நான்
ஒவ்வொரு முறையும்
விழுந்தபோதுதான்
பலமுறை
எழ முடிகிறது
என் விழிகளின்
ஓரத்தில்
அடிக்கடி
நீர்த்துளிகள்
துடைத்துக்கொள்ள
கை நீளுகையில்
மனசு மட்டும்
மெளனமாய்
கேட்டுக்கொள்ளும்
வியர்வையா
வேதனையா??? என்று
நானும் மீனும்
ஒரே ஜாதி
கண் கலங்கும் போது
இப்போது
என் வியர்வைகள்
நாளைய
விருட்சங்களின்
விதைகளாகட்டும்
அம்மா
கவலைப்படாதே
உன்
கண்ணீர் துடைக்கும்
விரல்கள்
என் வியர்வைகளே
பூமி தோண்டி
புதையல் எடுக்கவில்லை
நிலம் உழுது
விதை
விதைக்கிறேன்
நாளையப்பயிர்கள்
நமக்காககட்டும்.
Saturday, March 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
ஆகட்டும். நல்லாருக்கு றமேஸ்
நன்றி ஐயா
//என் விழிகளின்
ஓரத்தில்
அடிக்கடி
நீர்த்துளிகள்
துடைத்துக்கொள்ள
கை நீளுகையில்
மனசு மட்டும்
மெளனமாய்
கேட்டுக்கொள்ளும்
வியர்வையா
வேதனையா??? என்று//
அட அட அட..
//நானும் மீனும்
ஒரே ஜாதி
கண் கலங்கும் போது//
கலக்கல்..;)
நன்றி பவன்
நல்ல தலைப்பு, அதற்கேற்ற கவிதை நல்லா இருக்கு றமேஸ்.
நன்றி ஷங்கர் நீண்ட நாளைக்குப்பிறகு. எப்படி இருக்கீங்க
அம்மா
கவலைப்படாதே
உன்
கண்ணீர் துடைக்கும்
விரல்கள்
என் வியர்வைகளே
....அருமையான வரிகள்.
'இப்போது
என் வியர்வைகள்
நாளைய
விருட்சங்களின்
விதைகளாகட்டும்'.
I like this ramesh. Good.
நன்றி சிதரா உண்மையில் அம்மாவுக்கு சொன்ன வார்த்தைகள்
நன்றி சுபா அக்கா
நன்கு நல்ல title
நன்றி டாக்டர்
Post a Comment