Pages

Wednesday, September 15, 2010

இது ஸ்டேடஸ் - 03

"பல கரைகளில் ஒதுங்கிய போதுதான்
தெரிகிறது ஆழங்கள்"
- அனுபவம்-

"எழுத்துக்களாலே உங்களைப் பார்க்க முடிகிறது
என்னையும் எழுதிக்கொண்டு"

"சில சோகங்களை மறக்க தனிமை என்ற நிலைமை மட்டும் போதும்
எனக்கு
சில்லறையான சிந்தனைகளை பெற்று தெளிவாக
நானும்
என்னுடன் என்றும்"

"உன்னில் அக்கறை கொள்ளாமல் இருக்க தனியா வாழவில்லை.
சமூகவலைப்பின்னலில் இருக்கிறேன்.
புரிஞ்சுகொள்.
விழுவதை வேடிக்கை பார்க்க விரும்பவில்லை"

"இப்பதான் வந்தேன்னு சொல்லறது அப்பவே வந்துட்டேன்னு அர்த்தம்
தடுமாறும் போது"

"என்னைத்திருத்த
முடியாது நானாக திருந்தும் வரை.
நான் இன்னும்
குறையாகவும் வெறுமையாகவும்
இருக்கிறேன்
வாழ்க்கையைப்பற்றி தேறிக்கொள்ளாமல்"

"ஒவ்வொரு பிரிவுகளின் போதே
உன்னைக் கண்டுபிடிக்க முடிகிறது
என்னையும் சேர்த்து.....
மறந்துவிடு என்பதை விட்டுவிட்டு
மன்னித்துவிடு"

"வினாயர் சதுர்த்தி!
'அம்மா கோயிலில்!
நான் அம்மாவுக்காக காத்திருப்பு
விரதம் நான் தானே நோக்குகிறேன்"

ஊரிலிருந்து ஒரு படம் மழை நனைக்க முன்



கடைசியாக:
"என்னைச் சந்திக்கும் பொழுதுகளில் பரிசு கொடுப்பதற்குப் பதிலாக நல்ல புத்தகத்தைக் கொடுங்கள். தேடல்களில் திழைத்திருப்பதையே விரும்புகிறேன்"

10 comments:

மதுரை சரவணன் said...

//"என்னைச் சந்திக்கும் பொழுதுகளில் பரிசு கொடுப்பதற்குப் பதிலாக நல்ல புத்தகத்தைக் கொடுங்கள். தேடல்களில் திழைத்திருப்பதையே விரும்புகிறேன்" //

அருமையான பகிர்வு. மதுரை சந்திப்புகளில் நாங்கள் புத்தகங்களையே பரிசாகத் தருகிறோம். பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

anuthinan said...

//"என்னைத்திருத்த
முடியாது நானாக திருந்தும் வரை.
நான் இன்னும்
குறையாகவும் வெறுமையாகவும்
இருக்கிறேன்
வாழ்க்கையைப்பற்றி தேறிக்கொள்ளாமல்"//

பிடித்து இருக்கிறது உங்கள் STATUS

ம.தி.சுதா said...

ஃஃஃ..."இப்பதான் வந்தேன்னு சொல்லறது அப்பவே வந்துட்டேன்னு அர்த்தம்
தடுமாறும் போது"...ஃஃஃ குழப்பாமல் குழப்பியிருக்கிறிர்கள் சகோதரா... வாழ்த்துக்கள்..

Chitra said...

"என்னைத்திருத்த
முடியாது நானாக திருந்தும் வரை.
நான் இன்னும்
குறையாகவும் வெறுமையாகவும்
இருக்கிறேன்
வாழ்க்கையைப்பற்றி தேறிக்கொள்ளாமல்"


.....அருமை.

Jana said...

//"என்னைச் சந்திக்கும் பொழுதுகளில் பரிசு கொடுப்பதற்குப் பதிலாக நல்ல புத்தகத்தைக் கொடுங்கள். தேடல்களில் திழைத்திருப்பதையே விரும்புகிறேன்" //

இதைநான் கொள்கையாகவே வைத்திருக்கின்றேன்.

Bavan said...

//"என்னைச் சந்திக்கும் பொழுதுகளில் பரிசு கொடுப்பதற்குப் பதிலாக நல்ல புத்தகத்தைக் கொடுங்கள். தேடல்களில் திழைத்திருப்பதையே விரும்புகிறேன்" //

எனக்குந்தான்.. புத்தகத்தையே கொடுங்கப்பா..:D

ஹேமா said...

அனுபவக் குறிப்புப்போல அத்தனையும் மனதில் படிகிறது றமேஸ் !

க.பாலாசி said...

எல்லாம் நல்லாயிருக்குங்க...

//"ஒவ்வொரு பிரிவுகளின் போதே
உன்னைக் கண்டுபிடிக்க முடிகிறது
என்னையும் சேர்த்து.....
மறந்துவிடு என்பதை விட்டுவிட்டு
மன்னித்துவிடு"//

இது டாப்பு...

Ramesh said...

@மதுரை சரவணன் said...
நன்றி சரவணன்
மதுரைக்கு வரும்போது வாங்கிக்கிறேன்

@Anuthinan S said...
நன்றி அனு

@ம.தி.சுதா said...
தெளிவாக குளப்பியிருக்கேனா

@Chitra said...
நன்றி சித்ரா

@Jana said...
நன்றி அண்ணே
நான் வரணும்

@Bavan said...
வாரேன் வரும் போது தாரேன் டா

@ஹேமா said...
நன்றி ஹேமா

Ramesh said...

@க.பாலாசி said...
நன்றி அண்ணே
வருகைக்கும் சேர்த்து

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு