Pages

Friday, March 19, 2010

காதல் வேலைக்காகாது

வட்டமிட்டு
உன்னை
வட்ட மண்டபத்தில்
வட்டமிட்டு
உக்காந்து அந்த
சங்கீதப் பயணத்தில்..
என்
காதல்
மனசுக்குள்
ஸ்வரங்களில்.....

ஏழிஸ்வரம் தெரிந்த
உனக்கு என்
காதல் சுரம்
புரியவில்லை

நீ விடுதி தாண்டி
வருகையில்
நான்
வி்ண்ணைத்தாண்டுகிறேன்

நீ தகதிமி தாளமிட
மனசுக்குள்
ஜதிபாடும்
'காதல்'

நான்
கறுப்பன் தான்
காதல்
கிறுக்கனும் கூட...
காதல் நிறம்பார்க்கும்
என்று தெரிந்திருந்தால்
நான் கருப்பையில்
இருக்கும்போது
குங்குமப்பூ கொடுத்திருப்பேன்
என் அம்மாவுக்கு

என் உதடோரம்
சூடேற்றும்
நுரையீரலை புண்படுத்தும்
சிகரெட்டை நிறுத்திவிட்டேன்
என் "காதல்
வேலைக்காவாது" என்று
நீ
சொன்ன கணத்திலிருந்து....

காதல்
தூர்ந்து போயிற்று


(இது ஒரு சங்கீத நண்பனும் அவன் நடனக்காதலியும்.... யாழ் பயணத்தில் கிடைத்த தகவல்)

14 comments:

vasu balaji said...

:)). athu yaaru

மதுரை சரவணன் said...

superu...try ...try. she will find u and bind u

Chitra said...

காதல் வேலைக்காகாது...... தலைப்பே கருத்து சொல்லுதே!

Ramesh said...

வானம்பாடிகள் said...
:)). athu yaaru
வாய்ப்பாட்டு சங்கீதமும் நடனமும் நான் இல்லை

Ramesh said...

Madurai Saravanan said...
//superu...try ...try. she will find u and bind u
///
ஒரு தம்பிக்காக

Ramesh said...

Chitra said...
ஃஃஃஃகாதல் வேலைக்காகாது...... தலைப்பே கருத்து சொல்லுதே!ஃஃஃஃ

ம்ம்ம் உணர்வுகளின் உயிரெழுத்து

sathishsangkavi.blogspot.com said...

//நான்
கறுப்பன் தான்
காதல்
கிறுக்கனும் கூட...//

இத இதத்தான் எதிர்பார்த்தேன்....

Ramesh said...

Sangkavi said...
///இத இதத்தான் எதிர்பார்த்தேன்....
///
பாதிப்புக்கள் மனதோடு இருக்கட்டும்

ரவிசாந் said...

//காதல் நிறம்பார்க்கும்
என்று தெரிந்திருந்தால்
நான் கருப்பையில்
இருக்கும்போது
குங்குமப்பூ கொடுத்திருப்பேன்
என் அம்மாவுக்கு//
அழகான வரிகள். உங்கள் பதிவுக்கு மிக்க நன்றிகள்.

KANA VARO said...

காதல் வேலைக்காகாது//

அட! இப்ப தான் புரிந்ததா?

Ramesh said...

ரவிசாந் said...
//அழகான வரிகள். உங்கள் பதிவுக்கு மிக்க நன்றிகள்.///

நன்றி செம்மண் ரவி முதல் வருகைக்கும் நன்றி
தொடர்ந்திருங்கள்

Ramesh said...

VARO said...
///காதல் வேலைக்காகாது//
அட! இப்ப தான் புரிந்ததா?
////
ம்ம்ம் எல்லாம் போகப்போகத்தானே தெரிகிறது....

Unknown said...

இது கிழக்கு பல்கலைகழக விடுதியோ எண்டு நினைச்சன்


கடைசில சொல்லி போட்டிங்க

Ramesh said...

A.சிவசங்கர் said...
//இது கிழக்கு பல்கலைகழக விடுதியோ எண்டு நினைச்சன்//
ஏனிந்த கொல வெறி

//கடைசில சொல்லி போட்டிங்க//
கடைசிவரை வாசிக்க வேண்டி இருக்கு போல

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு