அண்மைக்காலமாய் பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டு நானும்.
கடவுள், இப்பிரச்சனையைத் தீர்த்து வைப்பார். கடவுள், என்னைப் பரீட்சையில் சித்திபெறச் செய்வார். கடவுள் எல்லாம் தருவார்..... இப்படி எந்த விடயமாகிலும் நாம் கடவுள் பெயரைச் சொல்லி சொல்லி.. இந்த வார்த்தைகளை அடிக்கடி கேட்கும் போது இன்னும் எனக்குள் கடவுள் மீது இருந்த ஏதோ ஒரு பக்தி அல்லது நம்பிக்கை என்னை விட்டுப்போவதாக உணரப்படுகிறது.
"கடவுள் எல்லாம் செய்வார் என்றால் நாம் எதுக்கு வாழ வேண்டும் கடவுளே வாழ்ந்துவிட்டுப் போகலாமே??"
நண்பர் ஒருவர் சொன்ன கதை இது,(இதில் மதம் சம்பந்தவிடங்களை விடுத்து அதன் உட்கருத்தைப்பார்க்க)
இவர் றோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுபவர். தனது பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கிறிஸ்தவ மதத்தின் வேறொரு சபையின் வழிவந்தவர்கள். இந்த பக்கத்துவீட்டுக்காரர்கள் எதற்கெடுத்தாலும் ' இயேசப்பா தான் இதைச் செய்திருக்கிறார்." என்று அனைத்து விடயங்களுக்கும் கடவுளின் நாமத்தை சொல்லிக்கொள்வார்களாம். பல மாதங்களாக இவர்கள் வீட்டில் மின்சாரத் தடை விட்டுவிட்டு வந்து கொண்டிருக்குமாம். அப்போது கூட்டுத்தடியினால் உருகி(பியுஸ்) இன்மீது யேசப்பா யேசப்பா என்று தட்டும் போது மீண்டும் மின்சாரத் தடை நீக்கப்பட்டுவிடுமாம்.. அப்போதும் யேசப்பா தான் தந்தவர் என்று சொல்லிக்கொள்வார்களாம். இப்படியே பல மாதங்களாக ஓடிக்கொண்டிருக்க, ஒரு நாள் நம்ம நண்பரிடம் சொன்னார்களாம் வீட்டில் "கரண்ட் கட்டாகிட்டு கொஞ்சம் பாருங்களேன்" என்று. இவரும் போய் டெஸ்ரர் கொண்டு தனக்குத் தெரிந்த அறிவைப்பயன்படுத்தி பார்க்க பியுஸ் சரியாக இணைக்கப்படாமல் பட்டும் படாமலும் இருந்ததாம். இவர்கள் கூட்டுத்தடியால் தட்டும்போது இதன் துண்டித்த இணைப்பு தொடர்புபடும். அப்போது நம்ம நண்பர் சொன்னாராம். இணைப்பில் உள்ள பிரச்சனையைக்காட்டி இதுதான் உங்கள் கரண்ட் பிரச்சனை. இதுக்குப்போய் யேசப்பா தான் தந்தவர் என்று கடவுளின் பெயரை அவமானப்படுத்தக்கூடாது என்று அப்பிரச்சனையைக்கு முற்றுப்புள்ளி வைத்தாராம்.
இதேபோல் நம்ம இன்னொரு நண்பர்,(இதிலும் மதம் சம்பந்தவிடங்களை விடுத்து அதன் உட்கருத்தைப்பார்க்க)
இவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். இவர் பாடசாலைக்காலங்களில் மார்க்க விடயங்களில் தான் தவறாக நடந்ததாகவும் இப்போது நல்லவனாக இருப்பதாகவும் சொன்னார். அதாவது இப்பொழுதுதான் மார்க்க சிந்தனைகள் பற்றிப்பேசுவதாகவும் பக்குவப்பட்டதாகவும் தான் மட்டுமே Perfect (இதன் தமிழ்காண்க)ஆனவன் என்றும் அடிக்கடி சொல்லிக்கொள்ளுவார். இதேபோல் தனது அனைத்து செயல்களுக்கும் "அல்லா" தான் காரணம் என்று சொல்லுவார். ஆக, என்னிடம் காசு தந்து "அந்தக்கடைக்குப்போய் சிகரெட் வாங்கி வா மச்சான் ஊரில நம்ம பெரிய தத்துவம் சொல்லுற அதால யாரும் கண்டானுகள் எண்டா என்னைக் கீழ்சாதிக்காரான் எண்டு சொல்லுவானுகள் நீ போய் வாங்கிவா" இது எனக்கு பல கஸ்டங்களைக் கொண்டுவரும்
1. நான் சிகரெட் வாங்கும்போது என்னைத் தெரிந்தவர்கள் கண்டால் எனக்கு கஸ்டமாக இருக்கும் நான் சிகரெட் பிடிப்பதில்லை என்பதால்
2. இவருக்கு இந்த உதவி செய்யாவிட்டால் நண்பர் என்னை வெறுப்பார்
இந்த தர்மசங்கடத்தாலும் நான் அவருக்கு அதை வாங்கிக் கொடுத்து யோசிக்கும் விடயம் இதுதான்
நீங்கள் யாருக்காக பயப்படுகிறீர்கள்? யார் யாரை ஏமாற்றுகிறீர்கள் ?
கடவுளுக்காக வாழ்கிறீர்கள் என்றால், எதற்கு நீங்கள் கள்ளத்தனமாக வாழவேண்டும் சமூகத்திற்கு பயப்படவேண்டும்??
அப்போ கடவுள் பெயரை நாறடிக்காதீர்கள்.இதை அவரிடம் சொன்னபோது அவர் தான் செய்வதுதான் சரி என்றும் சமூகத்துக்கு தெரியாமல் நடித்தால் போதும் இதுதான் வாழ்க்கை என்றும் சொன்னார்.
ம்ம்ம் என்னபண்ணுறது? மனசு கஸ்டப்படுகிறதா??
(இதிலும் மதம் சம்பந்தவிடங்களை விடுத்து அதன் உட்கருத்தைப்பார்க்க)
இதேபோல் மன நிம்மதிக்காக வழிபாட்டுக்காகவா கோயில்கள் கட்டப்படுகிறன இல்லை நமது பொருளாதார சிறப்பை அதன் பெருமையைக் காட்டவா கட்டப்படுகிறன?? இல்லை சாமி கேட்டாரா இந்தளவு பெரிய கோயில் வேண்டும் இப்படி அமைய வேண்டும் என்று. நாம் பல கோடிப்பணம் செலவழித்து கட்டும் கோயில்களை விட சிலவேளைகளில் ஒரு சிறிய மரநிழலில் இருக்கும் கோயில் மனதுக்கு நிம்மதியையும் அமைதியையும் ஏற்படுத்திக்கொள்ளலாம்.
ஒருவர் சொன்னார் " எனக்கு பணிவிடையாயிருக்கு இப்படி பெரிதாக கோயில் கட்டவேண்டும், இந்த திருவுருவம் பெரியதாக எல்லோரும் பார்க்கத் தெரியணும்"
இங்கு கனவு என்பது பணிவிடையாகிறது.கனவு காணலாம் சைக்கிளில் போவதைவிட ஏறோப்பிளேனில்(விமானத்தில்) போவதாய் கனவு காணலாம். எமது பொருளாதாரப் பிண்ணணி சைக்கிளிலும் போக முடியாமல் நடந்தே போக வேண்டி இருக்கும் போது, நமது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள கடவுள் பெயரை கஸ்டப்படுத்தவேண்டுமா??? கோயிலில் மூலஸ்த்தானத்தில் உள்ள கடவுள்தான் நமக்கு மனநிம்மதியைத் தருகிறார் என்றால் பல இலட்சம் பணங்களைச் செலவிட்டு செய்யும் சிற்ப வேலைகள் எதுக்கு? அதிக பணத்தை நாம் செலவிட்டால், நமது பெருமை கூறக்கேட்டல் நமக்கு நிம்மதியைத்தருமா?
கோயில் ஆன்மா வாழுமிடம் ஆன்மா நிம்மதியடைய வேண்டுமல்லவா?
ஆக கடவுள் வழிபாடு,மார்க்கங்கள்,தர்மங்கள் அல்லது மதங்கள், உண்மையில் சொல்லுவதென்ன. நமக்காகவா மதம் மதத்துக்காகவா நாம்??? கடவுளுக்காகவா நாங்கள் கடவுள் நமக்காகவா???
கடவுள் இல்லை என்று சொன்னால் நான் நாத்திகன் ஆகிறேன். அப்போது கடவுள் உண்டு என்று சொன்னால் கடவுள்வாதியாகிறேன்.
ஆனால் கடவுள் இல்லை கடவுள் நம்பிக்கையே உண்டு என்று சொல்லும் நான் யார்???
உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் கேட்டுக்கொள்க.
மதம் அல்லது மார்க்கம் என்பது நாம் நமது பிறப்பினால் பெறப்பட்டதல்ல. நம் பெற்றோர்கள் தாம் பின்பற்றிய சமயத்தை நம் மீது திணித்துவிட்டதே அல்லது அதன் பின் நம்மளை வழிபடசெய்யச் சொல்லப்பட்டவே ஒழிய நாங்களாக விரும்பிப் பெறவில்லை.
ஆதலால் இது நமது மூடத்தனத்தையும் மூர்க்கத்தனத்தையும் தகர்த்து அன்பின் வழிகாட்டுதல் வேண்டும்.அதாவது நாம் அனைவரும் இதை உணர்ந்து அன்பே மதம், சமயம், மார்க்கம் என்று கொள்வோமானால் மனம் நம்மதியடையும். மதத்தின் பேரால் தம்மை விளம்பரப்படுத்திக்கொள்ளுவோரும், மற்றவர்களை ஏமாற்றிக்கொள்வோள்வோரும் உணருங்கள். நல்லவை நடப்பதற்கு ஆவனை செய்வோமே.
அன்பே நிரந்தரம்
அன்பே கடவுள்
நம்பிக்கை கொள்க
பி.கு.:
யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.
மதம் கொண்டு மதம் கொள்ள வேண்டாம்
மனம் கொண்டு மதம் வளர்க்க
Saturday, June 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
றமேஸ்…
////மதம் கொண்டு மதம் கொள்ள வேண்டாம்
மனம் கொண்டு மதம் வளர்க்க ////
நல்ல செய்தி
மதத்தினை சில வன்முறையாளர்கள் வியாபாரப்படுத்த முனைகின்றனர். அவை, தடுக்கப்பட்டால் மதங்களும்- மார்க்கங்களும் உன்னத நிலையிலேயே இருக்கும்.
@மருதமூரான். said...
////
மதத்தினை சில வன்முறையாளர்கள் வியாபாரப்படுத்த முனைகின்றனர். அவை, தடுக்கப்பட்டால் மதங்களும்- மார்க்கங்களும் உன்னத நிலையிலேயே இருக்கும்.
////
உண்மைதான் இதனை செய்யவேண்டும் அந்தந்த மதவாதிகள். மனஅமைதிக்காகவே மதம் அல்லது தர்மம் எனக் கொணர்கவே
நன்றி மருதமூரான் வருகைக்கும் கருத்துக்கும்.
பி.கு.:
யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.
மதம் கொண்டு மதம் கொள்ள வேண்டாம்
மனம் கொண்டு மதம் வளர்க்க
.....சில வரிகளில், ஆழமான அர்த்தங்கள்.... :-)
@Chitra said...
நன்றி சித்ரா
அன்பே சிவம். லவ் இஸ் காட். எல்லாம் ஒண்ணுதான். நாம் எற்படுத்தியது . வாழ்த்துக்கள்
மதுரை சரவணன் said...
///அன்பே சிவம். லவ் இஸ் காட். எல்லாம் ஒண்ணுதான். நாம் எற்படுத்தியது . வாழ்த்துக்கள்////
அன்பே கடவுள்
அன்பு கொண்டு கடவுள் செய்க
நன்றி சரவணா
மதம், கடவுள் பற்றி தவறான நமது கண்ணோட்டம், இன்றுவரை நம்மிடையே காணப்படுகிறது. மதம் என்பது ஒரு வழிகாட்டல் தான். கடவுள் என்பது வேறு ஒருத்தர் அல்ல. நீயே கடவுள். இப்போது அல்ல. எல்லா பற்றுக்களையும் துறக்க வேண்டும். மனம் என்பது சிந்தனைகளின் ஒரு தொகுப்பு. இந்த மனம் என்கிற நிலையிலிருந்து கடக்க வேண்டும். அதற்கு நமக்கு அனேக தடைகள் இருக்கு அதவது காமம்,கோபம், குரோதம்,கெட்ட சிந்தனைகள் . இவைகளை னாம் கடக்க முயற்சிக்க வேணும். அது சாதாரணமாக நம்மால் இயலாது. இதை கடந்து ஆத்ம நிலையை அடைவதற்கு நமக்கு ஒரு வழி காட்டல் தேவைப் படுகிறது. அவ்வழிகாட்டல்களே குரு ஆகும். ஒரு குருவின் வழிகாட்டல் மூலமே நாம்மால் ஆத்ம நிலயை உணர பூரணமாக உணர முடியும். இவ்விதமான சரியான வழிகாட்டல் இல்லாதவர்களே கடவுள், மதம் என்கிற தவறான நம்பிக்கைகளை கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு சரியான வழிகாட்டல் அவசியம்.( குரு வழிகாட்டல்)
Post a Comment