Pages

Wednesday, February 24, 2010

பயணங்கள் முடிவதில்ல........

ஆகா என்ன திரைப்பட விமர்சனம் எண்டு நெனச்சயல் எண்டா தப்பு....

பயணம் - 1


கடந்த வியாழக்கிழமை இரவு பஸ் வண்டிக்கு கை அசைக்க... " எங்க போக.." "கொழும்புக்கு.."... "ஆ...ஏறுங்க.." அப்பாடா ஏறியாச்சு.. "டிக்கட்.." நான் புக் பண்ணிருக்கன்".... "ஓ..ச்சே.புக்கிங்கா எங்கட அடுத்த பஸ்ல ஏறணும்".. " ஐயா சாமி நம்மட்ட இதை முதல்ல யாரும் சொல்லலியே".."பரவால்ல செக்கிங் சந்தியில மாறலாம் வாங்க.." "என்ன செக்கிங்கா.. இப்ப அவங்க இருக்காங்களோ..(மைண்ட் வொய்ஸ்)..

இரண்டு பஸ்களும் சந்தித்த ஒரு சாப்பாட்டுக்கடையில் நான் ஏறவேண்டியதில் ஏறிட்டன் ஒரு மாதிரியா கொழும்பு நோக்கி நிம்மதிப் பயணம்??? மீண்டும் மைண்ட் வொய்ஸ் "எங்க அந்த முடிச்சவுக்கி இருக்கானோ...."

அடுத்த நாள் இடம்தேடி அலையவேண்டுமே எண்டு வெள்ளிக்கிழமையே போய் பார்ப்போம் எண்டு 101 பஸ்ல ஏறிட்டன் எதுக்கும் முன்னாடியே பங்குசந்தை அச்சுகிட்ட எங்க இறங்கணும் எண்டு கேட்டதால தம்பி சொன்ன இடத்தில இறங்கிட்டு சுற்றும் முற்றும் பார்த்தன் காணல. மீண்டும் ப.ச.அச்சுக்கு கோல் பண்ண "இன்னும் கொஞ்சம் நடங்க ..." "ஓஓஓ கண்டுட்டன்....." "நான் கொஞ்சம் பிசி பிறகு மீற் பண்ணுறன்".. "ஓகெ.." எண்டு கட்பண்ணிட்டன்.

பிறகு நம்ம போன் சொவ்ட்வெயர் மாத்தணும் எண்டு பசுப்பொடியன் கிட்ட " ஹலோ நான் றமேஸ்..." "நான் உங்களை மீற் பண்ணுறன் நீங்க எங்க இருப்பீங்க" "வேறங்க யுனிட்டி பிளாசா...எம்.சி..". "ஓகெ.... "
காதுக்குள் பாட்டுக் கேட்டுக்கிட்டு போனைப்பார்த்துகிட்டு வர "... ஓ சொரி" "இற்ஸ் ஓகே"... (முன்னால முட்டிக்கிட்டாரு 'மெள')
ஐஸ்கிரீம் தந்து நம்ம ஊர் பக்கம் வந்த கதைய சொல்லாமல் சொல்லிமுடிச்சாரு.. "நாளை சந்தி்போம்.." (பயணங்கள் முடிவதில்ல.........)
சந்திப்பு தித்திப்பு

பயணம் 2
பரீட்சை பரீட்சை எண்டு ம்ம்ம் ஏழு கழுதையின் வயது நமக்கு இன்னும் பரீட்சை எழுதிக்கிட்டு.... (ஒரு கழுதையின்ர வயது 03)
அது பரீட்சைப்பயணம்.....முடிவதில்ல........

பயணம் 3
ம்ம்ம பரீட்சை முடிஞ்சு... நம்ம பிரண்ட் ஜெயதீபன் "டேய் மது கோல் பண்ணிட்டு உன்ன சந்திக்கணுமாம்..." ஓகே நான் கோல் பண்ணுறன்.. "மது நான் மீண்டும் றமேஸ்..". "நீங்க எப்ப போறீங்க எதுல போறீங்க"... "இண்டைக்கு எதுல எண்டு முடிவாகல அனெகமாக ரெயின்".."அப்போ 5 மணிக்கு நம்ம பதிவர்களைச்சந்திப்போமா".." ஓ அதுக்கென்ன ஆனா கொஞ்சம் முந்திப்போடலாமே 4 மணிக்கு".." லோஷண்ணா 5 மணிக்குத்தான் வருவார்".."அப்போ பிளான் பண்ணிட்டேயலா"(என்னத்தை மொக்க போடவோ மீண்டும் மைண்ட் வொயி்ஸ்.. ஏனெண்டா நாம இலங்கைப்பதிவாச்சே... இதுவும் 'மெள'தான் சொன்னது)

5மணிக்கு முன்னாடியே நானும் நம்ளோட வந்த பிரண்டு ஜெயதீபனும் போயிட்டோம்... எதிரே.. "கன"கோபியும் சுபாங்கனும்முந்தி வந்து (உஉண்டி...ல் தேடிக்கொண்டு..... தேட் புளோர்ல....)

பிறகு சந்திப்பு
நிங்க தானே " ஹாய்" "ஹாய்" கைலாகு கொடுத்து ஐஸ்கிரீம் பார்டிக்கு போனோம். பிறகு பிரபலங்கள் வருகை மீண்டும் "ஹாய்" லோஷன் மீசைய முறுக்கிகிட்டு "மது கிட்ட நான் கேட்டன் தேற்றாத்தீவு றமேஸ் ஆஆ எண்டு மது இல்ல இலல் சிதறல்கள் றமேஸ் எண்டு சொல்ல" 'ரெண்டும் ஒரே நான் தான் ஐயா'

அதுக்குள்ள கிரிக்கட் ஸ்கோர் கோபிசொல்ல எல்லாரும் கேட்டுக்கொள்ள... ஐஸ்கிரீம் வந்ததும் கன்னக்குழியான் உடம்புக்கேற்ற பெரிய பினனூட்டலில் பின்னும் கங்கோனின் ஐஸ்கிரிம் இலவசமாக ஜிம்முக்கு போய் சற்று தொப்பையைக்குறைக்கும் லோசஷனால் மறைத்து பிறகு கோபி அழுதுவிட....வழமையாக "ஏற்பாடு"களில் பின்னும் மது 'ஐஸ்'ஏற்பாடு செய்துகிட்டு .... வலைப்பதிவுகளில் இப்போது சற்று மொக்கை போடுவதை விட்டு பதிவெழுதப்போறன் எண்டு மது சிரிச்சி சிரிச்சு சொல்ல..
ஏதாவது பேசினா கும்மிடுவாங்க எண்டு பங்கு சந்தை அச்சும் பால்குடியும் சுபானுவும் மெளனம் பேச... மலேசிய ஆட்டிஸ்ட் அடிக்கடி வழமைபோலவே *டூமீல்* டூமீல்*.... இங்க வந்தும் அரசியலில் சள்ளுப்போட்டுக்கொண்டு ஆதிரை அண்ண (வயசு எண்டு விட்டுடோம்)ஹாய் மட்டும் சொன்ன அனுதினன்...அகசியம் எண்டா என்ன எண்டு ரிப்பீட்டு பண்ணிய வரோநானும் வரோவும் ஒரே மாதத்தில் பதிவுலகத்தில் வந்தோம் எண்டு பதிவுறவை நினைத்து பெருமூச்செறிய... நான் ரெயினுக்கு கிளம்ப வேண்டி வெளிக்கிட...

நன்றி ஏற்பாட்டு மது மற்றும் அனைவருக்கும்
்்்ம்்ம்ம்ம்ம்ம்்்்்்்்
பதிவர் சகோதர சந்திப்பு பயணங்கள் முடிவதில்ல....
சில படங்கள்..
ஆதிரை + மது(பிறைட் கலர் தான் பிடிக்குமாம்)
 சுபாங்கன்,கோபி, புல்லட்
 

  

  
சுபானு, ப.ச.அச்சு, பால்குடி
  
  

  
நான், தீபன் ,வரோ
  
மலேசிய ஆட்டிஸ்ட்
 

18 comments:

கன்கொன் || Kangon said...

//முன்னால முட்டிக்கிட்டாரு 'மெள'//
:P :D

//ஒரு கழுதையின்ர வயது 03//

அப்ப உங்களுக்கு 20 கழுதை வயசு... கணக்கில கொஞ்சம் வீக் ஆ இருக்கிறியள்...

// "கன"கோபியும் //
அதுதான் இப்ப கொஞ்சம் வடிவா கன்கொன் எண்டு மாத்தீற்றமுள்ள... :P

//கன்னக்குழியான் உடம்புக்கேற்ற பெரிய பினனூட்டலில்//

இந்தப் பின்னூட்டமும் அப்படித்தான்...

//பதிவர் சகோதர சந்திப்பு பயணங்கள் முடிவதில்ல....//

:)

அதுசரி.... அந்த மஞ்சள், கபிலம், பட்டர் எண்டு சொல்ல முடியாத அந்த நிறத்தில் ரீ சேட் அணிந்திருக்கும் புண்ணியவான் யார்?:P

Chitra said...

//பதிவர் சகோதர சந்திப்பு பயணங்கள் முடிவதில்ல....//

........ Best wishes!

Ramesh said...

கன்கொன் || Kangon said...
///அப்ப உங்களுக்கு 20 கழுதை வயசு... கணக்கில கொஞ்சம் வீக் ஆ இருக்கிறியள்...///
நாஙங்களும் பச்சிளம் பாலகர் சங்கம்ல... சரியாத்தான் சொல்லிருக்கோம்

///அதுசரி.... அந்த மஞ்சள், கபிலம், பட்டர் எண்டு சொல்ல முடியாத அந்த நிறத்தில் ரீ சேட் அணிந்திருக்கும் புண்ணியவான் யார்?:P ///
அதானே..யாரு ???? அவரே சொல்லட்டுமே..

Ramesh said...

Chitra said...

நன்றி சித்ரா..

ஆதிரை said...

:-)

இனிய சந்திப்பாக அமைந்திருந்தது. நன்றி...!!!

Bavan said...

ஹிம்ம்ம்ம்ம்... #பெருமூச்சு

கலக்கியிருக்கீங்க..;)அடுத்தமுறை நானும் வருவேன்..ஹிஹி

Ramesh said...

ஆதிரை said...
///
:-)
இனிய சந்திப்பாக அமைந்திருந்தது. நன்றி...!!!
///
்ம்்ம்ம்ம்்் நன்றி அண்ணே அங்குமிங்கும் வருகைக்கு

Ramesh said...

Bavan said...
////
ஹிம்ம்ம்ம்ம்... #பெருமூச்சு
கலக்கியிருக்கீங்க..;)அடுத்தமுறை நானும் வருவேன்..ஹிஹி
////
ஓகே ஓகே... வருக வருகவே...அடுத்தது திருமலையிலையா???ஹிஹிஹி

Unknown said...

ரமேஷ் அன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் நானும் வந்திட்டன்

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

வரிக்கு வரி விபரிச்சு எழுதாமல்.. மணிரத்தினம் படம் போல நல்லாயிருக்கு...

சந்திச்சது சந்தோசம்.. நாங்களும் உங்கட ஊருக்கு வருவம்.. :)

Ramesh said...

V.A.S.SANGAR said...
///ரமேஷ் அன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் நானும் வந்திட்டன்
///
ஆகா நீதான் அவனா??? திருத்து றமேஸ் அண்ணண் தமிழ்்்்்்

vasu balaji said...

:)

Ramesh said...

மதுவதனன் மௌ. / cowboymathu said...
///வரிக்கு வரி விபரிச்சு எழுதாமல்.. மணிரத்தினம் படம் போல நல்லாயிருக்கு...
////
நன்றி கதை எழுதலாமோ எண்டு யோசிக்கிறேன் ஹீஹீ...

///
சந்திச்சது சந்தோசம்.. நாங்களும் உங்கட ஊருக்கு வருவம்.. :)
///
நமக்கும் தான் எப்பூடி உங்களால இப்படியெல்லாம் "ஏற்பாடு"... ஏதும் டபிள் எம்.ஏ முடிச்சிருக்கீ்களா..ஹாஹாஹா
அதான் தெரியுமே தேர்தல் வருது எண்டு வருவீங்க தானே

Ramesh said...

வானம்பாடிகள் said...
ஐய வந்துட்டேலா...:))))

Theepan Periyathamby said...

அனைவருக்கும் நன்றிகள் , இனிமையான சந்திப்பு ,

//அதுசரி.... அந்த மஞ்சள், கபிலம், பட்டர் எண்டு சொல்ல முடியாத அந்த நிறத்தில் ரீ சேட் அணிந்திருக்கும் புண்ணியவான் யார்?:P //

ஏன் இந்த கொலைவெறி நேராவே கேட்டிருக்கலாம் தானே?
///
//அதுசரி.... அந்த மஞ்சள், கபிலம், பட்டர் எண்டு சொல்ல முடியாத அந்த நிறத்தில் ரீ சேட் அணிந்திருக்கும் புண்ணியவான் யார்?:P ///
அதானே..யாரு ???? அவரே சொல்லட்டுமே..//

நீங்க சொன்னா எதாவது நடந்து விடுமா?

KANA VARO said...

//மதுவதனன் மௌ. / cowboymathu said...

சந்திச்சது சந்தோசம்.. நாங்களும் உங்கட ஊருக்கு வருவம்.. :)//

மது ஏற்பாடு செய்திடுங்க...

எல்லோரையும் சந்திக்க கிடைத்தது மகிழ்ச்சி ...

Ramesh said...

Theepan said...
///
அனைவருக்கும் நன்றிகள் , இனிமையான சந்திப்பு ,
ஏன் இந்த கொலைவெறி நேராவே கேட்டிருக்கலாம் தானே?
///
உனக்கும் நன்றி...
அதான் கேட்டாச்சே

//நீங்க சொன்னா எதாவது நடந்து விடுமா?///
அது சரி அது நீங்க தானா தெரியாமல் போச்சு இல்லாட்டி முன்னாடியே சொல்லிருப்பேன்

Ramesh said...

VARO said...
////
மதுவதனன் மௌ. / cowboymathu said...
சந்திச்சது சந்தோசம்.. நாங்களும் உங்கட ஊருக்கு வருவம்.. :)//

மது ஏற்பாடு செய்திடுங்க...
எல்லோரையும் சந்திக்க கிடைத்தது மகிழ்ச்சி ...
/////
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி... மது விரைவில் அறிவிக்கும்
நன்றி வரோ

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு