Pages

Friday, December 11, 2009

கருத்திட்டம் ( Proposal) தயாரிக்கும் முறை

மக்கள் சபைச் செயலாளர் பதவிக்காக பட்டதாரிகள் இப்போது கருத்திட்டம் தயாரிப்பது எப்படி என்று அங்கலாய்த்தால் பாருங்க...இப்படித்தான்... (ஏனெனில் இப்போது எல்லாரும் தங்கிளிஷ் வாதிகளாக இருப்பதனால் தமிழில் தயாரிப்பதில் சிக்கலிலுள்ளார்கள்)
ஆனாலும் கருத்திட்டம் தயாரிப்பதற்தகுரிய முறை இப்படித்தான் என்று இல்லை. இங்கு குறிப்பிடப்படும் விடயங்கள் உள்ளடங்கலாக அழகிய உங்கள் எழுத்து வண்மையை காட்டலாம்

கருத்திட்டத்தின் முதல் பக்கம்
இங்கு திட்டத்தின் அடிப்படைத்தகவல்கள் ஒரு பக்கத்தில் அமைதல் வேண்டும். இவற்றில் உள்ளடங்க வேண்டியவை.

1.திட்டத்தின் பெயர் அல்லது செயற்றிட்டத் தலைப்பு:
2.செயற்றிட்ட வகை அல்லது துறை:
3.திட்டத்தை தயாரிப்பவர் விபரம்:
4.செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படும் அமைவிடம்:
  • மாகாணம்:
  • மாவட்டம்:
  • பிரதேச செயலாளர் பிரிவு:
  • கிராம சேவக பிரிவு:
5.நடைமுறைப்படுத்தும் காலம்:
6.பயனாளர்களின் எண்ணிக்கை (நேரடியாக):
7.நடைமுறைப்படுத்தும் நிறுவனம்:
8.உத்தேச மொத்தச் செலவு:
9.பயனாளர்களின் பங்களிப்பு:
9.திட்டம் முன்வைக்கப்பட்ட திகதி:

அடுத்து
திட்த்தின் சுருக்க விபரணம்
இவற்றில் உள்ளடங்க வேண்டியவை:

1.0. அறிமுகமும் பின்னணியும்: (Introduction and Background)
திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய கிராமம் பற்றிய அமைவிடம், அங்கு உள்ள வளங்கள், பாதிப்புக்கள், பிரச்சனைகள்....அடயாளம் காணப்பட்ட பிரச்சனைகள், தேவைகள்.
இதன் மூலம் திட்டத்தின் அவசியமும் திட்டச் சுருக்க பின்னணியும்

2.0 பயனாளிகள் அல்லது இலக்குக்குழு:(Target Groups /Beneficiaries)
திட்டத்தல் நேரடியாக பயனடைவோர் எண்ணிக்கை மற்றும் மறைமுகமாக பயனடைவோர் எண்ணிக்கை.(குடும்பங்களின் எண்ணிக்கை)

3.0 திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனம் (Implementing Agency)
எந்த திணைக்களம் அல்லது சமுதாய நிறுவனம் என்பதைக் குறிப்பிடுக

4.0 திட்டச் சுருக்க விபரணம்:(Project Description)
இங்கு திட்டத்தின் முழு விபரமும் கொடுக்கப்பட வேண்டும்

4.1.பிரதான இலக்கு:(Goal)

4.2.குறிக்கோள்:(Objectives)
  • பிரதான குறிக்கோள் / மொத்தக் குறிக்கோள்:
  • உப குறிக்கோள்

4.3.வெளியீடுகள்:(Outputs)
எதிர்பார்க்கப்படும் வெளியீடுகள் குறிப்பிடப்படல் வேண்டும்

4.4.திட்டத்தின் நன்மைகள்:(Benefits /Outcome)

4.5.திட்ட பிரயோகச்செயற்பாடுகள் / நடைமுறைச்செயற்பாடுகள்:(Implementation Methodology/Project Practical Activities)
திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் முறைகள் பற்றி கூறப்படுதல் வேண்டும்.


4.6.நடைமுறைச் செயற்பாட்டுக் காலநேர அட்டவணை / நடவடிக்கை அட்டவணை (Action Plan /Work Plan)



4.7.மொத்த மதிப்பீட்டுச் செலவு (Total Budget)
இதில் மொத்த திட்டமிட்ட மதிப்பீட்டுச்செலவு குறிப்பிடப்படல் வேண்டும்

5.0 சுற்றுச்சூழல் தாக்கம் (Environmental Impact)
இங்கு இத்திட்டத்தின் மூலம் சுற்றாடல் பாதிப்பு இருக்கிறதா என்று குநிபபிடப்படல் வேண்டும். பாதகமான விளைவுகள் இருத்தல் திட்டம் செல்லுபடியற்றதாகும்

6.0 கண்காணிப்பும் மதிப்பீடும் (Monitoring and Evaluation)
6.1 பராமரித்தலும் முன்னேற்ற அறிக்கை தயாரித்தலும்
இதில் திட்டத்தை பராமரிப்பவர் யார், எவ்வாறு பரிசீலிக்கப்படும், முன்னேற்ற அறிக்கை போன்ற விபரங்கள் உள்ளடங்க வேண்டும்
6.2 முன்னேற்றம் தொடர்பான மதிப்பீடு


7.0 திட்டத்திலிருந்து வெளியேறலும் நீடித்து நிலைக்கும் தன்மையும் (Exit Planning and Sustainability)


அப்பாடா ஒரு மாதிரியா கருத்திட்டம் எவ்வாறு தயாரிப்பது என்று சொல்லியாச்சு.... ஆனாலும் திட்டத்தலைப்பு ????

No comments:

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு