இது அர்த்தமுள்ள இந்துமதத்தின் ஒலி வடிவம் கேளுங்கள். யுரியுப்பிலிருந்து
பகுதி 1
பகுதி 2
Showing posts with label இந்துசமயம். Show all posts
Showing posts with label இந்துசமயம். Show all posts
Wednesday, April 14, 2010
Saturday, January 2, 2010
2010 ஆம் ஆண்டின் திருவாசக முற்றோதல்
இவ்வாண்டுக்கான எனது முதல் பதிவு... இது நம்ம ஊரின் நிகழ்வுப்பதிவு. புது வருடத்தின் முதல்நாள் கோயிலிலே கழிந்தது மனதுக்குத் திருப்தியாக இருந்தது.
எம்பெருமான் சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பே நம்ம சமய குரவர் மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம். பன்னிரு சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது (எட்டாம் திருமுறையில்தான் திருவாசகமும் திருக்கோவையாரும் இருக்கின்றன).
"திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்" என்பது ஆன்றோர் வாக்கு.மனதை உருக்கும் பக்திச் சுவை தனைக்கொண்ட திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 656 பாடல்கள் அடங்கியுள்ளன.
இச்சிறப்புப் பொருந்திய திருவாசகத்தினை எமது கிராமத்தின் இந்து இளைஞர் மன்றத்தினர் தேற்றாத்தீவு ஸ்ரீமத் தந்திரதேவா தபோவனத்துடன் இணைந்து "திருவாசக முற்றோதல்" நிகழ்வை தேற்றாத்தீவு ஸ்ரீ படபத்திர காளி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடத்தினர்.
காலை 8.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வு மாலை 6.00 மணியளவில் நிறைவுற்றது.
இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக நம்ம ஊரின் மைந்தன் பல பிரதேசங்களில் சைவத்தொண்டுகளை ஆற்றும் திரு.பரதன் கந்தசாமி அவர்கள் கலந்துகொண்டு பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வுக்கு வருகை தந்த சைவப்பழம் திருமதி. மாரிமுத்து தியாகராசா அம்மையார் வரவேற்கப்படும் போது...திருவாசகம் முற்றோதல்....
ஆசியுரை தேற்றாத்தீவு ஸ்ரீ படபத்திர காளி அம்மன் ஆலயத்தின் பிரதமகுரு ஸ்ரீ ரவிஜி ஐயா அவர்கள் வழங்கினார். அவர் தமது கருத்துரையில் "தேற்றாத்தீவு கிராம மக்களின் குழந்தைகள் கருவுற்றிருக்கும் போதே இசைஞானமும் சமயப்பற்றும் நிறைந்தவர்களாக இருப்பார்கள் என்பது தெட்டத்தெளிவாக அவர்களின் சமய பஜனை நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன" என்று சொன்னது நம் மனதை நெகிழ்வுபடுத்தியது.
தொடந்து நம்மவர்கள் கருத்துரை வழங்கிய பின் திரு.பரதன் கந்தசாமி அவர்கள் எமது மூத்த சமயப்பற்றாளர்களால் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்.அதில் அவர் "எத்தனையோ இடங்கள் சென்று பாராட்டுக்களை பெற்றதைவிட எனது ஊரில் இப்படியான சிறப்பான நிகழ்வொன்றில் கிடைத்த இந்தப்பாராட்டும் வைபவம் எனது வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்ச்சி எனவும் தனது சேவை எங்குற்றாலும் எமது ஊரின் சைவச்சிறப்பை எடுத்துரைப்பதில் பின்னிற்பதில்லை" என்றபோது ஒவ்வொருவர் மனதிலும் நன்றி சொல்லத் தோன்றியது. தொடர்ந்து அவர் தான் சைவப்பணிக்காக தனது சேவையை கொண்டுசெல்ல கல்முனை நகரில் "நால்வர் கோட்டம்" என்று ஆரம்பித்திருப்பதாகவும் அங்கு பல சைவ சமய நிகழ்வுகளும் இடம்பெறுவாதாகவும் இங்கு கட்டாயம் நமது கிராமமக்கள் வரவேண்டும் என்றும் சைவசமயத்துக்காக தன்னை அர்ப்பணிப்தாகவும் சொன்ன இவர், திருவாசகம் பற்றியோ சமயத்தின் சிறப்பு பற்றியோ சொல்வது தேற்றாத்தீவு மக்களுக்கு திரும்பத்திரும்பச் சொல்வது போலாகும் என்று எமது சமயச்சிறப்பை சில வரிகளிலே சிறப்பாகச் சொல்லி முடிக்க, நன்றியுரையை காயத்திரி சோதிடர் திரு.கு.தவராசா அவர்கள் வழங்கினார். பின்னர் அன்னதானம் வழங்கப்பட மதிய நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
தொடர்ந்து திருவாசகம் முற்றாக ஓதப்பட்டு மாலை 6.00 மணியளவில் சிறப்புப் பூசையுடன் திருவாசகம் முற்றோதல் நிறைவுற்றது.
நிகழ்வுகளின் நிழல்படங்கள்
Labels:
இந்துசமயம்,
கோயில்,
தேனூர்
Wednesday, December 30, 2009
இது அறநெறி பரிசளிப்பு விழா..
இந்து சமயப் பண்பாடுகளை தடம் மாறாமல் இருக்க நல்ல கருத்துக்கள், சமய வழிகாட்டல்கள் மூலம் பிள்ளைகளின் ஒழுக்க விழுமியங்களுக்காக நம்ம ஊரில் அறநெறி வகுப்புக்கள் நடைபெறுவது வழக்கம். சமய சொற்பொழிவுகள், தேவாரப்பண்ணிசை, கோலம் போடுதல், இந்து சமய விழுமியங்கள் போன்றவற்றில் திறமை காட்டிய மாணவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வு கடந்த 27-12-2009 ஞாயிற்றுக்கிழமை எமது தேற்றாத்தீவு மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக ஸ்ரீமத் தந்திரதேவா தபோவன ஆலோசகர் ஸ்ரீ ரவிஜீ ஐயா அவர்கள் கலந்துகொண்டார்.
நிகழ்வு இதுதான்:ஆரம்பம் சுனாமிப் பேரலையில் அகப்பட்டு மாய்ந்த அனைத்து உயிர்களின் ஆத்மா சாந்திக்காக ஒரு நிமிட மெளன அஞ்சலி
தலைமையுரை அறிநெறிப்பாடசாலை அதிபர் திரு.சோ. கணபதிப்பிள்ளை அவர்கள்
பிரதம விருந்தினர் ஸ்ரீ ரவிஜீ ஐயா அவர்களின் ஆசியுரை
பரிசளிப்பு நிகழ்வும் பிள்ளைகளும்
வாழ்த்துக்கள் பிள்ளைகளே...
இவ் அறநெறி வகுப்புக்களை மிகச் சிரமத்திலும் ஒழுங்காக நாடாத்தி வரும் அதிபர் அவர்களுக்கும் அனைத்து ஆசிரிய உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
உங்கள் சேவை தொடர எல்லாம் வல்ல எம்பெருமானை வேண்டி நிற்கிறோம்
Labels:
இந்துசமயம்,
தேனூர்
Friday, December 18, 2009
ஒரு அஞ்சலியுடன் மறுமலர்ச்சிகாக இந்தத் தபோவனம்
சகோதரர்களே!
சொல்ல வந்த விடயம் மறந்துபோகும்...
மரநடுகையில் சில காட்சிகள்
விபுலாநந்தா இந்து கலாச்சார பொதுப்பணிமன்றத் தலைவர் திரு.சோ. கணபதிப்பிள்ளை அவர்கள் மங்களவிளக்கேற்றும்போது
திரு.ச.இன்பராஜன் அவர்கள் தேவாரப்பாராயணம் செய்யும்போது
ஸ்ரீ படபத்திரகாளி அம்மன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ரவிஜீ அவர்கள் நல்லாசி வழங்கும்போது
தொடர்ந்து இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட இந்துப்பேரவைத் தலைவர் திரு.சீ.யோகேஸ்வரன் ஐயா அவர்கள் சிறப்புரையை வழங்கினார்.
இவரின் சில சில்லறைகளில்.........
நிகழ்வுகளின் சில படங்கள்
வேக நடைபோடும் இந்த உலகத்தின் மனதுக்கு அமைதி வேண்டி எத்தனை எத்தனை பிராத்தனைகள். கஸ்டம் வரும்போதே மனிதன் கடவுளை நாடுவான். இதற்கு மாறாக சில பிதற்றல்களுடன் நடைபெறும் மதமாற்றங்களும் பொருளாதார இன்னல்களுக்கு உள்ளாகும் வறிய குடும்பங்களின் உரிமை மீறல்களும் வழக்கிலுள்ளது. இம்மதமாற்றங்கள் ஒரு மனிதனது தற்றுணிவின்மையை எடுத்துகாட்டுகிறது அதேபோல் தம்மைத் தாமே விற்றுக்கொள்வதாகிறது.ஆனாலும் இங்கு ஒரு மகானின் ஆத்ம திருப்பதியின் அஞ்சலிகாக ஒரு தபோவனம் உருவாகுகிறது.
நிற்க.சொல்ல வந்த விடயம் மறந்துபோகும்...
பாரம்பரிய இந்து - தமிழ் சமய கலாச்சார விழுமியங்களைக் கட்டிக்காக்கும் நம்ம ஊரில் மற்றொரு மலர்ச்சி இது, வேறொன்றுமில்லை. ஆனால் இதுவே இக்காலத்தில் எவ்லோருக்கும் வேண்டியதொன்றாகிறது.. இதுதான் "ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா தபோவனம்".
ஆம், தேற்றாத்தீவு இந்து இளைஞர் மன்றத்தின் முழு முயற்சியில் அழகிய தேற்றாத்தீவுக் கடற்கரையோரத்தில் வீற்றறிருக்கும் ஸ்ரீ படபத்திரகாளி அம்மன் ஆலயத்தினருகாமையில் இத்தபோவனம் தோற்றம் பெற்றுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு தேற்றாத்தீவு தெற்கு - 02 பல்தேவைக்கட்டடத்தில் நேற்று 17-12-2009 ஆந்திகதி வியாழக்கிழமை இந்து இளைஞர் மன்ற செயலாளர் திரு.த.விமலானந்தராஜா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நாள்கோள் நற்பலனுக்கேற்ப தென்னை மரநடுகை செயற்றிட்டம் கால்கோளிட அதற்குரிய நிலப்பகுதி இயந்திரங்கள் கொண்டு மண் சமப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்க மறுபுறத்தில் சம்பிரதாய நிகழ்வு ஒன்றுகூடலானது.
மரநடுகையில் சில காட்சிகள்
ஸ்ரீ படபத்திரகாளி அம்மன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ரவிஜீ அவர்களின் நல்லாசியுடனும், தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடனும் திரு.ச.இன்பராஜன் அவர்களின் இனிய பஞ்சதோத்திர கடவுள் வணக்கத்துடனும் திரு.விமலானந்தராஜா அவர்களின் தலைமையுரையுடனும் இவ்வொன்றுகூடல் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்து.
விபுலாநந்தா இந்து கலாச்சார பொதுப்பணிமன்றத் தலைவர் திரு.சோ. கணபதிப்பிள்ளை அவர்கள் மங்களவிளக்கேற்றும்போது
திரு.ச.இன்பராஜன் அவர்கள் தேவாரப்பாராயணம் செய்யும்போது
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் கிராமத்தின் நாற்புறமும் அமைந்துள்ள நான்கு கோயில்களில் பஜனைகள் நடைபெற்றுவருவதும் அதில் வயது வேறுபாடின்றி அனைவரும் பங்குகொள்ளுதலும் இந்தத் தேற்றாத்தீவு கிராமம் இதனால்தான் ஆழிப்பேரலைகளின் தாக்கத்துக்குட்பட்டபோதும் ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை.
இப்போது ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா தபோவனம் மன நிறைவை அளிக்கும் தியானம்,யோகாசனம்,இந்து மதப்போதனைகள் சிறப்பான வழிகாட்டல்களுக்கான ஒரு நிலையமாக அமைய எல்லாம் வல்ல நம்மிறைவனின் துணை எப்போதும் கிடைக்கும் என்று தமது நல்லாசியை வழங்கினார் ஸ்ரீ படபத்திரகாளி அம்மன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ரவிஜீ.
ஸ்ரீ படபத்திரகாளி அம்மன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ரவிஜீ அவர்கள் நல்லாசி வழங்கும்போது
தொடர்ந்து இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட இந்துப்பேரவைத் தலைவர் திரு.சீ.யோகேஸ்வரன் ஐயா அவர்கள் சிறப்புரையை வழங்கினார்.
இவரின் சில சில்லறைகளில்.........
ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா தபோவனம் ஆனது சமாதி நிலையடைந்த சுவாமி தந்திரதேவா அவர்கள் தாம் உயிரோடு இருந்தபோது அவர்களின் எண்ணத்தில் உதிர்த்த சிந்தனைனையே. இதற்கு தேற்றாத்தீவு இந்து இளைஞர் மன்றத்தினால் இப்போது செயல்வடிவம் கொடுக்கப்படுவது வரவேற்கப்படவேண்டியதொன்றே. அவரோடு இறுதிக்காலம் வரை பழகிய நானே இவரின் இறுதிக்கிரியைக் கூட செய்யும் பாக்கியம் பெற்றேன். ஒரு அமெரிக்க நாட்டு பிரஜை இந்து மதச்சிந்தனை நூல்களையும் ஆத்மீக வழிகாட்டல்களையும் செவ்வனே கற்று தமிழிலும் சிறப்புற்று இலங்கை நாடெங்கிலும் பல எண்ணிலடங்கா இந்துமத சேவைகளை செய்த உத்தமர். ஏனெனில் இலங்கையைப் பொறுத்தவரையில் இந்துமத சேவையாளர்கள் தத்தமது பிரதேசங்களை மட்டுமே மையப்படுத்தி இந்துமதப்போதனைகள் சமயஇல்லங்கள் என்பவற்றை நடாத்திக்கொண்டிருப்பது வழமை. உதாரணத்திற்கு யாழில் தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையாரைச் சொல்லலாம். இவ்வம்மையாரின் சேவை யாழ்ப்பாணத்துக்குள் மட்டுப்படுத்தப்பட்டது என்பதே சற்றுவேதனை. காரணம் ஒரு இந்துப் பெரியம்மையாரின் சேவை இலங்கை நாடெங்கெணும் கிடைக்கவி்ல்லை என்ற மனக்குறை மட்டுமே.
ஆனால் இலங்கையின் பல பாகங்களில் இந்துமதச் சேவைகளை செய்த சுவாமி தந்திரதேவாஅவர்களுக்கு உரிய ஆதரவு மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் பெரிதளவில் செய்யப்படாமை வருந்தத்தக்கது. அவருடைய மாபெரும் நற்பணிகள் அதிகமாக இடம்பெற்ற திருகோணமலையில் கூட அவரின் சுவடுகள் தெரியாமல் மறைந்துவிட்டமை மனதுக்கு கஸ்டமாக உள்ளது. இந்து அபிவிருத்தி சபைக்குச் சேரவேண்டிய அவரின் பல சொத்துக்கள் இன்றும் ஒரு சிலபேரினால் முறைகேடாக முடக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவரின் விருப்பப்படி தந்திரதேவா சுவாமி அவர்களின் அஸ்தி தேற்றாத்தீவிலும் கரைக்கப்பட்டது.
இருந்தபோதிலும் தேற்றாத்தீவு இந்துமக்கள் ஒன்றுசேர்ந்து இத்தபோவனத்தினை அவரினது பெயர் கொண்டு அமைப்பதன் மூலம் அவருக்கு அஞ்சலியுடன் மாபெரும் கடமையைச் செய்கிறார்கள்.
இதற்குமேலாக இக்கிராமத்திலுள்ள எத்தனையோ பெரிய சேவையாளர்கள் இந்துமதப் பெரியவர்கள் அவர்களைப்பற்றிய வாழ்க்கை வரலாற்று ஆவணப்படுத்துமாறு இக்கிராம மக்களிடம் நான் வினயமாக கேட்டுக்கொள்கிறேன் என்று தனது உரையை முடித்தார்.
அந்த சிறப்புரையைத் தொடர்ந்து எமது கிராமத்தின் பல பெரியவர்கள் தத்தமது கருத்துரைகளை வழங்கிக்கொண்டு இருக்க இடைவேளைக்காக குளிர்பானமும் பரிமாறப்பட்டுக்கொண்டு நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.
நிகழ்வுகளின் சில படங்கள்
Labels:
இந்துசமயம்,
தபோவனம்,
தேனூர்
Subscribe to:
Posts (Atom)































