Pages

Wednesday, February 10, 2010

இன்னொரு தந்தைக்கு....

எனது இரத்தத்தின்
சிவப்பணுக்களில்
பாசத்தின்
வெள்ளையணுக்கள்
புதிசாய்
முளைத்திருக்கின்றன....

உன் பாசத்தின்
விழுதுகள்
இநதப் பாமரன் மீது
விழுந்திருக்கின்றன...

நீதான்
வானம்பாடியாச்சே...

என்வானத்தில்
இன்னொரு "சூரியன்"
நீ..
அதுதான்
உறக்கம் கொள்ளாமல்
எனக்காக
நான் கண்ணயரும்வரை
கணணி முன்
நீ

கணணித்திரையில்
கண்ணாடியில் நிழல்படம்
மனசுக்குள் நிஜமாய்
எப்போதும்

வாழ்க்கைப் பயணத்தில்
நீயும்
என் தந்தையே....
உறவுகளின்
நீளம் பார்க்கிறேன்
வானம் பாடி....

15 comments:

ஈரோடு கதிர் said...

சித்தப்பூ....

நல்லாயிருங்க சித்தப்பூ...

ஆனா... ஏதாவது எழுதுங்க சித்தப்பூ...

vasu balaji said...

மிக நெகிழ்ச்சியாக உணர்கிறேன் றமேஸ். பெரிய பகுமானம் இது.

vasu balaji said...

/ ஈரோடு கதிர் said...

சித்தப்பூ....

நல்லாயிருங்க சித்தப்பூ...

ஆனா... ஏதாவது எழுதுங்க சித்தப்பூ.../

ம்கும். எழுதுரோம் எழுதுரோம் யூத் கால நினைவுகளாம்:)

நிலாமதி said...

உங்கள் பதிவுகள் மேலும்மேலும் வரவேண்டும்......

Chitra said...

பாலா சாருக்கு, இந்த கவிதை மூலமாக மலர் மாலை சூட்டி உள்ளீர்கள். அருமை. பாலா சாருக்கும் வாழ்த்துக்கள்.

Ramesh said...

ஈரோடு கதிர் said...
////
சித்தப்பூ....நல்லாயிருங்க சித்தப்பூ...
ஆனா... ஏதாவது எழுதுங்க சித்தப்பூ...
////
வாங்க கதிர் அண்ணே
நன்றி முதல் வருகைக்கு

Ramesh said...

வானம்பாடிகள் said...

///
மிக நெகிழ்ச்சியாக உணர்கிறேன் றமேஸ். பெரிய பகுமானம் இது.
///

நன்றி ஐயா

///ம்கும். எழுதுரோம் எழுதுரோம் யூத் கால நினைவுகளாம்:)
///
ம்ம்ம் அப்போ கலக்கல் இருக்கு

Ramesh said...

நிலாமதி said...

///உங்கள் பதிவுகள் மேலும்மேலும் வரவேண்டும்......
///
நன்றி நிலாமதி முதல் வருகை தொடர்ந்திருங்கள்

Ramesh said...

Chitra said...

///
பாலா சாருக்கு, இந்த கவிதை மூலமாக மலர் மாலை சூட்டி உள்ளீர்கள். அருமை. பாலா சாருக்கும் வாழ்த்துக்கள்.
///
நன்றி சித்ரா
ம்ம் உள்ளக்கிடக்கையின் ஊற்று இது

balavasakan said...

வானம்பாடி சார் எத்தனை பேர் மனதை கொள்ளை கொண்டிருக்கிறார் வாழ்க பாலா சார் வழர்க அவர் தம் புகழ்...

Ramesh said...

Balavasakan said..
///வானம்பாடி சார் எத்தனை பேர் மனதை கொள்ளை கொண்டிருக்கிறார் வாழ்க பாலா சார் வழர்க அவர் தம் புகழ்...
///
வாங்க பாலா ம்ம்ம உண்மைதான் அதான் இங்கே வந்தது வாழ்க வானம்பாடி

Kala said...

இன்னொருவரை வாழ்த்தும்
மனதுக்கு மிக்க நன்றி ரமேஸ்

Ramesh said...

Kala said...
///
இன்னொருவரை வாழ்த்தும்
மனதுக்கு மிக்க நன்றி ரமேஸ்
///
வாங்க கலா வாழ்த்துவோம் இது கூட செய்யாவிட்டால் நாம் எதுக்கு?? வாழும் போதே வாழ்த்தவேண்டும் இல்லையா

கலகலப்ரியா said...

நெகிழ்வு... அருமை...

Ramesh said...

கலகலப்ரியா said...
///
நெகிழ்வு... அருமை...
///
வாங்க அம்மா வாங்க அப்பாதான் உங்களை அறிமுகம் செய்தார் எனக்கு நன்றிம்மா..

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு