Pages

Monday, January 31, 2011

தேசத்தின் குரல் ஊமையாய்


கண்கள் விழித்துக்கொண்டு
இரவுகளாய்
கனவுகள் நெய்யப்பட்டு
பகல்களாய்
உயிர்கள் தொலைக்கப்பட்டு
அலைகளாய்

நீண்டுகொண்ட
இழப்புக்கள்
நெரிசல்களில்
சிக்கிக்கொண்ட
உணர்வு

கேள்விக்காகவா
செய்திக்காகவா
படங்காட்டுவதற்கா
பாமரன்
ஆனதற்காகவா

தலையெல்லாம்
வால் ஆனதா
தசையாட தான்
ஆடாதோ
சதை விட்டு
நகம்
தனியாக முளைக்குதோ..?

தமிழ்
உயிர்
மூன்றெழுத்து வரிசையில்
உடல் பிரிந்தனவோ


ஊமைகளின் பேர்வழியாய்
ஊமையாய்
நானும்


Saturday, January 29, 2011

இது ஸ்டேடஸ் -10

நான் சிங்கிள் சேர்க்கிளுக்குள்(single circle) இருப்பதை வெறுக்கிறேன்
சிங்கிளா(single) இருந்தாலும் சிக்கலில்லாமல் ஓப்பினாகவே(open) இருப்பதை நேசிக்கிறேன்."

"தமிழ் தமிழாகும் அதை வளர்க்க முடியுமா என்கிற கேள்வி உளதே.
ஆனாலும் காப்பாற்றலாம் அருகிவரும் மொழியானால்.
ஆயினும் தமிழில் விழுந்து தமிழாக இன்னுமின்னும் இருக்கிறது..
நமது தேடல் தமிழில் இன்னும் வளர்கவே..
நாம் வளராலாம் தமிழ் தமிழாய் இருக்கும்"

"ஆயிரமாயிரம் கனவுகளை தேக்கிவைத்திருக்கிறேன். அதில் ஒன்றுகூட என்னுடையதாக இல்லை என்பது வருத்தமா இல்லை சந்தோசமா ?
எதுவானாலும் இது கனவு காணும் வாழ்க்கை"

"ஒவ்வொரு உழைப்புக்கும் வெற்றி இருக்கும்.
வெற்றிக்காக உழைப்பதை விட உழைத்ததற்காக வெற்றி கிடைப்பது மகிழ்ச்சி. ஆசிர்வாதங்களும் அவ்வாறே."

"ஒவ்வொன்றாய் பல்வேறாய் ஆனவைகளை இன்று
ஒன்றாய் தமிழாய் ஆனோம் வெற்றி மகிழ்ச்சி.
எமது பிள்ளைகளுக்கும் கிராமத்துக்கும் பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைத்தது பெருதுவைக்கவைத்தது... நன்றி அனைவருக்கும்""

"இரு நோக்கம், ஒரு நோக்கத்தினால் இன்னொரு நோக்கம் வெற்றிபெறலாம். இல்லையேல் இருநோக்கமும் பெருவெற்றியைத் தரலாம்"

"நானும் மருகளுமாய் குதூகலமாய் குழந்தையாய் மழலையில்.........முன்னங்கை ஊன்றி பின்னங்கால் தள்ளுகையுடன்
பழக பழக உன் முன்னேற்றம்...தவழுதல். இருகை சப்பாணியுடன் இதயத்தை நெருக்கல்களுடன் உன் புன்னகை"

"என்னவேணும் என்று கேட்டால் நான்
என்ன சொல்ல என்றே தெரியாமல்
ஏனென்று அறியாமல் என்னசெய்வதென்று புரியாமல்... அவஸ்த்தை"

"ஒவ்வொரு துயரத்தின் போது பல நட்புகளின் ஆழங்களை மீட்டுப்பார்க்க முடியும். இதுவல்லோ உறவு என்று எண்ணத்தோன்றும்."

"கொஞ்சம் மழை, சிலநேரம் வெயில், இருள் சூழ்ந்த மேகம், தூறல் மழை, வெள்ளம் இல்லை......... இது ஒரு மழைக்காலம்."

"மட்டக்களப்பு தேற்றாத்தீவு, செட்டிபாளையம் மாங்காடு பிரதேசங்களில் கடல் வருவதாக மக்கள் பீதியடைந்துள்ளனர். ஆனால் கடற்கரையில் அப்படி இல்லை. கடல் சற்றுக்கொந்தளிப்பாக இருக்கிறது."

"பல நாட்கள் பெய்த மழைக்கு ஒரு நாள் வெயிலேபோதும் போல இருக்கு.. வெள்ளம் வடிந்துகொண்டிருக்கிறது. வெயில் குளிக்கிறோம்."

"நேற்றிரவு சற்று ஓய்ந்திருந்த மழை அதிகாலை முதல் தொடர்ச்சியான கடும் மழை மட்டக்களப்பு தேற்றாத்தீவு தகவல்"

"ஓஓ.... ஊரிலும் பக்கத்துக் கிராமங்களிலும் தொடர்ச்சியான வெள்ளத்தினால் அனேக வீடுகள் நீரில் மூழ்கும் அபாயம். உறவினர்கள் சிலரது வீடுகள் நீரில் மூழ்கியிருப்பதாகவும் கதிரைகள் மேசைகளின் மீது இருப்பதாகவும் தொலைபேசியில் சொல்லிக்கொள்கிறார்கள்... இப்பொழுதும் அடைமழை. தாக்கம் அதிகமாக இருக்குகிறது"

"உனக்கான என் பிராத்தனைகள் உன்னுடலுளவுறுதியைக் கூட்டி வெற்றிகாணச் சென்றிருக்கு. நீ என்றும் வேண்டும் நான் உன்னோடு..:)"

"வெள்ள நிலைமை அதிகரிக்கிறது. தண்ணீர் வற்றுவதற்கும் முடிவில்லை. கடலில் சேர்வதற்கும் வழியில்லை. வடிகான்கள் இல்லை. இருந்தாலும் தாங்காது. மழை விடுவதாயும் இல்லை... வீடுகள் நிறையும் வெள்ளம்...."

"எரிச்சல் , வெறுப்பு, ஈரம், வெள்ளம், ஐயோ போதும், மழையே விலகிவிடு கொஞ்சம் சூரியனுக்கும் இடம் கொடு."

"உனக்கு அன்பு கிடைக்கவேண்டுமெனில் முதலில் நீ அன்பு செய்.
கொடுத்தால் தானே கிடைக்கும்."

"படித்தேன் காலையில். பழக்கதோசம் விடுதில்ல. புதுவருசம் எண்டா கோயிலுக்குபோக வேணுமே. போகிறேன். நம்பிக்கைகளை தேக்கி. என்னை வெளிச்சப்படுத்தி"

"மழைத்துவிட்டுப்போகிறது.. நனைந்துகொண்டது மனம்... நிரம்பிவழியுது மணல்.. வடிகான்கள் உயரத்தில்..."

"அடைமழையில்... உந்துருளிப்பயணம்...மழைச்சட்டையுடன்.... தொப்பட்டம்... அற்புதம்....
நனைதல்
குளிர்தல்
மழைதல்"

நிகழ்வு ஒன்றின் கிராமியப்பாடல் இசைக்கும் இசைவான்கள்


Wednesday, January 26, 2011

வெற்றி நிகழ்வு

நிகழ்வு பற்றி வீரசேகரி 25-01-2011 ஆம் நாளிதழில் வெளியாகிய செய்தி....


குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குழந்தைகளால் ஏற்றப்படும் மங்கள விளக்கேற்றல்..............

ஒரு மகத்தான நிகழ்வில் இக்குழந்தைகள் ஏற்றிய தீபம் நிகழ்ச்சி நிறைவுறும் வரை ஒளியேற்றப்பட்டுக்கொண்டிருந்தது. நிகழ்ச்சியும் மகிழ்ச்சியாய் ஒளிர்ந்துகொண்டிருந்தது.....

இந்நிகழ்வின் நிழல்கள்.....

Thursday, January 20, 2011

எழுதாமல் போவேனோ.....

எழுத எழுத நினைத்து தவறிப்போவேனோ
இருக்கும் உணர்வை எப்படி எழுதித்தீர்ப்பேனோ
எங்கெல்லாம் மனம் காயப்படுமோ
அங்கெல்லாம் பூக்கவேண்டும்
உணர்வின் மனங்கள் உறவின் கரங்கள்

இது இந்த வெள்ள அனர்த்தத்தில் நடந்தேறியிருக்கிறது நடந்துகொண்டிருக்கிறது
வெறும் நன்றியை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்
விரிவாக பதிவிடுகிறேன் பின்னர்


யார் யார் இதயத்தை தொட்டுச் மனமுருக செய்து யார் யாரோ யார் யாருக்கோ என
எப்படியெல்லாம் உதவலாமோ அப்படியெல்லாம் உதவிய நண்பர்கள், அன்பர்கள், உறவுகள், அனைத்து சொந்தங்களுக்கும் ஒரு சிறிய சொல்லால் உரக்கச்சொல்கிறேன் நன்றியை.
நன்றி
தமிழ் உணர்ந்தேன்
மனிதம் கண்டேன்
உறவு உணர்ந்தேன்
உணர்வைக் கண்டேன்
பரிவு உணர்ந்தேன்
பாசம் கண்டேன்
நட்பு உணர்ந்தேன்
நேசம் கண்டேன்............
வாழ்க உள்ளங்களே........
இணைந்தோம் இருப்போம்



Friday, January 14, 2011

பட்டிருப்பு பாலத்தின் போக்குவரத்து நிலைமை - 13.01.2011

நேற்று எடுக்கபட்ட படம் பட்டிருப்பு பாலத்தில் போக்குவரத்து நிலைமை

 





Wednesday, January 12, 2011

அவசரதேவைகள் வெள்ள அபாயநிலைமை

இப்போது மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலையினால் மக்கள் நிலைகுலைந்திருக்கிறார்கள். அதீத மழைவீழ்ச்சியின் காரணமாக வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்கள் வீடுகளில் வாழமுடியாத நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு சற்று ஓய்ந்திருந்த நிலையிலும் இன்று அதிகாலை முதல் கடும் மழைவீழ்ச்சி காரணமாக மக்கள் ஓரளவு வீடுகளில் வாழ்ந்த மக்கள் கூட இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்குவதற்காக சென்றுகொண்டிருக்கின்றனர். இங்கு கடும் குளிருடன் கூடிய காலநிலை நிலவுகிறது. தாங்கமுடியவில்லை. அழுகைதான் வருகிறது ஓரளவு சமாளிக்க முடிந்தவர்கள் கூட முடியாத நிலை. இதன்காரணமாக இவர்களுக்கு அவசர உதவிகள் தேவைப்படுகின்றன. இது எமது கிராமம் மற்றும் அயல்கிராமங்களின் நிலை.(களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம்,மற்றும் குருக்கள்மடம்) இங்கயே இவ்வளவு என்றால் இதன் பன்மடங்கு வேதனையை எமது படுவான்கரை மக்கள் அனுபவித்துவருகிறார்கள். அவர்களுக்கும் எழுவான் கரையில் வசிப்பவர்களுக்கும் இடையிலான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கும் அவசர உதவிகளை மேற்கொள்ளவேண்டும்.
இதற்கிடையில் எமது வலைப்பதிவர்கள் முன்னின்று மிக அவசரமாக நிவாரணப்பணிகளுக்காக பொருட்களை சேகரிக்கதொடங்கியுள்ளார்கள். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செய்யப்படும் மனிதாபிமான உதவியாக இச்செயற்பாட்டை ஆரம்பித்திருக்கிறார்கள். வரவேற்கிறோம் தொடருங்கள். நன்றி சொல்லிக்கொண்டு ஒன்றுசேர்ந்து உதவியை செய்வோம். "எங்கெல்லாம் மனம் காயப்படுகிறதோ அங்கெல்லாம் மனம் பூக்கவேண்டும் நல்லுதவியாய்" என்பதே நமது இலக்கு என்று ஆரம்பித்திருக்கும் இந்த முயற்சிக்கு தங்களால் ஆன உதவிகளை நல்குங்கள்.

மேலதிக தகவலுக்கு இங்கு செல்க. வதீஸின்கிறுக்கல்கள்:பதிவர்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள்

இதற்காக தற்போது எமது பிரதேச முகாம்களின் மக்கள் விபரம்
மொத்தக்குடும்ங்களின் எண்ணிக்கை (மொ.கு.எ),சனத்தொகை -(ச.தொ)
குருக்கள்மடம் கலைவாணி வித்தியாலயம் :- மொ.கு.எ- 85 + ச.தொ- 305
செட்டிபாளையம் மகாவித்தியாலயம்:- மொ.கு.எ- 295 + ச.தொ - 1158.
மாங்காடு சரஸ்வதி வித் - மெ.கு.எ- 131 + ச.தொ -495
தேற்றாத்தீவு மகாவித் - மொ.கு.எ- 123 + ச.தொ - 439
தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயம் - மொ.கு.எ- 193 + ச.தொ - 709
களுதாவளை மகா வித் - மொ.கு.எ- 255
களுதாவளை புலவர்மணி வித்- மொ.கு.எ - 205
களுதாவளை இராமகிருஷ்ண வித் -மொ.கு.எ- 170
களுதாவளை விபுலாநந்தா வித் - மொ.கு.எ - 156
களுதாவளை கணேச வித் - மொ.கு.எ- 48

இத்தகவல்கள் இன்று காலை பதிவாகியது ஆனாலும் இன்னுமின்னும் மக்கள் முகாம்களுக்கு சென்றவண்ணம் இருக்கிறார்கள். இப்பொழுதும் அடைமழை தொடர்கிறது.

மற்றயது நீங்கள் வழங்கக்கூடிய பொருட்களில் இவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கோ சேகரிக்கும் போது:
ஆடைகள்,
பால்மா,
பிஸ்கட்,
நூடுல்ஸ் போன்ற உலர்உணவுப்பொருட்கள்,
அடைக்கப்பட்ட தண்ணீர்ப்போத்தல்கள்

அத்தோடு பல்துலக்கி, பற்பசை
ஜீவனி
தொற்றுநீக்கிகள்

மேலும் கடும் காற்றோடு நிலவும் காலநிலையினால் தூவாணம் அதாவது தூறல்கள் தடுப்பதற்கு பொலுத்தீன்களும், நுளம்புப்பெருக்கம் அதிகமாக இருப்பதால் நுளம்புவலைகள், மெழுகுதிரி மற்றும் ஹரிக்கன் விளக்குகள் தேவையாகிறது. காரணம் அடிக்கடி மின்துண்டிக்கப்படுவதனால்..

நான் இன்று MOH அவர்களுடன் கலந்துரையாடினேன். அவர் பால்மா வழங்கும் போது பாலூட்டும் தாய்மாருக்கு வழங்கும் போது அவர்கள் பாலூட்டுவதை நிறுத்திக்கொண்டு புட்டிப்பால் கொடுக்கும் முறைக்கு தள்ளப்படுகிறார்கள் அதனால் ஆறுமாத குழந்தைகளுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குரிய பொருட்களை சேகரித்தல் சிறந்தது எனவும் மருந்துப்பொருட்களை நேரடியாக MOH அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கொடுக்கும்படி நேற்றைய அனர்த்தம் சம்பந்தமான கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதாக தெளிவாக சொன்னார்.
எமது பிரதேச வைத்தியர் Dr.S.ராஜேந்திரன் MOH, Kaluwanchidy. ஆனாலும் நடமாடும் அவசரசேவை படுவான்கரை பிரதேசத்திற்கு அவசியப்டுவதாகவும் சொன்னார்.

தற்போது கிடைத்த பிந்திய தகவல் எமது கிராமத்தின் வாவியின் நீர்மட்டம் அதிகரிப்பதாலும் வடிந்தோடும் நீரின் அளவு கூடிக்கொள்வதாலும் எமது பிரதான வீதிக்கு மேற்கே இருக்கும் வீடுகளில் நீர் வீடுகளுக்குள் ஊடுருவிக்கொண்டிருக்கிறது.

இது எமது தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தில் தங்கியுள்ள குடும்பங்கள் மற்றும் இன்றைய படங்கள்

மழை வெள்ள துயரத்தின் காணொளி - 03

தகவலுக்கு தேற்றாத்தீவு மக்களின் துயர் மனதை உருக்கி உணர்வாக்குது நண்பர்களே. முடிந்தளவு யாருக்காவது எங்காவது உதவிக்கொள்ளுங்கள். உங்கள் உதவிகள் தண்ணீர் போத்தல்கள், உலருணவுப் பொருட்கள், குழந்தைகளுக்கான பால் மா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விசேட ஆடைகள் என்பனவற்றை வழங்குங்கள்.


(நன்றி பேதுர்சன் ஒருங்கிணைத்துதந்ததற்கு)

இந்த தேசத்தின் குரல் எங்கெல்லாம் ஆர்க்குமோ இதயத்தை வருடி உளம் கனிந்து உதவும் கரங்கள் பெருகட்டும். உறவுகளின் உணர்வு சொந்த மண்ணின் மணத்தில் இருக்குமே... பால்வடியும் நிலம் இங்கு தண்ணீரால் நிரம்பி வழியுது. கண்ணீரின் கனம் தாங்காமல் உளம் கருகி வேர்க்கிறது. இதுவரை எமது அனர்த்த முன்னாயத்தங்களுடன் சமாளிக்கமுடிந்ததே. இனியும் ஐயகோ.... தாங்காது வெள்ளம் என்பது என்ன என்று அறிய வாங்கோ .பாதைகள் முடங்கப்படுகிறது. கடலின் துன்பம் கண்டோம் சுனாமியில் மழையின் துன்பம் காண்கிறோம் இப்பொழுதுகளில். தாங்க முடியவில்லை. அன்றாடம் உழைக்கும் நமது ஊர் மக்கள் அல்லல் படும் தன்மை ஐயனே..... கூலித்தொழில் செய்துவாழும் உறவுகளின் உறக்கம் கலைத்த வெள்ளம் எதை தேடி வதைக்கிறதோ......... தாகம் தீர்க்கும் தண்ணீரின் தாகம் என்ன சொல்வாயோ..

Tuesday, January 11, 2011

மழை வெள்ள துயரத்தின் காணொளி - 02

தொடர் மழை பாதிப்பு அதிரித்துக்கொண்டிருக்கிறது.
ஒரு தாயவள்

மழை வெள்ள துயரத்தின் காணொளி -1

இது எமது மக்களின் வெள்ள கஸ்டநிலைமைகள் அவர்களின் குரல்பதிவு காணொளி
வரலாறு காணாத இந்த மழைவெள்ளம் காரணமாக வாழ்தகுநிலை குழம்பியுள்ளது. மிகவும் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். இவர்களில் சில...

இது திரு.கு.தவராசா அவர்கள்

இது எமது தேற்றாத்தீவு மக்களின் துயர் பற்றி கிராம சேவகரினதும் தேற்றாத்தீவு உறவு திரு.த.கமலநாதன் அவர்களினதும் தகவல்

மழை வெள்ள துயரத்தின் படங்கள் 2

இன்று காலை முதல் அதிகளவு மழைவீழ்ச்சி காரணமாக எமது கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் இடம்பெயர்ந்த வண்ணமுள்ளனர். இவர்களுக்கான அவசரத்தேவையாக உலர் உணவுப்பொருட்கள், உடுதுணிகள், பாய், மற்றும் போர்வைகள் அவசியமாகத் தேவைப்படுகிறது. உங்களால் இயன்றளவு முடிந்தால் உதவக்கூடியளவு உதவுங்கரங்கள் உதவுங்கள்

இன்றைய படங்கள் சில

மழை வெள்ள துயரத்தின் படங்கள்

பேசுவதற்கோ எழுதுவதற்கோ தெரியவில்லை. உணர்வுகளின் ஓரத்தில் படங்களை பகிர்கிறேன். யார்யாருக்கெல்லாம் உதவமுடியுமோ உதவிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வலியும் பாதித்த மக்களுக்கு உணர்வாகிறது.
மழை, மழை ..மழை... வாழ்க்கையின் துன்பத்தின் வாழும் உறவுகள்.
தாங்கொணா கஸ்டம். சாப்பாட்டுக்கு, சமைப்பதற்கு, உறங்குவதற்கு, உடுப்பதற்கு ... என்று அத்தியாவசிய செயற்பாடுகளுக்கே முடியாதநிலைமை. தொடர்கிறது மழை. பெருவெள்ளம் அதிகரிக்கிறது.
படங்கள் பாருங்கள் எங்காவது வலியின் தன்மை தெரிகிறதா.....



இதுவும் நம்ம நண்பரின் தளம். இங்கும் எங்க ஊர் வெள்ள நிலைமை பற்றி வெள்ளிச்சரம்

Friday, January 7, 2011

இலேசாக இருங்கள்

நீங்கள் இல்லாமல்
நான் ஆனது இல்லை

என் ஒவ்வொரு வெற்றியையும்
மகிழ்ச்சியாயும்
ஒவ்வொரு தோல்வியையும்
வெற்றிப்படியாகவும்
சமவிகிதத்தில் ஏற்றொழுகி
தோள் தடவிவிடும்
உங்களது கைகள்
கடவுளின் உன்னத ஸ்பரிசங்கள்

உங்கள் குழந்தை மனசு
என்னை இன்னுமின்னும்
ஆளாக்கும்
ஆளுமையானவனாய்

உங்கள் பேரன்
நான் சுருண்டு விளையாடி
ஓய்வெடுக்கும் உங்கள் மடியில்
இன்பங்களையும் நுகர்ந்திடுவான்
என்கிற எண்ணத்தில்
'தந்தையாகணும்' என்ற
எண்ணம் இன்னும் வந்ததில்லை

உங்கள் உடம்பு தேறவேண்டும்
உங்களுக்கான
என் பிராத்தனைகள்
உங்கள் உளவுறிதியைக்
கூட்டிக்கொள்ளும்

Tuesday, January 4, 2011

நூதனமாய்....

காற்றின் ஓரங்களிலும்
காதுகொடுக்கிறேன்

கடினமான பொழுதுகளையும்
நனைத்துவிட்டு போகும்
அந்த
நுண்ணிய பார்வையை
இழந்துவிட விரும்பவில்லை

அந்த சோகத்தில்
நுழைகின்ற வெப்பத்தில்
எழுகின்ற
'புன்னகை'
மறக்கவே மாட்டேனென்று
அடம்பிடித்துக்கொள்ளும்

நானும் பட்டுவிடக்கூடாதென்று
ஒதுக்கி ஒருக்கணித்து முட்டாமல்
செல்ல நினைக்கும் முன்னே
உன் உரசல்களில்
சிக்கிய விரல்களும்
சிக்கியெடுத்த மனசும்
பத்திரப்படுத்திக்கொள்கிறேன்
எங்காவது
ஆவணப்படுத்தலாமா என

இன்னும் தோள் தடவிய
நெற்றியும்
ரீசேட்டில் ஒட்டிய
ஸ்டிக்கர் பொட்டும்

ஒவ்வொன்றும்
வந்துகொண்டன
ஒவ்வொன்றாய்

ஒரு தடவையேனும்
வராமல் போய்விடாதே!!
பல்வேறாகிடுவேன்..

சந்தித்துக்கொண்ட இடத்தில்
விட்டுவிட்டுச் செல்கிறேன்
துணிச்சலாய்
எடுத்துக்கொண்டு சென்றுவிடு
மறுபடி கொடுக்கவேண்டுமென்று
எண்ணிக்கொள்ளாதே


(படக்கலவை - By Manivarma Ko இலிருந்து படம் நன்றி மணி அண்ண)

Monday, January 3, 2011

தலை வளருதல்

நாம் என்பது நான் என்கிற பல சேர்ந்ததே. ஆயினும் நான் வெற்றிபெறவேண்டும் என நினைப்பது தவறில்லை. ஆனால் அவனோ அவளோ முன்னேறுகிறாள் ஆகவே நான் முன்னேறியாகவேண்டும் என்பது சற்று ஒப்பீட்டுத்தன்மையைக் காட்டுகிறது.
அவனோ அவளோ முன்னேறும் போது, நானும் முன்னேறவேண்டும் என நினைப்பதற்கும் முன்சொன்னதற்கும் சில வேறுபாட்டை உணரக்கூடியதாக இருக்கும்.

என்னைப் பொறுத்தவரையில் நாம் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவர் எவ்வாறு எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டார்? எவ்வாறான செயற்பாடுகள் மூலம் ஒரு தனித்துவத்தைக் கையாண்டு முன்னேறினார். இவ்வாறான எண்ணங்களை எண்ணிக்கொள்ளுவது சாலச் சிறந்தது.

இதற்கு மாறாக இவர் இன்ன பிரதேசக்காரர், இந்த வம்சக்காரர், இவர் இப்படியான எண்ணப்பாங்கை விடுத்து முன்னேற்றம் காணுதல் அழகு. முன்னேறுபவர் யாராகவாவது இருந்துட்டுப்போகட்டும். நமக்கென ஒவ்வொரு முன்னேற்றப்பாதைகளை வகுத்துக்கொள்வது சிறப்பு.

அதேபோல் எப்போதும் ஒரு முன்னோடி அல்லது முன்மாதிரியாக (Role model) வெற்றியாளர்களை, மக்களால் அதிகம் நேசித்தவர்களை மனதுக்குள் புகுத்திக்கொண்டு அவர்கள் அளவுக்கு வராவிடினும் அவர்கள் செயல்களின் வெற்றிகளைக் குறைந்தளவுக்கேனும் செய்து முன்னேறவேண்டும் என்கின்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கும் பண்பு.

இதற்காகவும் நாம் அவர்களோடு எங்களை ஒப்பிட்டுப்பார்ப்பது அழகல்ல. அவர்களின் செயற்றிறனை அவர்களின் அனுபவப்பாங்கினைப் பெற்று நாமும் முன்னேற்றத்தின் வழியில் நிற்றல் நல்லது.

இங்கு ஒரு காணொளி. பாருங்கள் தலைவர்களான முன்மாதிரிகள்.

இதேபோல் நாம் எப்பொழுதும் முடியாது வெற்றி என்பது தூரத்தில் இருக்கும் நமக்கு நல்லது எட்டாக்கனி என்ற எதிர்மறையான எண்ணங்களே வெற்றியின் முன்னேற்றப்பாதைகளிலிருந்து சறுக்கல்களை ஏற்படுத்தும். இங்கு ஒரு கபடிக்குழு வெண்ணிலாவைத் தொட்டு நிக்குது பாருங்கள்.



இந்த பஞ் வசனம் கூட நல்லாத்தான் இருக்கு..
கஸ்டப்பட்டு இஸ்டப்பட்டு உழைப்போம்

Sunday, January 2, 2011

ஆரம்பம், ஆயத்தம் (லெட்ஸ் கோ)

ஆரம்பம்


'வணக்கம்' என்ற சொல் தமிழில் உள்ள சிறப்புச்சொல். இந்த வணக்கம் சொல்ல நேரம் தடை இல்லை. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் யாரைத் தொடர்பு கொள்கினும் நாம் இலகுவாக வணக்கம் சொல்லலாம். ஆங்கில மொழியில் பேசும் போது நாம் பேசும் நபர்களின் நேரகாலங்களில் வணக்கம் சொல்லும் முறை வேறுபடுகிறது. நாம் ஒருவருக்கு காலைவணக்கம்(Good morning) சொல்லுங்கால் அவருக்கு பின்னிரவுப்பொழுதாக இருக்கும். ஆனாலும் தமிழில் வணக்கம் இந்த நேரகால வேறுபாட்டைத்தருவதில்லை. இது கூட நமது உறவு ஒருவர் சொல்லும் போதுதான் உணர்வானது. (பகிர்வு)

வருடத்தின் முதல்நாள் வாழ்த்துக்கள்


வருடங்கள் வேறுபடுகிறது மொழிகளால்,மதங்களால். உதாரணமாக தமிழ்-சிங்களப் புத்தாண்டு, திருவள்ளுவர் வருடம்,இஸ்லாமிய வருடம். இவ்வாறு வேறுபட்டுக்கொண்டிருந்தாலும் ஆங்கில வருடமே அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. நமது கலாசாரம், சமயம் என்ற சொல்லுக்கு அப்பாற்பட்டு தொழில்நிமித்தம் நாம் ஆங்கில வருடத்தை பயன்படுத்திவருகின்றோம். ஆதலால் இவ்வருடத்தின் முதல் நாளான நேற்று நாம் நமது சமயம் அல்லது மதம் அல்லது இனம் சார்ந்து இவ்வருடத்தை வரவேற்க்கத் தவறுவதில்லை. அதேபோல் இவ்வருடத்தின் முதல்நாளில் நமது சமயம் அல்லது மதம் சார்ந்து கடவுள் வழிபாடுகளை நம்பிக்கையுடன் மேற்கொள்ளாமல் விடுவதும் இல்லை.

ஆக நாம் எம்மதத்தைச்சேர்ந்தவர்களானாலும் இப்புதிய வருடத்தின் முதல்நாளில் வாழ்த்துச்சொல்லக்கூட வெட்கப்படுவதுமில்லை, மறப்பதுமில்லை. இதற்காக நாம் எமது கலாசாரம், மதம் சார்ந்து வாழ்த்துச்சொல்ல அல்லது இப்புதிய வருடத்தைக் கொண்டாட மறுக்கும்போது ஏதோ குறுகிய வட்டத்துக்குள் இருப்பவர்களாகவே எண்ணத்தோன்றுகிறது. இவர்கள் வாழ்த்தாமல் அல்லது இப்புதிய வருடத்தைக் கொண்டா டாமல் பிடிவாதமாய் இருந்தால் மதப்பற்றாளர்களா? அல்லது காலாசார வாதிகளா? ஏன் இப்படி???

வார்த்தைகள் பேசுவதற்கும் காசு கொடுக்கவேண்டும் என்றால் அனேகம்பேர் பேசாமலே இருந்துவிடுவர். இப்படி இருக்கும் போது வாழ்த்துக்கள் என்று சொல்லி மற்றவர் மனதை இலேசாக்குதல் நமது மனதையும் மற்றவர் மனதையும் மகிழ்ச்சிப்படுத்துதல் நல்லதாக இருக்கும் இல்லையா?

வாழ்த்துக்கள் என்பது பிறந்தநாள், புதிய நாள், வெற்றிகள் குவியும் நாள்,... இப்படி பல்வேறு சந்தோசம் தரும் நாட்களில் அவரவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் சொல்லி மகிழ்ச்சிப்படுத்துதல் உன்னதமான பண்பு என கருதுகிறேன். இதற்கு மதம், இனம் இன்னுமென்னவோ தடையாக இருந்தல் அவசியமன்று. வாழ்த்துச்சொல்லப்படுவதற்கு மற்றவர் யாராக இருக்கவேண்டும் என்பதும் அவசியமல்ல. நமக்கு ஒரு உறவானவராக தேவைப்படுபவராகத்தான் இருக்கவேண்டும் என்று கூட இல்லை. நமது நண்பராக, நமது வயதுக்கு கீழ்ப்பட்டவராக உயர்ந்தவராக என்று கூட இல்லை. யாரோ ஒருவராக இருக்கலாம் வாழ்த்துக்கள் தெரிவிக்க வாழ்த்துக்கள் தெரிவிக்க வேண்டிய தருணத்தில் சொல்லிவிடுங்கள். இல்லையேல் நீங்க சொல்லவேண்டிய நேரம் அவருக்கு அந்த வாழ்த்து பொருத்தமற்றதாகிவிடும். உதாரணமாக பிறந்தநாளைப் பாருங்கள். அன்றைக்குத் தவறினால் அடுத்த வருடம் வரை காத்திருக்கவேண்டும்.

ஒன்றிணைப்பு
நாம் ஒரு சமூகத்தில் வாழும் போது, ஒரு குடும்பத்தில் வாழும்போது, ஒன்றாக ஒரு வேலைத்தளத்தில் இருக்கும் போது... இவ்வாறு சேர்ந்து வாழும் எந்தப்பொழுதுகளிலும் நாமும் முன்னேறி மற்றவர்களையும் சேர்த்துக்கொண்டு போக வேண்டும் அதாவது இழுத்துக்கொண்டுபோகவேண்டும். உண்மையான வெற்றி இதுதான்.
தனி மனிதனொருவன் வெற்றிகாண்பதை விட சமூகம் வெற்றிகாண்பதில் தான் உண்மையான வெற்றி இருக்கிறது.

பாருங்கள் நமது நண்பர் ஒருவர் அனுப்பிய ஒரு காணொளி.
உங்களாலும் முடியுமா, முடிகிறதா என்று பாருங்கள், இல்லை என்றால் முயற்சியுங்கள்.

Saturday, January 1, 2011

நீ வேண்டும்

உன் வருகை

கூடுது
அனுபவமும்
வயதும்

நீ வரவேண்டும்
நான்
பக்குவப்படவேண்டும்

நேற்று
'கடந்த'
என்றாகி விட்டது

நீ தான்
பிரசவித்திருக்கிறாய்
புதிய ஆண்டாய்

சந்தோசம்
நாம்
காணவேண்டும்

இனிப்பாக
வாழ்வை
மாற்ற வேண்டும்

அனுபவிக்க
அவ்வப்போது
சோகத்தையும்
தந்துவிடு
இல்லையேல்
வாழ்க்கை
வாழப்படாமல்
போய்விடும்
வெறுமையாய்

நீ வேண்டும்
புதுமையாய்
தமிழாய்

இணைந்திடுவோம்
இயைந்திடுவோம்

நாமும்
மற்றவர்களுடன்
'வாழ்க்கை'
எழுதிடுவோம்

நீ வேண்டும்
சாரல்
மழை
எல்லாம்
மனதில் ஆகட்டும்
மகிழ்ச்சியில்

இனிதான
புத்தாண்டு வாழ்த்துக்கள்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு