Pages

Saturday, October 31, 2009

வாழ்த்துக்கள் கோடி

என் உடன் பிறவா சகோதரியின் திருமணத்துக்காய் எழுதப்பட்ட வாழ்த்துக் கவிதை....இருமனம் என் மனம்
எம் மனம் என
தடுமாறும் ஒரு தினம்
திருமணம்.

வாழ்த்துக்கள் சோதரியே
பல்லாண்டு வாழ்க
பலதும் பெற்று வாழ்க

அழகிய உள்ளம்
அறிவான நெஞ்சம்
பழகிய வார்த்தைகள் சொல்லும்
உன்
அன்பான மனசு

நீதி தெரிந்தவள்
உனக்கா கீரன்
நீதி சொல்ல வேண்டும்???
அரசியலில் முதல் தரம் பெற்றவள்
நீதானே .....

உன் தன்னடக்கம்
உன் புன் சிரிப்பு
சில சோகங்களை
மறக்கச் செய்யும்...

நீ மௌனம் காத்த போது
உனக்கு "தலைக்கனம்"
என்றனர்
உண்மைதான்
தலையில் அறிவு கனம்
என்பதை புரிந்து கொள்ளாத
உண்மையில் அவர்கள்..

எங்கிருந்து கற்றாயோ
தெரியவில்லை
ஆறுதல் மொழிகள்
அடுக்கடுக்காய்........
நன்றி
எப்போதும் அவை
துணை வரட்டும் உனக்கு

அன்பு மை கொண்டு
நட்புக் கவி வரைந்தவள்
அதைவிட
எனக்கு மூன்றாவது
சகோதரியானவள்

கற்றுத்தந்தவள்
தொழிலில் நுட்பங்கள்
பல திட்டங்கள்
அதுவே இப்போதும்
எனக்கு
துணைக்கரங்கள்

நீ ஒரு தமிழ்ப் பெண்
தலை குனிவாய் குற்றங்களுக்கு
நிமிர்வாய் நீதிகளுக்கு
வெற்றி எப்போதும்
உன் பக்கமே இருக்கும்
வாழ்த்துக்கள்

விரத காலங்களில் ஜுஸ்
ஸ்ட்ரோவுடன் நீ
சிறிய கோப்பைகளில்
உப்புமா
உன் அம்மாவின் சமையல்
கரண்டிகளோடு நீ
இப்போதும்
அழகிய ஞாபக டயரிகளில்
அவை வெல்லாவளியில்....

வாழ்த்துக்கள் சோதரியே
இனி உன்
மன நியாயங்களுக்காய்
நெற்றிக்கண் நீதி சொல்ல
கொற்ற நக்கீரன்
துணையாவான்

உன் திருமணத்துக்கு
நான் வரவில்லை என்றாலும்
என் வாழ்த்துக்கள் வரவில்லை
என்று பொருள் இல்லை
பொருள் இல்லாததால்
வருகைதர முடியவில்லை
தருவதற்கு அன்புப்பரிசு
நிறைய உண்டு....

இணைந்து கீரனோடு
எங்கு சென்றாலும்
இணையத்தளத்தோடு என்றும்
தொடர்பிலிருக்க வேண்டும்
எம்மோடு....

வாழ்த்துக்கள் சோதரியே
பல்லாண்டு வாழ்க
பலதும் பெற்று வாழ்க

வாழ்த்துக்கள்....

Friday, October 30, 2009

அழகிய என் கிராமத்தில் சூரிய அஸ்த்தமனம்

தேற்றாத்தீவு அழகிய என் கிராமம், மட்டக்களப்பு நகருக்கு தெற்கே கிட்டத்தட்ட 24 கிலோ மீட்டர் தூரத்தில இருக்குது. செல்லமாய் தேனூர் என்று அழைப்பது நமக்கு மிகப்பிடிக்கும்.

இது சூரியன் அஸ்த்தமிக்கும் காட்சி நமது வயல் நிலங்களினூடே ..... அழகிய மட்டக்களப்பு வாவியில் மீன் பிடிக்கும் நம்மவர்களும்
 


  
வேம்பு மரத்திலிருந்து பால் வழியுது நம்மட ஊரிலையும்

அண்மைக்காலமாய் நமது மட்டக்களப்பில் பெரிய பல நம்பமுடியா நிகழ்வுகள். வந்தாறுமூலையில் அம்மன் கோவிலில் சலங்கு ஓசையுடன் பெரிய சத்தம் பூட்டிய கோவிலில்.
பின்னர் கல்லடியில் அம்மன் கோவில் ஒன்றில் அம்மன் தெரிவதாய் புலம்பல், அதே கல்லடி பிரதான வீதியில் உள்ள ஒரு சிறிய அழகிய பிள்ளையார் கோவிலுக்கு பின்னால் உள்ள வேம்பு மரத்தில் (நம்மட வழக்கில் வேப்ப மரம்) இருந்து பால் வடிவதை அலை அலையாய் மக்கள் சென்று பார்த்து வழிபாடு செய்கிறார்கள். நமக்கு இதில பெரிய உடன்பாடில்ல
அதிக வெப்பமான நேரங்களில் சில திராவகம் பெறக்கூடிய இருவித்திலை தாவரங்களில் இருந்து இப்படி பால் நிற அல்லது பசைத் தன்மையாய் திரவம் வெளியேறுவது இயல்பு,ஆனால் நாம் அடிக்கடி பார்க்கும் சுத்தமான ஒரே இடம் ஆலயங்கள். ஆகவே இங்கு மட்டும் தான் இப்படி நடக்குது என்று நினைப்பது நமது மன இயல்பு.

இதோ நமது கிராமத்திலும்(தேற்றாத்தீவு) இப்படி ஒரு நிகழ்வு. அதே போல் வேப்பமரத்தில் இருந்து பால் நிறத்திரவம் வழிந்து கொண்டிருக்குது. இப்போ இங்க அலை அடிக்கும் மக்கள் கூட்டம் அதிசயம் நிகழுது என்று..... நீங்களும் பாருங்க சில காட்சிகள்

அந்த பால் நிறத் திரவத்தினைக் காண இல்ல வேப்பமரப் பாலினைக் காண படை எடுக்கும் நமது மக்கள்இப்படி பால் நிறத் திரவம் வழிந்து கொண்டிருப்பதை பார்த்த ஒருவர் சிலவேளை உள்ளுக்குள் எதோ இருக்குதென்று வேப்ப மரப்பட்டையை உரித்து விட்டாரு, பாருங்க அதன் பிற்பாடும் சொட்டுச் சொட்டாய் அதே பால் வழியுது.

கடவுளை நினச்சா கல்லை வைத்து விடுவார்கள். பாருங்க பால் வழிந்து விழும் இடத்தில கல்லை கடவுளாய். பாலாபிசேகத்தின் லிங்கமாய்வேப்பமரப் பால் எடுக்கும் ஒரு அம்மணி தீராத வினைகளை தீர்க்கும் மருந்தாகும் என்ற நம்பிக்கையில்ஆனாலும் நம்மட மக்கள் மத்தியில் பெரிய மனக் கவலை மீண்டும் சுனாமி வந்துவிடுமோ என்று. நம்ப முடியாத பல நிகழ்வுகள். சுனாமீ வரமுன் இப்படித்தான் பாம்புகள் பல படை எடுத்ததை சொல்லுவர்.
அதால தான் எது நடந்ததோ அது நன்றாக நடந்தது எது நடக்கிறதோ அதுவும் நன்றாக நடக்கிறது .........

Tuesday, October 27, 2009

இலவசமாய் தமிழ் ஆங்கில அகராதி

தமிழ்கியுப் - ஆங்கில சொற்களுக்கு தமிழ் பதங்களும், யுனிகோட் தமிழ் சொற்களுக்கு ஆங்கில மொழி பெயர்ப்புகளும் இந்த இணையத் தளத்தில் இருக்கிறது.


இந்த அகராதியை இலவசமாய் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்
இந்த இணையத்தளத்துக்கு செல்ல இங்க கிளிக் பண்ணுங்க  தமிழ்கியுப்

Sunday, October 25, 2009

புளு-ரே மற்றும் எச்.டி–டிவிடிக்களை தயாரிக்க இலவச மென்பொருள்சிடி மற்றும் டிவிடிக்களைத் தயாரிக்க அதற்கான சாப்ட்வேர் அப்ளிகேஷன்களைத் தேடுகிறீர்களா? அதுவும் இலவசமாக! மேலும் கூடுதல் வசதிகளாக புளு ரே மற்றும் எச்.டி–டிவிடிக்களையும் தயாரிக்கும் வசதி கொண்டதாகத் தேடுகிறீர்களா! ஆஹா! இத்தனையும் இலவசமா என்று வியப்படையாதீர்கள். சிடி பர்னர் எக்ஸ்பி என்ற புரோகிராம் இதைத்தான் செய்கிறது. உங்கள் சிஸ்டம் ஒத்துழைத்தா புளு ரே மற்றும் எச்.டி –டிவிடிக்களையும் தயாரித்து வழங்குகிறது.

இதன் லேட்டஸ்ட் பதிப்பு (4.2.4) ஆக கிடைக்கிறது. இதனை டவுண்லோட் செய்து நேரடியாக உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தி டலாம். மற்ற சிடி பர்னர்களைக் காட்டிலும் இது நவீன வசதிகளைக் கொண்டுள்ளது. இதில் எந்தவிதமான விளம்பர புரோகிராம்கள் அல்லது கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களோ இணைந்து வருவதில்லை.கம்ப்யூட்டரில் இதனை இன்ஸ்டால் செய்து இயக்கியவுடன் தொடக்க திரையில் ஐந்து பட்டன்கள் உள்ளன. அவை Data Disc, Audi Disc, Burn ISO image, Copy Disc and Erase Disc. ஆகியனவற்றினைத் தேர்ந்தெடுக்கத் தரப்பட்டிருக்கும் இன்டர்பேஸ் ஆகும். இதில் எது உங்கள் வேலைக்குச் சரியான பட்டனோ அதனைக் கிளிக் செய்திடவும். எடுத்துக் காட்டாக நீங்கள் டேட்டா பைல்களைக் கொண்டு சிடி உருவாக்கப் போகிறீர்கள் என்றால் இதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உடன் கிடைக்கும் விண்டோவில் மேலும் இரு பட்டன்கள் உள்ள ஆப்ஷன் திரை கிடைக்கும். பின் அதன் வழியே சென்றால் எளிதாக சிடி பர்ன் செய்யலாம்.

இந்த புரோகிராமினை விண் டோஸ் 2000 ல் தொடங்கி இன்றைய விஸ் டா ஆப்ப ரேட்டிங் சிஸ்டங்கள் வரையில் இயக்கலாம். இதனை இன்ஸ்டால் செய்திடும் முன் உங்கள் சிஸ்டத்தில் .net framework இருப்பதனை உறுதி செய்திடுங்கள். இது இல்லை என்றால் இந்த புரோகிராம் சரியாகச் செயல்படுவதில்லை.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

நன்றி தமிழ்கம்பியூட்டர் இணையம்

Tuesday, October 20, 2009

என் இதய அஞ்சலி

இன்று எனது நண்பனின் அப்பா இறந்த செய்தி கேட்டு எழுதப்பட்ட அஞ்சலிக்கவிதை அவன் தந்தையின் ஆத்மா சாந்திக்காக

உன் இரத்த துளிகளின்
வேர்வைகளில்
பிறந்து
வளர்ந்தோம் - இனி
"அப்பா" என்றழைக்க
யார் இருக்கா??
சொல்லாயோ....
எம்மை விட்டு
எங்கு சென்றாயோ ???

மங்கல நிறமாம் மஞ்சள்
ஆனால்
காலனாய் வந்தது
உன் உடலில்
காய்ச்சலாய்...
சிதைந்தது உன் பொலிவு
இன்று
உடைந்தது எம் எதிர்வு

அழகான செல்வங்கள்
ரெண்டும்
அழுவதைப் பாராயோ
அகத்தினில் உனைத்தேக்கி
அம்மா - கண்ணீர்
பொழிவதை பாராயோ.....

வாழ்க்கைச் சக்கரத்தில்
இது நிகழ்வதுண்டு
ஆனாலும்
ஆழமாய் உள்ள உன்னை
இழந்தது பொறுக்கல்ல
வலிக்குது நெஞ்சம்
கண்ணீர் கனக்குது

ஆண்டவனுக்கே
அழுகை வருவதென்றால்
உன்
மரணத்துக்கு மட்டுமே
கண்ணீர் சிந்துவான்

கண்ணீர் அஞ்சலி
எம் இதய
அஞ்சலி

Friday, October 16, 2009

சிந்தனையூற்று நூலகம்


சுற்றம் சத்தமில்லாமல்
கற்றலுக்கு ஒரு
வழி
நம் மன அமைதிக்கு
நல்லிடம்

புத்தகங்கள்
பத்திரிகைகளுக்கு
இங்குதான் உண்மையான
விமோசனம்
கிடைக்கிறது

நூல்களின்
அணிவகுப்பு
அவற்றின் தொகுப்பு
இலக்கங்களில்
பலவகுப்பு

இலக்கியங்கள்
இலக்கணமோ
எத்தனை புத்தகமோ
அத்தனையும் ஒன்று சேரும்
ஆலயம்


உண்மையில்
கவிஞர்கள், கலைஞர்களின்
ஏன்
படைப்பாளிகளின்
படையல்கள் எல்லாம்
முக்திப் பேறு அடைவது
இந்த
"சொர்க்க பூமியில்" தான்
அதனால் தான்
இது
நூல்களின்
இதயபூமி

பல நூற்றாண்டுகளின்
பாதைகளில்
நடந்து வர வேண்டுமெனில்
இந்த பொக்கிசத்தில் மட்டும் தான்
புதைந்து கொள்ள முடியும்
இந்த புத்தகபூமியில் தான்
புதையல் தேட முடியும்

புத்தகப் பயிர்கள்
செழித்து வளரும்
விளை நிலம்
இங்கு தான்
நல்ல புத்தகங்களுக்கு
அறுவடை


சிறுவர்களோ
பெரியவர்களோ
ஞானப்பால்
குடித்துக்கொள்ள
வேண்டுமெனில்
இந்த
நூலகத்தாயிடம் தான்
வரவேண்டும்
பருக வேண்டும்

நூல்களின்
அகம்
நூலகம்
சிந்தனையின் ஓர்
ஊற்று

Friday, October 9, 2009

பெத்தவளே உனக்காக
வெளிநாடு போகணும்
கொத்துக் கொத்தாய் உழைக்கணும்
எண்டாலே போதுமே
பெத்தமனுசு உன் நெஞ்சம்
விடவில்லையே என்னை
வெளியூருக்கும் வேலைக்கு
அனுப்பலையே
முந்தானையில வச்சிருக்கே
முடிச்சுக்கட்டி...

பெத்த மனம் பித்து
பிள்ளை மனம் உன் சொத்து


இடப்பக்கம் வலப்பக்கம்
எண்டாலும் நான்
நீ வரும் பக்கமே
என் தலைப் பக்கம்
தானம்மா


வேகார வெயிலிலும்
செவரோரம் தூங்காம
உன் மடி வேண்டி
நான் தூங்க - கண்டு
என் நெனப்பில் நீயும்
சற்று கண்ணயர...

உம்மேல கால் போட்டு
ஒருக்கணிச்சு நான் படுக்க
நித்திரையிலும் நீ
காலாட்ட என்னை
தாலாட்ட
நீ அயர நான் துயில
சொர்க்கமே உன் மடியில


உன்ன தூக்கி பிடிக்கையில
"விடுடா இடுப்பெலும்பு
நோகுது" எண்டு
சத்தம் நீ போடயில
வலிச்ச நெஞ்சு
கையிறக்கி நம்ம
இருவரும் போடுற
முத்தம்
போதுமம்மா நானும்
உனக்கு தாயயம்மா..


வயசுக்கு வந்தவுடன்
தலையணையோடு
தள்ளி வச்ச
தலையில் சின்ன வலி
எண்டாலே
தவிச்ச உன் நெஞ்சு
வந்து தடவிடுமே
உன் கை ரெண்டு
தலைப்பாரம் இறங்கிடுமே
வந்த வலி போயிடுமே

என் தங்கப்பொன்னே
என் தங்க பெண்ணே
அம்மா
இந்தா இன்னுமொரு
முத்தம்..

Thursday, October 8, 2009

உலக அஞ்சல் தினம் -அக்டோபர் 9

உலக அஞ்சல் தினம் ஒக்டோபர் 09ஆம் திகதி சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. 1874ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி சுவிற்சர்லாந்தின் பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் தாபிக்கப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாக கொள்ளப்படுகிறது

சர்வதேச ரீதியில் தரமான அஞ்சற்சேவையினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு "சர்வதேச அஞ்சல் ஒன்றியம்" அமைக்கப்பட்டது. இதன் எண்ணக்கரு யாதெனில் 1863 இல் ஐக்கிய அமெரிக்காவில் அஞ்சல் அதிபர் நாயகமாகவும் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மந்திரி சபையின் உறுப்பினராகவும் விளங்கிய மொன்கெமேரி பிளேயரின் எண்ணத்தில் உதித்ததன் பலனாக பாரிஸ் நகரில் கூட்டப்பட்ட மாநாட்டில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த பதினைந்து பிரதிநிதிகள் சந்தித்து பரஸ்பர நம்பிக்கையுடன் கூடிய பொதுவான அமைப்பினை ஏற்படுத்துவதற்கு இணக்கம் கண்டனர். இதன் பின் ஜேர்மன் நாட்டின் அஞ்சல் பணிப்பாளர் நாயகத்தின் பெரு முயற்சியினால் 1874 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஒன்பதாம் திகதி சுவிற்சலாந்து நாட்டின் பேர்ன் நகரில் கூட்டப்பட்ட மாநாட்டில் இருபத்திரண்டு நாடுகளின் பிரதிநிதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு "அஞ்சல் பொது ஒன்றியம்' உருவாக்கப்பட்டது. இப்பெயரானது 1878 இல் நடைபெற்ற இரண்டாவது மாநாட்டில் "சர்வதேச அஞ்சல் ஒன்றியம்" (Universal Postal Union) எனப் பெயர் மாற்றம் பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி உலக அஞ்சல் தினமாக பிரகடனம் செய்யப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

உலக அஞ்சல் தின பிரகடனம்
"உலகின் பல்வேறு நாடுகளுக்கே உரிய புவியியல், அரசியல், மதம் போன்ற பல்வேறு எல்லை மற்றும் தடைகளைத் தாண்டி எமது மக்களை முழு உலகுக்கும் இணைக்கின்றோம். மக்கள் அவர்களுக்குரிய பிரத்தியேகமானதும் மிகப் பெறுமதி வாய்ந்ததுமான தகவல்களையும் பொருட்களையும் எம்மிடம் ஒப்படைப்பது. அவற்றைப் பாதுகாத்து மிக வேகமாகவும் மிகக் கவனத்துடனும் அதன் உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பார்கள் என்ற எம்மீதுள்ள பெரு நம்பிக்கை என்பதை நாம் அறிந்துள்ளதோடு அவர்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை உயர் செயற்றிறமையுடனும் நேர்மையுடனும் பாதுகாப்புடனும் இரகசியத் தன்மையைப் பேணி அவர்களுடைய தகவல்களையும் பொருட்களையும் உரிமைகளையும் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் நேற்றைய தினத்தை விட நன்றாக இன்றைய தினத்திலும் இன்றைய தினத்தை விட நன்றாக நாளைய தினத்திலும் திறமையான சேவையை மக்களுக்கு வழங்குவதற்கு அர்ப்பணத்துடன் செயற்படுவதாக" என்பதாகும்

சில அஞ்சல் செய்திகள்

- அஞ்சல் அட்டையை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நாடு ஆஸ்திரியா.
- ஆசியாவில் முதன்முதலில் தபால் தலை வெளியிட்ட நாடு இந்தியா.
- இந்திய தபால் தினம் அக்டோபர் 10ம் தேதி.
- உலக தபால் தினம் அக்டோபர் 9ம் தேதி கொண்டாடப்படுகிறது.
- கடிதங்களில் பின்கோடு இடும் முறை இந்தியாவில் 1972ம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டது.

- இலங்கையில் தபால் முத்திரை ஆறிமுகம் - 1857 ஆம் ஆண்டு
- இலங்கையில் தந்திச் சேவை ஆரம்பம் - 1858 ஆம் ஆண்டு
- இலங்கையில் தபால்களின் நிறைக்கு கட்டணம் அறவிடும் முறை ஆரம்பம் - 1858 ஆம் ஆண்டு
- இலங்கையில் அஞ்சல் சேவை தனியார்துறையுடன் இணைக்கப்பட்டது - 1982 ஆம் ஆண்டு .

பூக்களும் காயம் செய்யும்

வைரமுத்துவின் மற்றுமொரு படையல் இந்த சிதறலில் சிக்கிட்டு......

போடி போடி கல்நெஞ்சி!
மார்புக்கு ஆடை
மனசுக்கு பூட்டு

ஒரே பொழுதில்
இரண்டும் தரித்தவளே!

காதல் தானடி
என்மீதுனக்கு?

பிறகேன்
வல்லரசின்
ராணுவ ரகசியம்போல்
வெளியிட மறுத்தாய்?

தூக்குக்கைதியின்
கடைசி ஆசைபோல்
பிரியும்போது ஏன்
பிரியம் உரைத்தாய்?

நஞ்சு வைத்திருக்கும்
சாகாத நாகம்போல்
இத்தனை காதல் வைத்து
எப்படி உயிர் தரித்தாய்?

இப்போதும் கூட
நீயாய்ச் சொல்லவில்லை
நானாய்க் கண்டறிந்தேன்

இமைகளின் தாழ்வில் -
உடைகளின் தளர்வில் -

என்னோடு பேசமட்டும்
குயிலாகும் உன்குரலில் -

வாக்கியம் உட்காரும்
நீளத்தில் -
வார்த்தைகளுக்குள் விட்ட
இடைவெளியில் -

சிருங்காரம் சுட்ட
பெருமூச்சில்

வறண்ட உதட்டின்
வரிப்பள்ளங்களில் -

நானாய்த்தான் கண்டறிந்தேன்
காதல் மசக்கையில்
கசங்கும் உன் இதயத்தை.

சேமித்த கற்பு
சிந்தியா போயிருக்கும்?

நீயாக கேட்டிருந்தால்
நெஞ்சு மலர்ந்திருப்பேன்

உண்டென்றால்
உண்டென்பேன்
இல்லையென்றால்
இல்லையென்பேன்

இப்போதும் கூட
தேசத்துரோகமென்பதை
ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி

உள்ளாடும் காதலை
ஒளிக்கவே பார்க்கிறாய்

காதலில்
தயக்கம் தண்டனைக்குரியது
வினாடி கூட
விரயமாதல் கூடாது

காலப் பெருங்கடலில்
நழுவி விழும் கணங்களை
மீண்டும் சேகரிக்க
ஒண்ணுமா உன்னால்

இந்தியப் பெண்ணே!
இதுவுன்
பலவீனமான பலமா?
பலமான பலவீனமா?

என்
வாத்தியக்கூடம்வரை
வந்தவளே

உன் விரல்கள்
என் வீணைதடவ வந்தனவா?

இல்லை
புல்லாங்குழல் துளைகளைப்
பொத்திப்போக வந்தனவா?

என் நந்தவனத்தைக்
கிழித்துக்கொண்டோடிச்
சட்டென்று வற்றிவிட்ட நதி நீ

உன் காதலறிந்த கணத்தில்
என் பூமி பூக்களால் குலுங்கியது

நீ வணங்கிப் பிரிந்தவேளை
என் இரவு நடுங்கியது

பிரிவைத் தயாரித்துக் கொண்டுதானே
காதலையே அறிவித்தாய்

இருபதா? முப்பதா?
எத்தனை நிமிடம்?
என் மார்பு தோய்ந்து நீ
அழுததும் தொழுததும்

என் பாதியில்
நீ நிறையவும்
உன் பாதியில்
நான் நிறையவும்
வினாடித்துகள் ஒன்று
போதுமே சிநேகிதி

நேரம் தூரம் என்ற
தத்துவம் தகர்த்தோம்

நிமிஷத்தின் புட்டிகளில்
யுகங்களை அடைத்தோம்

ஆலிங்கனத்தில்
அசைவற்றோம்

உணர்ச்சி பழையது
உற்றது புதியது

இப்போது
குவிந்த உதடுகள்
குவிந்தபடி
முத்தமிட நீயில்லை

தழுவிய கைகள்
தழுவியபடி
சாய்ந்து கொள்ள நீயில்லை

என் மார்புக்கு வெளியே
ஆடும் என் இதயம்
என் பொத்தானில் சுற்றிய
உன் ஒற்றை முடியில்

உன் ஞாபக வெள்ளம்
தேங்கி நிற்குது
முட்டி அழுத்தி நீ
முகம்பதித்த பள்ளத்தில்

தோட்டத்துப் பூவிலெல்லாம்
நீ விட்டுப்போன வாசம்

புல்லோடு பனித்துளிகள்
நீவந்துபோன அடையாளமாய்க்
கொட்டிக் கிடக்கும்
கொலுசுமணிகள்

நம் கார்காலம்
தூறலோடு தொடங்கியது
வானவில்லோடு நின்றுவிட்டது

உன் வரவால்
என் உயிரில் கொஞ்சம்
செலவழிந்து விட்டது

இந்த உறவின் மிச்சம்
சொல்லக்கூடாத
சில நினைவுகளும்

சொல்லக்கூடிய
ஒரு கவிதையும்.

-வைரமுத்து

Wednesday, October 7, 2009

புதுசா ஒரு இணையத்தளம் செய்திகளுக்காக

மகாராஜா கூட்டு நிறுவனம் சக்தி இ நியூஸ் என்று புதுசா செய்திகளுக்காக ஒரு இணையத்தளத்தினை இன்று அறிமுகப் படுத்திருக்காங்க ... வரவேற்கிறோம் .. நன்றி நல்ல முயற்சி. உடனுக்குடன் புதுப்பிக்கும் போது எல்லோருக்கும் பிடிக்கும் என்பது திண்ணம்.


வணிகம், நாணய மாற்று, விளையாட்டு, சோதிடம், நிகழ்வுகள் என்பன இடம் பெற்றுள்ளது. இதில் முற்றிலும் நம்ம நாட்டு செய்திகளே இடம் பெறுகிறது போல. வாழ்த்துக்கள். எவ் இணையத்தளம் யார் யார் நல்லமுறையில் வடிவமைகிரார்களோ அவர்களை வரவேற்போம். இதோ இதுவே முகவரி :
சக்தி இ நியூஸ்

Monday, October 5, 2009

சக்தியின் சொதப்பல் இசை நிகழ்ச்சி

மீன் பாடும் தேனாட்டில் நம்ம மட்டக்களப்பில் இப்படி ஒரு இசை நிகழ்ச்சியா ? நந்தமிழ் மணம் பேசும் தமிழ் வளம் பெறு, மீன்களும் பாடும் தேனகத்தில் ஒரு குப்பை நிகழ்ச்சி. பல ஆண்டுகளின் பின் நடைபெறும் ஒரு இசை நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த சக்தி டிவி மற்றும் சக்தி FM பாராட்டத்தக்கது (ஆனா நம்மட சகோதரர்கள் கைதிகள் போல முகாம்களினுள் இருக்க இது ஒன்னு தேவையா என்பது கவலைகுரியதுங்க )

பெரிய அமளி துமளியாக விளம்பரம் போட்டு நிகழ்ச்சிய ஒழுங்கு செய்தவயலாம். வெபர் மைதானத்தில் நிக்க முடியா சனம். அம்பாறை மாவட்டத்திலிருந்தும் முஸ்லிம் சிங்கள சகோதரர்களும் வந்தாங்க, நம்ம காக்க காக்க காவல்துறை ஆங்கில்களுக்கே கட்டுப்படுத்த முடியாத சனம்கோ. அப்படி அலை அலையை வந்த சனம் எல்லாம் வந்த உடனேயே திரும்பி போனதுதான் இசை நிகழ்ச்சியின் சுவாரசியம்.

sound system பாடுன அவங்களுக்கே கேட்டிச்சோ தெரியலுங்கோ எனக்கு என்னா பெரிசா வெளியில வரலீங்கோ. light எல்லாம் போட்டாங்கோ ஆனா stageல நின்ற அவங்கள பாக்க தெரியலீங்க. நம்ம அண்ணா ஒருவர் சொன்னாரு "பூர் (poor) லைட் and சவுண்ட் செட்டிங்" எண்டு .
அதவிட பாட்டு படிச்சாங்க ஆனா மியுசிசியன் எல்லாம் சும்மா தாங்க இருந்தாங்க என்னனா கரோக்கியில பாடுரான்கலாம். சுனிதா சாரதி ஹரிசரண் நல்லா பாடுனாங்க.அதுகுள்ள ஏதோ ஒரு சீவியாம் (அவரு சூப்பர் ஸ்டார் ஆமே ) தமிழே நல்லா கதைக்க வராது அவரெல்லாம் பாடுறாரு. அங்க நிறைய தமிழ் சனம் நிக்கேக்க சிங்களத்தில பேசிராறு ஒரு காக்க காக்க அங்கிள் சவுண்ட் பொக்ஸ் கமெரா பக்கம் ஆடவேனாமாம் சுட்டக் போங்கோ... இதெல்லாம் கேட்க வேண்டியிருக்கு.. ம்ம்ம்ம்ம்ம்

மட்டக்களப்புல இசை நிகழ்ச்சி நடத்த வேணும் எண்டா நல்ல மெலடி சோங் பழைய மேல்லிசைகளை நிகழ்த்த வேணும். அத விடுத்து சிங்கள கலாச்சாரத்த புகுத்த நினைப்பது ரொம்ப வருந்த தக்க விடயம் , இது தலைநகர் மலையகம் போன்ற சிங்கள கலாசாரத்துக்குள் கலந்துள்ள மக்களுக்கு பொருந்தும். தேனகத்தில் கஷ்டம். நம்மட பொடியனுகள் குடிச்சு கூத்தாட போறதுக்காக இசை நிகழ்ச்சி நடத்தினா பிழைச்சு போயிடும், ரசிக்கத் தக்கதா இசை இருக்கணும்.

ஏற்கனவே சக்தி விழ்ந்து கிடக்கு இனியாவது யோசிக்கட்டும்.... இது ஒரு பரீட்சாத்த நிகழ்ச்சியாகட்டும் . ... நாங்க வெற்றியை தான் தேடிரோம்க .... தமிழை தமிழாய் ...

இதுக்கு Loshanயும் சந்த்ருவையும் shanthruகூப்பிடிறேனுங்க

Saturday, October 3, 2009

கவிஞன்

சிந்தனைக் கல்லை
பேனா முனையால்
செதுக்கும்
சிற்பி

வார்த்தைப் பூக்களை
கவி மாலையாக்கும்
பூக்காரன்

இயற்கையின் வர்ணங்களை
அழகிய வரிகளில் வரையும்
ஓவியன்

கவி வரிகளின்
கர்ணன்

Thursday, October 1, 2009

கவிதை அழகே

வார்த்தை கருவறையிலிருந்து
எழும்
வற்றாத ஊற்று ...


உடல் தனில் உயிர்
கவிதை
கடல்தனை
ஒரு துளியாக்கும்
துளி ஒன்றை
கடலாக்கும்

இருளை நீக்கும் ஒளி
கவிதை
ஒளியிழந்த ஆகாயத்தில்
எழும் நிலவு

நிலவிழந்த இரவில்
வெளிச்சமூட்டும்
விண்மீன்கள் நல்ல
கவிதைகள்

விதைக்கப்பட்ட நாற்று
மனதில்
வார்த்தைகளால்
கிளைவிட்ட விருட்சம்
விருட்சத்தையும் சிதைக்கும்
கவிதை
சிதைக்கப்பட்ட இதயங்களை
இணைக்கும்

கவிதை வரிகளின்
உதயம் கண்டு
மடல் விரியும் காதல்


கருக்கொண்ட மேகம்
கவிதை
வரிகளால் உருக்குலைந்துவிடும்

தென்றல் தரும் சுகமென்ன
அவளுக்காக
என் கவிதை போதும்
எனக்கு .........

சுற்றும் பூமி
கடலலைகள்
கவிதைகள்
ஓய்வதில்லை ....
வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு