என் எழுத்துக்களின் இதுவும் ஒரு வெற்றிதான்.
எமது ஊரில் ஒரே ஒரு விளையாட்டுக்கழகம் என்றிறிருந்த நிலைமையில் மற்றொரு விளையாட்டுக்கழகம் கால்கோள் இட்டு வளர்ச்சியுற்று வரும்வேளையில் இரு விளையாட்டுக்கழகங்களும் கீரியும் பாம்புமாய் ஆக இவர்கள் இருவரும் சேர முடியாதா என்ற எண்ணம் ஒவ்வொரு ஊர்க்குடிமகனிடமும் இருந்த அவா நாளை நிறைவேறுகிறது... அதுதான் சித்திரைப்புது வருட கலாசார விளையாட்டுவிழா 2010. இதற்காக சென்ற முறை நடைபெற்ற நிகழ்வொன்றில் எமது திரு.எஸ்.அமலநாதன் (பிரதேச செயலாளர் மண்முனைப்பற்று) அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இருவிளையாட்டுக்கழகங்களும் பேச்சுவார்த்தை நடத்தி முறுகல் நிலைமை ஏற்பட்டபோதும் அவற்றை விடுத்து இரு கழகங்களும் இணைந்திருப்பது வரவேற்கத்தக்க விடயம். இவ்விரு விளையாட்டுக்கழகத்தினருக்கும் எமது வாழ்த்துக்களும் நன்றிகளும். விளையாட்டு நிகழ்வின் அழைப்பிதழின் நகல்பிரதி ....
அனைவரையும் அன்புடன் அழைக்கும் இரு கழகங்களுக்கும் நன்றிகள் கோடி....
*இச்சிதறல்கள்.. ஒரு விளையாட்டுக்கழகத்தினைப் பற்றி எழுதிய எழுத்துத்தும் மற்றய விளையாட்டுக்கழத்துக்கு கொடுத்த எதிர்மறையான விளைவுகளும் இரண்டு விளையாட்டுக்கழகங்களை இணைக்கும் மறைமுக முயற்சியில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியே.. இவ்வாறு இவ்விரு விளையாட்டுக்கழக வர்த்தக நோக்கிலான இருகல்வி நிலையங்களும் ஒருவரையொருவர் எதிராக பேசிக்கொள்ளாமல் இணைந்து எமது ஊரின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்கி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் உரிய முன்னேற்றத்தினைக் காட்டவேண்டும் என்பதும் நமது எதிர்பார்ப்பு...
மாற்றம் வேண்டும் நல்லதாக அவை அமையவேண்டும்..என் எழுத்துக்களின் இதுவும் ஒரு வெற்றிதான்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
:))
சாதனையாளர் றமேஸ் வால்க)
Balavasakan said...
// :))//
நன்றி பாலா...:)))
வானம்பாடிகள் said...
///சாதனையாளர் றமேஸ் வால்க)///
நன்றி ஐயா
//வால்க??? // தமிழ் ஹாஹாஹா
இந்த இடுகையிட்டமைக்கு மிக்க நன்றிகள்
அனோஜன் PC said...
//இந்த இடுகையிட்டமைக்கு மிக்க நன்றிகள்///
வாங்க அனோ.. முதல் வருகைக்கும் பின்னூட்டலுக்கும் நன்றி
இப்ப விளங்குமே உங்களுக்கு....
Post a Comment