விடிந்த பிறகே கண்விழித்து பார்த்தான்.வேலைக்கு போக அவசர அவசரமாய் வெளிக்கிட்டுக்கொண்டு மது...
"ஹேய் சிவப்பா நீலமா எது சொல்லு".. என்று கழுத்துப்பட்டியினைத் தூக்கி காட்ட.
தாய்ப்பால் கொடுத்துக்கொண்டு இருந்த சகி "நீலம் தான் பொருத்தம்" " நான் நெனைச்ச சொன்ன" எண்டு அவனும் அவளருகில் வந்து கன்னத்தை தடவி அவன் பிள்ளைக்குமாய்....
"போயிற்று வாறன்" என்று வெளிக்கிட்டது அந்த அழகிய முரட்டுச்சிங்கம்.
"வணக்கம் வணக்கம்" என்று சொல்லிக்கொண்டு தனது ஆசனத்தில் அமர்ந்து ஒரு சில நிமிடங்களிலே சில நாட்களாய் அடிக்கடி தொல்லைதரும் அந்த காட்டுச்சிறுக்கி
"சேர் எஸ்கியுஸ் மீ" என்று , "நீங்க லேட்டா வந்தாலும் லேட்டசாத்தான் இருக்கீங்க". "மெடம் நான் கொஞ்சம் வேலையாய் இருக்கன் வந்த விசயத்தை சொல்லலாமே........" என்று சொல்ல.. அவள் கண்ணை சுருக்கி விட்டு உதட்டை சுருக்கி இழுத்து ம்ம் என்று வந்த முனகலுடன் "ஒண்ணுமில்ல பிறகு சந்திக்கிறேன்" என்று செல்ல. எதிர்பாக்காமல் வந்த அந்த காதல் மினி சூறாவளியில் அகப்பட்ட உணர்வில் அவஸ்த்தைப்படணும் போல இருந்தது அவனுக்கு தேவையில்லாமல்.
அவளும் வெளியேற அவன் செல்போன் சிணுங்கியது வீட்டிலிருந்து அழைப்பு.
"என்னங்க சரியான நேரத்துக்கு போயிட்டீங்களா" அன்புத்தெய்வம் தனக்குள் இருப்பதை நினைவுபடுத்த... "ஓம் ஓம் நல்ல காலம்" என்றான் "என்னங்க". " இல்ல சரியான நேரத்துக்கு வந்துட்டேன் எண்டு சொன்னேன் மா"
தொலைபேசியைத் துண்டித்து அலுவலக வேலையில் இறங்கினான்.
இப்படியே அடிக்கடி காட்டுச்சிறுக்கியின் தொல்லைகளால் அவஸ்த்தைப்பட்டு.... ஒரே யோசனையில் இவன்.நான் திருமணம் முடித்தது தெரிந்தும் ஏன் இவள் கஸ்டப்படுத்துறாள். இவள்கிட்ட எத்தனை தடவை சொல்லியும் ஏன் இவள் தொடருராள். கல்லெறிந்த குளத்தின் மனதாய் இவன் மனது.
யாரிடம் சொல்லுவது யார்கிட்ட..... வேதனையை புதைக்கவும் வழிதெரியாமல், விழுங்கவும் முடியாமல் வெளியேற்றவும் முடியாத எச்சிலைப்போல அவன. இருந்தாலும் தனது நண்பனிடம் மட்டும் இதைப்பற்றி அடிக்கடி பேசிக்கொள்வான். ஆனால் நண்பன் சீரியசா எடுக்காம "அவளைப் பற்றி முறைப்பாடு பண்ணலாமே மனேஜ்சரிடம்" சீ இந்த கேவலத்தையுமா வேணாம் என்று அவன்.....
கணிணியின் வழியே கூகுல் சட் திறந்ததும் அதே காட்டுச்சிறுக்கி
"உன்னிப்பாக இருக்கிறேன்
உன்னுதடுகள்
எப்போதாவது
அதைச் சொல்லும் என்று"
அவன் " வேணாம் என்னைத் தனியா இருக்க விடு"
அவள் " உன்னழகை அழித்துவிடு. நான் போகிறேன்"
அவன் " எனக்கு பிள்ளையும் இருக்குது. நான் தவறிழைக்கமாட்டேன்"
அவள்
"ஒருமுறையேனும் நீ
உயிர் தொட்டுவிடு
உடல் பருகிவிடு,...'
அவன் அரட்டையிலிருந்து வெளியேறினான். தலைவலியில் தடுமாறினான். வலித்த தலை நொந்த மனது. தாங்கொணா கஸ்டம்.
இப்படியே சில வாரங்கள் கடந்தது...
மற்றொருநாள் அவன் அவசரமாய் சிறுநீர் கழிக்கச் செல்ல அவனை அடிக்கடி நோட்டமிடும் இன்னொருவன் காட்டுச்சிறுக்கியின் காதலன் பார்த்துக்கொண்டிருந்தான். மதுவும் பாடல்பாடிக்கொண்டு கழிப்பறைக்கு சென்று சிறுநீர் கழித்துக்கொண்டு சிப் மூடுவதற்கிடையில் தோள் தடவிய விரல்கள். பார்த்தான் அவளே தான்" ஹேய்! வேணாம் விடு விடு என்று சொல்ல" அவள் காதலன் அங்கே வர இவன் இனம் புரியா வேதனையும் அவள் இடம் மாறிய தொடுகைகளும் இவனுக்கு ஆத்திரத்தையும் ஏற்படுத்த மற்றவர்கள் பார்க்கக்கூடாதென்று அவன் அந்த வேண்டாத தீண்டல்களையும் அவள் விரக தாகங்களையும் சற்று அனுமதிக்க. தணல் மேல் புழுவானான் அந்த முரட்டுக்காளை. அந்தக்காதலன் வெளியேற இவனும் இவளை உதறித்தள்ளி "இனிமேல் என்னைத் தொடாதே போ"என்றும் இன்னும் சில வார்த்தைகளை முணுமுணுத்து வேர்த்து விருவிருத்து வெளியேறி லிப்ட்ல ஏறி போக அவசியமில்லாமல் மேலும் கீழுமாய் போய் வந்தான். லிப்ட்டும் அவன் மனது போலவே அடிக்கடி....
பாவம் அவன் பட்டபாடு....
நேர்மையின் விபரீதமா இல்லை ஆண்மையின்..................
பல கேள்விகள் கேட்டுக்கொண்டு விடைகாணா வினாவானான் அவன்.
தொடரும்.....
(இந்த கதை எழுத்து வடிவம் எனது முதல் முயற்சி ஆனால் கதை பற்றி முடிவில் சொல்கிறேன். உங்கள் கருத்துக்களை வேண்டி நிற்கிறேன். )
8 comments:
மறுபடியும் காட்டுச்சிறுக்கியா?
கதை முழுவதும் முடிந்ததும் கருத்தைச் சொல்கிறேனே, இப்போது வேண்டாம் :)
Subankan said...
///மறுபடியும் காட்டுச்சிறுக்கியா?///
என்ன பண்ணுறது... ஆனா இங்கு மதுவும் இருக்கிறாரே
//கதை முழுவதும் முடிந்ததும் கருத்தைச் சொல்கிறேனே, இப்போது வேண்டாம் :)//
வேண்டுமே கருத்து முன்னேற வேண்டும் தவறுகள் சுட்டிக்காட்டணும்
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
ஆங்.. விறுவிறுப்பா போகுது அடுத்ததுக்கு வெயிட்டிங்....
ம்ம்ம்...இப்பத்தானே காட்டுச்சிறுக்கி வந்திருக்கிறாள்.தொடருங்கோ றமேஸ்.பாத்திடலாம் ஆண்களின் உறுதியை !
@ Bavan said...
///ஆங்.. விறுவிறுப்பா போகுது அடுத்ததுக்கு வெயிட்டிங்....////
ஓஓ வரும் வரும்
நன்றி
@ஹேமா said...
///ம்ம்ம்...இப்பத்தானே காட்டுச்சிறுக்கி வந்திருக்கிறாள்.தொடருங்கோ றமேஸ்.பாத்திடலாம் ஆண்களின் உறுதியை !///
தொடருவேன்
ம்ம் பார்த்திடலாமே..
நன்றி ஹேமா
முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள்! கதை கொஞ்சம் மெதுவாக நகர்ந்து செல்கிறது என்று நினைக்கிறேன். மற்றும் படி மர்மக் கதை வடிவில் கதையினை நகர்த்திச் செல்கிறீர்கள். வாழ்த்துக்கள் தோழா!
@தமிழ் மதுரம் said...
///முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள்! கதை கொஞ்சம் மெதுவாக நகர்ந்து செல்கிறது என்று நினைக்கிறேன். மற்றும் படி மர்மக் கதை வடிவில் கதையினை நகர்த்திச் செல்கிறீர்கள். வாழ்த்துக்கள் தோழா////
நன்றி
Post a Comment