Pages

Monday, March 29, 2010

ஞானம்



ஒவ்வொரு நிமிடமும்
முளித்து முளித்து
பார்க்கிறேன்
விடிந்துவிட்டதா என்று
அப்பொழுதுதான்
தெரிந்தது
இன்னும் நான்
இருட்டில் என்று

Sunday, March 28, 2010

Saturday, March 27, 2010

வியர்வை பயிர்கள் விதைக்கின்றேன்

நான்
ஒவ்வொரு முறையும்
விழுந்தபோதுதான்
பலமுறை
எழ முடிகிறது

என் விழிகளின்
ஓரத்தில்
அடிக்கடி
நீர்த்துளிகள்
துடைத்துக்கொள்ள
கை நீளுகையில்
மனசு மட்டும்
மெளனமாய்
கேட்டுக்கொள்ளும்
வியர்வையா
வேதனையா??? என்று

நானும் மீனும்
ஒரே ஜாதி
கண் கலங்கும் போது

இப்போது
என் வியர்வைகள்
நாளைய
விருட்சங்களின்
விதைகளாகட்டும்

அம்மா
கவலைப்படாதே
உன்
கண்ணீர் துடைக்கும்
விரல்கள்
என் வியர்வைகளே

பூமி தோண்டி
புதையல் எடுக்கவில்லை
நிலம் உழுது
விதை
விதைக்கிறேன்
நாளையப்பயிர்கள்
நமக்காககட்டும்.

Wednesday, March 24, 2010

நானும் அரசியலில் குதிச்சுட்டேன். .... 5 க்கு 360 !!!

நானும் அரசியலில் குதிச்சுட்டேன்... (கமெடி பண்ணலியே எண்டு யாரது முனகுற)..
5 க்கு 360 ஆ... பாவம் மட்டக்களப்பு தமிழர். நான்குக்கு ஒன்று என்ற விகிதத்தில் பாராளுமன்றம் சென்ற வரலாறு மாற்றப்பட இருக்கிறதா....? (செய்தித்தலைப்புக்கள் தான் வேறொண்டுமில்ல)
செய்திகள்:
எதை எதையோ இழந்தோம் என்று வாதிடுபவர்களே இனி எதை இழக்கப்போகிறோம் என்று யோசிக்க முடிகிறதா உங்களால்.... பாராளுமன்றம் செல்லுவதற்காகவா போட்டியிடுகிறீர்கள் இல்லை மானத்தை விற்றுக்கொள்ளவா செயற்படுகிறீர்கள்.

வெற்றிலை எமது பிரதேச பிரதான தொழில்தான் அதற்காக வோட்டு கேட்கும் நீங்க... உண்மையில் உங்களுக்குள்ளே நீங்கள் கேள்வி கேட்டால் உங்களது சொந்த வோட்டைக்கூட ஏதோ ஒரு தமிழ்க்கட்சிக்குப் போடுவீங்கள்.
இதுவரை பழைய விடயங்களை மட்டு குறை கூறி வோட்டுப்பிச்சை கேட்கத்தான் உங்களால் முடிகிறது அதற்காக நீங்கள் சொல்லும் விளக்கம் புதினமானது.
ஒரு வேட்பாளர் கூறியிருக்கிறார் "எங்க ஓரு மட்டுமே போதும் ஒரு எம்.பி யாக." ஏற்றுக்கொள்கிறோம் இதற்கு முன் சென்றவர் என்னத்தைக் கிழித்தார் எண்டு உங்களுக்கு நல்லாத் தெரியும்,அதோட தனி ஓரு ஊரே போது மெண்டால் நீங்கள் ஜே.வி.பி அல்லது ஹெல உறுமைய வில் கேட்டிருக்கலாமே ஏன் சுயேட்சையிலாவது கேட்டிருக்கலாமே...
சொர்ணா அக்கா சொல்லியிருக்கா சம்பந்தப்பட்வர் "என்னை கவனிக்கவில்லை" ..யாம் அவரே அவர பாத்துக்க முடியல அதுக்குள்ள இவவையும் கூட்டிக்கிட்டு.. அப்போ உங்க சொந்த சுய லாபம் கருதித்தான் இறங்கியிருக்கீங்க போல...
இன்றைய செய்தி " இன்றும் நாளையும் த.தே. கூ மட்டக்களப்பில் பிரச்சாரம்."" தலைவர்... பங்குகொள்கிறர்ர். இதுக்கு முன்னாடி மட்டக்களப்பு எண்டா எங்கால எண்டு இவருக்குத தெரியுமோனோ என்னவோ!!!!!. ஆமா இப்படியெல்லாம் "வீடு " வோட்டுக் கேட்ட சரித்திரமே இல்லையே... தமிழ் என்றால் ....
வீடு இறங்கி வீடு செல்லவேண்டிய நிலை.

அடுத்த செய்தி
""புதிதாய் சபை சென்றிருக்கிறோம் இனி மன்றம் வர உங்க முன்றல் வருகிறோம்""

மொத்த்தில் 17 அரசியல் கட்சிகளும் 28 சுயேட்சைகளும் போட்டிஇடும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களே சற்று சிந்தியுங்கள் நாளை தபால் மூல வாக்கு இடம்பெற உள்ளதால் படித்த தனவான்களே! சொந்தம் ஊர் அக்கா பழைய அண்ணன் என்று சொல்லாமல் தமிழ்ர் பிரதிநிதித்துவம் கூட இழக்காமல் மானத்தையாவது காப்பாத்திக்கொள்ள

அபிவிருத்தி நமது நோக்கு
அடைவது நமது இலக்கு
வாக்கு உங்கள் திண்ணம்
வாரீர் வாரீர் ஊர் கூடி
தமிழ் தேர் இழுப்போம்
வாக்களித்து
தமிழ் சேர்ப்போம்
புது வரலாறு படைப்போம்

ஏதோ ஒரு காமெடி பதிவெழுத நெனச்சி கொஞ்சம் சீரியசாகிப்போயிட்ட போல
இதையும் பாருங்க

Monday, March 22, 2010

வெற்றிப்பதிவு..... நன்றி உறவுகளே!

இந்தச்சிதறலின் மற்றுமொரு வெற்றிப்பதிவு தான் இது...
பல நாட்களாய் பலவேறு கஸ்டங்களில் மத்தியில் இந்தப்பதிவை எழுத முடியாமல் சில ஒழுங்கமைப்புக்களையும் செய்யாமல் அவசரத்தின் அவசியத்தின் மத்தியில் பம்பரமாய் ஆடுகிறேன் ஆனாலும் பதிவெழுதவேண்டிய கட்டாயத்தில் அவ்வப்போது சில பதிவுகளை பதிவிட்டுவருகிறேன் தொடர்பறாமைக்காக.
எனது பதிவுகளின் வெற்றியாக எனது கிராமத்தைச்சேர்ந்த புலம்பெயர் நம்மவர்கள் எமது பொருளாதார கஸ்ட நிலைமைகளில் உள்ள (பாடசாலையில்) கல்விகற்கும் மாணவர்கள் சில பேருக்கு மாதாந்தம் பண உதவிகளை செய்ய முன்வந்திருக்கிறார்கள். மனசுக்கு குளிர்ச்சி அந்தப்பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி். முதற்கட்டமாக கடந்த பெப்ரவாரி மாதத்திலிருந்து ஆரம்பித்திருக்றோம். இதில் மூன்று பிள்ளைகள் உள் வாங்கப்பட்டார்கள். மேலும் இரண்டு மாணவர்கள் ஏப்பிறல் மாத்திலிருந்து உள்வாங்கப்பட இருக்கிறார்கள். இவர்களி்ல் இரண்டு உயர்தரம் படிக்கும் மாணவர்கள், ஒரு பல்கலைக்கழக மாணவன், இரண்டு சாதாரண தரம் படிக்கும் மாணவர்கள்.(இவர்களைப் பற்றியும் மேலதிக விபரங்கள் பற்றியும் ஒரு ஒழுங்கமைப்புக்குள் வந்தபிறகு பதிவிடுகிறேன்.)
இவர்களுக்கு மாதாந்தம் ரூ.2000 வழங்கப்படுகிறது. இந்தப்பண உதவி அவர்கள் படிப்புக்காக ஒரு ஊக்கப்படுத்தலே தவிர அவர்களை ஒரு வேறுப்படுத்திக் காட்டுவதில்லை(non discrimination).இவர்கள் சில வரையறையறைக்குட்பட்டுத்(criteria)தெரிவுசெய்துள்ளோம். பின்வரும் சில அடிப்படைகளின் மத்தியில்...
* பெண் அல்லது பிள்ளைகள் தலைமை தாங்கும் குடும்பம்
* மாதவருமானம் ரூ.3000 க்கு கீழ் உள்ளவர்கள்
* படிப்பில் ஆர்வம் உள்ள பிள்ளைகள்

போன்றவற்றைக்கருத்திற் கொண்டு இப்போது தெரிவுசெய்துள்ளோம்.
தற்போது இதன் நீடித்துநிலைக்கும் தன்மை பற்றியும் இதன் பக்க விளைவுகள் பற்றியும் ஆராய்கின்றோம். (இதுபற்றி நீங்களும் பின்னூட்டததில் கருத்துரைக்கலாம்.)

இதற்கு முன்னோடியாக செயற்பட்ட எமது உறவு கனேடிய திரு.ராஜன் அண்ணன் (இவரை உதயன் அண்ணன் என்றால்தான் விளங்கும்)அவர்களுக்கு நன்றிகள். இன்னும் பல உறவுகள் காத்திருக்கிறார்கள் நாங்களும் உங்களுக்காக உள்ளோம்.

இதற்காக பல திட்டங்கள் வகுத்துள்ளேன். நடைமுறைக்கு கொண்டுவர எனது வேலைகள் இடையூறாக இருப்பதற்கு மன்னிக்கவும். காரணம் வயல் வேலை மற்றும் தோடட வேலை. இத்தருணத்தை நான் பொது வேலைக்காக முற்றாக செலவிட்டால் எனது குடும்ப பொருளாதாரத்தில் பாரிய இடையூறு ஏற்படும்.
ஆனாலும் பல செயற்பாடுகளை செவ்வனே செய்துகொண்டிருக்கிறேன்.
இணைத்தினூடாகவும் பல நண்பர்கள் உறவுகளுடனும் கதைக்க முடியாமல் போயிற்று. மறுபதிவுகள் பல உங்களை வந்து சேரும்.

எமது உறவுகள் எப்போதும் எமது கிராமத்தவர்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு நன்றிகள்.
இப்போது விடைபெறுகிறேன்

மனதுக்குள் இப்போது இந்தப்பாடல்கள் எனக்குள் நான் கேட்டுக்கொள்கிறேன் .................

வலிதாங்கும் உள்ளம் நிலையான சுகம்... யாருக்கில்லை போராட்டம்..


புண்ணியம் தேடி காசிக்குப்போவார் இந்த.....

Saturday, March 20, 2010

வருகிறாய் தொலைகிறேன்

காற்றுப்
பெருவழியில்
தூசு
அந்தக்
கண்விழியில்
காதல்
நான்
மூடவா
திறக்கவா??

நினைவுகள்
மணித்தியாலங்களில்
நிஜங்கள்
வினாடிகளில்
நீ மட்டும்
என்னோடு

என்
பயணங்களில்
முகமாலை
பனைமரமாய்
இப்போது
காதல்....

Friday, March 19, 2010

காதல் வேலைக்காகாது

வட்டமிட்டு
உன்னை
வட்ட மண்டபத்தில்
வட்டமிட்டு
உக்காந்து அந்த
சங்கீதப் பயணத்தில்..
என்
காதல்
மனசுக்குள்
ஸ்வரங்களில்.....

ஏழிஸ்வரம் தெரிந்த
உனக்கு என்
காதல் சுரம்
புரியவில்லை

நீ விடுதி தாண்டி
வருகையில்
நான்
வி்ண்ணைத்தாண்டுகிறேன்

நீ தகதிமி தாளமிட
மனசுக்குள்
ஜதிபாடும்
'காதல்'

நான்
கறுப்பன் தான்
காதல்
கிறுக்கனும் கூட...
காதல் நிறம்பார்க்கும்
என்று தெரிந்திருந்தால்
நான் கருப்பையில்
இருக்கும்போது
குங்குமப்பூ கொடுத்திருப்பேன்
என் அம்மாவுக்கு

என் உதடோரம்
சூடேற்றும்
நுரையீரலை புண்படுத்தும்
சிகரெட்டை நிறுத்திவிட்டேன்
என் "காதல்
வேலைக்காவாது" என்று
நீ
சொன்ன கணத்திலிருந்து....

காதல்
தூர்ந்து போயிற்று


(இது ஒரு சங்கீத நண்பனும் அவன் நடனக்காதலியும்.... யாழ் பயணத்தில் கிடைத்த தகவல்)

Thursday, March 11, 2010

இங்கு நீ இல்லை

காதல்
கவிதை

ஆல்
கு
இன்
அது
'நீ'தான்

கவிதையும்
நானும் ஒன்றென்று
சொல்லியதும்
நீ தான்

உயிர் சேராத
மெய் எழுத்தாய்
இப்பொழுது
கவிதை

நீ
விலகியதாலே.......

Tuesday, March 9, 2010

பெயர்மாற்றம்

எனக்கு
நீ
உனக்கு
நான்

தேவைகள்
தீரும் வரை
"வாழ்க்கை"

தேடல்கள்
தீர்ந்த பிறகு
உயிர்
உடல்

Sunday, March 7, 2010

செல்லப்பா.... எம் இதய அஞ்சலி

எங்கள் அப்புச்சி இயற்கை எய்தியதையொட்டி அவருக்காக படைத்த இதய அஞ்சலி.....

செல்லப்பா எங்கள்
செல்வப்பா......
எங்கப்பா சென்றாயோ – எங்கள்
செல்லப்பா...

மாரிமுத்தம்மா அழுகிறாள்
மார்தட்டி உறவுகள்
கதறுகிறார்கள்
சுற்றி ஒருதரம் பாராயோ!

பெற்றெடுத்த பிள்ளைகள்
'அப்பா' என்றழுவது
கேட்கலியோ....
பேரப்பிள்ளைகள் 'தாத்தா'
என்றழுவது கேட்கலியோ....

வியர்வைகள் சுமந்து
பிள்ளைகள் வளர்த்தாய் - அந்த
செல்வக் கொழுந்துகள்
சுற்றி அழுவதைப் பாராயோ...

'மகன்'..'மக'.. என்று
சொல்வாயே... - இனி
அந்த செல்லக்குரலை
எங்கு கேட்போம்.

ஆழம் நீ போனதால்
ஆறாது உள்ளம்
உன்பிரிவைத் தாங்காது
துடிக்குது நெஞ்சம்......

'ம்ம்ம்; மக..' என்ற
சத்தம் எமக்கு போதும்
நீ இல்லை என்றதும்
தாங்கொணாது
தவிக்குது நெஞ்சம்
கண்ணீர் சொரியுது கண்கள்..
கண்ணீர் அஞ்சலி – எம்
இதய அஞ்சலி....

Tuesday, March 2, 2010

படம் பார்க்கலாம் மனம் சலிக்குமா

பல நாட்களாக தோட்ட வேலைகள் காரணமாக பதிவெழுதுவதற்கு கடினமாக இருந்தது. அதால நம்ம ஊரின் சில காட்சிகள் ரசனையாக இருக்குதா எண்டு பாருங்க..... வாங்க பார்க்கலாம் ரசிக்கலாம்

இது கரைவலை மீன் பிடிக்கும் அழகு
 
 கோயில் வாசலில் அரட்டையில் ...................................
 
தண்ணீரில் தவித்த வெள்ளாமை வெயிலில் காயுது நமக்கு நெல்மணிகள் தருவதற்கு

 
இது மனித வலுவுக்கு பதிலாக அருவி வெட்டும் இயந்திம் (சிறியது )
  
அழகாக  கதிர் எடுத்து புதிர் உண்ணவிருக்கும் இவர் .....
 


அந்தி மாலைப்பொழுதின் சில வினாடிகள்
 

   

  
குளத்தில் தூண்டில் போடும் சிறுவன்
  
 இந்தப்பூவின் பெயர் தெரியவில்லை பிடிச்சிருக்கு
  
 நெற்குருவியின் அழகிய கூடு இரு முட்டைகள் (மன்னிக்க குருவியே.... )
  

வேலைப்பளு காரணத்தால் சிந்தனை சிறைவைக்கப்பட்டுள்ளது .................
வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு