இந்தச்சிதறலின் மற்றுமொரு வெற்றிப்பதிவு தான் இது...
பல நாட்களாய் பலவேறு கஸ்டங்களில் மத்தியில் இந்தப்பதிவை எழுத முடியாமல் சில ஒழுங்கமைப்புக்களையும் செய்யாமல் அவசரத்தின் அவசியத்தின் மத்தியில் பம்பரமாய் ஆடுகிறேன் ஆனாலும் பதிவெழுதவேண்டிய கட்டாயத்தில் அவ்வப்போது சில பதிவுகளை பதிவிட்டுவருகிறேன் தொடர்பறாமைக்காக.
எனது பதிவுகளின் வெற்றியாக எனது கிராமத்தைச்சேர்ந்த புலம்பெயர் நம்மவர்கள் எமது பொருளாதார கஸ்ட நிலைமைகளில் உள்ள (பாடசாலையில்) கல்விகற்கும் மாணவர்கள் சில பேருக்கு மாதாந்தம் பண உதவிகளை செய்ய முன்வந்திருக்கிறார்கள். மனசுக்கு குளிர்ச்சி அந்தப்பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி். முதற்கட்டமாக கடந்த பெப்ரவாரி மாதத்திலிருந்து ஆரம்பித்திருக்றோம். இதில் மூன்று பிள்ளைகள் உள் வாங்கப்பட்டார்கள். மேலும் இரண்டு மாணவர்கள் ஏப்பிறல் மாத்திலிருந்து உள்வாங்கப்பட இருக்கிறார்கள். இவர்களி்ல் இரண்டு உயர்தரம் படிக்கும் மாணவர்கள், ஒரு பல்கலைக்கழக மாணவன், இரண்டு சாதாரண தரம் படிக்கும் மாணவர்கள்.(இவர்களைப் பற்றியும் மேலதிக விபரங்கள் பற்றியும் ஒரு ஒழுங்கமைப்புக்குள் வந்தபிறகு பதிவிடுகிறேன்.)
இவர்களுக்கு மாதாந்தம் ரூ.2000 வழங்கப்படுகிறது. இந்தப்பண உதவி அவர்கள் படிப்புக்காக ஒரு ஊக்கப்படுத்தலே தவிர அவர்களை ஒரு வேறுப்படுத்திக் காட்டுவதில்லை(non discrimination).இவர்கள் சில வரையறையறைக்குட்பட்டுத்(criteria)தெரிவுசெய்துள்ளோம். பின்வரும் சில அடிப்படைகளின் மத்தியில்...
* பெண் அல்லது பிள்ளைகள் தலைமை தாங்கும் குடும்பம்
* மாதவருமானம் ரூ.3000 க்கு கீழ் உள்ளவர்கள்
* படிப்பில் ஆர்வம் உள்ள பிள்ளைகள்
போன்றவற்றைக்கருத்திற் கொண்டு இப்போது தெரிவுசெய்துள்ளோம்.
தற்போது இதன் நீடித்துநிலைக்கும் தன்மை பற்றியும் இதன் பக்க விளைவுகள் பற்றியும் ஆராய்கின்றோம். (இதுபற்றி நீங்களும் பின்னூட்டததில் கருத்துரைக்கலாம்.)
இதற்கு முன்னோடியாக செயற்பட்ட எமது உறவு கனேடிய திரு.ராஜன் அண்ணன் (இவரை உதயன் அண்ணன் என்றால்தான் விளங்கும்)அவர்களுக்கு நன்றிகள். இன்னும் பல உறவுகள் காத்திருக்கிறார்கள் நாங்களும் உங்களுக்காக உள்ளோம்.
இதற்காக பல திட்டங்கள் வகுத்துள்ளேன். நடைமுறைக்கு கொண்டுவர எனது வேலைகள் இடையூறாக இருப்பதற்கு மன்னிக்கவும். காரணம் வயல் வேலை மற்றும் தோடட வேலை. இத்தருணத்தை நான் பொது வேலைக்காக முற்றாக செலவிட்டால் எனது குடும்ப பொருளாதாரத்தில் பாரிய இடையூறு ஏற்படும்.
ஆனாலும் பல செயற்பாடுகளை செவ்வனே செய்துகொண்டிருக்கிறேன்.
இணைத்தினூடாகவும் பல நண்பர்கள் உறவுகளுடனும் கதைக்க முடியாமல் போயிற்று. மறுபதிவுகள் பல உங்களை வந்து சேரும்.
எமது உறவுகள் எப்போதும் எமது கிராமத்தவர்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு நன்றிகள்.
இப்போது விடைபெறுகிறேன்
மனதுக்குள் இப்போது இந்தப்பாடல்கள் எனக்குள் நான் கேட்டுக்கொள்கிறேன் .................
வலிதாங்கும் உள்ளம் நிலையான சுகம்... யாருக்கில்லை போராட்டம்..
புண்ணியம் தேடி காசிக்குப்போவார் இந்த.....
Monday, March 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
பாராட்டுக்கள்.
நன்றி அண்ணாமலையான்
போற்றுதலுக்குரியது. வாழ்த்துக்கள்
நல்ல முயற்சி. வாழ்த்துகள்.
உங்கள் அக்கறையும், உங்கள் நல்ல உள்ளமும் - உங்கள் நல்ல முயற்சியில் தெரிகிறது. பாராட்டுக்கள்! தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்!
நன்ற மதுரை சரவணன்
நன்றி பாலாஜி ஐயா
நன்றி சித்ரா சாதிப்போம்
யுத்தத்தினால் சிதறிய குடும்ப கட்டமைப்பும் சமுக கட்டமைப்பும் கொண்ட பிரதேசங்களில் வாழும் மாணவர்களின் கல்விக்கு உதவுவது சிறந்த ஒரு திட்டம். இதன் நிலைத்து நிற்க்கும் தன்மை ( Sustainability) என்பது ஜோசிகவேண்டிய விடயம் . சுயதொழில் வாய்ப்பு ஏற்படுத்துவதன் மூலம் நிலைத்து நிற்க்கும் தன்மையை உரிதிப்படுதலாம் அல்லது அரசாங்க திட்டங்கள் உள்ளது ஆனால் நாட்கள் எடுக்கும். இதற்கான ஒரு பொறிமுறையை கண்டுபிடிக்கவேண்டும் . இது ஓவரு குடும்பங்களுக்கும் வித்தியாசப்படும் . மிகவும் வறுமையான குடும்பங்களின் ( Ultra poor family) மீள் எழுச்சி என்பது மிகவும் கடினமானது . எந்த ஒரு நிறுவனமும் அதில் வெற்றி பெறவில்லை .
எது எப்படி என்றாலும் மாணவர்களின் மனதை உறுதிப்படுத்துதல் வாழ்கையில் நம்பிக்கை ஏற்படுதல் வாழ்க்கை போராடத்துக்கு தயார்படுத்த வேண்டும்.இவைகளே இத்திட்டத்தின் வெற்றி
நன்றி யாதவன்.
///எது எப்படி என்றாலும் மாணவர்களின் மனதை உறுதிப்படுத்துதல் வாழ்கையில் நம்பிக்கை ஏற்படுதல் வாழ்க்கை போராடத்துக்கு தயார்படுத்த வேண்டும்.இவைகளே இத்திட்டத்தின் வெற்றி///
இதுவே தற்போதைய நோக்கம். கல்வியில் பொருளாதாரச் சுமை என்பது பெரிதளவில் நம்ம பிள்ளைகளை பாதிக்கிறது. இதனால் இவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் கற்றல் ஒழுங்குகளில் வேகத்தினைக் கூட்டி மன உளச்சலிலிருந்து கொஞ்சமாவது விடுத்தலும் நமது திண்ணம். முதலிரு படிகளைத்தாண்டும் போது அடுத்த படிநிலையில் முன்னேற்றம் காணலாம் இல்லையா
பகிர்வுக்கு நன்றி ! வாழ்த்துக்கள் !
நன்றி பனித்துளி சங்கர்
சமூக,குடும்பநல...அக்கரையுடன் உழைக்கும்
இளையரே!! நன்றி உங்கள் உண்மையான
ஊக்கத்துக்கும்,உழைப்புக்கும்.
வாழ்த்துகள்!!!
நன்றி கலா.. (அக்கறை என்று வரவேண்டும்)
நன்றி சுபாங்கன்
ஒரு சகபதிவராக பெருமைப்படுகின்றேன். உண்மையில் உங்கள் சிந்தையில் இந்த எண்ணம் வந்ததற்கு என் வாழ்த்துக்கள். காரணம் எல்லோரும் இப்படி சிந்திப்பதில்லை சிந்திக்கும் எல்லோரிடமும் செயற்படுத்தும் வசதி வருவதில்லை. உங்களுக்கு அமைந்திருக்கின்றது. நீங்கள் ஒருவருக்கு பணத்தை கொடுப்பதை விட கல்வியை கொடுக்கலாம் என்று பெரியோர் சொல்லி இருக்கின்றார்கள் எனவே உங்கள் செயற்பாடு கல்விக்கானதாக இருக்கின்றது. நிச்சயம் இவை மென்மேலும் வெற்றியுற என் வாழ்த்துக்கள்.
நன்றி சதிஷ். யாம் பட்ட கஸ்டம் பிறர் படக்கூடாது என்ற ஒரு எண்ணம் தான்
நன்றி
சிறந்த முயற்சி ....
வாழ்த்துகள்.
Post a Comment