கண்ணை
உசுப்பி உசுப்பி
தட்டுத்தடுமாறி
டோச் லைட்டை
சுவர் மணிக்கூட்டில்
கை உயர்த்தி அடிக்க
நெனைவுக்கு வந்தது
சுவர் தரையாகி
ஒருவருடம் கடந்து....
கண்ணை
தடவிப்பார்க்க
'அப்பா' என்ற மகளை
பாய் நனைத்திருப்பாள்
என்ற நெனைப்பில
வருடிய கை
தெரிந்துகொண்டது
இரத்தக்காயம்
அவள்
உடலிலும்
என்
உள்ளத்திலும்
காயப்பட்டதனால்
காய்ந்துவிடாமல்....
கண்ணை
கசக்கி கசக்கி
அண்ணாந்து
விடிஞ்சிருக்கா இல்ல
வெள்ளி பூத்திருக்கா
'கும்' எண்டு தான்
இன்னும்.....
Monday, May 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
வலிதத வார்தைகளில் வலிதான் மிஞ்சுமே தவிர வார்த்தைகள்
வராது றமேஸ்.
:((
மனதை பாதித்த கவிதை.
ஒரு உருக்கமான கவிதை..:((
mm.
வலி மிகுந்த கவிதை
எவ்வளவு வலி ........ வேதனை..... கவலைகள்...... ம்ம்ம்ம்.....
ஹேமா said...
ம்ம் உண்மைதான் ஹேமா
நன்றி
Subankan said...
// :(( //
கண்ணீரில் வாழ்கின்றோம்
நன்றி சுபாங்கன்
தமிழ் உதயம் said...
எனக்கும் தான்
நன்றி
Bavan said...
ம்ம்
நன்றி பவன்
வானம்பாடிகள் said...
///mm.///
mmmm
VELU.G said...
.////வலி மிகுந்த கவிதை///
ம்ம்
நன்றி முதல் வருகை என்று நினைக்கிறேன்
Chitra said...
என்ன பண்ணுறது..... நன்றி சித்ரா
நன்றி வானம்பாடி ஐயா
-------------------
எப்போதும் போலவே மௌனம் தான் பல வலிகளுக்கு மருந்து...
Balavasakan said...
/ -------------------/
ம்ம் மெளனம்
நன்றி பாலா
மிகவும் வலியோடு பேசுகிறது கவிதை...
கமலேஷ் said...
///மிகவும் வலியோடு பேசுகிறது கவிதை...///
ம்ம்ம்
நன்றி கமலேஷ்
இன்று வரை அவலம் எங்கள் அனைவருடனும் தொடர்ந்து கொண்டே இருப்பதனைக் கவிதையாக்கியுள்ளீர்கள்?
காலங்கள் கடந்தாலும் கண்ணீரோடு எங்கள் அனைவரினதும் உள்ளத்தையும் உருக்குகிறது கவிதை.
கமல் said...
///இன்று வரை அவலம் எங்கள் அனைவருடனும் தொடர்ந்து கொண்டே இருப்பதனைக் ////
///காலங்கள் கடந்தாலும் கண்ணீரோடு எங்கள் அனைவரினதும் உள்ளத்தையும் உருக்குகிறது கவிதை.///
நன்றி கமல்
வலிமிகு வாழ்க்கை வழிதெரியாமல் ஓடுது.. காரணமும் தெரியும் விடைபெற முடியாமல் வினாவுக்குள் சிக்கிக்கிக்கொண்டு இன்னும்....
Post a Comment