Pages

Tuesday, January 3, 2012

இது ஸ்டேடஸ் - 23


25 December 2011
"இனிய நத்தார் தின வாழ்த்துக்கள். இந்நாளும் இனிய நாளாக இயேச பாலனின் ஆசிகளுடன்...
Happy Christmas ...."

25 December 2011
"சிலநேரங்களில் சில காத்திருப்புக்கள் வெறுப்பாயிருந்தாலும் அவசியமாய் இருப்பதால் அவஸ்தைப்படவேண்டிக் கிடக்கிறது..
##உயர் தரப்பரீட்சை முடிவுகள் வெளியாகி வெளியாகாமல்##"

"நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்... சும்மா ஒருமுறை வந்துட்ட போகுது..##சிலநேரம் சில மனிதர்கள்## சில நிகழ்வுகள்##"

"தொடர்பு அவசியப்படுவதில்லை ஆனாலும் இருவருக்கும் அவசியமான பொழுதுகளில் அழைப்புக்களை எடுப்போம்.
ஆக தொடர்பாடல் தேவைகளைப்பொறுத்தே அமைகிறது.."

"இல்லை இல்லை என்ற அந்த தொல்லை வந்துவிட்டது. இனி தொல்லை தரும் நிலையொழுங்குபடுத்தலில் இருக்கும் என நினைக்கிறேன். எது எப்படியோ சரியானதாக அமைந்தால் யாவருக்கும் நலம்"

25 December 2011
"மழையிலும் வாழ்க்கைக்கு வேண்டியவற்றுக்காய் புறப்பட்ட படகு அது. குழந்தைகுட்டிகளின் அத்தனை செலவுக்காய் புறப்பட்ட படகு விழுந்துவிட்டது. சரிந்துவிட்டது அந்த குடும்ப பொருளாதாரம்... ஆழ்ந்த அஞ்சலிக்கின்றோம். பூரண நித்திரையடையட்டும்..."
###காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒரு மீனவரின் சடலம் மீட்பு ~ Battinews.com###

28 December 2011
"
இந்த இரவை ரசிக்க
ஒரு
பிறை நிலா
கடலலை அரவத்திலும்
கடலுக்குள் சில வெளிச்ச வீடுகள்
#கப்பல்கள்#
"

29 December 2011
"ஏதாவது வேலைசெய்து முடிக்கணும் என்கிற முனைப்பில் வெளியே செல்லும்போது, புன்சிரிப்புக்களுடன் கூடிய "போயிற்று வா" என்ற வார்த்தையும் இல்லாவிட்டால் செய்யவேண்டியவை முடிக்கப்படாடாமல் போகிறது. ##உதடுகளுக்கும் உதடுகளின் உச்சரிப்புக்கும் வலுஅதிகம்##"

"பேனையை வச்சிக் கிறக்கும் அத்தனை கோடுகளிலும் எத்தனை எத்தனை சொற்களை உச்சரிக்கிறாயடி. அத்தனையும் முத்துமுத்தானவை. உன்னெழுத்துப்பயிற்சியும் ரசிக்கும் நானும்##மருமகளின் கிறுக்கல்களில் சிக்கியுள்ள நான்##"

"இல்லை இல்லை என்பார். ஆனால் அங்கு உண்டு என்பதற்கு அடயாளங்கள் இருக்கும்..##சொல்லமறுக்கும் கதை##"


30 December 2011
"சுவரெல்லாம் கோடுகள்
அத்தனையும் எழுத்துச் சிற்பங்கள்
##காலையெழுந்தவுடன் படிப்பு மருமகளுடன் நான்##"

30 December 2011
"ஆ.. இருமிக்கொண்ட மெல்லிய காய்ச்சலுடன்.. கண் முழிக்க முடியா தலைவலியுடன்.."

31 December 2011
"இன்னும் சில மணித்தியாலங்களில் முடிந்துதான் போகப்போகிறது... ஆனாலும் தித்திக்கும் நிகழ்வுகளும் மனதைச் சுரண்டும் சில சோகங்களும் இருக்கத்தான் செய்தன. இன்னும் அடுத்ததிலும் இவ்வாறே நகரத்தான் போகின்றன நாட்களும். ஆனாலும் புதுசு என்பதில் கொஞ்சமாவது மனசு இலயிக்கு பண்ணுவதை ஏற்றுக்கொள்வதில் மறுதலிப்பில்லையே. மாற்றங்கள் வேண்டி மாற்றங்கள் நோக்கி கால்களில் லாடங்களுடன் மனக்குதிரை ஓட்டப்படபோகிறது"

"கொஞ்சம் தடுமல், கொஞ்சம் காய்சல்,
காற்றிலே ஈரப்பதன் கூடிப்போச்சு.."

1 January 2012

"வந்துவிட்டதே இந்நாள், புதிய 2012 இன் முதல் நாள்..
இந்நாளையும் இனிய நாளாக மாற்றும் யந்திரமாய்
இவ்வருடத்தையும் ஆரம்பிப்போமே நலமாய்..
அனைவருக்கும் இனிய 2012 ஆம் ஆண்டு புதுவருட வாழ்த்துக்கள்"

"சாப்பிட்டவன் கோயிலுக்குள்ள போறான் மாமிசம் சமைத்த சட்டி வீட்டுக்குள்ள"

2 January 2012
"எனக்குமட்டும் ஏன் நீமட்டும் உந்துசக்தியாக மாறக்கூடாது.
மாற்று என்னையும் விசைகொண்ட யந்திரமாய்"

"நேரமுகாமைத்துவம் அனேக விடயத்தில் தேவை என்றுணர்ந்தாலும் நடைமுறையில் வழக்கத்தில் வரமறுக்கிறதே.."

"உன் ஒரு நிலைச்செய்தி உசுப்பிவிட்டுப்போகும்..ஏன்
உலைவச்சிட்டும் போகும்"

3 January 2012
"ஏதோ என் பாடசாலைக்கான எனது முதலாவது செயற்பாடு புதுவருசத்தில் சிறப்பாக முடிஞ்சிருக்குது. ஆரம்பமே சவால்களால் ஆனதும் அதை எதிர்கொள்ளவும் முடிஞ்சிருக்கு.. தொடர்ச்சியான பல அர்ப்பணிப்புக்களுக்காக நாட்களை காத்திருக்கிறேன் பல மாற்றங்களைச் செயல்படுத்த..##திருப்பதியான மனம்##"

இன்றைய படங்கள்
கடந்த 24 ஆந் திகதி கடற்கரைக்கு கனகாலத்துக்குப்பிறகு போனேன் அங்க பிடிச்ச படங்கள். தோணா என்னும் எங்க ஊர் முகத்துவாரம் கடலும் ஊரின் மழைவெள்ளமும் கலக்கும் இடம்
Sunday, January 1, 2012

நான் இன்னமும் வாழ்கிறேன்


சில்லென்ற காற்றும்
என்வீட்டுச் சுவாசமும்

கடற்கரையினில்
நனைக்கும் என் கால்களும்

வயல்வெளியில்
படமெடுக்க கமெராவும்

காதுகளை துடை(ளை)த்துவிடும்
பாடல்களும்

குழந்தைகளின் அழுகுரலும்
ஏங்கி முனையும்
என் கைகளும்

சில புத்தகங்களும்
பத்திரிகைகளும்

தவறிவிட்டுப்போன
உன் நினைவுகளும்
நீ
தவறிவிட்ட
காதல் நினைவுகளும்

இன்னும்

முகநூலின் என்னிலை
சொல்லும்
நிலைச்செய்திகளும்
சில நண்பர்களும்
அவ்வப்போது
அரட்டைகளும்

விரல்நுனியால்
இதயம் கிழிய
உலகம் காட்டும்
கண்ணாடியாய்
ஒரு
வலைத்தளமும்
போதும்
இவ்வருசமும் வாழ்ந்துடுவேன்.

புதுவருடவாழ்த்துக்களுடன்.........


வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு