிடா.....
ஹரீஸ் ஹிட் என... மம்ம்்ம். சுப்பரா இருக்கு..."

மீண்டும் அதே இரவு அந்த ரூமுக்கு போனேன்.... அதே பாட்டு..

அந்த ரூமுக்கு மீண்டும் போனேன்.... அதே பாட்டு ரிப்பீட்டு பண்ணி போட்டான். எனக்கு சிரிப்பு..
"ஏண்டா இப்படி அதே பாட்டை திரும்பித்திரும்பி போடுற... அது மட்டும்தான் கெஸட் இருக்கா" எண்டு அந்த ரூம விட்டு போக நினைக்கையில்

"றமேஸ்..."
"என்னடா'
"நீ வந்தா மட்டும் தான் இந்தப்பாட்ட போட்டுக்கிட்டு இருக்கான் என்ன இளவோ புரியல...ஹாஹாஹாஹ"
என்று மற்றைய நண்பன் சொல்ல எனக்கு உள்ளுக்குள்ள ஏதோ ஒண்டு தட்டுப்பட்டது அப்பதான். "இவன் ஏன் இதே பாட்ட மீண்டும் மீண்டும் அதுவும் நான் வரும்போது ஏன் போடணும் கேட்டா தப்பாகிடுமோ.. இல்ல.. என்ன பண்ணுறது.... எதுவாச்சாலும் அவன் சொன்னாத்தானே புரியும்.. ஓகே அவன் சொல்லுவான் தானே விடுவோம்" மைண்ட்வொயிஸ்...

அடுத்தநாள் அவன் ரூமெட்டுகிட்ட (நம்ம நண்பன் தான்) "ஏன்டா இவன் இப்படி நான் வந்தா அந்தப் பாட்ட போடணும்"..
"ஓ அதுவா...நீ அவள் கிட்ட போய் கேட்டியே அவள் என்ன சொன்னாள்"
"முடியாது எண்டாள் அதுவும் எப்படி றமேஸ் நீங்களே சொல்லுங்க இது சரிவருமா எண்டு" "நான் எவ்வளவோ நல்லதா சொன்னபோதும் அவள் விரும்பவில்ல."..
'இப்ப எதுக்கு அது...'

"அவள் பிரண்டு "கவி"யோட லவ்வர் தானே"
"ம்ம்.."
"கவியும் இவனும் நல்ல 'கூல்'டா.. ஓகே டா பிறகு சந்திப்போம்.."
(மண்டைக்குள் கொடஞ்சிக்கிட்டே இருந்திட்டு என்ன எண்டு தெரியல இவனும் முழுசா சொல்லல்ல....)

மீண்டும் பின்னேரம் அதே பாட்டு நண்பன்
"றமேஸ் கூல்பாருக்கு போவோமா..."

" சரி பொக்கட்ல இல்ல உன்ட பேர்ஸ் கொஞ்சம் பெரிசா இருக்குதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் சொல்லுது...."

"வந்து வந்து...டேய்!வரப்போறியா இல்லயா.. முதல்ல அத சொல்லு.சும்மா பேர்ஸ்சு பொக்கட் எண்டு..நீ என்ன வெறுக்கிறியா"

"சரிடா ஏன் கோவிக்கிற நான் என்ன வராமலா போகப்போறன்....எடு சைக்கிள அது சரி நான் ஏன் உன்ன வெறுக்கணும் நீ என்ர பிரண்டுடா"

சைக்கிள் சவாரி
ஏஹே ஓஹோ..... லாலலா....
'என்னடி பாட்டுவாத்தியாரு சைக்கிளில போராரு...'

"திட்டு பாட்டுக்குடா... பார்த்துடா பள்ளம் மேல ரைட்டா ஓடு"..

கூல்பார் வந்துட்டு:....
"றமேஸ் எனக்கு ஒரு உண்ம தெரியணும்"
"என்னடா சீரியசாவா கேக்குற... சொல்லு சொல்லு சீ சீி சீ கேளு கேளு... என்ன"
"நீ அவள்கிட்ட பேசினியா இல்லயா??"
"பேசினேன் அத அப்படியே வந்து அண்டைக்கே சொன்னேனேடா உன்னிட்ட.."

"கவி சொன்னான் அவள் உன்னத்தானாம் விரும்புறாளாம் நீயும் அவளும் லவ் பண்ணுறேயலாம்... எண்டு சொல்லி... நம்மட சீனியர்மாரிடமும் சொல்லி..."

"டேய் முதல்ல நிறுத்து நீ என் பிரண்டு உனக்கு ஏண்டா நான் இப்படி நடக்கணும் அத விட உனக்கு நம்ம குடும்ப நிலைமை எல்லாம் தெரியும் அப்படி இருக்க நீ ஏண்டா சந்தேகப்படணும்......... சீ போடா.... நான் அப்படிப்பட்ட ஆள் இல்லடா"
'சரி இத நீ ஏன் முதல்ல என்னட்ட கேக்கல அதவிட்டுட்டு அவன் சொன்னான் இவன் சொன்னான் எண்டு என்னட்ட மட்டும் சொல்லாம பாட்ட மட்டும் போட்டுத் தாக்கிட்டடேயே மச்சான்.."
"நீ தான் கவிதை எழுதுறவனாச்சே அப்படி அடிச்சாத்தான் உறைக்கும்"

ம்ம்ம் இவனுக்கெல்லாம் லவ் கவிதை எழுதி எழுதி பாவப்பட்டது நான்தான்.. பரவாயில்ல கவிதையாவது என்னிடம் எப்போதும் என்னோடு...

இவ்வளவுக்கும் அந்தப்பாட்டு இந்த வெண்மதிதான்

Thursday, April 15, 2010

சிறுவர்களும் மெழுகுவர்த்திகளே.....

நம்ம பிரதேசத்தில மட்டுமல்ல அநேக இடங்களில் சிறுவர் தலைமை தாங்கும் குடும்பம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. தவிர்க்கமுடியாத சூழல் என்றும் குடும்ப நிலைமை காரணமாகவே இதற்குச் சிறுவர்கள் ஆளாவதாகவும் கூறி சிறுவர்கள் எதிர்காலம் கல்வித்துறையில் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. பல வழிகளில் உழைத்து பெற்றோரையும் தமது சகோதரர்களையும் பார்க்க வேண்டிய நிலைமைக்கு அதாவது குடும்பத்தைத் தலைமை தாங்கிக் கொண்டுசெல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள். இதற்கு பல அடிமட்டக் காரணிகள் இருக்கின்றன. வறுமை, சரியான கல்வியறிவின்மை, கல்வியை விட பெற்றோரின் சுகபோகம், பெற்றோரின் அக்கறையின்மை, பிள்ளை தவறான வழியில் மாட்டுப்படல் போன்ற பல காரணங்களை அடுக்கிக்கொண்டு போகலாம். இவற்றிலிருந்து இச்சிறுவர்கள் விடுதலை காண்பதென்பது மிகக் கடினமானதொன்றாக உள்ளது. குடும்ப சூழ்நிலையையே இதற்கு மிக முக்கியமான காரணியாக பிள்ளைகள் கருதுகிறார்கள்.

உண்மையில் இச்சிறுவர்களும் மெழுகுவர்த்திகளே.....

இவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும். அவர்களின் கல்வித்துறையில் அக்கறை செலுத்தி அவர்களை படிப்பித்து அல்லது அவர்கள் படிப்புக்கு உதவியேனும் நல்வழிப்படுத்த வேண்டுமல்லா.நாங்கள் நல்ல இடத்தில், உயர்வான பொருளாதாரப் பின்னணியில் இருக்கும் போது இச்சிறுவர்களின் கஸ்ட நிலைமைகள் நமக்குத் தெரிவதில்லை.
வறுமையும் புலமையும் சேர்ந்தே இருக்கும் என்று சொல்லுவர். இளமையில் வறுமை கொடிது என்று ஒளவையார் சொல்கிறார். இதனை எல்லாம் நாம் படித்திருக்கிறோம். படிப்பு என்பது பிரயோசனப்படுத்தலுக்கே.
ஆகவே இச்சிறுவர்களின் கல்விக்கு உதவுதல் நல்ல கல்விக்கு வழிகாட்டுதல் கடவுளுக்குச் செய்யும் தொண்டு என்று நாம் கருதலாம். சகோதரர்களே.. சற்று யோசியுங்கள் சிறுவர்களுக்கு உதவும் எண்ணங்களை வளருங்கள்.

சிறுவர்களும் மெழுகுவர்த்திகளே.....

Wednesday, April 14, 2010

இந்துமதத்தின் ஒலி வடிவம்

இது அர்த்தமுள்ள இந்துமதத்தின் ஒலி வடிவம் கேளுங்கள். யுரியுப்பிலிருந்து
பகுதி 1


பகுதி 2

Saturday, April 10, 2010

தாகம்........

கால்கடுக்க
நடந்து நடந்து
வெயில் தெறிக்கத்
தேடித்தேடி
வெடிப்பு விழுந்த
பாறையில்
வீசிய சாரல் மழை
நனைந்தும் நனையாமல்
மண்படையில்
நான்கு
கால்தடங்கள்
இப்போது
எந்தப்புள்ளியில்
என் இருப்பிடம்??

நான்
தொலைந்தது
நெஞ்சை உசுப்பிய
பார்வையிலா
அந்த
ஈரவிழியின்
உள்ளத்திலா

வீணாய் கழித்த நாட்களுக்கு
ஒரு மரம்
நட்டிருந்தால்
இருவரும் சேர்ந்து
காதல் காற்றையாவது...
காதல் மழையிலாவது....

Wednesday, April 7, 2010

கேள்விகளால் மட்டும்

கடைசிவரை
இரத்தச்சாயம் பூசிய
விரல்கள்
தமிழ்
வாழ்வுக்காகவா
வீழ்ச்சிக்காகவா???

ஒவ்வொரு தடவையும்
வீழ்ந்துதான்
சரித்திரம் எழுதப்படுமா???

தேசப்பற்று
தேசத்தின் பற்றை
வளர்க்குமா???
தேசத்தை
தீப்பற்ற வைக்குமா???

குரல் கொடுக்கும்
குரல்கள்
குமுறுகிறதா???
கூத்தடிக்கிறதா???

இன்றைய நிலையில்
நாம்
மதில்மேல் பூனை
மதில் யாருடையது
என்பதுதான் கேள்வி

இனி
விருத்தியாகி
தமிழ்வளர்ப்போம்
தளைகட்டட்டும்
தமிழ்ப் பிள்ளைகளின்
கல்வி
பொருளாதார
அபிவிருத்தி

போதும்
இரத்தக்கறைகள்
வடிந்த உடலும்
அதற்காக உருக
உள்ளத்தில்
இரத்தம்
இல்லை

Monday, April 5, 2010

நம்பிக்கை

இது
அதுவா
இதுவா
....
இல்லை....
ஒன்றுமில்லையா
மனசுக்குள்
எத்தனை தடைவைகள்
சுரக்கும் 'உமிழ்நீர்'
தொண்டைக்குள்
தடுமாறும்
வெளியேற்றவா
விழுங்கிக்கொள்ளவா??

Friday, April 2, 2010

அர்த்தமுள்ள

இது.............

மாதா, பிதா, குரு, தெய்வம்
இதில் சர்வ நிச்சயமாகத் தெரிந்தது மாதா
சந்தேகத்துக்கிடமாகத் தெரிவது தெய்வம்
சர்வ நிச்சயமாகவும் சந்தேகத்துக்கிடமாகவும் இருப்பது பிதாவும் குருவும். இவர்கள் இருவர் பற்றி சந்தேகம் எழலாம் சந்தேகங்கள் உண்மையாகவும் இருக்கலாம். தெய்வம் முழுக்க சந்தேகத்துக்குரியது ஆனால் அடையும் பொழுது முழுக்க உண்மையானது. இதனால் கடவுளைவிட கடவுள் நம்பிக்கையே நமக்கு தேவை.
இதனால் தாயானவள் நிலையாகிறாள். மாதா சந்தேகத்திற்கே இடமில்லாதவள். அவளிடமிருந்தே நமது ஜனனம் ஆரம்பமாகிறது. எவள் இல்லை என்றால் நான் இந்த பூமியில் பிறந்திருக்க முடியாதோ, எவளை இழந்து விட்டால் மீண்டும் அடையமுடியாதோ அவளே என் வாழ்க்கையின் தத்துவங்களைத் துவக்கி (தொடங்கி) வைக்கிறாள்.
எங்கள்
குடும்பத்தின்
இலட்சியம்
மூலம்
தாய்

.........

இடப்பக்கம் வலப்பக்கம்
எண்டாலும் நான்
நீ வரும் பக்கமே
என் தலைப் பக்கம்
தானம்மா


உன் பத்துமாத
பரிசோதனையின் பின்
வெளியேறிய
“அக்கினிக்குஞ்சு” நான்.
கவலைப்படாதே….
அழிக்கப்பிறந்தவனல்ல
நான்
உலகம் வாழப்பிறந்தவன்.
வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு