Pages

Wednesday, September 30, 2009

உனக்காக எல்லாம் என் சகியே ...



கடவுள் குடியிருக்கும்
கோவில்
உன் உள்ளம்

என் சகியே

நீ விளையாட
இந்த நிலா முற்றம்
ஏய்
பிறை நிலவே
என் பிள்ளையின்
கத கதவென்று குழைந்த
மழலைச் சிரிப்பைப் பாடு

அந்த "செல் " விழுந்த
மாமரம் இன்று
துளிர் விட்டு
கிளை பரப்பி
நிற்குது
உனக்காக
நீ ஆடவே
வா என் சகியே
பொன்னூஞ்சல்
கட்டித்தாறேன்
ஆடு...
விளையாடு....

குருத்து மணல் பரப்பி
உன்னைப்போல்
கொத்துக் கொத்தாய்
பூக்கள் பூக்க
பூமரம் நட்டு
பூங்கா தாரேன்
பக்கத்து வீட்டு
நட்சத்திரங்களையும்
கூட்டி வந்து
விளையாடு
என்
செல்ல மக

கொம்புத் தேனும்
எருமைத் தயிர் குழைத்து
தண்ணிச் சோறு தாறேன்
கொழு கொழு என
கொழுத்து நீ வளர
கொடுத்து உண்ணவும்
பழகு கண்மணியே

நீ படிக்க
புத்தகங்களும்
எழுதிக்கொள்ள
எழுதுகோல்களும்
இவற்றைச் சுமந்துகொள்ள
பொம்மை பையும்
தறேனம்மா
நல்லா படிச்சுக்கொள்
செல்ல மக

சட்டையில் மடித்துச் செருகிய
கைக்குட்டையில் உன்
வியர்வையைத் துடைத்துக்கொள்
நாளை மற்றவர்களின்
நெற்றி வியர்வையை
தொடைக்க வேண்டுமம்மா நீ

"சர்வதேச சிறுவர் தினம்"

இன்று முதலாம் திகதி "சர்வதேச சிறுவர் தினம்".


இவ்வாண்டின் தொனிப்பொருள் “நமது சிறுவர்களுக்காக விடுதலை பெற்ற பூமியை கட்டியெழுப்புவோம்” என்பதாகும்.
நமது நாட்டில் சிறுவர்கள் தமது உரிமைகளை அனுபவிக்கக் கூடியதானதும் துஷ்பிரயோகங்கள் இல்லாததுமான ஒரு சூழலை நமது சிறுவர்களுக்காக நாம் கட்டியெழுப்ப வேண்டும் என்பதை இந்த தொனிப்பொருள் வலியுறுத்துகிறது.சிறுவர்களுக்காக இவ்வாறானதொரு சூழலை கட்டியெழுப்பும் பொறுப்பு அரசாங்கம் உட்பட அனைத்து வளர்ந்த வயதுவந்தவர்களுக்கும் உள்ளது.


"கல்வி கற்பது" சிறுவரின் உரிமை என்ற கருத்தும், சிறுவர்களை வேலைக்கு அனுப்புவது அல்லது அமர்த்துவது சிறுவர் உரிமை மீறலாகும் என்ற கருத்தும் மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தப்பட வேண்டும்.


உலக நாடுகளில் இடம்பெறும் யுத்தங்கள், கலவரங்கள், இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றில் அதிகமாக பதிக்கப்படுபவர்கள் நம்ம சிறுவர்களே!




எனவே தான் ஒவ்வொரு நாடும் சிறுவர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து "சிறுவர் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்" என்ற அடிப்படையில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.




சிறுவர்களின் உரிமைகள் தொடர்பாக பல்வேறு பிரகடனங்களும் சட்டங்களும், காப்பீடுகளும் எழுதப்பட்டிருக்கின்றனவே ஒழிய நடைமுறையில் சிறுவர் வாழ்க்கை பெரும் சவாலாகவே உள்ளது என்பது மிகவும் கவலைப்பட வேண்டிய விடயம். ஏனெனில் அன்றாடம் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களின் போக்கு அதிகரித்து கொண்டே வருகின்றன.

ஐ. நா. சிறுவர் உரிமைகள் சாசனத்தில் "18 வயதிற்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள்" என்றும் உறுப்புரை 28 இல் "சிறுவர்களின் கல்வி உரிமையையும்" வலியுறுத்துகின்ற போதிலும் நம்ம நாட்டில் 5 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு கட்டாயக் கல்வி வழங்கப்பட்ட போதிலும் கூட, நடைமுறையில் பல பிரச்சினைகளை சிறுவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி.


யுத்த சூழ்நிலையற்ற எமது நாட்டில் இனி சிறுவர் நல்வாழ்வுக்கு ஒரு விதி செய்வோம்.

இதோ இந்த சிறுவர் பாடுகிறார்கள் இங்கு:

ஓலை குடிசையில் எம் படிப்பு - அன்று
வீழ்ந்து கிடந்தது நம் எதிர்வு
ஓங்கி எழுந்திடுவோம் கல்வியில் -இன்று
ஒன்றாய் தேசத்தை எழுப்புவோம் நல்வழியில்

ஆடிப் பாடி விளையாடுவோம் ஆனந்தமாய்
அன்பைப் பெருக்கி ஒன்றிணைவோம்
கூடி மகிழ்ந்திடவே நம் தேசம் -வெள்ளைப்
பூக்கள் கொண்டு வளர்த்திடுவோம்

இனி ஒரு யுத்தம் வேண்டாம் - நமக்கு
சமாதான சத்தம் வேண்டும்
நாளைய தலைவர்கள் நாம் -வெற்றி
தேசத்தில் வீறுநடை பயில்வோம் வா

நேற்றைய பொழுது முடிந்து விட்டது
இன்றைய பொழுதும் உதித்துவிட்டது
நாளைய பொழுது நமக்காய் ஆகட்டும்
எழுந்துவிடு இனி எல்லாம் கிழக்கு.........


Saturday, September 26, 2009

தாலாட்டின் இசைச்சிற்பி என்தாய்


அன்பின் அட்சயம் நீ
பாசத்தின் சிகரமும் நீதான்.

அன்புத்தொட்டில் முதல்
உடல்,உறவு, உலகம்,உணர்வுகளை
அறிமுகப்படுத்திய
முதல்
ஆசிரியை நீதானே!

உதிரத்தை பாலாக்கிய
முதல் விஞ்ஞானியும் நீதான் !

உதிரத்தின் வழியே
நான் சுவாசிக்க “ஒட்சிசன்”
வாழ்ந்துகொள்ள “உணவு”
அன்பு உணர்வு
அனுப்பியவள் நீதானே !

உன் பத்துமாத பரிசோதனையின் பின்
வெளியேறிய
“அக்கினிக்குஞ்சு” நான்.
கவலைப்படாதே….
அழிக்கப்பிறந்தவனல்ல நான்
உலகம் வாழப்பிறந்தவன்.

உன் கோபுர கர்ப்பகிரகத்தில்
சிம்மாசனம் இல்லையேல்
இந்தப் பூமியில்
எனக்கேது அரியாசனம்


என் தந்தை கீறிய
பேனாக்களின் காயங்களால்
எழுதி,
இருத்தி,
வளர்த்து ஆளாக்கிய
இந்தப் “பிள்ளைக் கவிதை”
அதன் சுவடுகளை மறக்காமல்
பற்றிக்கொண்டிருப்பது
உன்
“தொப்பூழ்கொடியை”

நீ கொடுத்த வீரப்பாலால்தான்
இப்போதும்
புயலை எதிர்க்கும் சக்தி
எனக்குள்.

இந்தப் “பிள்ளைக் கவிதை”யின்
கவிதாயினி நீ…
ஓ…
தாலாட்டு இசையமைத்த
முதல் “இசைச்சிற்பி”
நீயல்லவா….
அதுதான்
அப்போதும் இப்போதும்
ஏன் எப்போதும்
உன் தாலாட்டின்
ரசிகன் நான்…

இந்த பூமியில்
உயிர் நட்சத்திரங்களை பயிரிடும்
“விவசாயி” நீதான்
உன் உதிரத் தண்ணீரினால்
இந்த பூமி வயல்களில்
மனிதப் பயிர்கள்
எழுந்து நிற்கின்றன.


உலக உருண்டையை
உருவாக்கும்
உன் கருணையின் கைகள்
உன்னதமானது
ஆதாலால்
இன்னமும் இந்த உலகம் உய்ய
உன் மூச்சு வேண்டும்
உன் இடுப்பு வலிக்கவேண்டும்.

Thursday, September 24, 2009

ஆத்திரேலியாவின் சிட்னி நகரை புழுதிப் புயல் மூடியது

புதன், செப்டம்பர் 23, 2009, சிட்னி



ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களைத் திடீரெனத் தாக்கிய புழுதிப் புயல் சிட்னி, மற்றும் பிறிஸ்பேன் நகரங்களை பல மணி நேரம் மூடி ஆதன் வான் பரப்புகளை கடும் செம்மஞ்சள் நிறமாக்கியது.

இந்த திடீர் செம்புழுதியால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மூச்சுத் திணறல் உள்ளிட்டவை ஏற்படலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததால் வெளியில் வந்தவர்கள் பலரும் முகமூடிகளை அணிந்து நடமாடினர்.

உலகப் புகழ்பெற்ற சிட்னியின் சின்னங்களான ஒபேரா ஹவுசும், துறைமுகப் பாலமும் புழுதியால் மறைக்கப்பட்டுள்ளன. சிட்னி விமான நிலையத்திற்கு வர வேண்டிய விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் எதிரில் வருவது தெரியாத வகையில் புழுதி அடர்த்தியாக இருந்ததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

செவ்வாய் கிரகம் போல சிட்னி நகரமே மாறிப் போயிருந்தது. இதை பலர் வெளியில் வந்து பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். பலர் வியப்புக்குள்ளாகினர். பலருக்கோ பீதியாகி விட்டது.

புரோக்கன் ஹில் நகரிலிருந்து தொடங்கிய இந்த புழுதிப் புயல் கிழக்கு ஆஸ்திரேலியா முழுவதும் படிப்படியாக வீசி நகரங்களை செம்மையாக்கி விட்டது. புழுதிப் புயல் வீசியபோது, மணிக்கு 60 மைல் வேகத்தி்ல் பலத்த காற்றும் வீசியது. இந்த புழுதிப் புயல் காரணமாக 50 லட்சம் டன் தூசி சிட்னி உள்ளிட்ட பகுதிக்குள் வந்து சேர்ந்து விட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் விவசாய நிலங்களில் முக்கியமாக உள்ள மேல் மட்ட மண்ணையும் இந்த புழுதிப் புயல் அள்ளிப் போய் விட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மணிக்கு 75 ஆயிரம் டன் அளவுக்கு அடர்த்தியான தூசி சிட்னி நகரை மூடியது. இந்தப் புயல் பின்னர் பசிபிக் கடலில் போய் முடிந்தது.

ஆஸ்திரேலியாவில் 70 ஆண்டுகளின் பின்னர் முதற்தடவையாக இப்படியான ஒரு புழுதிப்புயல் ஏற்பட்டுள்ளது என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த புழுதிப் புயல் காரணமாக சிட்னி நகரில் காற்று மாசின் அளவு 4164 ஆக இருந்தது. வழக்கமாக 200க்கு மேல் போனாலே அது அபாயகரமானது. ஆனால் 4164 என்ற அளவில் காற்று மாசுபட்டுப் போனதால், ஆஸ்துமா உள்ளிட்ட தொல்லைகள் ஏற்படும் சுகாதாரத் துறையினர் எச்சரித்திருந்தனர்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பிற பகுதிகளில் கல்மழை பொழிந்ததாகத் தகவல் வந்துள்ளது. இதில் சில கற்கள் கிரிக்கெட் பந்து அளவுக்குப் பெரியதாக இருந்ததாகவும், கார்கள், வீடுகளின் சன்னல்கள் உடைந்து போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



நன்றி விக்கிபீடியா

Tuesday, September 22, 2009

காதல் காசுக்காக விற்கப்படுகிறது...



நினைவுகள் எழுதிய
நிலவு
வெட்கித் தலைகுனிந்து
புருவம் உயர்த்தி
நீ பார்த்த அந்த
பார்வை முட்கள்
சிரிப்பு வரைந்த
குழி விழுந்த கன்னங்கள்
உன் புன்னகை உதடுகள்

ரசித்தது உண்மை

பருவம் படர்ந்த
முனைப்புகள்
நான் விழுந்த
அந்த தடங்கள்

வெளிச்சம் காட்டிய
உன் மனது
விழுந்துகொண்ட
என் மனது

நீ உடுத்திக்கொண்ட "சுடிதார்"
உன் "சோல்" லில் சுற்றிக்கொண்ட
நானும்....
என்னைப்பற்றிக் கொண்ட
நீயும்....

உன்னோடிருந்த அந்த நாட்கள்
நம்மை எழுதிக்கொண்டது
"காதல் பறவைகள்" என்று
இப்போது எழுதி்க்கொள்ளட்டும்
அது ஒரு நிலாக்காலமென்று

என்னை உடுத்திக்கொண்ட
என் குடும்பம்
என் காதலை விட
கரன்சியைப் பார்க்கிறது
என் தங்கச்சியின் சீதனத்துக்காய்


விட்டுவிடு என்னை
தொலைகிறேன் நான்...

என்மானம் விற்கப்படப்போகிறது
முடிந்தால்
கேள்விப்பத்திரத்துக்கு
விண்ணப்பித்துக்கொள்...

கிடைத்தால் மீண்டும்
துளிர்க்கும் நம் காதல்

வெடக்கப்படுகிறேன்
துக்கப்படுகிறேன்
முகம் புரியா யாருக்கோவாக
நான் அறியா எவளுக்கோவாக
என் காதல்
புதைக்கப்படப்போகிறது

என் காதல்
காசுக்காக
கரைக்கப்படப்போகிறது



காதல் தேவதையே
என்னை தூக்கிலிடு

அதற்கு முன்
என்னை காட்டிய
எனது குடும்பத்தை பற்றி
சற்றே .....
யோசித்துக்கொள்
என் குடும்பத்தின்
வாழ்க்கை புகையிரதம்
இந்த தண்டவாளத்தால் தான்
ஓட்டப்படுகிறது..

நீங்கள் சொல்லுங்கள்........

பாழாயப்போன என்
காதல்
நாசுக்காகவா???
என் வாழ்க்கை
காசுக்காகாகவா????

விட்டுவிடு என்னை
தொலைகிறேன் நான்...

நீ வருவாய் என........


காதல் வானில்
நிலவு - உன்னை
முத்தமிட்ட மேகம்
நான்....
மரணத்தின் பின் துடிக்கும்
மனங்கள் போல
உன் ஞாபகத்தில்
சோகத்தின் தாரமாய்
குடித்தனம் நடத்தும்
இவன்
இன்னும் நீ வருவாய் என
காத்திருக்கிறேன் தனியே....

கவிதைக்கு அர்த்தம் சொல்ல வந்து
என் மேல் நீ விதைத்த
நாற்று
இதயத்தில் வீசும் காற்று
நாற்று
கிளைத்து வளர்வதற்கிடையில்
சிதைக்கப்பட்டு விட்டது
சிதைந்த துண்டுகளுடன்
இதயமும் துளிர் விடுமென
நானும்


மலர்க்கொத்துக்களாய்
உன் நினைவுகள்
மனதில்
இன்னும் நீ வருவாய் என....

Saturday, September 19, 2009

நவராத்தி விரதம் ஆரம்பம்



"ஆய கலைகள் அறுபத்தி நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை
தூய உருப்பளிங்கு போல்வாள் என்
உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராது இடர்


படிகநிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ் பூந்தாமரைபோற் கையும் துடியிடையும்
அல்லும் பகலும் நவரத முந்ததித்தாற்
கல்லுஞ் சொல்லாதோ கவி"


விரதங்களோடு சேர்ந்த வழிபாடுகளில் வீட்டில் வழிபடச் சிறந்தது நவராத்ரி விரத வழிபாடு.
இவ்வழிபாடு புரட்டாதி மாத வளர்பிறையில் ஆரம்பமாகும். ஒன்பது இராத்திரிகளில் வழிபாடு. நவ என்றால் புதுமை என்ற பொருள். இதனால் புதுமையான விரத இரவுகள் என்றும் சொல்லலாம்.
"சிவனுக்கு ஒரு ராத்திரி சக்திக்கு ஒன்பது ராத்திரிகள்" என்று கூறுவர். வீடிலே நவராத்திரியைத் தவிர எந்த சக்தி விரத விழாவும் கொண்டாடப்படுவதில்லை. இதுவே இதன் மகத்தான சிறப்பு.இதனால் தான் கொண்டாடப்படும் வீடு "பிரமோற்சவம்"என்று ஒரு நூல் கூறுகிறது.

ஒன்பது நாட்கள் நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்களும் துர்க்கைக்கும் அடுத்துவரும் மூன்று நாட்களும் இலக்குமிக்கும் இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியவை
பத்தாம் நாள் "விஜயதசமி" இதுவே வெற்றி நாளாக கொண்டாடப்படுகிறது. பத்து நாட்கள் கொண்டாடப்படுவதால் கர்நாடகா மாநிலத்தில் இதை "தசரா" என்றழைப்பர்.
"இறைவனை அறிந்து உணர்வதே உண்ண்மையான கல்வி" என்று இந்து மதம் கூறுகிறது.

கிரேதா தீவில் தமிழர் முதலில் வாழ்ந்ததாக வரலாறு சான்று பகர்கிறது. தங்களுக்கு மேலான சக்தி ஒன்று இரிப்பதாய் உணர்ந்த இவர்கள் அதற்கு உருவம் தேட முற்பட்டனர். தாயே நமக்கு முதன்மையானவள் என்பதை உணர்ந்து அச்ச சக்திக்கு பெண் வடிவம் கொடுத்தனர்.
இதனால் உலகை இயக்குபவள் சக்தியாகிறாள். ஆதலால் சக்தி வழிபாடு மக்களின் வாழ்வுக்கு இன்றியமையாதது.

இச்சக்தி வழிபாட்டில் தலையானது இந்நவராத்திரியாகும். சக்தியை சித்திரை மாதம் வழிபடும் போது "வசந்த நவராத்திரி" என்றும் புரட்டாதியில் வழிபடும் போது "பாத்திரப" நவராத்திரி என்றும் அழைப்பர்.
இந்த புரட்டாதி மாத நவராத்திரி உலக மாதாவாகிய சக்தியை வழிபட்டு ஈடேருவதற்கு புண்ணிய காலமாக கருதப்படுகிறது .
மூலக்கதை:
தேவர்களை துன்புருத்திய மகிடாசுரனை அழிக்க சக்தியானவள் தன அம்சங்களாகிய ஆதிலக்ஷுமி,மகாலட்சுமி,தனலட்சுமி, தானியலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, கஜலட்சுமி, எனும் அட்ட இலக்சுமிகளையும் அனுப்பி ஒவ்வொரு நாளும் போர்புரிந்தாள். இவர்கள் தோல்வியைத் தழுவ ஒன்பதாம் நாள் தானே "பராசக்தியாக" போர்களம் நின்று மகிடாசுரனை அழித்தாள். இதனால் சந்தோசமடைந்த தேவர்கள் தேவியை வழிபட்ட தினங்களே இந்த நவராத்திரிகாலமாகும் என்று ஓர் வரலாறுண்டு.

துர்கை வழிபாடு:


துர்க்கையானவள் நெருப்பினழகு, ஆவேசப்பார்வை, சிங்க வாகனம் கொண்ட சிவப்பிரியை.இவள் ராட்சத குணத்தோடு இச்சாசக்தியாக முதல் நாள் மகேஸ்வரியகவும் 2 ஆம் நாள் கௌமாரியாகவும், 3 ஆம் நாள் வராகியாகவும் அருள்பாலிப்பாள்.
செல்வம், கல்வி பெறுவதற்கு வேண்டிய முயற்சிகள் மேற்கொள்ள பயமின்மை,துணிவு, உறுதி, விடாமுயற்சி, வீரம் தந்து முடிவில் வெற்றி புகழ் கௌரவத்துடன் வாழ துர்கையை வழிபடுவோம்.
இதனால் தான் முற்காலத்தில் அரசர்கள் போருக்குச் செல்ல முன் துர்க்கை வழிபாடு செய்ததாக அறியப்படுகிறது.

இலக்குமி திருநாள் பூஜை :














"பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை" என்ற வள்ளுவனின் வாக்குப்படி லெளகீக வாழ்க்கைக்கு இன்றியமையாத நிலையில்லாச் செல்வங்களை வேண்டி இலட்சுமியை வழிபடல் ஒழுங்கு.
திருமகள் ஆனவள்; மலரின் அழகு, அருட்பார்வை, பொன்நிறமேனி, செங்கமலப்பார்வை, செங்கமல ஆசனம் கொண்ட விஷ்ணுப்பிரியை. இவள் தாமத குணத்தோடு கிரியாசக்தியாக 4 ஆம் நாள் இலக்குமியாகவும், 5 ஆம் நாள் வைணவியாகவும், 6 ஆம் நாள் இந்திராணியாகவும் அருள்பாலிப்பாள்.

Friday, September 18, 2009

ஓசோனுக்காய் .......

உன்னோடிருந்த அந்த
அழகிய நாட்கள்...

எனக்காக உன்னை
விரித்துக்கொண்ட போதும்....

திறந்த வெளியில்
நீ
என் காவலனாய் ....
போர்வை போர்த்தியதும்
நிறமற்றவனாய்
நின்றபோதும்...

உணர்கிறேன்
தட்ப வெப்பநிலை மாற்றம்
உறை பனியில் உருக்கம்
மழைவீழ்ச்சியில் சுருக்கம்

இப்போதுதான்
தெரிகிறது
உன்னில் விழுந்த
ஓட்டைகளுக்கும்
கிளிஞல்களுக்கும்
காரணம்
நான் ஆனதற்காக
வருத்தப்படுகிறேன்

இனிமேலும் ஆவதற்காக
இல்ல
எனக்கான உன்னோடு
நானும் நானாக
உனக்காக
நான்

Wednesday, September 16, 2009

தேனூரான் வாழ்க .........

கவிஞர் தேனூரான் அவர்கட்கு கலாபூசணம் விருது கிடைக்கப்பெற்றதை அடுத்து அவருக்காக எழுதப்பட்ட கவி மாலை அவருக்கான பாராட்டு வைபவத்தில் வாசிக்கப்பட்டது...

தேனூரான் வாழ்க .....


வற்றாத வரிகள் தந்து வார்த்தைகள் கொண்டு
உற்ற நெஞ்சினில் கொற்றப் பேனா மை கொண்டு
கவிதை வரலாறு படைத்தவன் நீ ...........
நேற்றைய கவிஞன் நீ
இன்றைய கலாபூசணம் கண்டு
விழித்தெழுகின்றன உணர்வுகள்
உனக்காக
கவி எழுத ஏங்கி தவிக்கின்றன.........

ஈரமாக்கப் பட்ட இதயத்துடன்
உரம் சேர்க்கப்பட்ட உள்ளத்துடன்
வார்த்தைகள் கோர்க்கப்பட்ட
வரிகளுடன் நான்..............

பண்டு முதல் குறிஞ்சிப் புனங்களும்
பரந்த தண் பணைகளும் நிலை
ஈண்டு சிறந்தோங்க
முல்லைப் புறமும் நெய்தலும் துலங்க
கலை வளம் நிறை பல கவிககளின்
மலையென உயர் தந்தைகள்
வளர் பதி தேனூர் காண்................

பட்டுத்தமிழ் உடுத்தி பாங்காக
தேனூர் உள்ளங்களின்
கட்டுத் தமிழ் எண்ணங்களை
சிங்காரச் சிந்தாக சில் இசையாக
நட்டுத் தமிழ் மனதில் மண்வாசனை
கொட்டித் தமிழாண்மைக் குலத்தில்
விளைந்த தமிழ் நதியாய்
முந்தி வந்தான் தருமரெட்ணம் ...

குழைந்த இன் தமிழ பேச்சாலும்
கவிததும்பும் புலமைச் சிறப்பாலும்
விளைந்த"தேனூரான்"அடை கொண்டு
இவன்
புலமை மிகு தமிழில் வழியாய்
நுழைந்த ஆசான்களின் அறிவு மிகுதியால்
இலக்கண இதிகாசங்கள் தன்னுள்
விளங்க கருக செயுள்ளும்
நடை பயின்றன இவன் நாவில்....

இல்லந்தனிலே வண்ணக் கல்வியால்
இதிகாச புராணங்களை ஏற்றிட்ட
அண்ணல்............
பயிரான தமிழுக்கு
உரமான விருத்த அகவல்கள்
இயற்ற வல்லான்
நயப்பான நாடகக் கலையிலும்
திறமான நாட்டுக் கூத்திலும்
நம்பியானவன்
வளமான விருத்தங்கள் பல
கூத்துக்களுக்கு ஆகியளித்து
தமிழுக்கு வழியான தருமகனாய்
தமிழான வரனாய்
சைவத்திருமகனாய் நின்று
இன்று ..!
"கலாபூசண" விருது கொண்டு
தமிழ்ப் பெருமகனாய் நிற்கிறான்
தமிழை வென்று ....

ஈழமென்ற பேர் கேட்டு எத்தனையோ
இதையத் தாமரைகள் பூக்கும்
இவன் இதயம்
தேனூர் என்ற பேர் கேட்டுத் துடிக்கும்
தேனூர் கை கொடுக்கும்

சந்தக் கவி இசைப் பாடல்கள்
எழுதவல்லான்
நந்தமிழ் நாவலன்
இந்தக் கவிகளுக்கரிதாக உள
எந்தக் கவியும் இயற்றும்
கவியரசன்
தந்துரை
வளம் பெறப் பாடும்
அமுதன்

உனக்குத் தெரியுமா
விழி இமைத்திருக்கையில்
உற்று நோக்கியிருக்கையில்
உன் கவிதைக் காவியகள்
ஈழ மனப்பளிங்குகளில்
பொன் கொண்டு செதுக்கப்படும்
நாட்கள் மிக விரைவுபடுத்தப்படும்

காள மேகப் பூக்கள் இனி
கவிப் பூக்கள் தூவிச் செல்லும்

வாழ்க என்று தமிழ் கூறும்
பல்லாண்டு
தமிழ் வானம் கூட வாழ்த்தும்
உன்கவி கற்கண்டு
ஊனம் கொண்ட வரிகளும்
உன் தமிழ் நடை பயின்று
வளரும் கண்கொண்டு..........

வாழ்க நீ....
தமிழோடு புகழோடு............

பிடித்தது........ நன்றி சேரன்


இந்த நூறாவது பதிவு, என் தோழிக்காக...

முன்னறிவுப்புகள்
எதுவுமின்றி
ஒரு மழைநாளில்
வாழ்வில் வந்து சேர்ந்தாள்
தோழி என்றொரு
தேவதை!

காத்திருந்தது போல,
சிறகுகளைச்
சிருஷ்டித்துக்கொண்டு
உடன் பயணமாகத்
தயாராகியிருந்தது,
எனக்கு முன்
என் மனது

-----------------------

பேருந்து நெரிசலில்
பயணச்சீட்டு
வாங்கித் தந்ததும்
நன்றி சொல்லிப்
புன்னகைத்தாள்
அந்தப் பெண்

யாருக்குத் தெரியும்?

நாளை அவள்,
'என்னைப் பற்றியும்
எழுதுவாயாடா?'
என்று கேட்கும்
தோழியும் ஆகலாம்

------------------------

நானாக
இருந்த என்னை
யாரோவாகச் சமைத்தது
காதல்

யாரோவாகிக்
கிடந்த என்னை
மீண்டும்
நானாக்கிக் கொடுத்தது
நட்பு

------------------------

எதை எதைப் பற்றியோ
பேசிக் கொண்டோம் நாம்

யார் யாரோ பேசிக்கொண்டார்கள்
நம்மைப் பற்றி

நம் பேச்சில் பெரிதாக
சுவாரசியம் இல்லை
உண்மை இருந்தது

அவர்கள் பேச்சில்
சுவாரசியம் நிறைய இருந்தது
ஆனால்
உண்மை இல்லை

----------------------------------

விட்டுக் கொடுக்கிறேன்
அல்லது
விட்டுக் கொடுக்கிறாள்
வளர்கிறது காதல்

சண்டையிடுகிறேன்
அல்லது
சண்டையிடுகிறாய்

``நன்றி சேரன்

Tuesday, September 15, 2009

காதல் வலி

நீயாக வீழ்ந்து கொள்ளவுமில்ல
நானாக மாட்டிக்கொள்ளவுமில்ல
தானாக நாமானோம்
இன்று
நீ நீயாக
நான் மட்டும்
யாரென்று தெரியல
ஏனென்றும் புரியல

இன்னும் உன்னிடம்
அடகுவைக்கப்பட்ட
என்மனது
வங்கியில்
மீட்கப்படாத என்வீட்டு
தங்கச்சங்கிலி போல

தொலைதூர தென்றலும்
என்மனசை
தொட்டுவிட்டுச் செல்லும்
உன் எஸ்எம் எஸ்
படிக்கையிலே

இந்த வேகார வெயிலிலும்
செருப்பிலாமல் நடக்கத்தோன்றுது
நீ விட்டுச் சென்றதாலே

ஆனாலும்
சுகம் காணும் காதலை விட
வலி பிடிச்சிருக்கு

கண்ணன் காதல்

ராதையர் கூட்டத்தில் அவன்
கண்ணன்
கருப்பு மன்னன்
விரும்பிச்சுவைக்க வேண்டுகிறான்
காதல் கரும்பு
காற்றுக்கு கூட தெரியாது
என நினைத்தான்
காட்டுத்தீயாய் ஆனது அவன்
காதல் தான்

புல்லாங்குழல் ஏந்திய
அவன் விரல்கள்
அந்த அழகிய புல்லாங்குழலை
மீட்ட முடியாமல் தவிக்கிறான்
காற்று புகாவிட்டால்
விரல்களை அசைத்தும்
புல்லாங்குழல்
பாடல் இசைக்காது
அவளுக்கு
காதல் வராவிட்டால்
கட்டழகு கண்ணனுக்கு
கவிதை வராது


எத்தனை துளைகள் இருந்தும்
என்ன பயன் புல்லாங்குழல்
அவள் பெயரை இசைக்காமல் இருந்தால்

ஊர் சுத்தி திரியும்
வாலிபன் தான்
அவன்
உள்ளத்தில் காதல்
நெருப்பு

ஆனாலும்
அவன் நெஞ்சில்
ஈரம் துளிக்கும்
காதல் இனிக்கும்

Monday, September 14, 2009

வசிகரா .........

விழி விதைத்து
மொழி தடுத்து
உளி கொடுத்து
கவிதை செதுக்க வைத்து
உயிர் கொடுத்து
உறவுக்கு வழி வகுத்து
உணர்வுக்கு மொழி கொடுத்து
என்னை வசீகரித்தவனே
மலரின் மணமாய்
வாழத்துடிக்கும்
மனம் புதைத்து
எங்கே உன் பொன்மடிஎன
தேடும் தினம் உன்னை நினைத்து

மொட்டுவிட்ட நிலவு
தொட்டுவிட்டது இரவை
கட்டவிழ்ந்த விண் மீன்கள்
சட்டென்று எழுந்தன
புது உறவில்
கண்டுவிட்ட மேகம்
அட்சதை பொழிய
என் கண்களில் பட்டுவிட
உணர்வுகளைத் தொட்டுவிட
எங்கே உன் பொன்மடி என
மனம் தேட தினம் தூங்க

உனக்கென பிறந்தேன்

குலுங்கும் வளையல்
சிணுங்கும் கொலுசு
உன் பெயர் சொல்ல
விரும்பும் மனது
முத்தாக நீ மாற
மூடும் சிப்பியாக
என் உயிர்க்கொடி
பூத்ததென்ன........!!!

கண்நிறை அழகு
பொன்நிற மேனி
குளிர் நிறை விழிகள் கொண்டு
பெண்ணென உருவெடுத்தது
உனக்காகத்தான் அன்பே.......

Sunday, September 13, 2009

உள்ளம் கொள்ளை போகுதே....


எழுதும் கவிதை
வரையும் ஓவியம்
செதுக்கும் சிற்பம்
முழுதும்
ஒரே அர்த்தமாய்
கொள்ளைபோன என் உள்ளத்தில்
நீ ஆனாய்
அள்ளி நீ எடுக்க இன்னும்
என்ன இருக்குது
என்னிடம்...

என்னை நீ நோக்க
உன்னை நான் நோக்க
மண்ணை  நீ நோக்க
உன் மனம் என் மனம் நோக்க
மகிழ்வில் நான் குதிக்க
இமைத்திடாத விழிகள்
அசைந்திடாமல் நோக்க
கொள்ளைபோன உள்ளத்தில்
இசைத்திடாத கவிதை
மலர்ந்தது புயல் தாக்க

கிராமிய ஏக்கம்

மாமரத்தோப்புல ஆவாரம் பூ
நீ சூட எனக்கு
மாங்குயிலே பாட்டுப்பாடி
மயிலே ...குயிலே......
மல்லிகைப் பூவே என்றாயே
மாமரத்தோப்பு
சுனாமியில் போயிற்று
ஒன்னப்போல
ஒன்பாட்டு மட்டும்
மனசுல இருக்கு
நெசமா..


இட்டடி கண்டு என்மேல
நீ வெதைச்ச கண்ணால
ஏன் கால் கொலுசு சிணுங்கமுன்
கிட்ட நிண்ட ஒன்ன
எட்டிப்பார்க்க முடியாம
ஏன் கைவளையல்க நழுவ
நீ பிரிய நெஞ்சம் காய
வந்து சேர கவிதை மலர
நான் பட்ட பாட
தொடைகிற மருந்து
ஏன் உள்ளத்தில
உறவுப்பாலம் கட்டிய
உன் பாச விழிகளின்
காதல் வார்த்தைகளே ......

Saturday, September 12, 2009

என் முதல் காதல்..

கற்பனை உலகை எட்டும் போது
கவிதை வரவில்லை
கண்கள் உனைக் கண்டபோது
வரிகள் வந்தது கவிதை
வடிவம் பெற்றது

உன் வார்த்தைச் சிதறல்கள்
என் இதயத்தில் பதிந்த
கவிச் சுவடுகள்..
உன் கண் சிமிட்டும் சந்தத்தில்
என் மனம் திண்டாடியது
காதல் பந்தத்தில் அன்றுதான்
நான் தடுமாறிய முதல் தினம்

தூரிகை உதடுகளால் வரைந்த
உன் புன்னகை ஓவியங்கள்
இப்போதும்
என் நெஞ்சினில்
நீ ஒரு
மொனாலிசாவாக....

உன்னோடிருந்த நிமிடங்களை
கடிகாரம்
திரும்பத் திரும்பக் காட்டுகையில்
மறக்க முடியவில்லை
உன்னையும் நீ விட்டுச் சென்ற
என் காதலையும் ....

நீ விளையாடிய
என் முதல் காதல்
உன் நினைவுகளைச்
சேர்த்துக்கொண்டு
மறு ஒளிபரப்பாகுது
இன்னும் என் மனசில்
மெகா சீரியலாக.....

அர்த்தங்கள் நிறைந்த மௌனம்

எத்தனை தடவைதான் என்
பார்வை அம்புகள்
உன் மேல்....
உன் மௌனத்தைக்
கலைப்பதற்கு

உன் மௌனம் என்னைக்
கொல்கிறதா
கொள்ளையடிக்கிறதா.........???
இன்னும் புரியாமல் நான்
உன் பின்னால்

என்னை என்றும் காதலிப்பதை
மௌனமாக சொல்கிறாயா
இல்லை
காதல் மௌனமானது என்கிறாயா ?????

நம் காதலின் சக்தி
பேசும் ஒலிச்சக்திகளால்
வீணாகி விடாமல் காதலுக்கு
சக்தி சேமிப்பா ??
சொல் மௌனமாய் ஒரு வார்த்தை

வார்த்தைகளுக்காய் எத்தனையோ
கவிஞர்கள் காத்திருப்பு ஆனால்
நீயோ எத்தனையோ
கவிதைகளை பிரசவிக்கிறாய்
அழகிய மௌனத்தால்....


நிலவைப் பார்த்ததும்
நான் ரசிப்பது
ஒளிக்கீற்றுக்களை அல்ல
அதன் மௌனத்தை தானடி
அதுதான்...
உன் மௌனத்தின் ஆழத்தில்
இன்னும் நான்
முத்தெடுக்கத் தவிப்பது

உன் மௌனத்துக்குள்
மூழ்கிவிட்டால் போதுமடி
காதலின் பாதி வாழ்க்கையை
வாழ்ந்துடுவேன்
மீதி வாழ்கையைப் பற்றியே
என் கவலை..


நீ
மௌனமாகவே இருந்துவிடு
இல்லையேல்
பிள்ளையார் பிடிக்கப்போய்
குரங்கான கதையாக
என் காதல் ஆகிவிடும்
என்ற பயம் எனக்கு........

Friday, September 11, 2009

செப்டம்பர் 11 தாக்குதலின் காட்சி ஒரு ஞாபகத்துக்காய்

இன்னும் இத்தாக்குதலைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதனால் என்ன லாபம் .. மறப்போம் .. (எப்படீங்க ???) அழிவுகளின் சுவடுகளை விடுத்து இனி ஒரு அழிவு வராமல் பாதுகாப்போம் (இனி வேறு விதமாகத்தானே டும் டும் எல்லாம் இருக்கும் )... தப்போ தவறோ திரும்பி அவற்றை மீட்டுக்கொள்ளும் போதுதான் நமக்குள் குரோத எண்ணங்கள் வளருகின்றன .... இனியாவது அழிவுகளை நினைப்பதை விட ஆக்கபூர்வமாய் சிந்திப்போம் என்ன சொல்லுறீங்க .....
ஏன்னா........ நம்ம KKகுடியிலையும் நடந்த சில மனக்கசப்பான உணர்வுகள் வெள்ளைக்கொடி குத்தவும் ஹர்த்தால் போட்டு ..... அப்பப்ப நம்மட எல்லா சனங்களும் நெனைச்சி உருகிறான்களோ என்னவோ .... லீவு மட்டும் தாறாங்கப்பா...

வேண்டாம் இந்த மாதிரி அழிவுகளின் நினைவுகள் .....

 
http://www.youtube.com/watch?v=J0Qu6eyyr4c&feature=player_embedded

Thursday, September 10, 2009

அம்மணிக்கு ஓர் வாழ்த்து..

குழந்தை நல வைத்திய நிபுணர் டாக்ட்ர் திருமதி சாந்தினி கணேசன் அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் இருந்து பிரியாவிடை பெற்று செல்லும் போது வாசிக்கப்பட்ட வாழ்த்து...


மண்ணில் தோன்றும்
மனிதர்கள் உருவில்
கடவுளைக் காணலாம்
என்பதன் அர்த்தம் உணர்ந்தோம்
உங்கள் பார்வையில்
அதுதான் இங்கு
எத்தனையோ குழந்தைகளின்
இதயங்களிலும் மருத்துவப்பால்
ஊட்டுகிறீர்களே !!!

எளிமையை உடுத்தும் உங்கள்
உடைகளின் வெளிச்சம்
ஏழ்மைக் குழந்தைகளின் இதயங்களில்
ஒளிர்கிறது.....

கடின உழைப்பில் ஒரு "கடிகாரம்"
கனமான பேச்சு திறத்தில்
சிறந்த "ஆளுமை"
கனிந்த உள்ளம் கலந்த தன்மையில்
ஒரு "தாய்மை"
உதவும் கரங்களால் பிறரை
நேசிக்கும் போது நமக்கு
ஒரு ""தெரேசா""....

அன்பின் வழியே
ஆண்டவனைக் காணலாம்
எங்கள் குழந்தைகளோ
நோயின் வழியே
உங்களைக் காண்கிறார்கள்

செய்யும் தொழில்
தெய்வம் என்னும் பணியில்
செய்யல் நிறை தையல் நீங்கள்...

வார்த்தைகளால் வடிக்கமுடியா
வானத்துயர்
வாழ்த்துக்கவிதை நீங்கள்....

கருணையின் வடிவம்
உங்களைப்போலவே
குழந்திகள் தான் எதிர்கால
விருட்ஷம் என்றார் அப்துல் கலாம்
அதுதானோ இந்த
சிறுவர் விடுதியில் உங்கள்
மருத்துவ உலா.....

நீங்கள் ஒரு விசித்த்ரக் கலவை
கருணை, நேர்மை,
தொழில், தர்மம்
அடக்கம், ஆளுமை
அன்பு ,பண்பு
எல்லாம் சரிசம விகிதத்தில்...

அப்பப்பா.......
எத்தனை எத்தனை சேவைகள்

இதயங்களில்
துவாரங்களால் துன்புற்ற
குழந்தைகளின்
சத்திர சிகிச்சைக்கு உதவும்
சரித்திரத்தை எந்த இதயங்கள்
மறக்கும்...

எண்ணம் இவ்விடுதியாக
எடுத்தியம்பும் வண்ணம் ஒரு
"விளையாட்டறை"
சிறுவர் மகிழ்ச்சிக்காக....

நாகரிக உலகில்
புட்டிப்பால் குடித்த குழந்தைகள்
வளம் பெரு "தாய்ப்பால்"
பரிகிக்கொண்டு இன்று
தாயின் மணிக்கொடியை
பற்றிக்கொள்ள வைத்தது
நீங்களே .........!

உண்மையில் பாரதி கண்ட
கனவுகளின்
ஒருமித்த கவிதைகளின்
"ஒளிவிளக்கு" நீங்களே........

உளநல தேவனை கரம்பற்றி
குடும்பநல
உதவிகரம் கோர்க்கும் உங்கள்
உளவியல் திறனை
என்னவென்பது....

கடிகாரத்தை பொய்யாக்கிவிடும்
உங்கள் சேவையின்
கருவாளம் புகுத்திவிட
என்னதவம் செய்தனரோ
உம்பெற்றோர்

இப்போது எங்களைவிட்டு
பிரிவதாய் எண்ணாதீர்கள்
எங்களை வளர்த்து ஆளாக்கி
சேவையில் விட்டுச்செல்கிறீர்கள்
உங்கள் சேவையின் வெளிச்சம்
எங்களில் மிளிர்வது நிச்சயம்..

வெற்றி தேவதையே
உங்களைச் சுற்றி வெற்றிகள்
இருக்க எங்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....

சில சில்லறைகள் ......

இணையத்தளம்
விரல் நுனியில்
உலகைக்காட்டும்
கண்ணாடி

புல்லாங்குழல்
அழுகிறது - பாவம்
அதுதான் என்ன செய்யும்
அந்தக்காற்று புகாவிட்டால்
இன்னும் அது
வெட்டப்பட்ட வெறும்
மூங்கில் குழல்தான்
அவனும்
அவன் காதலும்போல..............

நிலவு
இரவு வானில்
இறைவன் எழுதும்
வெளிச்சக்கவிதை

மேகம்
ஈர விழுதுகள்
காற்றில் நடத்தும்
மிதப்பு ஊர்வலம்

பனித்துளிகள்
மேகத்தில் சிதறி
இலைகளில் ததும்பும்
மோக மொட்டு
நழுவிய நழுவிய
விழுதுகள்

குடை
மலை நீரில்
விரிந்துகொள்ளும்
கறுப்புத்தாமரை

காதலி .........

என் முகவரி நீ
கவிதையின்
முதல்வரியும்
நீ......


உறவுக்கு வழிவகுத்த நீ
காதல் வளர்த்த தீ .... !
இனிக்கும் இத்துன்ப நோய்க்கு
மருந்தும் நீ ....


பத்துவிரல் கோர்க்க 
அத்துவிதமாய் சேரும் 
இன்பத்தூறல் கவிதைக்கு
கற்பனையும் நீ ....


என் விழிகளின் வலி உணர்ந்து 
கண்ணீரைச் சொரிந்தவலும் நீயே
விழி மூட வலி கொடுப்பவளும் நீயே
உன் ஈரவிழிப்பார்வை
கற்றுத்தந்தது
காதல் வாழ்வை...

காதல்

உன் உள்மனம் கண்டு 
ஓரவிழிப் பார்வைகளால்
வலியும் கொண்டு
வரமறுத்த வார்த்தைகளும்
சொல்ல துடித்த உணர்வுகளும்
தருகின்ற வரிகளால்
உள்ளக்காகிதத்தில் விழிகள் எழுதும்
மௌனக்கவிதை

நீ என்னை ஆளத்துடித்தாய்
நான் உன்னில் மூழ்க நினைத்தேன்
இருவரையும் குடித்துவிட்ட
அமுதசுரபி
காதல்

அந்த 
இரு (பால்) பூச்சிகளும்
விழுந்த 
ஒளிவிளக்கு

அவனும் அவளும்
சுவாசிக்கும்
இன்பக்காற்று.....



நெஞ்சே நெஞ்சே நீ எங்கே .... அயன்


ஹ ஹ ஹ

ஹூம் ஹூம்
ஹ ஹ
ஹூம் ஹூம் ஹூம் ம்ம்ம்ம்

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

என் ந‌தியே என் க‌ண் முன்னால் வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ என்னை தேடி ம‌ண்ணில் வ‌ந்த்தாய்

என் தாக‌ங்க‌ள் தீர்க்காம‌ல் க‌ட‌லில்
ஏன் சேர்கிறாய்.

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே.

க‌ண்ணே என் க‌ண்ணே நான் உன்னைக் காணாம‌ல்
வானும் என் ம‌ண்ணும்
பொய்யாக‌ க‌ண்டேனே.

அன்பே பேர‌ன்பே நான் உன்னைச் சேராம‌ல்
ஆவி என் ஆவி நான் ஏற்றுப் போனேனே

வெயில் கால‌ம் வ‌ந்தால்தான் நீரும் தேனாகும்
பிரிவொன்றை க‌ண்டால்தான் காத‌ல் ருசியாகும்

உன் பார்வை ப‌டும் தூர‌ம் என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சு ப‌டும் நேர‌ம் என் தேக‌ம் அன‌லாகும்

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

க‌ள்வா என் க‌ள்வா நீ காத‌ல் செய்யாம‌ல்
க‌ண்ணும் என் நெஞ்ஞும் என் பேச்சை கேட்காதே

காத‌ல் மெய் காத‌ல் அது ப‌ட்டு போகாதே
காற்றும் நாம் பூமி ந‌மை விட்டு போகாதே

ஆகாய‌ம் இட‌ம் மாறி போனால் போக‌ட்டும்
ஆனால் நீ ம‌ன‌ம் மாறி போக‌ கூடாதே

ஏ ம‌ச்ச‌த் தாம‌ரையே
என் உச்ச‌த் தார‌கையே
க‌ட‌ல் ம‌ண்ணாய் போனாலும்
ந‌ம் காத‌ல் மாறாதே

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ எனை தேடி ம‌ண்ணில் வ‌ந்த்தாய்

உன் தாக‌ங்க‌ள் தீராம‌ல் ம‌ழையே
ஏன் வ‌ருகிறாய்

ஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹா ஹ ஹ ம்ம்ம் ம்ம்ம்
ஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹா ஹ ஹ ம்ம்ம் ம்ம்

Wednesday, September 9, 2009

கலைந்து போன மேகம்

பகலும் இரவும் இணையும் புள்ளியில்
விழிகள் விளக்கேற்றிக்கொண்டன.....

நெகிழ்ந்து போனது நெஞ்சம்
தொலைந்து போனது இதயம்
உயிரும் கிள்ளி எடுக்கப்பட்டது
தள்ளி நின்ற உறவும் - கிட்ட வந்து
ஒட்டிக்கொண்டது
ஓ.............
காதல் வெற்றி பெற்றது அன்று.....

நேற்று
பட்டணத்துக்கு உன் பயணம்
பட்சணத்துக்கு ஏங்கும்
ஏழையாய் நான் ........

வேதனையில் இன்று
கலைந்து போனது என் காதல மேகம்

இன்னும் கரையினில் நான்
மோதும் அலைகளாய்
உன் நினைவுகள் !!!!!!!!

தேங்கிய உந்தன் நினைவுகள் சுமந்து
நிரம்பி வழியும் என் நெஞ்சம்
தாங்கிய கண்ணீரின்
வரிகள் கொண்ட கோலங்களாக
இன்னும் கொஞ்சம்.....
கண்ணீரின் வலி உணர்ந்து வரமறுத்த
கனவுகள் கூட சொல்லத்துடித்தன
காதல் கவிதைகள்

காணும் காட்சி எங்கும்
உந்தன் விம்பம்
கையில் எட்டா வண்ணம்
காட்சிப்பொருளாய்
நீயும்.......

எந்தன் உணவுகளைத் தூண்டி
உயிரின் கடைசித்துடிப்பையும்
நிறுத்திக்கொள்ளத் துடிக்குது
கனத்துக்கொண்ட காதல் இதயம்........

Tuesday, September 8, 2009

போய் வா

சில நினைவுகள்
நெஞ்சை அழுத்திய போது
கண்ணீரில் நீந்துவேன் - உன்னுடன்
போன் பண்ணி கதைக்கும் போது
உள்ளத்தின் கனம் குறைந்து
இதயம் இலேசாகும்
சந்தோசப்படுவேன் .......

உன்னைப் பிரியப்போகிறேன் என்ற
எண்ணத்தைக்கண்டு
இதையத்தின் வலி உணர்ந்து
கவிதை எழுதும் பேனாவை விட
கண்ணீர் முந்திக்கொள்கிறது
கனவுகளை நச்சரித்துக்கொண்டு ............
நினைவுகளை சுமந்துகொண்டு

இனி
நான் கஷ்டப்படும் போது
இங்கு நீ இல்ல
ஆறுதல் சொல்ல எனக்கு.........

எனது நினைவுகளுக்கு
நீந்தத்தெரியுமானால்
எப்பொழுதும்
உன் வாசல் வரும்
அன்புள்ள நட்புக்களை சேர்த்துக்கொண்டு

சந்தோசம் வரும் போது
உனக்குள்ளே புன்னகைத்துக்கொள்

சோகம் வரும் போது மட்டும்
போன் பண்ணிவிடு எனக்கு
ஆறுதல் மொழிகள்
ஆயிரம் ஆயிரம் என்னிடம்
இப்பொழுது
எல்லாம் உன்னிடம்
கற்றுக்கொண்டது தான்

உன் திருமுகம் என் கண்களில்
அழகிய புகைப்படமாய்
உன் புன்னகை என் நெஞ்சினில்
ஓர் இணையத்தளமாய்....

ஒரு பொய்யாவது சொல்

நித்தம் மௌனம் கலைத்து
சத்தம் போட்ட பூக்கள்
மரணித்துவிட்டதென எண்ணும்
விழிகளில் காதல தீ மூட்டிய
பூவே...........
உன்னால் உதிர்ந்த சருகுகளாலான
என்மனதை சாம்பலாக்கவாவது
உதிர்த்துவிடு
உன் புன்னகையால் ஒரு வார்த்தை

கண்ணாடி

நீ காதலை தராவிட்டாலும்
உன்
முகத்தின் வெளிச்சத்திலிருந்து
கவிதைகளைக் கண்டெடுக்க உதவினாயே
நன்றி

உன்னைப் பார்க்க முன்
எத்தனையோ முகங்கள் தெரிந்தது
உன்னைக்கண்ட நாள் முதலாய்
என் முகம் மட்டும் தெரியுதே

சிகரட்

கலைந்து போன காதால்
தோற்றுப்போன காளையவன்
கையிலுள்ள தீபந்தம்

நான் பிடித்துக்கொள்ள முன்
நீயே பற்றவைத்துவிட்டாய்

உன்னால் தோல்வியுற்ற எனக்கு
நீ தந்த நெருப்பு பரிசு........

உன்னை மறப்பதற்காக
தீ மூட்டிக்கொள்கிறேன்
ஆனால்
நெருப்பாய் உன் ஞாபகங்கள்
கூட்டிக்கொள்கிறது

உனக்கு தெரியுமா
என் சுவாசப் பாதைகளை
அடைத்துக்கொள்வது "சிகரட்" புகையல்ல
உன்னோடிருந்த "சீக்கிரட்" நிமிடங்களே ......

பிடிச்ச பாடல் அ ..ஆ ...

வருகிறாய் தொடுகிறாய்
போ...போ...
போ...போ...

வருகிறாய் தொடுகிறாய்
என்னை வெண்ணீர் போலே சுடுகிறாய்
வருகிறாய் தொடுகிறாய்
என்னை வெண்ணீர் போலே சுடுகிறாய்
போ... போ... என்கிறேன்
போகாமல் நீ நிற்கிறாய்
போ... போ... என்கிறேன்
போகாமல் நீ நிற்கிறாய்


வருகிறேன் தொடுகிறேன்
நான் பன்னீர் போலே விழுகிறேன்
வருகிறேன் தொடுகிறேன்
நான் பன்னீர் போலே விழுகிறேன்
நீ போ போ என்கிறாய்-ஆனால்
பொய் சொல்கிறாய்

போ...போ...

வர வர தான் அடிக்கடி நெருக்கடி கொடுக்கிறாய்
காதல் கடங்காரி-அடி
உலகில் எவளும் உன்னை போல் இல்லையே
அழகிய கொலைகாரி

குளிர் நிலவினை நெருப்பாய்
நினைக்கிற வெறுப்பாய்
நீ ஒரு அசடநடா - அட
உனக்கென உயில் நான்
எழுதிய வயல் தான் நீ இதை அனுபவிடா

அய்யோ... அம்மா ...நீ பொல்லாத ராட்கஷசி
ஏன்டி என் கற்போடு மோதுகிறாய்
நானா உனை வாவென்று கூவினேன்
நீயாய் வந்தென்னை ஏன் வாட்டுகிறாய்

உயிர் விடச் சொன்னால் உயிர் விடுகின்றேன்
உனை விடச் சொன்னால் உனை விடமாட்டேன்
இறுதி வரைக்கும் இருப்பவன் என்று
உறுதியை தந்து உதருவதேன்

ஓ தவித்தது போதும் தனிமையில் என்னை
இருக்க விடு என்னை இருக்க விடு இருக்க விடு
அன்பே இருக்க விடு

வருகிறாய்..

விடை கொடுத்தேன் விடு விடு விலகிடு
தினம் தினம் எனை ஏன் துரத்துகிறாய்
அடி இதய கதவை இழுத்தே அடைத்தேன்
எதற்கதை தட்டுகிறாய்

வங்க கடர்கறை மணலில்
மடியினில் கிடந்த நாட்கள் மறந்தாச்சா
உயிர் காதலை வளர்த்து பேசிய பேச்சு
காத்தில பறந்தாச்சா

ஏதோ ஏதோ நான் ஏதேதோ பேசினேன்
தூண்டில் நீ போட்டாய் நான் மாட்டினேன்
இன்று நான் விடுதலை அடைந்தவன்
அப்பாடா என் சுமைகளை இறக்கினேன்

தழுவிடும் இமையை தனக்கொரு சுமையாய்
நினைக்கின்ற விழிதான் கதையிலும் இல்லையே
கடல் என்று நினைத்து கலக்கின்ற நதிக்கு
உனை இன்றி இனி உறுதுணை இல்லையே

ஓ காதல் செய்தேன் நான் காதல் செய்தேன்
மறக்க விடு உன்னை மறக்க விடு
மறக்க விடு அன்பே மறந்து விடு
மறக்க விடு

வருகிறாய்...
வருகிறேன்...

போ...போ.
போ...போ.
போ...போ.

இசை ...........

கூவும் குயிலும்
ஊதும் குழலிலும்
கடலின் அலையிலும்
நதியின் வருகையிலும்
வீசும் தென்றலிலும்
பேசும் மொழியிலும்
இசை வாசம்
மோசம் போகா
உயிர்க்காதலின் வாசமும் இசைதான்
வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு