பின்னணி திரையிசைப்பாடகி சுவர்ணலதா மறைந்த சேதி. மிகவும் வேதனையளித்தது. ஏதோ ஒரு வகையில் நம்மை பிடித்தவர்களின் இழப்பு மனதில் கனத்த இதயத்தை ஆக்கும். இறப்பு தவிர்க்க முடியாதது. அந்தவகையில் பாடகி சுவர்ணலதாவின் இழப்பும்.
போறாளே பொன்னுத்தாயி ...
எனது ஆழ்ந்த அஞ்சலி ... எப்போதும் உங்கள் ரசிகன் நான். பாடல்களின் உயிரில் வாழ்வீர்கள் இதயத்தில் அஞ்சலிக்கிறேன்
இவர் பாடிய பாடல்களில் இவருக்கும் ஏ.ஆர். ரஃமானுக்கும் வைரமுத்துவுக்கும் பெருமை சேர்த்து தந்த பாடல். கருத்தம்மா படத்தில் இவர் பாடிய பாடல் "போறாளே பொன்னுத்தாயி......". இந்தியாவில் தேசிய விருது பெற்ற பாடல். இந்தப்பாடல் அப்போதே எனக்கு பிடித்தாலும் அவ்வளவாக இப்பாடலை மனதில் வைத்திருக்க முடியவில்லை.
ஆனாலும் பாடல்கள் என்பது பொதுவாக அதன் இசையும் வரிகளும் சேர்ந்து எம்மை அதே பாடல்வரிகளிலும் இசையிலும் இருத்தி எம்மை அந்த பாடலின் சூழ்நிலைக்குக் கொண்டு செல்வது மறுக்க முடியாது. வழமையாக சோகப்பாடல்களை விரும்பாத எனக்கு இந்தப்பாடல் என்னை திசைமாறாமல் வழிப்படுத்தியது நான் உற்ற சோகத்தில் ஆழ்ந்தபோது சில வருடங்களுக்கு முன்னர் நண்பன் ஒருவனின் நட்பை இழந்த போது
"விழிகளின் ஓரத்தில்
ஈரத்தை இருத்தி
பாரத்தை இறக்கி வைச்ச
அந்தப் பாடல் ....."
போறாளே பொன்னுத்தாயி பொல
பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோரும் தந்த
மண்ணை விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்துக் கோழியை விட்டு
போறாளே பொட்டப் புள்ள
ஊரை விட்டு
சாமந்திப் பூவா
ஊமத்தம் பூவா
கருத்தம்மா எந்தப் பூவம்மா?
அஞ்சாறு சேவல்
உள்ளூரில் ஏங்க
பொதி மாட்டு வண்டி மேலே
போட்டு வச்ச மூட்டை போல
போறாளே பொன்னுத்தாயி..)
நீ வச்ச பாசம்
நீ சொன்ன நேசம்
கடைசியில்
ஊமையும் ஊமையும்
பேசிய பாஷையடி
தெக்கத்தி காத்து திசை மாறி வீச
ஒன்னோட மேகம் ஓடுதடி ஓடுதடி
உசுருள்ள நாக்கு ஒன்னு வாடுதடி வாடுதடி
கடைசியில் சாமிக்கு நேர்ந்தது சாதிக்கு ஆனதடி
நெஞ்சுக்குழி காஞ்சு நெடுங்காலம் ஆச்சு
ஒரு உயிர்
வீட்டுக்கும் காட்டுக்கும் கூட்டுக்குள் இழுக்குதும்மா
சேமித்த காசு செல்லாமப் போச்சு
சொல்லாத சொல்லு பாரம் அம்மா பாரம் அம்மா
சோத்துக்கும் சொந்தத்துக்கும் தூரமம்மா தூரமம்மா
பொறு பொறு
ஏழைக்கும் வாழைக்கும் நாளைக்கு நன்மையம்மா
(போறாளே பொன்னுத்தாயி..)
(சாமந்தி பூவா..)
(போறாளே பொன்னுத்தாயி..)
படம்: கருத்தம்மா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சுவர்ணலதா
வரிகள்: வைரமுத்து
(பாடல் வரிகள் தேன்கிண்ணத்திலிருந்து. நன்றி தேன்கிண்ணம் )
Showing posts with label சுவர்ணலதா. Show all posts
Showing posts with label சுவர்ணலதா. Show all posts
Sunday, September 12, 2010
Subscribe to:
Posts (Atom)