Pages

Wednesday, January 6, 2010

இசைப்புயலுக்கு வாழ்த்தும் இந்தப்புயல்

நீ தான்
இசைப்புயல்
உனக்கு வாழ்த்து சொல்லுது
இந்தப்புயல்

நீ இளவயதிலே
இசையில் முற்றியவன்
நான் வயசு பத்திலே
உன்னைப்பற்றியவன்

சின்னச்சின்ன ஆசைகளில்
உன் இசை ரோஜாக்களை
பறித்தோம் முதலில்

மெல்லிசை ஞானியர்
கொடிகட்டிபறந்த
தமிழ் திரை இசையில்
நீ தானே
கொம்புயூட்டர்
இசைக்கொடி ஏற்றியவன்

இன்று உனக்கு 44 ஆ??
யார் சொன்னது?
ஒரு வீர தீரனின்
இளமையும் துடிப்பும்
உன்னிசைப்புயலில் இருக்க
உனக்கு வயது
கணிப்பில் இல்லை
இசையால்

உன்னை உலகுக்கு காட்டியது
தமிழ்சினிமா - அதுதான்
நான்கில் மூன்று முறை
தேசியவிருதுகள்
உன் தமிழுக்கு

இசை உனக்கு கிடைத்த
வரம்
நீ சினிமாவுக்கு கிடைத்த
இசைஉரம்

விருதுகள்
நீ வாங்கும் போது
உண்மையில்
விருதுகள் தான்
விருதுவாங்கிக் கொண்டன

ஒஸ்கார் விருது கூட
உனக்கு சாதாரணம்
அன்று
அந்தமேடையில்
உன்தாய்மொழியில்
வார்த்தை சிதறியதே இது
ஒஸ்காருக்குப் பெருமை
ஓ...
நீயும்
தமிழ்தாய் பிள்ளையல்லவா!

நீ தான் பல
புதிய புதிய
பாடகர்களை மேடையேற்றும்
அறிவிப்பாளன்

இசைகளையும் புதிய
இசைக் கலைஞர்களையும்
புதுப்பிக்கும் இசைப்
புத்தகம் நீதான்

இசையால் உலகை
இயக்கும் விற்பன்னன்
இப்போது நீதான்

உன் இசைப்பயணத்தில்
நான் பல தடவைகள்
பயணித்திருக்கிறேன்
வெறும் இசை ரசிகனாய்
ஆனால்
ஒருமுறை ஏறிய
இசை வண்டியில்
இன்னொருமுறை ஏறவில்லை
ஒவ்வொரு முறையும்
வெவ்வேறு பயணங்கள்

நீ யார் பக்கம் என்று
வாதிடும்
கோயில்களே
மசூதிகளே
கேளுங்கள்
இசையில் கடவுளைக்காண
கற்றுக்கொள்ளுங்கள்
கடவுளுக்காக பிளவுபட்டு
இசையைக் கலைக்காதீர்கள்

இசை மனதில் நின்று
உயிர் வளர்க்கும்
மறந்துவிடாதீர்கள்

நான் கண்மூடினாலும்
காதோரம் விழும்
உன் மெல்லிசையில் தான்
என் நித்திரை
ஒரு சொட்டுக்கண்ணீரும்
ஓரவிழியில் கசியும்
உன்னிசை மனதில்
குளிரும்போது....
இசைப்புயலே
வாழ்க
நீ


">

வெற்றிக்கொடிகட்டு
">

14 comments:

Theepan said...

மிக நன்றாக உள்ளது. எப்படி உங்களால இப்படி எல்லாம் முடியுது , வாழ்த்துகள்

..:: Mãstän ::.. said...

சூப்பர் றமேஸ்....

அருமை அருமை மிக அருமை.

<<<
நான் கண்மூடினாலும்
காதோரம் விழும்
உன் மெல்லிசையில் தான்
என் நித்திரை
ஒரு சொட்டுக்கண்ணீரும்
ஓரவிழியில் கசியும்
உன்னிசை மனதில்
குளிரும்போது....
இசைப்புயலே
வாழ்க
நீ
>>>

கலக்கல்... எப்படி பாஸு இப்படிலாம் எழுத முடியுது???

வாழ்க ரஹ்மான்

Bavan said...

இசைப்புயலுக்கு வாழ்த்துக்கள்..;)

றமேஸ்-Ramesh said...

Theepan said...

//மிக நன்றாக உள்ளது. எப்படி உங்களால இப்படி எல்லாம் முடியுது , வாழ்த்துகள்//

நன்றி ஜெயதீபன்
எல்லாம் உங்களைப் போன்றவர்களின் வாழ்த்துக்களும் ஊக்கப்படுத்தலுமே...

றமேஸ்-Ramesh said...

:: Mãstän ::.. said...
///
சூப்பர் றமேஸ்....
அருமை அருமை மிக அருமை
கலக்கல்... எப்படி பாஸு இப்படிலாம் எழுத முடியுது???
///
நன்றி
முதல்வருகை வாழ்த்துக்களுக்கு
முடியுது எழுதுறோம்
அவ்வளவுதான்....
ஆழப்பதியும் நினைவுகளும் நிஜங்களும் எழுத தூண்டுது..

றமேஸ்-Ramesh said...

Bavan said...

///இசைப்புயலுக்கு வாழ்த்துக்கள்..;)///

நன்றி பவன்
இசைப்புயலுக்கு மட்டும்தானா?? ஹிஹிஹி

Atchu said...

இசைப்புயலுக்கு

பங்குச்சந்தை - ஸ்ரீலங்காவின் வாழ்த்துக்கள்

றமேஸ்-Ramesh said...

Atchu said...
நன்றி வருகைக்கும் இசைப்புயலுக்கு வாழ்த்துக்களுக்கும்

பலா பட்டறை said...

சூப்பர் றமேஸ்....

அருமை அருமை மிக அருமை.

<<<
நான் கண்மூடினாலும்
காதோரம் விழும்
உன் மெல்லிசையில் தான்
என் நித்திரை
ஒரு சொட்டுக்கண்ணீரும்
ஓரவிழியில் கசியும்
உன்னிசை மனதில்
குளிரும்போது....
இசைப்புயலே
வாழ்க
நீ
>>>

கலக்கல்... எப்படி பாஸு இப்படிலாம் எழுத முடியுது???

வாழ்க ரஹ்மான்//

repeattuuuuu::)))

றமேஸ்-Ramesh said...

பலா பட்டறை said...
முடியுது எழுதுறோம்
அவ்வளவுதான்....
ஆழப்பதியும் நினைவுகளும் நிஜங்களும் எழுத தூண்டுது..

நன்றி பாகல்
repeattuuuuu::)))

Balavasakan said...

சூப்பர் றமேஸ் எமக்கு இந்த வருடம் கொண்டாட்டம் தான் நிறைய ஏ.ஆர் படங்கள் வெளிவருகிறது என்ஜொய் பண்ணுவம்

றமேஸ்-Ramesh said...

Balavasakan said...

//சூப்பர் றமேஸ் எமக்கு இந்த வருடம் கொண்டாட்டம் தான் நிறைய ஏ.ஆர் படங்கள் வெளிவருகிறது என்ஜொய் பண்ணுவம்//

நன்றி பாலா.
ம்ம் ச்சியேஸ்.. ஏ.ஆர்.ஆர் க்கு ஒரு ஜே..

யோ வொய்ஸ் (யோகா) said...

அருமை அருமை ரமேஸ், மிகவும் அருமையான வாழ்த்துப்பா...

தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

“நிலவின்” ஜனகன் said...

மிக மிக அருமை........

அண்ணருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்..

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு