Pages

Monday, December 31, 2012

இது ஸ்டேடஸ் 28


31-12-2012
ஏன்டா நாளைக்கு வாழ்த்துச்சொல்ல முடிஞ்ச நம்மளுக்கு கடந்துகொண்டிருக்கும் வருசத்துக்கு நன்றி சொல்லத்தோணலயே !!!
நேற்றை நாளுக்கு நன்றி சொல்லி நாளைய நாளுக்கு வாழ்த்துச்சொல்லி இன்றைய நாளை நல்லா முடியுங்கடா.

30-12-2012
கறுப்பு படிந்த நாள்...
##மரணங்கள்#
##கொலை##காட்டுமிராண்டி##புற்றுநோய்.##
#வெட்கப்படுகிறேன்.# துக்கப்படுகிறேன்# கவலைப்படுகிறேன்#

29-12-2012
காலையில அம்மம்மாவோடு கோயிலுக்கு போனவள்,
மாமா என்று கத்திக்கொண்டு வந்து மஞ்சள் பூசிட்டாங்களாம் என்று சிணுங்கினாள் சயுரந்தி.
இப்பதானே ஆரம்பித்திருக்கிறாய் இன்னமும் ரசிக்கவேண்டி கிடக்கும்மா என்று நான்...##திருவாதிரை##மஞ்சள் நீராடல்

திருப்பள்ளியெழுச்சியின் இறுதிநாளில் மஞ்சள் குளித்து கடல்நீராடிய காலங்கள் எப்பொழுதும் மனதோடு ஈரங்களாய்.
மச்சாள்மாரைக் கண்டுபிடிப்பதற்கே உருவானதோ இந்நாள் என நினைத்த காலங்கள்.
ஆனால் பின்னைய நாட்களில் மஞ்சளுக்கு பதிலாக "சாயங்களை"(கோழிச்சாயம் என்பர் இங்கு) முகம்தெரியாவண்ணம் பூசி அசிங்கப்படுத்தினர்.##மஞ்சள் நீராடல்##

வழக்கமான நேரத்துக்கு வாற மகனோ, காதலனோ, புருசனோ வரவில்லை எண்டா, சாப்பிட்டானா இல்லையா என்றெல்லாமோ கேட்கிற அம்மாவோ, காதலியோ, பொஞ்சாதியோ கேட்கவில்லை எண்டா என்னமா கவலையா இருக்கு.##சாப்பிடல்ல## பாடசாலை வேலை

26 December
மரணங்கள் கொண்டாடப்படுவதில்லை.
உணர்வுகளின் வலியில் உள்ளத்தின் வெளிப்பாடாய்....
நினைவலைகளில் நீங்காத அத்தனை தொப்பூள் கொடிகளிலும்
நீளும் சுனாமி எனும் பிணந்தின்னி.##எங்கெங்கு காவு கொள்ளப்பட்டதோ அங்கெல்லாம் எமது கண்ணீப்பூக்களை மட்டும் காணிக்கையாக்குகிறோம்.## அஞ்சலி


22 December
சில திட்டமிடல்கள் அனைவரின் வருகைக்காக
சில திட்டமிட்ல்கள் சிலரின் வருகை தவிர்க்கைக்காக.
இயல்பாக நடைபெறுகின்ற விடயம்தான்.
## உணர்ந்தும் உணராமலும்##தெரிந்தும் சொல்லாமல்##முகாமைத்துவம்## வாழ்க்கை

21 December
எந்தக்கடவுளால், தேவதைகளால் அல்லது சாத்தான்களால் ஆசிர்வதிக்கப்பட்டதோ இன்னமும் தகர்ந்துவிடாமல் வாழுகிறது.
நாங்கள் ஏன் தவிக்கணும். வானம் உள்வரை வாழ்க்கை. காற்று உள்ளவரை மூச்சு. புதைக்கப்படுமுன் சுயமாய் சிதைக்கப்படுதல் தவறே! என்ஜாய் மச்சி

21 December
Dooms Day, Enjoy well. Fool's Day Celebration has Changed to Dec 21.
"Happy Fool's Day"

20 December
இன்னமும் சில மணித்தியாலங்கள்
காத்திருப்பு
அத்தனையும் படபடப்பு
நகரமுடியாத நரகம்
காதுகளுக்குள் இரைச்சல்
காற்று தீர்ந்துபோக மாட்டேங்குது
முட்டிக்கொண்டே இருக்கிறது கடலலை
இரவுப்பொழுதின் நிலாவை ரசியுங்கள் !
மேகம்முட்டும் காற்றைக் கிழித்து செல்ல
உரக்கக் கத்துங்கள்
அந்தச் சூரியன்
நாளையும் வரும் என்று!!

19 December
சில நண்பர்களுக்கு(?) உற்ற நண்பனாய் இருக்கிறேன். அவர்களோ உறவற்றவனாய் என்னை நினைக்கப்படுகையில் கவலைப்படுகிறேன். இது எனக்கு பழகிப்போனாலும். என்னில் மற்றவர்களுக்காக இருக்கிற(?) தன்மையானது சில எதிர்பார்ப்புக்களில் அன்பைக் கேட்டு நிற்கிறது என்பதை எண்ணிக்கொள்ள முடிகிறது. இருந்தபோதிலும் "நட்பு கொள்" அவ்வப்போது போதும். தொடர்ந்திருக்க எண்ணாதே##எனக்கு ##திருத்தி எழுதிய தீர்ப்புக்கள்##வாழ்க்கை

19 December
அனேகமாக வழங்கல்களில் சந்தோசம் அதிகம் தான். பெற்றுக்கொள்வதிலும் எடுத்துக்கொள்ளுவதிலும்.

18 December
அழகோ துயரோ
ஆர்க்கும் உயிர்ப்போ
உயிரின் துடிதுடிப்போ
ஸ்பரிசங்களின் சங்கீதங்களோ
சிலந்திவலையில் சிக்கிய ஏக்கங்களோ
மழை கவிதை கொண்டுவரும்

17 December
மழை. இடியுடனும் காற்றுடனும் தொடர்ச்சியாக. — at THETTATIVU

16 December
நீண்ட காலத்துக்குப்பிறகு எழுதி முடித்தேன். இல்லை எழுதியதை திருத்தி முடித்தேன். ## அவசர எழுத்துக்களில் பிழைகள் அதிகம்

13 December
இறக்கைகள் வலிக்கும் வரை
வானம் எனக்குமட்டும் - வலித்த
கைகளை இறக்கும்போதுதான்
பூமியின் அந்தத்தின்
ஒரு மூலையின் விளிம்பில்
இதயத்தின் ரத்தம் கொட்டப்படும் -
##வலிமிகு வாழ்க்கை##சுதந்திரக்காற்று## நான்

9 December
நனைத்துவிட்டுப் போகும் அன்புக்கு நிகர் ஏது?
நன்றி சொல்லிவிட்டாலும்
உள்ளத்துள் ஒலிக்கும் நகைச்சுவை நீ.

7 December
நான் போனால் என்ன.?
அத்தனை உருவாக்கத்தின் அத்திவாரத்தின் ஒருவனாய் இருப்பது எனக்கு போதும்.
உன்னைப்போல் இன்னமும் உருவாக்குவதே நோக்கம்.

6 December
சிலவற்றை இழக்கும் போதுதான் இன்னும் பலவற்றில் தேடல்கள் அதிகரிக்கின்றன.
பூக்களின் இலைகள் சருகுகளாக, புதிய இலைகளால் மரம் ஒளிச்சேர்க்கை செய்கிறது ##
வாழ்க்கை # இழப்பதும் # உருவாவதும்

6 December
இன்று ஒரு கலந்துரையாடல் கூட்டத்தில் ஆண்கள், ஆண் மாணவர்கள் படிக்கிற வீதம் குறைஞ்சு போச்சாம். வெளிநாட்டு மோகம்,விரைவில் உழைக்கணும் (கூலித்தொழில் செய்தாவது.), போன்ற எண்ணங்களால் ஆண்பிள்ளைகள் இன்னோரன்ன தொல்லைகளுக்குள்ளாகி கல்வியை தவறுவதாக சொல்லப்பட்டது. ##டேய் பசங்களா படிச்சிருங்கடா

6 December
ஐயப்ப சிந்தனைக்காக, வானொலியொன்றில்

"யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.
- திருமந்திரம்

காலையில் இறைவனுக்கு பச்சிலை இட்டு வணங்கியும், பசு, நாய், பூனை, காகம் போன்ற பிராணிகட்கு சிறிது உணவளித்தும், வறியார்க்கு சோறிட்டும், மற்றவர்கட்கு இன்சொல் கூறியும், நாம் வாழ்வோமாக. இதனால் எல்லா நலங்களையும் அடையலாம். உலகிற்கு நாம் உதவினால் உலகம் நமக்கு உதவுகிறது.

5 December
after two weeks am using my computer as new one. Formatted all data. Now born as new one...... but i lost my niece's many memorable photos.
## Changes ## Life pattern ## living pattern

3 December via Mobile
சில நல்ல செய்கைகளும் மற்றவர்க்கு காயம் செய்யும்.
##செய் அல்லது செய்யவிடு.##

2 December via Mobile
ஒடிந்துபோன சிறகுகளும்
ரணங்களும்
உலர்ந்த நினைவுகளில்
ஈரத்தடங்களும்
இறுதிமூச்சுவரை இருக்கும்
அஞ்சலிக்க ஏங்குவது கடமை அல்ல
எம் உணர்வு
--
ஒரு கட்டுரையை வாசித்த பின்.

1 December via Mobile
அழகிய நிலாப்பொழுதொன்று
கடந்து சென்றது... தம்பியுடையான் படைக்கஞ்ஞான்

30 November via Mobile
இருண்ட சுவரையும்
வெளிர்ச்சுவரையும்
அழகாக்க போதும்
ஓர் ஓவியம்

30 November via Mobile
தோயத் தோய
சலவை செய்தான்
தேயத் தேய
உருகி நிற்கிறது
நிலவு

30 November via Mobile
இன்னமும் சில மணித்தியாலயங்கள்..
சொல்லிய வாக்குறுதியை நிறைவேற்றத் தவறுகிறேனே..
என்னால் திருப்பித்தர இயலாமையை எப்படியும் நியாயப்படுத்த முடியாது. தவறுதல் பிழையே,
மன்னிப்பாயா? இன்னமும் முயற்சிக்கிறேன்.

29 November
மருமகள் சயுரந்தி விளையாட ஒரு கொட்டில்

27 November via Mobile
ஒவ்வொன்றும் பல என்றாக
யார் யாரோ உயிர் வாழ
தமிழ் என்கிற தாய்க்காக
தொப்பிழ்கொடி தொடுத்த
அத்தனை தாய்தந்தைகளுக்கும்
வணக்கங்கள்.!!!

26 November via Mobile
கொஞ்சமாய் ஆரம்பிக்குது காய்ச்சல்.
கடுமையாக கடுக்குது 'கட்டு.'
வலிமிகுவாக நித்திரையின்றி பாய்கொள்கிறேன். ## Starting Fever## not well ## paining

26 November via Mobile
நீ இன்னமும் வாழ்கின்றாய் என்கிற
எண்ணத்தில் வாழ்த்துக்கள்.
இல்லை என்றால் (அக) வணக்கம் உனக்காக.
தலைவன் நீ!!!

25 November via Mobile
காற்றினில் ஈரப்பதன்
கடந்துபோவது நீயா!!!
மழைத்தூறல்கள்
மனதில் கீறல்கள்...
கீற்றிடைவெளிகளில் எழுதப்படுவது "நீ"
என்கிற ஒற்றைக்
கற்றை

24 November via Mobile
கனவுகள் தின்னப்படும் பகல்கள் உண்டா
அறியமுடியவில்லை
கனவுகள் நீட்சிப்படுத்படுகவே —

24 November via Mobile
நண்பனொருவனின் சகோதரியின் கல்யாணம் சில கடமைகளோடு நான். நண்பா ! உனக்காக இதையும் செய்யத்தானே வேண்டும். அப்பா என்றிருக்க இரவுக்கும் வரட்டாம் என்கிறானே.
இப்பவே கண்ணக்கட்டுதே.


22 November via Mobile
நீ மற்றவர்க்கு எப்படியோ
தெரியாது. ஆனால் உனது முயற்சி, திறமை, கொஞ்சமாவது தொட்டுவிடும் தூரத்தில் என்னுடன்,
ஆனபடியால் உன்னையும் நான் நேசிக்கிறேன்..

18 November
நீ விட்டுச் சென்ற இடங்களில்
ஊசலாடுகிறது ...

இன்றைய படங்கள்

எனது அம்மா காலைச்சாப்பாட்டுக்கு சிலவேளை சட்டியில் சோற்றைப் போட்டு அப்படியே குழைந்து தருவா. சாப்பிட அருமையாக இருக்கும்.
Thursday, December 27, 2012

கடைசிப்பக்கம்


உமிழ்ந்து துடைத்து
உரசிச்சென்ற கண்கள்,
உதடுகள் சுருக்கி
உள்ளத்தை நெருக்கிவிடும்
புன்னகை,
கடந்துசெல்லும்போது
கரையும் நெஞ்சம்...

இரட்டைக்கதிரையில்
தோள்தடவி
'நாளையும் வரும்'
என்கிற
விடைபெறுதலில்
இருட்டை நச்சரித்து....

*'மண்டி'
கசக்கும்போது
கோப்பையில்
உதடுகள் மொய்க்கும்
தேனீர்...

இன்றைய பொழுது
கண்விழித்தபோது
நேற்றைய நாள்
கிழிக்கபட நாட்காட்டியில்
விரல்கள்...

ஒவ்வொரு கடைசிப்பக்கமும்
எழுதித்தீர்த்தபின்
முன்னெழுத்துக்களில் ஒரு
முரட்டுப்பார்வை...

வாசிக்கப்படும் போது....*தேனீர்க்கோப்பையில் வடிக்கப்படாத எஞ்சிய தேயிலையின் அடையல்பகுதிகள்Sunday, December 23, 2012

பெற்றோரே! இது உங்களின் கவனத்துக்கு...

(தமிழ்த்தந்திக்காக )

பல்கலைக்கழகம் என்ற இலக்கு சின்னப்பருவத்தில் படிக்கும்போது தெரிவதில்லை அல்லது எண்ணுவதில்லை.
ஏதோ படிக்கிறோம், அல்லது படிக்கத் திணிக்கப்படுகின்றோம், என்ற நிலையில் எமது கல்விநிலை அனேகமானோரிடம் காணப்படுகின்றது.


ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை என்ற கட்டாயத்துக்கும் பெற்றோரின் பெருமைகளுக்கும் என்றுமாய் முதலாவது திணிப்பு நாடகம் அரங்கேறுகிறது.

அப்பரீட்சையில்; பிள்ளைகளின் வயதுக்கு ஏற்ப அப்பரீட்சை போதுமானதாக இருந்தாலும், நமது நாட்டில் அனேக பிள்ளைகள் உடல், உள வளர்ச்சிகளில் முன்னேற்றம் காணப்படாதிருக்கின்ற நிலை பல பிரதேசங்களில் இருக்கின்றது.

இதற்கு எமது பிள்ளைகளின் வளர்ச்சிப்பருவங்களில் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குரிய சரியான போசணையளவு பேணப்பட்டு வளர்க்கப்படுவது குறைவு. இதற்காக இதுவரை சரியான சுகாதாரக் கட்டமைப்புக்கள் முறையாக ஆறு அல்லது ஏழு வயதுகளுக்கு மேல் இல்லை என்றே கூறத்தோன்றுகிறது.

சற்று பொருளாதார வசதி குறைந்த குடும்பப் பின்னணியில் உள்ள மாணவர்கள் இப்பிரச்சனைக்கு இயல்பாக உள்ளாக்கப்படுகின்றனர்.
நமது நாட்டில் நடுத்தர அல்லது அதற்கும் குறைந்த பொருளாதார வசதியுள்ள குடும்பத்தினரே கூடிய சதவீதத்தில் இருப்பதால், புலமைப்பரிசில் பரீட்சையானது பிள்ளைகளை மிகவும் கஸ்டத்துக்கும் அதிக மன உழைச்சலுக்கும் உள்ளாகக்கூடிய நிலையிருப்பது வருந்ததக்கதது. சாதாரணமாய் நாம் பார்க்கின்ற விடயம் இது.

இதற்கு ஒரு உதாரணமாக கடந்த பரீட்சையொன்றில் நடந்த உண்மையான விடயத்தை பகிர்கிறேன்.
'ஒரு மாணவன் வகுப்பில் கெட்டிக்காரன். அவனது பொருளாதார வசதிபடைத்த பெற்றோர் அவனை மிகவும் கஸ்டப்படுத்தியற்காக அவன் பரீட்சை மண்டபத்தில் சுட்டெண்ணை மட்டும் எழுதி விடைகளை எழுதாமல் வெறுமையாக கொடுத்திருந்தான்'. ஆய்வாக நிகழ்த்தப்பட்டதில் ஐந்தாம் தரத்தில் சித்தியெய்திய மாணவர்களில் அனேகம்பேர் உயர்தரத்தில் பல்கலைக்கழகத்தை தவறுகின்றனர்.

"பிள்ளைக்குரிய போதிய உடல் உளவளர்ச்சியையும் முறையான வழிகாட்டல்களையும் மேற்கொண்டால் எதுவும் வெற்றியே!."

ஐந்தாரம் தரத்திற்குப் பிற்பாடு பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில்; ஆறாந்தரத்தில், தமது பிள்ளைகள் மீது பெற்றோர்கள் பெருமளவில் அக்கறை செலுத்தத் தவறுகின்றனர். காரணம் கடந்தவருடம் பிள்ளையை கூடுதலாகக் கஸ்டப்படுத்தியாச்சு, ஆகவே என்னவாவது தன்னாலான செயற்பாடுகளை செய்யட்டும் என்ற மனப்பாங்கு அனேக பெற்றோரிடம் இருப்பது வழமையான விடயம். இது பெற்றோர் விடும் தவறு.
பிள்ளையின் தொடர்ச்சியான கல்வியின் தொடரறா ஒத்துழைப்பில் கவனக்குறைவு நடக்கிறது. இதனால் பிள்ளைகள் தமது மேல்வகுப்புக்களில் கஸ்டமான கற்றல்களுக்கு உள்ளாகின்றமை உள்ளங்கை நெல்லிக்கனி.


பின்னர் கல்விப் பொதுத் தராதர (க.பொ.த) சாதாரணதரப் பரீட்சைக்கு ஆயத்தமாகும் தருணம். இது பிள்ளையின் முயற்சியும் பயிற்சியும் நிறைந்த நிலையிருக்கவேண்டிய தருணம்.
ஆனால் பிள்ளைக்கு சரியான ஒத்துழைப்பும் தொடர்ச்சியான கவனமும் தரம் பதினொன்றிலேதான் அதுவும் கடைசித் தவணையிலேதான் அனேக பெற்றோரிடமிருந்து கிடைக்கின்றது. இதனால் பிள்ளைகள் மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெறத்தவறுகின்றனர்.

உண்மையில் பெற்றோரின் தொடர்ச்சியான கண்காணிப்பு தரம் ஆறிலிருந்து ஆரம்பமாகவேண்டும். பிள்ளைக்கு எழுதத்தெரிகிறதா, வாசிக்கமுடிகிறதா, ஏதாவது பிரச்சனை பிள்ளையின் கல்வியில் இருக்கிறதா? பிள்ளைகளுக்கு ஏதாவது உடலியல் அல்லது உளவியல் பிரச்சனைகள் இருக்கின்றதா,? என்றெல்லாம் பிள்ளைகளோடும் பாடசாலையில் ஆசிரியர்களோடும் கதைத்து; பிரத்தியேக வகுப்புப் பாட ஆசிரியர்களுடன் தொடர்பாடல்களை மேற்கொண்டு பிள்ளைநேயக் கல்வியை ஊட்டவேண்டும்.

அக்காலகட்டத்தில் மொழியறிவு மீது அதுவும் தான் கல்விபயிலும் தாய்மொழிமீது சரியான வாசிப்பும் எழுத்தாற்றலும் இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். காரணம் மொழியறிவில் குறைவு ஏற்படும் பட்சத்தில் பிள்ளைகள் ஏனைய பாடங்களை சரியாகக் கற்க முடியாது. மேல்வகுப்புக்களில் பிள்ளைகள் எதிர்நோக்கும் பாரிய சவாலாக இது காணப்படுகின்றது.

பிள்ளை தரம் ஒன்பதிற்கு உயரும்போதே, அடுத்தது க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை. அதன்பின்னர் பிள்ளையின் எதிர்காலம், எதிர்காலத்தில் எந்தத்துறையில் பிள்ளைகள் முன்னேற முடியும், தெரிவுசெய்கின்ற துறையில் பாடங்களின் தெரிவு எவ்வாறு அமையவேண்டும் என்றெல்லாம் பிள்ளைகளுக்கு, பெற்றோர் ஆசிரியர்களுடன் சேர்ந்து இதுபற்றிய கூடுதலான அறிவுறுத்தல்களையும் அனுபவப் பகிர்வுகளையும் பெற்றுக்கொள்ளவேண்டும்.

இது பெரும்பாலும் நடைமுறையில் இல்லை காரணம் தற்போதைய நிலையில் தரம் பத்தில் மூன்று வகை தொகுதிப்பாடங்கள் காணப்படுகின்றன. இவற்றை பிள்ளை என்ன என்ன பாடம் இப்பாடத்தை என்னால் கொண்டுசெல்ல முடியுமா என்கிற எண்ணம் எல்லாம் இல்லாமல் படித்து, பின்னர் குழப்ப நிலையடைவது கண்கூடு. இதற்காக தமது பிள்ளையின் கல்விநிலையை கண்காணிப்புடன் இருக்கவேண்டியது அத்தனை பெற்றோரினதும் தலையாய கடமை.

இதற்கு மேலதிகமாக பிள்ளைகள் தரம் ஒன்பதிலே கற்கும் போதே, தமது எதிர்கால உயர்தரக் கல்வி பற்றிய மேலெழுந்தவாரியான விளக்கமாவது பிள்ளைக்கு இருக்கவேண்டும். இதில் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கவனம் செலுத்தவேண்டியது கட்டாயம்.
உயர்தரம் பற்றிய பரந்த எண்ணப்பாங்கு பிள்ளைகளுக்கு வழங்கப்படவேண்டும்.
ஏனெனில் க.பொ.த சாதாரண தரத்தில் பிள்ளைகள் பரீட்சை எழுதியவுடனேயே உயர்தரப் பரீட்சைகளுக்குரிய பிரத்தியேக வகுப்புக்கள் ஆரம்பமாவதால் திடீரென முடிவெடுத்து (அனேகமாக நண்பர்களுடன் கூட்டாக) ஏதாவது ஒரு துறையில் (கலை, விஞ்ஞான,வர்த்தக) உயர்தரக் கல்வியைத் தொடருகின்றனர்.

இதனால் பிள்ளைகள் சரியான துறையைத் தெரிவுசெய்யாததால் பிள்ளைகள் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மிகச் சிறப்பான முடிவுகளை அதாவது பெறுபேறுகளை ஈட்டிக்கொள்ளத் தவறுகின்றார்கள். சிலபிள்ளைகள் உயர்தரவகுப்பில் முதலாம் வருட இடைநடுவே தமது கற்கை நெறியை மாற்றிக்கொள்வதும் இவ்வாறன சரியான தெளிவின்மையே.

இதன்காரணமாக மீண்டும் பெற்றோர் பிள்ளைகள் மீது தங்களது வெறுப்புணர்வுகளைச் சித்தரிக்கின்றனர். பிள்ளைகள் மீது குற்றம் சொல்லி கவலைப்படும்போதும், பிள்ளைகள் தங்களுக்கு தெரியாமல்போயிற்று இப்படியெல்லாம் பல்வேறுவிடயங்கள் இருக்குதென்று இப்பதான் எல்லாம் தெரியுது என்று சொல்லியழுவதற்கு முன்னரே திட்டமிடுங்கள் பெற்றோரே.

இதற்காக பிள்ளைகளை தரம் ஒன்பதுக்கு பிறகு சுயமான கற்றலுக்கும் கூடுதலான வாசிப்புப் பயிற்சிக்கும் ஒவ்வொரு பாடங்களின் வினாக்களுக்கான கூடுதல் பயிற்சிகளுக்கும் தெளிவான கற்றல்லுக்கும் ஆன வாய்ப்புக்களை வழங்குங்கள். அதிக நேரம் பிரத்தியேக வகுப்புக்களுக்கு பிள்ளைகளை விட்டு படித்த விடயங்களை படிப்பதற்கு நேரம் இல்லாமை என்கிற நிலைமை ஏற்படா வண்ணம் பிள்ளைகளை படிப்பியுங்கள்.

பிள்ளைகளுடன் அன்பாகவும் ஆறுதலாகவும் இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். மிகவும் கஸ்டமானதும் எளிதுமானவிடயம் கற்றலே என்று கற்றுக்கொடுங்கள். விசாலமான எண்ணப்பாங்குகளை பிள்ளைகளுக்கு ஊட்டுங்கள். பிள்ளைகளோடு சேர்ந்து பிள்ளைகளுக்காக நீங்களும் படியுங்கள். உங்களுக்கு தெரியாத பாட விடயங்களை பிள்ளைகளுக்கு வேறு சரியானவர்கள் மூலம் சொல்லிக்கொடுக்க உதவுங்கள்.

"பிள்ளைகளின் கல்வி என்பது உங்களுக்கு மட்டுமல்ல சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் அவசியமாக இருக்கின்றது."

ஒரு சமூகம் அபிவிருத்தி காணவேண்டுமெனில் முதலில் சிறுவர்களின் கல்வி விருத்தியடைய வேண்டும். ஒரு பிள்ளை தனது ஆரம்பக்கல்வியை தனது ஐந்து,ஆறு,ஏழு,எட்டு வயதுகளிலாவது மேற்கொள்ளவில்லையாயின் தனது வாழ்க்கையின் கல்விகற்றலின் பெருமான்மையை இழக்கநேரிடுகிறது.

ஆக, பெற்றோர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து பிள்ளைகளுக்கு கல்வியில், வெறுப்புணர்வு ஏற்படா வண்ணம் ஆர்வமான முறையில், கல்விகற்றலின் சில பொருத்தமான நுணுக்கங்களை சொல்லிக்கொடுக்கவேண்டும். இது ஒவ்வொருவரின் கடமை. எங்களிடம் எஞ்சியிருக்கின்ற ஒரே ஒரு ஆயுதம் கல்வி. வளருங்கள்.
வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு