Pages

Wednesday, February 24, 2010

பயணங்கள் முடிவதில்ல........

ஆகா என்ன திரைப்பட விமர்சனம் எண்டு நெனச்சயல் எண்டா தப்பு....

பயணம் - 1


கடந்த வியாழக்கிழமை இரவு பஸ் வண்டிக்கு கை அசைக்க... " எங்க போக.." "கொழும்புக்கு.."... "ஆ...ஏறுங்க.." அப்பாடா ஏறியாச்சு.. "டிக்கட்.." நான் புக் பண்ணிருக்கன்".... "ஓ..ச்சே.புக்கிங்கா எங்கட அடுத்த பஸ்ல ஏறணும்".. " ஐயா சாமி நம்மட்ட இதை முதல்ல யாரும் சொல்லலியே".."பரவால்ல செக்கிங் சந்தியில மாறலாம் வாங்க.." "என்ன செக்கிங்கா.. இப்ப அவங்க இருக்காங்களோ..(மைண்ட் வொய்ஸ்)..

இரண்டு பஸ்களும் சந்தித்த ஒரு சாப்பாட்டுக்கடையில் நான் ஏறவேண்டியதில் ஏறிட்டன் ஒரு மாதிரியா கொழும்பு நோக்கி நிம்மதிப் பயணம்??? மீண்டும் மைண்ட் வொய்ஸ் "எங்க அந்த முடிச்சவுக்கி இருக்கானோ...."

அடுத்த நாள் இடம்தேடி அலையவேண்டுமே எண்டு வெள்ளிக்கிழமையே போய் பார்ப்போம் எண்டு 101 பஸ்ல ஏறிட்டன் எதுக்கும் முன்னாடியே பங்குசந்தை அச்சுகிட்ட எங்க இறங்கணும் எண்டு கேட்டதால தம்பி சொன்ன இடத்தில இறங்கிட்டு சுற்றும் முற்றும் பார்த்தன் காணல. மீண்டும் ப.ச.அச்சுக்கு கோல் பண்ண "இன்னும் கொஞ்சம் நடங்க ..." "ஓஓஓ கண்டுட்டன்....." "நான் கொஞ்சம் பிசி பிறகு மீற் பண்ணுறன்".. "ஓகெ.." எண்டு கட்பண்ணிட்டன்.

பிறகு நம்ம போன் சொவ்ட்வெயர் மாத்தணும் எண்டு பசுப்பொடியன் கிட்ட " ஹலோ நான் றமேஸ்..." "நான் உங்களை மீற் பண்ணுறன் நீங்க எங்க இருப்பீங்க" "வேறங்க யுனிட்டி பிளாசா...எம்.சி..". "ஓகெ.... "
காதுக்குள் பாட்டுக் கேட்டுக்கிட்டு போனைப்பார்த்துகிட்டு வர "... ஓ சொரி" "இற்ஸ் ஓகே"... (முன்னால முட்டிக்கிட்டாரு 'மெள')
ஐஸ்கிரீம் தந்து நம்ம ஊர் பக்கம் வந்த கதைய சொல்லாமல் சொல்லிமுடிச்சாரு.. "நாளை சந்தி்போம்.." (பயணங்கள் முடிவதில்ல.........)
சந்திப்பு தித்திப்பு

பயணம் 2
பரீட்சை பரீட்சை எண்டு ம்ம்ம் ஏழு கழுதையின் வயது நமக்கு இன்னும் பரீட்சை எழுதிக்கிட்டு.... (ஒரு கழுதையின்ர வயது 03)
அது பரீட்சைப்பயணம்.....முடிவதில்ல........

பயணம் 3
ம்ம்ம பரீட்சை முடிஞ்சு... நம்ம பிரண்ட் ஜெயதீபன் "டேய் மது கோல் பண்ணிட்டு உன்ன சந்திக்கணுமாம்..." ஓகே நான் கோல் பண்ணுறன்.. "மது நான் மீண்டும் றமேஸ்..". "நீங்க எப்ப போறீங்க எதுல போறீங்க"... "இண்டைக்கு எதுல எண்டு முடிவாகல அனெகமாக ரெயின்".."அப்போ 5 மணிக்கு நம்ம பதிவர்களைச்சந்திப்போமா".." ஓ அதுக்கென்ன ஆனா கொஞ்சம் முந்திப்போடலாமே 4 மணிக்கு".." லோஷண்ணா 5 மணிக்குத்தான் வருவார்".."அப்போ பிளான் பண்ணிட்டேயலா"(என்னத்தை மொக்க போடவோ மீண்டும் மைண்ட் வொயி்ஸ்.. ஏனெண்டா நாம இலங்கைப்பதிவாச்சே... இதுவும் 'மெள'தான் சொன்னது)

5மணிக்கு முன்னாடியே நானும் நம்ளோட வந்த பிரண்டு ஜெயதீபனும் போயிட்டோம்... எதிரே.. "கன"கோபியும் சுபாங்கனும்முந்தி வந்து (உஉண்டி...ல் தேடிக்கொண்டு..... தேட் புளோர்ல....)

பிறகு சந்திப்பு
நிங்க தானே " ஹாய்" "ஹாய்" கைலாகு கொடுத்து ஐஸ்கிரீம் பார்டிக்கு போனோம். பிறகு பிரபலங்கள் வருகை மீண்டும் "ஹாய்" லோஷன் மீசைய முறுக்கிகிட்டு "மது கிட்ட நான் கேட்டன் தேற்றாத்தீவு றமேஸ் ஆஆ எண்டு மது இல்ல இலல் சிதறல்கள் றமேஸ் எண்டு சொல்ல" 'ரெண்டும் ஒரே நான் தான் ஐயா'

அதுக்குள்ள கிரிக்கட் ஸ்கோர் கோபிசொல்ல எல்லாரும் கேட்டுக்கொள்ள... ஐஸ்கிரீம் வந்ததும் கன்னக்குழியான் உடம்புக்கேற்ற பெரிய பினனூட்டலில் பின்னும் கங்கோனின் ஐஸ்கிரிம் இலவசமாக ஜிம்முக்கு போய் சற்று தொப்பையைக்குறைக்கும் லோசஷனால் மறைத்து பிறகு கோபி அழுதுவிட....வழமையாக "ஏற்பாடு"களில் பின்னும் மது 'ஐஸ்'ஏற்பாடு செய்துகிட்டு .... வலைப்பதிவுகளில் இப்போது சற்று மொக்கை போடுவதை விட்டு பதிவெழுதப்போறன் எண்டு மது சிரிச்சி சிரிச்சு சொல்ல..
ஏதாவது பேசினா கும்மிடுவாங்க எண்டு பங்கு சந்தை அச்சும் பால்குடியும் சுபானுவும் மெளனம் பேச... மலேசிய ஆட்டிஸ்ட் அடிக்கடி வழமைபோலவே *டூமீல்* டூமீல்*.... இங்க வந்தும் அரசியலில் சள்ளுப்போட்டுக்கொண்டு ஆதிரை அண்ண (வயசு எண்டு விட்டுடோம்)ஹாய் மட்டும் சொன்ன அனுதினன்...அகசியம் எண்டா என்ன எண்டு ரிப்பீட்டு பண்ணிய வரோநானும் வரோவும் ஒரே மாதத்தில் பதிவுலகத்தில் வந்தோம் எண்டு பதிவுறவை நினைத்து பெருமூச்செறிய... நான் ரெயினுக்கு கிளம்ப வேண்டி வெளிக்கிட...

நன்றி ஏற்பாட்டு மது மற்றும் அனைவருக்கும்
்்்ம்்ம்ம்ம்ம்ம்்்்்்்்
பதிவர் சகோதர சந்திப்பு பயணங்கள் முடிவதில்ல....
சில படங்கள்..
ஆதிரை + மது(பிறைட் கலர் தான் பிடிக்குமாம்)
 சுபாங்கன்,கோபி, புல்லட்
 

  

  
சுபானு, ப.ச.அச்சு, பால்குடி
  
  

  
நான், தீபன் ,வரோ
  
மலேசிய ஆட்டிஸ்ட்
 

Saturday, February 13, 2010

அவன் + அவள் + காதல்

அவன்:

காதல்
அவள் மனதில்
கர்ப்பம் தரிக்க
மறுத்துவிட்டது

இல்லை

என் காதல்
கருக்கலைப்பு
அவள் காதல்
கருப்பையில்

அவள்:

கண்ணால்
கவிதையால்
கனவாய்
காதல் தந்த காதலா
கற்பனையாய் மட்டும்
ஆகிவிட்டாய்

காதல்
அனாதையானது
கண்ணீர் மட்டும்
என்னைக்
கட்டிக்கொண்டது

காதல்:

என்னைக்
கட்டிக்கொள்ளுங்கள்
கடைசிவரை
காப்பாற்றிக்கொள்ளுங்கள்
என்னையல்ல
உங்கள்
மகுடம் கலையாமல்
பார்த்துக்கொள்ளுங்கள்

காகிதத்திலும்
கல்லறையிலும் மட்டும்
நான்
இன்னும்....

Wednesday, February 10, 2010

இன்னொரு தந்தைக்கு....

எனது இரத்தத்தின்
சிவப்பணுக்களில்
பாசத்தின்
வெள்ளையணுக்கள்
புதிசாய்
முளைத்திருக்கின்றன....

உன் பாசத்தின்
விழுதுகள்
இநதப் பாமரன் மீது
விழுந்திருக்கின்றன...

நீதான்
வானம்பாடியாச்சே...

என்வானத்தில்
இன்னொரு "சூரியன்"
நீ..
அதுதான்
உறக்கம் கொள்ளாமல்
எனக்காக
நான் கண்ணயரும்வரை
கணணி முன்
நீ

கணணித்திரையில்
கண்ணாடியில் நிழல்படம்
மனசுக்குள் நிஜமாய்
எப்போதும்

வாழ்க்கைப் பயணத்தில்
நீயும்
என் தந்தையே....
உறவுகளின்
நீளம் பார்க்கிறேன்
வானம் பாடி....

சீதேவித் தொழில் வெற்றிலைச் செய்கை

ஹாஹாஹா... என்ன தலைப்பு எண்டு குமுற வேண்டாம். இது நம்ம பிரதேச மக்களின் ஆண்டாண்டு காலமாக செய்கை பண்ணப்பட்டு வரும் பிரதான வாழ்வாதார தொழில் இந்த வெற்றிலை (வெத்தில எண்டு ஊர் வழக்கில் சொல்லுவர்)செய்கை.
மண்ணை இடமாற்றி மிக இலகுவாக செய்யப்படும் இத்தொழில் மிக கவனமாக கண்காணிக்கப்பட வேண்டியதொன்றாக உள்ளது. வெற்றிலைத்தோட்டம் (Betel Garden) என்றே அழைப்பர்.
வெற்றிலை பல மருத்துவத்துக்கு உதவக்கூடியது ஆனாலும் இது பெரும்பாலும் மெல்லப்படுதலுக்கே (chewing betel) பயன்படுகிறது. ஆனாலும் திருமண வைபவங்கள் கோயில் நிகழ்வுகளில் பிரதான இடம் வகிக்கிறது.
இதன் மருத்துவ பயன்கள் பற்றி நம்ம சங்கவி தனது பதிவிட்டிருக்கிறார். பாருங்க வெற்றிலையின் மகத்துவம்

இந்த வெற்றிலை நம்ம ஊரில் எப்படி செய்கை பண்ணப்டுவது என்று பாருங்க.
இவ்வாறு கொடி படருவதற்கு கம்புகள் வரிசைக்கிரமமாக நடப்படும் இக்கம்புகளினருகில் வெற்றிலைக்கொடி(வெற்றிலைக் கொழுந்து) வரிசைக்கிரமமாக நடப்படும் . நிரல் வரிசை "சீத்து" என்று அழைக்கப்படும். இரண்டு கம்பு வரிசைகளுக்கிடையில் "புருவம்"  என்று சொல்லுவர். இரண்டு சீத்துக்களுக்கிடைப்பட்ட வாய்க்கால் இதனை "மூட்டான்" என்றழைப்பர். 
 சற்று வளர்ச்சியுற்ற கொடி நாற்றுப்பருவம் பாருங்க...
பின்னர் வளர்ச்சியுறும் போது ஆரிக்கை கொண்டு கம்போடு சேர்த்து வெற்றிலைக்கொழுந்து  (வெற்றிலைக் கொடி) கட்டப்படும்.இதன்போது வெற்றிலையின் பற்றுவேர்கள் கம்பினைப் பற்றிக்கொண்டு வளரும். வளர்ந்த வெற்றிலை தோட்டம் பாருங்க..( ஆரிக்கை என்பது தென்னங்குருத்து என்று சொல்லப்படும் இளம் ஓலையினைக் வெயிலில் காயவைத்து நார்நாராக கிழித்து எடுக்கப்படும் நார்) ஒரு இசைப்பட்டதாரி நீர் பாச்சுகிறார் பாருங்க நம்ம நண்பன்தான்
இதன் குறிப்பிட்ட 12-20 நாட்களின் இடைவெளியில் அறுவடை அதாவது வெற்றிலை பறிக்கப்படும். இது கீழிருந்து மேல்நோக்கி மூன்று அல்லது நான்கு வெற்றிலைகள் கைகளினால் பறிக்கப்படும். பின்னர் இது வளர்ச்சியுற்று கொழுந்து கம்புகளின் உச்சியை அடையும் போது இதனை "அலம்பல்" என்று கூறப்படும் அதாவது கிளைவிட்ட மேலுள்ள கம்புகளில் கொழுந்து படர்வதைக் குறிப்பர். இதன் பின்னர் இக்கொழுந்து கீழ் இறக்கப்பட்டு பதிக்கப்படும். அதாவது மண்ணினுள் வெற்றிலைக்கொடி சுருட்டப்பட்டு மண் போடப்பட்டு மீண்டும் சிறிய உயரத்துக்கு கொழுந்து கம்போடு கட்டப்பட்டு மீண்டும் வளர்க்கப்படும். காட்சிகள்............
ஆரிக்கை
அலம்பலில் கொழுந்து
அலம்பலில் இருந்து கொழுந்து இறக்கப்படுகிறது....
இறக்கப்பட்ட கொழுந்து மீள கம்புடன் கட்டப்படுதலும் கொடி மண்ணுக்குள் மறைக்கப்படலும்


நீர் ஊற்றி வளர்க்கப்படும் வெற்றிலைக் கொழுந்து இரசாயனப் பசளைகளை ஏற்றுக்கொள்வதில்லை. இதனால் மாட்டெரு மூலம் இயற்கைப்பசளையையே இடப்படுவதால் வெற்றிலைத்தோட்டச் சொந்தக்காரர்கள் ஒவ்வொருவரும் மாட்டுக்கொட்டில்களில் மாடுகள் வளர்த்து இதிலிருந்து மாட்டெருவும் மண்ணடன் சேர்த்து தோட்டத்துக்கு இட்டு கொழுந்து வளர்க்கப்படும். இது நீர் வெற்றிலை என்பதால் தினமும் தோட்டத்துக்கு நீர் ஊற்றப்பட வேண்டும்.

மாட்டுக்டுகொட்டில் மாட்டெரு உற்பத்தி
ம்ம்ம்..........
இதுதான் நம்ம வெற்றிலைச்செய்கை. எமது கிராமத்தவர்களின் பிரதான தொழில்களில் இதுவும் ஒன்று. இத்தொழிலாலே எனது குடும்பப் பொருளாதாரப்பாரம் தாங்கப்படுகிறது. பாருங்க நம்ம அப்பாவும் மாமாவும் தோட்டத்தில் சாப்பிடுறாங்க
வேலைகளுக்கிடையில் இளைப்பாறும் உறவுகள்........
வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு