Pages

Wednesday, September 22, 2010

இது ஸ்டேடஸ் - 05

"உன்னை உயர்த்திக்கொள்வது உன் செயல்களும் நீ பேசும் அழகிய சொற்களும்
நீயாக உயர்த்திக்கொள்ள முயற்சிக்காதே"

"ஆசைகளைத் துறக்கவேண்டும் என்று புத்தர் ஆசைப்பட்டார்". #படித்தது பிடித்தது #

"எத்தனை தடவை சிரித்து பேசி
எப்படிமா இருக்கிறாய் என்ற போதும்
கண்களின் ஓரத்தில் கண்டுபிடிக்கிறாள்
நுரைத்துக்கொண்ட கவலையை என் அம்மா"

"உன்னை வாழவைக்க உறவுக்காரன் தேவையில்லை.
முயற்சிகளை எடுத்து நீயாக வழிநடத்து உன்னை.
மற்றவர்களின் பல்லை விட உனது முரசு எவ்வளவோ மேல்"


"பிறரின் சந்தர்ப்பங்களை அவர்களுக்கு வழங்குங்கள்.
தடையாக நீங்கள் இருந்தால் உங்கள் சந்தர்ப்பங்கள் நழுவிப்போய்விடும்.
தவறிவிடுவீர்கள்"

"யார் யாருக்கோவாக நான் அவஸ்த்தப்பட வேண்டி இருக்கிறது. அவர்கள் திருப்திக்காக"

"என் இதயவீட்டின்
'மம்மி' ஆனவளே
உன்னையே வீடாக்கி
உறவாக்கிய அந்த பத்து மாதங்கள்." #எங்கேயோ படித்தது#

"மகிழ்ச்சியான விடியல் இனிய பாடலுடன் ..........."

"நான் காணாமல் போன கணங்களில்
மெல்லிய பாடல்களே என்னைக் கண்டுபிடித்துத் தருகிறது
இரவுவணக்கம் சொல்லிக்கொண்டு....."

"நான் விழுந்து எழுந்ததால் தான்
உங்களுக்கு விழுதலும் எழுதலும் பற்றி சொல்லமுடிகிறது"

"நீ என்னை வெறுப்பதால் உலகம் உன்னை வெறுக்கும் காரணம் நான் பூமியானவன்"


"மற்றவர்களை அன்பால் நோகடிக்கிறது என்பதில் ஒரு திருப்தி இருப்பதை இந்த மனசும் ஏற்றுக்கொள்கிறதா... அன்பால் இணைக அன்பு பகர்க"


"கரடியனாறு விபத்தில் உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்தியடையட்டும். துருதுருத்த கவலைகளில் இருக்கும் அவர்களின் உறவுகளுக்கு அனுதாபங்கள்"

"காத்திருங்கள் உங்களுக்கான நேரம் தயராக இருக்கும் பயன்படுத்திக்கொள்ள
அதற்காக முயற்சியின் படிகளில் ஏறத்தவறாதீர்கள"

"எழுத்துக்களுக்கு அங்கிகாரம் வழங்கப்படுகிறதா எழுத்துக்களால் உணர்வு எழுதப்படுகிறதா என்று ஆதங்கப்படும் சராசரி எழுத்தாளனாய் காதலும்"

"ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்துகொள்ள அவரின் வார்த்தைகளைக் கேளுங்கள் மனசின் ஆழம் செல்லலாம்"

"மற்றவர்களுக்கு வாழ்த்துச்சொல்லும் போது சந்தோசம் அமையட்டும் என்று சொல்லுதை விட சந்தோசமாய் இந்நாளை அமைத்துக்கொள்ளுங்கள் என்று பகிர்வோம்"

 இப்பூவின் விஞ்ஞானப்பெயர்: Vinca rosea(ஹபரண வைத்தியசாலையில் கடந்தவாரம் கிளிக் பண்ணியது. தமிழ்ப்பெயர் யாராவது சொல்லுங்கோ)

10 comments:

ம.தி.சுதா said...

ஃஃஃ..."எழுத்துக்களுக்கு அங்கிகாரம் வழங்கப்படுகிறதா எழுத்துக்களால் உணர்வு எழுதப்படுகிறதா என்று ஆதங்கப்படும் சராசரி எழுத்தாளனாய் காதலும்"...ஃஃஃ ஆஹா அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்...

Chitra said...
This comment has been removed by the author.
Chitra said...

எல்லாமே முத்துக்கள்!

படம் அருமை. அந்த பூ, நித்திய கல்யாணிபூ தானே?

Jana said...

அத்தனையும் பேர்ள்கள் அதாவது முத்துக்கள். சித்திரா அக்கா. நித்தியகல்யாணி இல்லை. அது வெள்ளை நிறம்.

ஈழவன் said...

அருமை.

ஹேமா said...

றமேஸ்...உங்கள் அனுபவங்களைத் தொகுப்பாய்த் தருகிறீர்கள்போல.அத்தனையும் பாடமாக்கப்படுகிறது வாழ்க்கையில் மனதில்.

இது பட்டிப்பூவா ?நிறம் நிறமாய் அழகாய்ப் பூக்கும்.ஆனால் முழுவியளத்துக்குக் கூடாதென்று முற்றத்தில் வைக்கமாட்டார்கள்.
அதுவா இந்தப் பூ ?

றமேஸ்-Ramesh said...

@ம.தி.சுதா said...
நன்றி ம.தி.சுதா

@Chitra said...
///எல்லாமே முத்துக்கள்!///
நன்றி சித்ரா

///படம் அருமை. அந்த பூ, நித்திய கல்யாணிபூ தானே?///
அந்தப்பூ பட்டிப்பூ ஆனால் இணையத்தில் பட்டிப்பூ அல்லது நித்தியகல்யாணி என்றே சொல்லப்படுகிறது.
இதில் இரண்டு வகை நான் அறிந்தது வெள்ளை நிறம் மற்றயது இது.
வெள்ளை நிறம் அதிக மருத்துவத்தன்மை உள்ளது


@Jana said...

///அத்தனையும் பேர்ள்கள் அதாவது முத்துக்கள். சித்திரா அக்கா. நித்தியகல்யாணி இல்லை. அது வெள்ளை நிறம்.///

நன்றி அண்ணா.
இதுபற்றி பதிவே போடலாம் போல இருக்கு


@ஈழவன் said...

நன்றி ஈழவன்

@ஹேமா said...

///றமேஸ்...உங்கள் அனுபவங்களைத் தொகுப்பாய்த் தருகிறீர்கள்போல.அத்தனையும் பாடமாக்கப்படுகிறது வாழ்க்கையில் மனதில்.///
உண்மை ஹேமா.
அனுபவமும் கூட

//இது பட்டிப்பூவா ?நிறம் நிறமாய் அழகாய்ப் பூக்கும்.ஆனால் முழுவியளத்துக்குக் கூடாதென்று முற்றத்தில் வைக்கமாட்டார்கள்.
அதுவா இந்தப் பூ ?
///
ஆமாம். உங்கள் கவிதையிலும் ஒரு இடத்தில் வந்திருக்கு என நினைக்கிறேன்.
நன்றி ஹேமா

யோ வொய்ஸ் (யோகா) said...

:)

றமேஸ்-Ramesh said...

@யோ வொய்ஸ் (யோகா) said...
//:)///

:))
நன்றி

றமேஸ்-Ramesh said...

@யோ வொய்ஸ் (யோகா) said...
//:)///

:))
நன்றி

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு