நாம்
காதலைப் பேசிக்கொள்ளாத
அந்தக்கணங்கள்
இப்போது
கவலைப்படுகின்றன
கலைந்துபோன
கருக்கொண்ட மேகங்கள்
உருக்குலைய
மறந்துவிட்டன என்று
அன்றைய
காதல் தவறி
இப்போது
காகிதத்தில்
விழுந்துவிட்டது
அப்போது
நமது கண்கள்
முட்டிக்கொண்ட போது
எனது கவிதைகளை
உன்னிடம் நான்
கொட்டியிருந்தால்
சிலவேளை
இப்போது
என்னோடு பந்தத்தில்
இணைந்திருப்பாய்
நீ விட்டுப்போனதால்
என் மனக்காகிதத்தில்
பல கவிதைகள்
பிரசவம்
நன்றி சொல்லுது
என் மனது
இப்போது
காதல் கொண்டு
தமிழ் வளர்க்கிறேன்
காதலை தமிழுக்கு
காணிக்கையாக்குகிறேன்
அன்று
நீ என்
காதல் கதாநாயகி
உன்னால் இன்று
எழுத்து, இயக்கம்,
தயாரிப்பு என்று
காதல் திரைப்படம்
என் கவிதைகளில்.....
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
கவிதை அழகு, அருமை. ஆனால் உங்கள் அனுபவத்தை கவிதையாய் வடித்திருப்பதுதான் கவலையாக இருக்கிறது.
நன்றி சந்ரு
அனுபவம் ஓர் ஆசிரியன்
மறுப்பீர்களா??
ஹிஹிஹி
ஆனால் இது என்னுடையதும் அல்ல...
அப்படி என்றால் கவிஞர்கள் பல பேரைக் காதலித்திருக்கவேண்டும்..
நீ விட்டுப்போனதால்
என் மனக்காகிதத்தில்
பல கவிதைகள்
பிரசவம்........................Good one!
நன்றி சித்ரா தொடர் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்
மிக நன்றாக இருக்கிறது...
நண்பரே..
வாழ்த்துக்கள்....
நன்றி கமலேஷ்
நானும் உங்கள் சுயம் தேடும் பறவைகளில் ஒன்று...
அன்றைய
காதல் தவறி
இப்போது
காகிதத்தில்
விழுந்துவிட்டது//
அதை கணினி
விழுங்கி விட்டது!!??... ::)) நல்லாருக்குங்க..:))
///அதை கணினி
விழுங்கி விட்டது!!??... ::)) ///
ச்ச இது தலைக்குள்ள ஏறலியே..ஹா ஹா..
நன்றி பலா பட்டறை...
நல்ல கவிதை ரமேஸ்!
வாங்க ராஜாராம்
நன்றி
முதல் வருகைக்கும்
பின்னூட்டலுக்கும்
கவிதையை மிக ரசித்தேன்... நல்லாயிருக்குங்க.
வாங்க கருணாகரசு..
அன்புடன் உங்களை வரவேற்கிறேன்...
நன்றி வருகை மற்றும் பின்னூட்டலுக்கு
Post a Comment