Pages

Thursday, September 30, 2010

இரங்கற்பா

தேத்தாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலய வண்ணக்கர்
அமரர் கந்தப்பெருமாள் பரமலிங்கம் அவர்களின் மறைவுக்கு
இரங்கற்பாகுடிமரபின்கண் மக்கள் வாழ்
கோயில் வளர் தேனூர்
பதிவளரும் தமிழ் இயல்பினை
ஒட்டி பழம்பெரு பேனாச்சி
குடியின் பேர்கொண்ட
நீள் தலைவனே!

இன்று பரமனடி நீ சேர்ந்து
பரிதவிக்க எமை விட்டனயே!!
கார்மேகம் கலங்கி
கண்ணீர்ப் பூக்கள் தூவிச்செல்லும்.

கண்ணியமிகு காலனவனின்
கையினில் நழுவலாமோ...?
நீ செய்த சேவை போதுமென்று
எம்கண்ணில் விழுநீர் கங்கையாக
விட்புலம் சேர்த்தானோ எம்பெருமான்

கொம்புச்சந்தி பிள்ளையார்
ஆலய பரிபாலனசபை செயலாளராய்
பாலமுருகன் கோயில்
கண்ணகையம்மன் கோயில்
வண்ணக்கராய் நீவீர் ஆயினயே

கோயில் கோயில்
நடை நடந்து இன்று
இறைவனடி சேர்ந்தனயே
சிந்தை கலங்குதையா
நீ பிரிந்ததிலே
உன் ஆத்மா ஆறுதலடையட்டும்
உன் நித்திரை பூரணமடையட்டும்
இதய அஞ்சலி

Tuesday, September 28, 2010

இது ஸ்டேடஸ் - 06

"சந்தோசமும் இன்பமும் நமது செயல்களே தரும்.
மற்வர்களுக்காக நீ வாழ்கிறாய் என்று சொன்னால் உனக்காக யாரும் வாழமாட்டார்கள்.
ஆக நீயாக உனக்காக வாழ்"

"என்னால் செய்யப்பட்ட உதவிக்காக அதே உதவியை எனக்கு, உடனே செய்யவதை விட, கைமாறாக உதவி தேவைப்படும் வேறொருவருக்கு தருணத்தில் செய்துவிடுங்கள். உதவுதல் சங்கிலியாய் தொடரட்டும். தேவைப்படும் போது நானே கேட்பேன் # பார்த்தது பிடித்தது## அனுபவமும் கூட"

"அவன் திருந்திரானுமில்ல கேட்கிறானுமில்ல.
என்னைத் திருத்திக்கொண்டிருக்கிறான் என்று தான் சொல்லத்தோன்றுகிறது.
அமைதியும் அடக்கமும் அதிகரிக்கிறது"

"எதிரி எப்போதும் எதிரியே நண்பன் தான் அடிக்கடி பரிசீலிக்கப்பட வேண்டியவன்" ##படித்தது பிடித்தது##

"நிகழ்வுகளின் நிழல் படங்களும் அவற்றைப் பகிர்தலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
நான் இல்லா வேளையில் யார் பகிர்வார் எனக்காய் என்று ஒரு ஏக்கம்"

"இதுவரை நல்லாத்தான் இருக்கு இனியும் நல்லாவே நடக்கும்"

"என் தவறுகளைத் திருத்திக்கொள்வதில் எப்போதும் ஆவலாய் இருப்பேன்.
எங்கு தவறிழைக்கின்றேன் என்று சொன்னால் தானே எனக்கு விளங்கும்"

"தவறுகளில் ஏதும் இருப்பின் தண்டனை கொடுங்கள்.
கொடுக்கும் போது காரணத்தையும் சொல்லிவிடுங்கள்.
மன்னிப்பு வேண்டாம்."

"ஒரு தந்தை குடும்பபிரச்சனையால் தன் பிள்ளைகளை பிரிந்திருந்து பல வருடங்களின் பின் இணைந்த மகிழ்ச்சியில் மனம்.
இணையக் காரணம் நானும் ஒருவானாக."

"முழுமனதுடன் இல்லாவிட்டாலும் சில மணிநேரம் செல்கிறேன்...."

"மற்றவர்கள் போல் இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது நீயாகவே இருந்துகொள்"

மட்டக்களப்பு கல்லடிப்பாலம் புதிதாக அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. பல வருடமாய் இளுபறி நிலையிலிருந்து இப்போது வேலைப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.

Monday, September 27, 2010

கரைதல்

மழை

உண்டு உய்த்து
கண்டு நுரைத்து
அண்ணாந்து
மென்று விழுங்கி
தலைகோதி
மயிர்ப்புடைத்து
கரைகின்றேன்
சர்க்கரையாய்


பழைய பதிவொன்னு பெய்யெனப் பெய்க

பாசம்
வேதனையின் வெப்பத்தில்
உகுக்கும் ஆயிரம்
கண்ணீர்த்துளிகளையும்
அத்தனை கஸ்டத்தையும்
உன் ஓரவிழியில் கசியும்
ஒரு சொட்டு
அடக்கிவிடுகிறது

ஆறு குளம் கடல்
எவ்வாறு ஆனது என்று
உன் ஒரு சொட்டு
கண்ணீர்ப்பூ
கண்டுபிடித்து தருகிறது
'அம்மா'

Sunday, September 26, 2010

சிதறும் சில்லறைகள் - 04 (ஆற்றுப்படுத்தல்)

இன்றைய தினம்:

"உலக இருதய தினம்". இத்தினம் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் 26 ஆந்திகதி 1999/ ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.
இவ்வருடத்திற்கான தொனிப்பொருள் "ஆரோக்கியமான வேலைத்தளத்தில் உங்களுடைய இதயத்திற்கு பொறுப்பானவர்களாய் இருங்கள்"
"Workplaces Wellness: Take responsibility for your own heart health"

"World Heart Day, which used to take place every year on the last Sunday in September, is organized by the World Heart Federation, and has been celebrated annually since 1999. As of 2011, World Heart Day is celebrated every 29 September"


நமது மனம் கஸ்டப்படும் பொழுதுகளில் எமது இதயம் பலவீனப்படும் என்பது யாவரும் அறிந்ததே.அண்மைக்காலமாய் பல வேதனைகளில் துன்புறும் போது நமது இதயம் பாதிக்கப்பட்டு பல இதய நோய்களுக்கு ஆளாகிக் கொண்டிருப்படுத்தை அனேகர் அறிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனாலும் இதய நோய்களுக்கு காரணம் பல இருக்கலாம். மனவேதனைகளும் இதயத்தை பலவீனப்படுத்துவதை தவிர்ப்பதற்கே இத்தினம் கொண்டாடப்படவேண்டிய தேவையும் இவை பற்றிய ஒரு விழிப்புணர்ச்சியும் அவசியம். அனேகமாக சமுதாயம் என்ற சமூகச் சூழலில் நாம் வாழவேண்டிய பொழுது இன்ப மற்றும் சந்தோசச் சாயத்தைப் பருகிக்கொள்ள முடியாமல் இருப்பதாலேயே பல சிக்கல்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் நாம் ஆளாகின்றோம். இதற்காக நான் எங்கேயோ கேட்ட விடயம் இதயபலவீனமாவர்களுக்கு அல்லது இதய நோயாளிகளுக்கு "இசை" மருத்துவம் மிகச் சிறந்தது.
ஆனாலும் இதயச்சுமை மனதினால் ஏற்றப்படும் வலி இவற்றைக்குறைப்பதற்கு சரியான தொடர்பாடல், இளகிய சொல்லாடல், இனிமை ததும்பும் பேச்சு, புன்சிரிப்புடனான உறவு, கோபம்,ஆத்திரம் தவிர்த்து உறவாடும் போது மற்றவர்களின் மனதை வருடும். அவாகளிகன் இதயத்தின் வலிகளை நாமே குறைக்கலாம். அவ்வாறே நமது இதயமும் இலேசாகும் என்பது வலிமை தருகிறது.

என் பாரம் அதிகரிக்கும் தருணங்களில் அம்மா அப்பாவிடம் அழுதுவிடுவேன் அவர்கள் எனக்காக பகிரும் அந்த பாசத்தில் அதிக சுமைகளைக் குறைக்க நேரிட்டாலும் இது எனது பலவீனத்தைக் காட்டுவதாய் உணர்கிறேன்.

ஆனாலும் மற்றவர்கள் உளரீதியாக கஸ்டப்படும் பொழுது அவர்களை ஆற்றுப்படுத்தல் சிறந்தது. அது அவா்களுக்கு எப்போதும் துணையாக நீங்கள் இல்லாவிட்டாலும் உங்கள் சொற்கள் அவர்களை எப்போதும் இயல்பாக வைத்திருக்க உதவும் என்பது எனது அனுபவம்.
அதேபோல் நமது மனக்கஸ்டங்களுக்கு பரிகாரமாய் நாம் ஒவ்வொருவரும் மாற்றுவழிகளைக் கையாளும் போது மற்றவர்களைப் பாதிக்கா வண்ணம் இருக்கவேண்டும்.இல்லையேல் மாற்று வழியே மாறுதலாகிவிடும்.

நேற்றைய பொழுது
எங்க ஊர் பாலமுருகனுக்குத் திருவிழா. அதற்காக பட்டெடுத்தல் நிகழ்வு நடைபெற்றபொழுது பிடித்த ஒரு மாலைநேரக்காட்சி.


"மூன்று நாள்
சொர்க்கம்" -சுஜாதா


பாடசாலை மாணவர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய ஒரு புத்தகம் அழகாக சித்தரித்து எழுதியிருக்கிறார் சுஜாதா. வாசிக்கும் போதே இது நம்ம பார்த்த சம்பவம் போல இருக்கு
என்கிற உணர்வை எத்தனிக்கிறது. வாசிக்கவேண்டும் அனைவரும். கதைகள் புனைவுகள் என்றாலும் கருத்துக்கள் ஆழம் பார்க்கப்படவேண்டியது.
சாண்டில்யனின் சரித்திர நாவல்களில் புதைந்த மனது இப்போது சில தடங்களில் சமூகத்தில் பாய்கிறது.நிலைபேறாத்தன்மை

பெரும் புலமை வாதிகள் தாங்கள் முன்னேறி எங்கள் கலை இலக்கிய நிகழ்வுகளை வெளிநாடுகளுக்கும் பேட்டிகளுக்கும் கொண்டுசெல்வதை வரவேற்கிறேன்.ஆனால் அவர்களால் ஏதாவது அதே நிகழ்வை எமது கிராமமட்டங்களில் செய்யமுடியாமல் இருப்பது, அல்லது செய்யத்துணியாமல் இருப்பது வருந்தத்தக்க விடயம்.

அதேபோல் தங்களுக்கு பின் வாரிசாக தங்கள் பிள்ளை அல்லது உறவினன் மட்டும் வரவேண்டும் என்று எண்ணிக்கொள்வது எமது கலை இலக்கியங்களின் நீடித்து நிலைக்கமுடியாத தன்மையைக் காட்டுகிறது. நிறையத் திறமையுள்ள மாணவர்களை வழிநடத்தாமல் இருப்பது கவலையளிக்கிறது. அவர்களுக்கு உந்துகோலாக இருக்காமை வெறுக்கிறது எனக்கு.

இது பல்கலைக்கழக மட்டத்திலிருந்து எங்கும் இருக்கும் விடயம். தாங்கள் புலமை வாதிகள் என்றால் அந்த நூற்றாண்டு அப்படியே அவர்கள் மட்டுமே வாழவேண்டும். தங்கள் காலத்தில் வேறு ஒரு மாணவனை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் அனேகர் இல்லை.இதனை விளங்கிக்கிக்கொண்டு நீடித்து நிலைக்கவேண்டிய தன்மையை ஏற்படுத்த முயலவேண்டும் என்பது எதிர்பார்ப்பு.

சிலருக்காக அல்லது சிந்தனைக்காக

மு.மேத்தாவின் சில வரிகள்

"நான் எனக்குள்ளேயே செத்துப்போனாலே தவிர
என்னை எவராலும் புதைத்துவிட முடியாது என்பதை நான் புரிந்து வைத்திருக்கிறேன்.
அதனால் தான் - நான் இழப்புக்களின் மத்தியிலும் எழுந்து நிற்கிறேன்.
சோகங்களில் மூழ்கிப் போகாமல் சுறுசுறுப்போடு சுற்றி வருகிறேன்."

Thursday, September 23, 2010

நானும் இன்னும் பிற..

வாழ்க்கையின் அந்தங்களைத் தொடாவிட்டாலும்
அனேக
அத்தியாயங்களை புரட்டிப்பார்க்க முடிகிறது
என்னால்

நிலவைப் பற்றிக் கவலைப்படவில்லை
விண்மீன்களின் வெளிச்சம் போதும்
என் பாதைகளில் நடந்துசெல்ல

காற்றின் ஈரங்களில்
சிறகுகளை உலர்த்தும்
என்மனம்
இசைகளை எப்போதும் ரசிக்கும்

ஆறுதல் மொழி ஆயிரம் சொன்னாலும்
அழுதுவிடுவேன்
அவர்கள் அகன்ற பின்னால்

எத்தனை கவலைகளை
களைய முடிந்தாலும்
என் கண்ணீர்
அம்மாவின் கைகளாலே
துடைக்கப்படுகிறது

Wednesday, September 22, 2010

இது ஸ்டேடஸ் - 05

"உன்னை உயர்த்திக்கொள்வது உன் செயல்களும் நீ பேசும் அழகிய சொற்களும்
நீயாக உயர்த்திக்கொள்ள முயற்சிக்காதே"

"ஆசைகளைத் துறக்கவேண்டும் என்று புத்தர் ஆசைப்பட்டார்". #படித்தது பிடித்தது #

"எத்தனை தடவை சிரித்து பேசி
எப்படிமா இருக்கிறாய் என்ற போதும்
கண்களின் ஓரத்தில் கண்டுபிடிக்கிறாள்
நுரைத்துக்கொண்ட கவலையை என் அம்மா"

"உன்னை வாழவைக்க உறவுக்காரன் தேவையில்லை.
முயற்சிகளை எடுத்து நீயாக வழிநடத்து உன்னை.
மற்றவர்களின் பல்லை விட உனது முரசு எவ்வளவோ மேல்"


"பிறரின் சந்தர்ப்பங்களை அவர்களுக்கு வழங்குங்கள்.
தடையாக நீங்கள் இருந்தால் உங்கள் சந்தர்ப்பங்கள் நழுவிப்போய்விடும்.
தவறிவிடுவீர்கள்"

"யார் யாருக்கோவாக நான் அவஸ்த்தப்பட வேண்டி இருக்கிறது. அவர்கள் திருப்திக்காக"

"என் இதயவீட்டின்
'மம்மி' ஆனவளே
உன்னையே வீடாக்கி
உறவாக்கிய அந்த பத்து மாதங்கள்." #எங்கேயோ படித்தது#

"மகிழ்ச்சியான விடியல் இனிய பாடலுடன் ..........."

"நான் காணாமல் போன கணங்களில்
மெல்லிய பாடல்களே என்னைக் கண்டுபிடித்துத் தருகிறது
இரவுவணக்கம் சொல்லிக்கொண்டு....."

"நான் விழுந்து எழுந்ததால் தான்
உங்களுக்கு விழுதலும் எழுதலும் பற்றி சொல்லமுடிகிறது"

"நீ என்னை வெறுப்பதால் உலகம் உன்னை வெறுக்கும் காரணம் நான் பூமியானவன்"


"மற்றவர்களை அன்பால் நோகடிக்கிறது என்பதில் ஒரு திருப்தி இருப்பதை இந்த மனசும் ஏற்றுக்கொள்கிறதா... அன்பால் இணைக அன்பு பகர்க"


"கரடியனாறு விபத்தில் உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்தியடையட்டும். துருதுருத்த கவலைகளில் இருக்கும் அவர்களின் உறவுகளுக்கு அனுதாபங்கள்"

"காத்திருங்கள் உங்களுக்கான நேரம் தயராக இருக்கும் பயன்படுத்திக்கொள்ள
அதற்காக முயற்சியின் படிகளில் ஏறத்தவறாதீர்கள"

"எழுத்துக்களுக்கு அங்கிகாரம் வழங்கப்படுகிறதா எழுத்துக்களால் உணர்வு எழுதப்படுகிறதா என்று ஆதங்கப்படும் சராசரி எழுத்தாளனாய் காதலும்"

"ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்துகொள்ள அவரின் வார்த்தைகளைக் கேளுங்கள் மனசின் ஆழம் செல்லலாம்"

"மற்றவர்களுக்கு வாழ்த்துச்சொல்லும் போது சந்தோசம் அமையட்டும் என்று சொல்லுதை விட சந்தோசமாய் இந்நாளை அமைத்துக்கொள்ளுங்கள் என்று பகிர்வோம்"

 இப்பூவின் விஞ்ஞானப்பெயர்: Vinca rosea(ஹபரண வைத்தியசாலையில் கடந்தவாரம் கிளிக் பண்ணியது. தமிழ்ப்பெயர் யாராவது சொல்லுங்கோ)

Monday, September 20, 2010

பாடலும் அவஸ்தையும்


இசை எப்படி ரசனையாகிறது என்பது சொல்லித் தெரிவதில்லை. இசையின் தாக்கம் இதயத்தில் இசையும் என்பது இயற்கை. நான் என்ன விதிவிலக்கா இசைக்கு. இதனாலேயே ஒவ்வொரு இசையையின் ரசனையில் உழன்று என்ன என்ன மனசுக்குப் பிடிக்கிறது என தேடிக்கொள்ளும் சராசரி மனிதனில் நானும் ஒருவன்.
ஆனாலும் இசை என்னும் போது காலையின் காட்சியை அலங்கரிக்கும் இயற்கையை துயிலெழுப்பும் அனைத்து கிராமத்து இசையையும் சுவைத்து ரசனை எனும் தண்ணீரில் மூழ்கிவிடும் ரசிகன் நான். இதனை எழுத்துக்களில் கொணர்வது முட்டாள் தனம் என நினைக்கிறேன்.

"ரசியுங்கள்
கேளுங்கள்
இதயத்தின் சுவர்களில்
இதயம் தன்னை
அடயாளப்படுத்திக்கொள்ளும்
இசையின் எழுச்சிகளால்"

இந்தப்பாடல் நான் பதினொருவயதுகளில் எனது காதுகளை துளைத்து நெழித்த பாடல் "காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே"
ஒவ்வொரு இதயத்திலும் இந்தப் பாடல் இசைத்துவிடும் இசை விதைத்துவிடும் ரசனையை. இல்லை என்று மறுப்பதற்கு நெஞ்சம் மறுத்துவிடும் வைரமுத்தான வரிகள். காதலின் அவஸ்த்தையை ஒரு ஆணின் காதலை கண்ணீரில் எவ்வாறு படம் பிடித்துக்காட்டப்படுகிறது என்பது மெய்மறப்பது என்றால் இது என்பதை ஒருமுறைசொல்லிவிட்டும் போகும்.
என் நினைவில் நீ இருப்பதால் நெஞ்சை விட்டு எவ்வாறு பிரிந்துகொள்ள முடியும் உன்னால் காதலியே நீ இல்லாத கணங்கள் கண்ணீர்ப் பூக்களைச் சொரிகிறது என்பதை அழகாகா

"கண்ணுக்குள் நீதான் , கண்ணீரில் நீதான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ எதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே"

உன்னுடன் இருந்த நினைவுகள் எல்லாம் என்னைக் கொல்லுவதாய் உணருகிறேன். இயற்கையை வெறுக்கணும் போல இருக்கு என்பதை படம் போட்டுக்காட்டும் இந்தவரிகள் காதலித்த உணர்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன.உரசல்கள் உயிரை மூச்சடைய வைத்த பார்வைகள் என்று காதலையும் இயற்கையையும்..

"தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்"

வாழ்க்கையை வார்த்தைகளுடன் சேர்த்துவிடும் தன்மை அற்புதம்

"வாயில்லாமல் போனால் வாதையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே"

தான் படும் வேதனையை முத்தங்கள் தந்த சுகங்கள் இல்லாமல் தவிக்கும் தருணத்தை

"முள்ளோடு தான் முத்தங்களா சொல்! சொல்!!

இயற்கையே உன்னைக் காதல் செய்யவேண்டுமென்றால் காதலியுடன் தான் ரசிக்கமுடியும் என்பதை

"வீசுகின்ற தென்றலே ,
வேலையில்லை நின்று போ!
பேசுகின்ற வெண்ணிலா ,
பெண்மயில்லை ஓய்ந்து போ!
பூ வளர்த்த தோட்டமே ,
கூந்தலில்லை தீர்ந்து போ!
பூமி பார்க்கும் வானமே ,
புள்ளியாக தேய்ந்து போ!"

என்னிடம் நண்பனொருவன் பகிர்ந்துகொண்ட கதை (அவனும் அறிந்த விடயங்களைப் அடிக்கடி பகிர்வதுண்டு என்னிடம்)

ஒரு காதல் ஜோடி. இருவருக்குள்ளும் மிகவும் நல்லதொரு புரிந்துணர்வு. காதலில் இணைந்திருக்கும் இருவரும் ரசனையானவர்கள். ஒரு விசேட தினம். இருவருக்குள்ளும் பரிசுப்பொருள் பகிர்ந்துகொள்ள வேண்டிய தேவை. அவன் எப்போதும் நல்லதொரு அழகிய கைக்கடிகாரம் கட்டிக்கொள்ளுவான். ஆனால் அதன் பட்டி ரசிக்கும் படியாகவோ இல்லை. அவள் தனது நீண்ட கூந்தலை தலைமுடிவெட்டி அதை வாங்கும் நிலையத்துக்குக் கொண்டு வெட்டிக்கொடுத்து விற்று அதிலிருந்து பெற்ற பணத்தைக் கொண்டு அவள் காதலனுக்குப் கைக்கடிகாரப் பட்டியை வாங்கிப் பரிசுப்பொருளாக்கிக் கொண்டு அவனிடம் நீட்டினாள்.
அவனும் அதைப் பெளவியமாக ஏற்றுக்கொண்டு மறைத்திருந்த அந்தப்பொருளைப்பார்க்கும் முன் தனது பரிசை நீட்டினான். அவளும் அன்பாக அதை ஏற்றுக்கொண்டு இருவரும் இதயத்தால் பிணைந்து பிரித்துப்பார்க்க அவள் காதலன் அவள் எத்தனை அழகாகவும் அடிக்கடி எத்தனையோ வாசனைத்திரவியங்களால் அடிக்கடி பாதுகாத்தக்கொள்ளும் அந்த அழகிய கார்வண்ணத்து நிள் கூந்தலுக்குரிய அந்த அடர்த்தியான கூந்தலை சோத்து மேலும் அழகுறச்செய்யும் சீமாட்டியை வாங்கிக் கொண்டுவந்திருந்தான் அவன் மணிக்கூட்டை விற்றுவிட்டு......

இதுக்குப்பின் அவனால் என்ன பாடமுடியும்

"பாவயில்லை பாவை ,தேவையென்ன தேவை?
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை?

முள்ளோடு தான் முத்தங்களா சொல்! சொல்!!"

கண்ணீர் வழியும் கண்களுடன் உசிரு போகத்தானே வேணும். காதலின் தேவை காதலர்கள் தங்களுக்கிடையில் எவ்வாறு எவ்வளவு அதிகளவு அன்பு செலுத்துவது யார் பக்கம் அந்த காதல் எடுத்துக்காட்டப்படுகிறது என்று பரீட்சித்துப்பார்ப்பார்கள். காதலர்களாலே அதிக பாடல் வரிகள் வாசிக்கப்படும். இசை ரசிக்கப்படும். இங்கு இசையும் காதலும் என்பதில் காதலில் நான் உள்ளேனா என்பதை அடிக்கடி கேட்டுப்பார்க்கும். காதலின் அவஸ்த்தைகளை காதலி (அருகில்) இல்லாவிட்டால் இசையோடுதான் மனம் பயணிக்கும் என்பது வெளிப்படையானது. இருந்தாலும் தேவைகளோடு முற்றுப்புள்ளிகாண்பது காதலின் பக்குவப்படாத தன்மை என்பது மனவேதனைக்குரிய விடயம்.

Sunday, September 19, 2010

மரண ஊர்வலம்

இதற்கு முதல் இங்குபோய் வருக காதல் சாதல்

இசைப்புயல் ஏ. ஆர். ரஃமானுக்கு வாழ்த்துசொல்லி எழுதிய கவிதையில்
///
நீ யார் பக்கம் என்று
வாதிடும்
கோயில்களே
மசூதிகளே
கேளுங்கள்
இசையில் கடவுளைக்காண
கற்றுக்கொள்ளுங்கள்
கடவுளுக்காக பிளவுபட்டு
இசையைக் கலைக்காதீர்கள் ////


காதலும் இசைதான்.
காதலின் ஒவ்வொரு அனுபவத்தின் ஆழத்தில் எழுந்துகொள்ளும் இசைவடிவங்கள் காதலர்களின் மனதில் பாடகர்களாக தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளும். ஆகவே காதலில் மதம் வேண்டாம். மதம் வளர்க்காதீர்கள். இவ்வாறு காதலின் தேவையில்  காதலர்கள் சொல்லிக்கொள்வதுண்டு. 
காதல் என்ற திருவிழாவில் காணமல் போன உள்ளங்கள் தங்களை கண்டுபிடிக்க முடியாமல் தேடல்கொள்ளும் பொழுதுகளில் எழுகின்ற முட்கம்பி வேலியாய் "மதங்கள் " (religion) இருப்பதை எந்த காதலும் ஏற்றுக்கொள்வதில்லை நாம்  ஏற்றுக்கொள்ளவேண்டும். அது தேவையின்பால் தேடலின் உளச்சலில் மனது உழுதுகொள்ளாமல் இருப்பதாக நாம் சொல்லிகிறோம். உண்மைதான் அவர்கள் பண்பட்டுக்கொள்ளவில்லை காரணம் தேடலில் இருக்கிறார்கள். 
காதல் என்பது இனம் மதம் மொழி பார்க்காது என்று சொல்லிக்கொண்டு காதலுக்கு கண் இல்லை காது இல்லை என்று பகிர்கின்றவர்களிடம் கேட்கத்தோன்றுது அப்படியானால் காதலுக்கு 'உயிரே' இல்லையா.???

காதல் என்பது ஒரு 'உறுதலுணர்ச்சி அல்லது மனஉணர்ச்சி (Feeling)' என்று பகரமுடியுமானால் தொடுதல் தொட்டுணர்தல் போல் அது முடிந்துவிடும் தெறிவினைத் தொழிற்பாடா? காதல் உணர்வு எல்லோரையும் பார்க்கும் போது பேசும் போது பழகும் போது உருவாவதில்லை. ஒருமுறை காதல் நுகரப்பட்டால் தொடரப்படும் மனசுக்குள்.

"காதல் மரணம் போன்றது
இன்னும் சுமக்கிறேன்
புதைக்கவும் வழியில்லை
எரிக்கவும் மனமில்லை."
(....எங்கேயோ படித்தது....)
இந்த மரண ஊர்வலம் தேவைகளுக்காக (காதல்) ஆனதாக நினைத்தால்

"எத்தனை வேலைப்பளு
தொல்லைகள் ஆயிரம்
ஆனாலும் உன்
மூன்றுபக்க கடிதத்தை மட்டும் படித்து
மூன்று சொற்களில்
மனசை சுருக்க முடிகிறது
'ஆதாமின் அப்பிளால்'"
 
இந்தக்கவிதையின் கருத்தில் தெரிகிறதா இந்த இதயத்தை தொட்டுக்காட்டும் அந்த காதல் உணர்வு மூவாயிரம் சொற்களையும் மூன்று சொல்களில் சொல்லத்துடிக்குது அதிக  தேவையான அவசியமான வேலைகளுக்கு மத்தியிலும் ஒரு இனிமை. தவிப்பு தாகம் அங்கு உணரப்படுகிறது என்று. காதலுற்றவ(ன்)ள் அவஸ்தை அனுபவிக்கும் போது தெரிந்துகொள்ளலாம். தமது தரநிலை தகுதி அந்தஸ்து என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் நிலையற்ற வாழ்க்கைத் தேடலில் ஒரு சுகம் காணும் போது இந்த நல்ல இன்பத் தேடலை வெறுப்பதற்கு இனம் மதம் அந்தஸ்து அவசியமா என்று சிந்தித்துப்பாருங்கள்.

மதம் என்பது நமக்கு நமது பெற்றோர் அல்லது உறவினர்களால் திணிக்கப்பட்டது அல்லது சொல்லாமலே தொடரச்செய்யப்பட்டது. அதாவர் செயற்பாட்டுநிலை. ஆனால் காதல் என்பது தன்னிலைப்படுத்தப்படுவது (என்னால் ) காதலர்களால் கண்டுபிடிக்கப்படுவது.
இங்கு மதம் என்பது தடையாகும் தருணம் காதல் என்பது தவிப்பாகும் தருணம். தயக்கமின்றி உற்ற உறவுகளை மற்றவர் நட்புக்களை இழக்கக் கூட தயங்காது. காரணம் காதலின் இன்ப வலிமை சூரியனையும் உருகச்செய்யும்.சுட்டெரிக்கச் செய்யும்.

ஆதலால் காதல் அனுபவித்துக்கொள்வதை விட அவஸ்த்தைகளிலே அதிகம் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனாலும் பாடல்களும் கவிதைகளும் அனேகம் பெண்களின் பால் இவை வெளிக்காட்டப்படுவது ஒரு ஆணாய் சற்று வேதனைகொள்ளச் செய்கிறது. ஆனாலும் இயல்பாக காதலின் உணர்ச்சி பெண்ணுக்கு அதிகம் என்று ஒருபாடலில் (எனைத் தாலாட்ட வருவாளா... என நினைக்கிறேன்.) கவிஞர் சுட்டிக்காட்டுகிறார்.  ஆனால்
"காதல்" "போஸ் (எ) பாஸ்கரன்" என்கிற படங்களில் ஆண்களின் அவஸ்தைகள் பற்றி ஹரிச்சரனின் பாடல் சொல்லுது.

மதம்பற்றி காதலை எதிர்க்கும் பெற்றோர்கள் பற்றி ....
வாழ்க்கையின் எச்சங்கள் பிள்ளைகள் அவர்களே அடுத்த பரம்பரைக்கு நாம்  விட்டுச்செல்லும் சொத்துக்கள். ஆக காதல் என்ற போர்வையில் இனம் மதம் கடந்து காதல் வேலி தாண்டுது என்றால் அந்த காதலர்களின் பெற்றோர் கொண்ட மதம் கலாசாரப்பின்னணி கலாசாரப்பாங்கு மொழி என்பன அழிக்கப்பட தங்களால் மற்றபராம்பரைக்கு கடத்தப்பட முடியல என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். நாம் எச்சம் என்ற சொல்லில் விஞ்ஞானப்பதம் விரிவாக சொன்னாலும் எளியமுறையில் புணர்ச்சியின் விளைபொருள் புதிதான பிள்ளை தாம் பின்பற்றிய சமய கலாசாரத்தைத் தொடரவேண்டும் என்ற எண்ணமே ஒழிய வேறொன்றுமில்லை. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த காதலர்கள் இருவரில் எந்த மதம் அல்லது கலாசாரத்தை பின்பற்றுவது என்ற கேள்வியும் நடைமுறைச்சிக்கலுமே முதலில் இம் மதம் பார்க்காத காதலுக்கு தடை உத்தரவைப் பிறப்பிக்கிறது. இதனாலேயே பல காதலர்கள்  தண்டவாளங்களாய் ஆகிறார்கள் காதல் புகைவண்டி போகாமல்.....


"தெரிகின்ற பொருளாய் காதல் இல்லை தேடலின் விளைவாய் காதல்"
காதல்:

என்னைக்
கட்டிக்கொள்ளுங்கள்
கடைசிவரை
காப்பாற்றிக்கொள்ளுங்கள்
என்னையல்ல
உங்கள்
மகுடம் கலையாமல்
பார்த்துக்கொள்ளுங்கள்

காகிதத்திலும்
கல்லறையிலும் மட்டும்
நான்
இன்னும்....
                   தொடரும்.....

Saturday, September 18, 2010

இது ஸ்டேடஸ் - 04

"புலரும் பொழுதுகள்
தானாய் விடியலுறும்.
மனதிலும் எண்ணத்திலும்
வரவேண்டும் 'விடியல்'
வெளிச்சமாக்குங்கள் உள்ளத்தை
புலர்ந்துகொள்ளலாம்"

"யாரை நோக்கி கல் வீசப்படுகிறதோ அவரை நோக்கியதாக இருக்கணும் ஆக மற்றவர்களை நோகடிக்கப்படாது"

"புகைந்து கொண்டிருப்பதை விட
எரிந்து விடுவது மேல்....
எனக்குள் நீயும் (நானும்)
உனக்குள் நானும் (நீயும்) "

..............எங்கேயோ படித்தது அதனுடன் நானும் சேர்ந்து............

"ஒவ்வொரு
பார்வைகளிலும்
அவஸ்த்தை
நீ
சாலையில் போகிறாய்
கண்களை கழற்றிவிட்டு"

"வாழ்க்கையைப்பற்றி தெரிந்து கொள்ள,
முதலில் மற்றவர்களின் கஸ்டத்தை புரிந்துகொள்ளுங்கள்,
மனசு நெகிழும் போது நமது கஸ்டம் சிறிதாகிடும்"

"சட்டவாக்கம் சட்டம் உருவாக்குவதை விட பரஸ்பர நம்பிக்கையையும் பங்காண்மையையும் எற்படுத்தி நல்லுறவு மூலம் ஆட்சி வேண்டும்"

"எத்தனை வேலைப்பளு
தொல்லைகள் ஆயிரம்
ஆனாலும் உன்
மூன்றுபக்க கடிதத்தை மட்டும் படித்து
மூன்று சொற்களில்
மனசை சுருக்க முடிகிறது
'ஆதாமின் அப்பிளால்'"

"அந்த ஏரியா இந்த ஏரியா எல்லா ஏரியாவிலயும் ஐயா கில்லி கில்லி உன் மனசத் தவிர.."

"செய்த தவறை ஒத்துக்கொள்ளணும் அதற்காக எத்தனை முறை வாதிட்டாலும் தவறு சரியாகிய வரலாறு இல்லை. "

"முடிந்தவரை மற்றவர்களின் கருத்துக்கு செவிசாய்க்கும் போதே உங்களுடைய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்"

என் மருமகள் என் மாமாவோடு

Thursday, September 16, 2010

சிதறும் சில்லறைகள் - 03

இன்றைய தினம்:
சர்வதேச ஓசோன் தினம் (16-09-2010) ஓசோனுக்காய்..... என்று நான் சென்ற வருடம் எழுதிய பதிவு வாசிக்தத்தவறியவர்களுக்காக இங்கு போய்க் காண்க ஓசோனுக்காய்......

திறந்த வெளியில்
நீ
என் காவலனாய் ....
போர்வை போர்த்தியதும்
நிறமற்றவனாய்
நின்றபோதும்...

உணர்கிறேன்
தட்ப வெப்பநிலை மாற்றம்
உறை பனியில் உருக்கம்
மழைவீழ்ச்சியில் சுருக்கம்

இப்போதுதான்
தெரிகிறது
உன்னில் விழுந்த
ஓட்டைகளுக்கும்
கிளிஞல்களுக்கும்
காரணம்
நான் ஆனதற்காக
வருத்தப்படுகிறேன்

இன்று என்னை வளர்த்து ஆளாக்கிய என்னோடு என்றும் இருக்கும் என் சின்னம்மாவின் பிறந்தநாள் அவருக்கு எனது இனிய வாழ்த்துக்கள் அன்ரி..

எங்க ஊர்த்திருவிழா

எங்க ஊரில் பால முருகன் கோயில் அலங்காரத்திருவிழா நேற்று முன்தினம் ஆரம்பமாகியது கொடியேற்றத்துடன்...


அனுபவம்

எதிர்மறை சிந்தனைகளில் இருந்து எப்படி விடுபடுவது என்பது இன்று எனக்கு மிகவும் கஸ்டமாக இருந்தது. எனது இன்றைய பயணத்தில் சில முரண்பாடான கருத்து மோதல்கள் என் சக நண்பர்களிடம்.
சில வேளைகளில் மெளனமும் மெல்லிய பாடல்களும் என்னைச் சாந்தப் படுத்தும் என்பதை இன்று உணர்ந்துகொண்டேன். நீங்களும் முயற்சிக்கலாமே. வழமையாக பிரச்சனைகள் என்று வந்தால் பொதுவாக ஒதுங்கிக்கொள்ளும் நபர்களில் நானும் ஒருவன். பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதை வெறுப்பவன் அல்ல.
"வாழ்க்கையின் ஒவ்வொரு பிரச்சனைகளும் படிப்பினையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவல்லவை."
அவ்வாறான பிரச்சனைகளை சவால்களை ஏற்றுகொள்வதில் "தில்" இருக்கும் இதை தவிர்க்கவிருப்பமுமில்லை எனக்கு. ஆனால் தேவையில்லாத முரண்பாடுகளுக்குள் மூக்கு நுழைத்து முட்டிக்ககொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கில்ல. எதிர்மறைக்கருத்துக்கள் எண்ணங்கள் எப்போதும் நமது எண்ணத்தில் முயற்சியில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் கருத்தில் கொள்க. நல்லவை நடக்காவிட்டாலும் நல்லவைகளையாவது சிந்திக்கலாமே. மற்றவர்களை உன்னிப்பாக பார்த்துக்கொண்டு அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டிக் கொண்டிருப்பதை விட நாமாக முன்னேறப்பார்க வேண்டும். நமது வளர்ச்சியை மேம்படுத்தப் பார்க்கவேண்டும்.

சிந்தனைக்கு


"ஒப்பிடுதைக்காட்டிலும் முன்னேற எத்தனிப்பது மேல் அந்தசிந்தனையை வளர்ப்பது அதை விட மேல்"
மீண்டும் சிதறும் வரை.

Wednesday, September 15, 2010

இது ஸ்டேடஸ் - 03

"பல கரைகளில் ஒதுங்கிய போதுதான்
தெரிகிறது ஆழங்கள்"
- அனுபவம்-

"எழுத்துக்களாலே உங்களைப் பார்க்க முடிகிறது
என்னையும் எழுதிக்கொண்டு"

"சில சோகங்களை மறக்க தனிமை என்ற நிலைமை மட்டும் போதும்
எனக்கு
சில்லறையான சிந்தனைகளை பெற்று தெளிவாக
நானும்
என்னுடன் என்றும்"

"உன்னில் அக்கறை கொள்ளாமல் இருக்க தனியா வாழவில்லை.
சமூகவலைப்பின்னலில் இருக்கிறேன்.
புரிஞ்சுகொள்.
விழுவதை வேடிக்கை பார்க்க விரும்பவில்லை"

"இப்பதான் வந்தேன்னு சொல்லறது அப்பவே வந்துட்டேன்னு அர்த்தம்
தடுமாறும் போது"

"என்னைத்திருத்த
முடியாது நானாக திருந்தும் வரை.
நான் இன்னும்
குறையாகவும் வெறுமையாகவும்
இருக்கிறேன்
வாழ்க்கையைப்பற்றி தேறிக்கொள்ளாமல்"

"ஒவ்வொரு பிரிவுகளின் போதே
உன்னைக் கண்டுபிடிக்க முடிகிறது
என்னையும் சேர்த்து.....
மறந்துவிடு என்பதை விட்டுவிட்டு
மன்னித்துவிடு"

"வினாயர் சதுர்த்தி!
'அம்மா கோயிலில்!
நான் அம்மாவுக்காக காத்திருப்பு
விரதம் நான் தானே நோக்குகிறேன்"

ஊரிலிருந்து ஒரு படம் மழை நனைக்க முன்கடைசியாக:
"என்னைச் சந்திக்கும் பொழுதுகளில் பரிசு கொடுப்பதற்குப் பதிலாக நல்ல புத்தகத்தைக் கொடுங்கள். தேடல்களில் திழைத்திருப்பதையே விரும்புகிறேன்"

Monday, September 13, 2010

உயர உயரப்பறக்கிறேன் ஊர்க்குருவி சிதறுகிறது

"உயர உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா??" எதுக்கு அது பருந்தாகணும்? பருந்து ஒரு மாமிசமாய் ஆன மிருகப்பறவை. அழகிய நெல்மணிகளை பொறுக்கி கீச் என்ற சத்தங்கள் அரவிக்கொண்டு ஊர் அழகு ரசித்துக்கொண்டு ஊர் சுற்றித்திரியும் சுறுசுப்பான அந்த ஊர்க்குருவி ஏன் பருந்தாக ஆக எண்ணணும். ஓ.. உயரப்பறந்தால் ஒசந்திரலாமா(உயர்ந்திடலாமா)?????. இல்லை நீ ஊர்க்குருவியாய் இரு. போதும்.

ம்ம்ம்.........
(ஊர்க்குருவியின் கூடு தனது குஞ்சுகளை பொரிப்பதற்காக காத்திருக்கும் பொழுது)

ஏதேதோ அலறுகிறேன் என்று அல்ல. இந்த ஊர்க்குருவி சிறகுகளை உலர்த்திக்கொண்டு 150 ஆவது சில்லறைகளை சிதறிவிடுகிறது இன்றுடன்.

பதிவுலகம் வந்து இத்தனை பதிவு என்பது சொற்பளவு. என்னைவிட எத்தனையோ பதிவர்கள் பல நூறு ஆயிரம் கடக்கிறார்கள். நானும் இங்கு நூற்றம்பதைத்தாண்டுகிறேன் என்பதில் மகிழ்ச்சி.

இதுவரை
பல பதிவுகள் உங்களை வந்தாலும் சில பதிவுகளே சில் என்று சிலிர்த்துக்கொண்டு அல்லது சிவப்பாய் சினத்துக்கொண்டு இருக்கும். என் பதிவுகளில் குறிப்பிட்ட மாற்றங்கள் பலபேரை மாறுதலடையச் செய்துள்ளது என்பது சிதறலின் ஒரு வெற்றி. பல நண்பர்களையும் எனது கிராமத்து உறவுகளையும் பல புலம்பெயர் உறவுகளையும் மனச்சிதறல்களினூடு பெற்றிருப்பது அளவுகடந்த சந்தோசம். தொழிநுட்ப மற்றும் பல்வேறு உதவிகளையும் பல மனதுக்கு ஆறுதலாக நிம்மதியாக பல உணர்வுகளையும் நட்புக்களையும் பெற்றிருக்கிறேன். நன்றி பதிவுலகமே.

மண்வாசனை எமது கிராமத்தின் பல நிகழ்வுகள் இணையவழி கொண்டு உலகெலாம் ஆர்க்க சிதறிய சில்லறைகளாய் ஆன இச்சிதறல்கள் உங்கள் எண்ணங்களில் எங்கோ ஒரு மூலையில் சில வண்ணங்களை பூசிக்கொள்ளும் என நினைக்கிறேன்.

"இந்த சிதறல்கள் வெறும் ஏட்டில் எழுதப்பட்டவை அல்ல
உணர்வுகளின் உயிர்களின் ஆழத்தில் எழுதப்படும் எழுத்துக்கள்"

"எனது பலமும் பலவீனமும் எனக்குத்தான் தெரியும்
என்னைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டவன் நானே ஆதலால்"

ஆதலால் இந்தவெற்றிப்பதிவு எழுதுகிறேன்.


"இனி"

"உங்கள் துயரத்தின் பாதியையேனும் குறைக்காவிட்டாலும் நான்
வழிகின்ற கண்ணீரின் ஈரத்தை துடைக்கின்ற கைகளாய் இருக்கவேண்டும்" என்று ஆசைப்படுகிறேன்.

"தபுசங்கரின்" "எனது கறுப்புப்பெட்டி" என்ற கவிதை தொகுப்பிலிருந்து..........

எத்தனை முறை வீழ்த்தினாலும்
கடைசியில்
நடக்கக் கற்றுக் கொடுத்தவிட்டது
நடைவண்டி

எத்தனை முறை கவிழ்த்தாலும்
கடைசியில்
ஓட்டக் கற்றுக் கொடுத்துவிட்டது
மிதிவண்டி

எத்தனைமுறை வீழ்த்தினாலும்
எத்தனைமுறை கவிழ்த்தாலும்
கடைசிவரை
வாழக் கற்றுக் கொடுக்கவில்லை
வாழ்க்கை

அற்புதமான வைரங்கள் அந்த கறுப்புப் பெட்டிக்குள்ளே புதைந்துகிடக்கிறது கவிதை வரிகள். இது பதிவுலகத்துக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

எனது பதிவைப்பார்த்து எனது உறவுக்கார அண்ணா தொலைபேசி அழைப்பெடுத்து அதிக புத்தகங்களை வாசியுங்கள் இன்னுமின்னும் அழகாக எழுதமுடியும் வாழ்க்கையையும் என்றார். இந்த விடயம் என்னுள் சேருமுன்னர் நான் சொற்பளவே புத்தகங்களை வாசித்திருக்கிறேன். பின்னர் எங்கு பயணம் செய்தாலும் ஏதாவது புத்தகங்களை வாங்க மறுப்பதில்லை. நன்றி அண்ணா.

அழகியது கிராமம்
அலைகிறது மனம்
இன்னும் கண்டுகொள்ளாமல்

எப்போதும் எனது கிராமத்தை நேசிப்பவன் அதன் எழில் கொஞ்சும் அழகுகளை அடிக்கடி ரசிப்பேன். அதே போல் நிகழ்வுகளின் நிஜப்பதிவாய் இருக்கப்பார்ப்பேன் அதனால் ஊரில் நிகழ்வுகளையும் உங்கள் கண்முன் கொண்டுவர முயற்சி எடுப்பதில் மகிழ்ச்சிகொள்ளும் இந்த சிதறல்கள். இன்னும் சிதறிக்கொள்ளும்.


ஆனாலும் இன்னும் பல விடயங்கள் எழுதப்படவேண்டும் என்று.........
எமது பாரம்பரிய விழுமியங்கள் இதுவரை இணையத்தரவேற்றம் செய்ப்படாத விடயங்கள், நாம் அறிந்து இன்னும் எழுதப்படாத விடயங்கள், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நல்லபல தகவல்கள் மொழிபெயர்த்து அதன் இருப்பிடங்கள் சொல்லிக்கொண்டு, இன்னும் நமது பழைய அனுபவசாலிகளின் படைப்புக்கள், எமது பிள்ளைகளின் திறமைகள்....... என்று பல்வேறு சில்லறைகளை சிதறவேண்டும் என்று எனக்குள்ளே கேட்டுக்கொண்டு முடிந்தளவு எழுதவேண்டும் என்று இந்த ஊர்க்குருவி உயரப்பறக்கிறது சிதறல்களாலே.

Sunday, September 12, 2010

போறாளே பொன்னுத்தாயி ...

பின்னணி திரையிசைப்பாடகி சுவர்ணலதா மறைந்த சேதி. மிகவும் வேதனையளித்தது. ஏதோ ஒரு வகையில் நம்மை பிடித்தவர்களின் இழப்பு மனதில் கனத்த இதயத்தை ஆக்கும். இறப்பு தவிர்க்க முடியாதது. அந்தவகையில் பாடகி சுவர்ணலதாவின் இழப்பும்.
போறாளே பொன்னுத்தாயி ...
எனது ஆழ்ந்த அஞ்சலி ... எப்போதும் உங்கள் ரசிகன் நான். பாடல்களின் உயிரில் வாழ்வீர்கள் இதயத்தில் அஞ்சலிக்கிறேன்இவர் பாடிய பாடல்களில் இவருக்கும் ஏ.ஆர். ரஃமானுக்கும் வைரமுத்துவுக்கும் பெருமை சேர்த்து தந்த பாடல். கருத்தம்மா படத்தில் இவர் பாடிய பாடல் "போறாளே பொன்னுத்தாயி......". இந்தியாவில் தேசிய விருது பெற்ற பாடல். இந்தப்பாடல் அப்போதே எனக்கு பிடித்தாலும் அவ்வளவாக இப்பாடலை மனதில் வைத்திருக்க முடியவில்லை.
ஆனாலும் பாடல்கள் என்பது பொதுவாக அதன் இசையும் வரிகளும் சேர்ந்து எம்மை அதே பாடல்வரிகளிலும் இசையிலும்  இருத்தி எம்மை அந்த பாடலின் சூழ்நிலைக்குக் கொண்டு செல்வது மறுக்க முடியாது. வழமையாக சோகப்பாடல்களை விரும்பாத எனக்கு இந்தப்பாடல் என்னை திசைமாறாமல் வழிப்படுத்தியது நான் உற்ற சோகத்தில் ஆழ்ந்தபோது சில வருடங்களுக்கு முன்னர் நண்பன் ஒருவனின் நட்பை இழந்த போது

"விழிகளின் ஓரத்தில்
ஈரத்தை இருத்தி
பாரத்தை இறக்கி வைச்ச
அந்தப் பாடல் ....."போறாளே பொன்னுத்தாயி பொல
பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோரும் தந்த
மண்ணை விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்துக் கோழியை விட்டு
போறாளே பொட்டப் புள்ள
ஊரை விட்டு

சாமந்திப் பூவா
ஊமத்தம் பூவா
கருத்தம்மா எந்தப் பூவம்மா?
அஞ்சாறு சேவல்
உள்ளூரில் ஏங்க
பொதி மாட்டு வண்டி மேலே
போட்டு வச்ச மூட்டை போல

போறாளே பொன்னுத்தாயி..)

நீ வச்ச பாசம்
நீ சொன்ன நேசம்
கடைசியில்
ஊமையும் ஊமையும்
பேசிய பாஷையடி
தெக்கத்தி காத்து திசை மாறி வீச
ஒன்னோட மேகம் ஓடுதடி ஓடுதடி
உசுருள்ள நாக்கு ஒன்னு வாடுதடி வாடுதடி
கடைசியில் சாமிக்கு நேர்ந்தது சாதிக்கு ஆனதடி

நெஞ்சுக்குழி காஞ்சு நெடுங்காலம் ஆச்சு
ஒரு உயிர்
வீட்டுக்கும் காட்டுக்கும் கூட்டுக்குள் இழுக்குதும்மா
சேமித்த காசு செல்லாமப் போச்சு
சொல்லாத சொல்லு பாரம் அம்மா பாரம் அம்மா
சோத்துக்கும் சொந்தத்துக்கும் தூரமம்மா தூரமம்மா
பொறு பொறு
ஏழைக்கும் வாழைக்கும் நாளைக்கு நன்மையம்மா

(போறாளே பொன்னுத்தாயி..)
(சாமந்தி பூவா..)

(போறாளே பொன்னுத்தாயி..)

படம்: கருத்தம்மா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சுவர்ணலதா
வரிகள்: வைரமுத்து

(பாடல் வரிகள் தேன்கிண்ணத்திலிருந்து. நன்றி தேன்கிண்ணம் )

காதல் சாதல்

ஒரு ஆணாய்:
பதின்மவயது அந்தா இந்தா என்று ஆணாய் இருந்து அர்த்தம் தேடும் பருவம். காதல் என்றால் என்ன என்று விழுந்து புரள எண்ணும் மனது. காதல் பாடல்கள் பிடிக்கும் ஐட்டம் அல்லது பிகருகள் என்று எதிர்ப்பால் தேடும் பருவம்.

"பருவம் படர்ந்து
பார்வைகளில் சிதைந்து
காதல் மொழி
எதுவென தேடும் மனது"

எங்கோ பார்த்த அவளை இன்னும் எப்படி இந்த மனதால் வைத்திருக்க முடிகிறது கண்களுக்கு தான் எத்தனை மெமரி காட்டுக்கள். இப்படியெல்லாம் ஏங்கித் தவியாய் தவித்து காலம் கரையும் வாலிபர்களே!

ஒரு பெண்ணைப் பார்த்தால் காதல் வருகிறதென்கிறார்களே. அப்படி என்றால் பார்வைப்புலனற்றவர்களுக்கு காதல் எப்படி இருக்கும் என்று பார்த்தால் நாம் அந்த வயதுகளில் கொண்டது ஒரு மயக்கம் அல்லது மோகம் இதையும் விட சொல்லப்போனால் கண்மூடித்தனமான அன்பு (Infatuation).
காதல் என்பது
"இரு மனம்
எம் மனம்
என் மனம்
என தடுமாறும் வரம்"

(படம் முகநூல் நண்பர் Syed Tareq Rahman's Photos - Drawing இலிருந்து)

இந்தநிலை ஏற்பட வேண்டுமெனில் உணர்வு உள்ளம் வெள்ளமாய் பழகிப்பாருங்கள். இருவருக்கிடையில் இயைந்து போகும் பல இடங்கள் தெரிந்து கொள்ளப்படும். ஒன்றாய் இசைந்து பாடும் ஒரு சந்தம் தெரியும். இது பழகலும் பேசுதலும் உணரப்படும் இனிய பொழுது.

ஆக வெறுமனே பார்த்தால் அவளைக்காதலிக்க முடிகிறது என்றால் கண்ணில் தெரிந்தது காதல் என்பதை விட காமம் அல்லது தீவிர மோகம் என்றே சொல்லத்தோன்றுது. கேட்கலாம் காதல் என்பதன் அர்த்தப்படுத்தல் காமம் என்று. தவறு. காதல் என்பதன் ஒரு விளைபொருள் காதலில் காமம் அதாவது புணர்ச்சி இன்பம். காதலுக்கு முதல் எண்ணும் இதை காதல் எச்சரிக்கும்.
பல காதல்கள் கண்ணீரின் ஊர்வலத்தில் இருப்பதற்கு இதுவே முதன்மை பெறுகிறது.
காதல் பல புரிந்துணர்வுகளில் விட்டுக்கொடுப்புக்களில் வலம்வர வேண்டியது தவிர காவியத்துக்காகவும் கல்லறைகளுக்காகவும் இருப்பதற்கல்ல. காதலிப்பதற்காகவே காதல்.

இப்போதைய நமது பாரம்பரியங்களில் காதல் என்பதை விட வேண்டும் தவிருங்கள் என்றும் ஒரு பொதுவாக எல்லாப் பெற்றோர்களாலும் வெறுக்கப்படக் காரணங்கள் கல்யாணத்துக்கு முன்னான காதல் என்ற போர்வையில் கலைக்கப்பட்ட சிசுக்களின் சாபங்களே. அனேக காதல் கல்யாணங்கள் கல்யாண வாழ்க்கையில் தித்திக்காததும் இதற்கு காரணங்களே.
கல்யாணத்துக்கு முன்னரே இருவரும் ஒருவருக்கொருவர் முழுமையாக உணர்ந்த ??? பிறகு காதலில் கரைந்த பிறகு கல்யாண வாழ்க்கையில் அவர்களால் வாழ முடிவதில்லை என்பது பல அனுபவசாலிகளின் கருத்து. என்னைப் பொறுத்தவரையில் இவர்களிடையே சரியான புரிந்துணர்வு முறையாக கட்டிஎழுப்பப்படாததே அல்லது தொடர்பாடலில் எழும் தீர்க்கப்படாத சிக்கல் நிலைமையுமே காரணமாக இருக்கிறன எனலாம். காதலின் பெறுமதி உணரப்படாமல் மனித இனத்தின் எச்சம் நீடித்த தன்மை என்பதை விளங்காமல் காதலின் அர்த்தம் அறியாமல் இருப்பவர்களால் காதல் என்பது விரும்பப்படாமலும் ஆதரிக்கமுடியாமலும் இருக்கிறது என்பது உண்மையே.

கற்றுக்கொள்க
காதலை
சாதலுக்கு அல்ல
வாழ்வதற்கு
என்று பகர்க உலகே

உணர்வுகளின் எழுச்சிகளில் காதல் வாழ்கிறது என்பது உண்மையே. அது

உயிர்களின் ஆழத்தேடல்
பரிணாமத்தின் பருவத்தேடல்
இதயத்தின் இன்பத்தேடல்

என்பதை உணர்க உள்ளங்களில் தேக்கி நுகர்க.

தேவைகள் தீர்ந்த பிறகு உயிர் என்பது உடல் ஆகும். காதல் தீர்ந்த பிறகு(கல்யாண) வாழ்க்கை நரகமாகும். காதல் சாதல் வரை கொள்க. இறுதி மூச்சும் இனி காதல் மூச்சாகட்டும். கல்யாணம் ஆனால் காதல் சாவது இல்லை. இன்னும் வளர்க்கப்பட வேண்டியதே.

(தொடரும் இனமத மொழிகள் கொண்டு)

Friday, September 10, 2010

சிதறும் சில்லறைகள் - 02

இன்றைய தினம்
எமது இஸ்லாமிய நண்பர்களின் ஈகைத்திருநாளாம் நோன்புப்பெருநாள். அனைத்துலக எமது இஸ்லாமியர்களுக்கு சிதறல்களின் நல்வாழ்த்துக்கள். "ஈத் முபாரக்"

பாடல்களில் சிதறல்கள்
'மதராசபட்டினம்'-
மெல்லிய இசைகளில் என்றும் இதயம் இயைந்து போவது இயல்பு. அப்படியே "பூக்கள் பூக்கும் தருணம் " என்று ரூப் குமார் (Roop Kumar Rathod) மற்றும் ஹரிணியின் குரல்களோடு இணையும் ஜிவி பிரகாஷ் அன்ரா ஜெரமி என்று அழகிய தித்திக்கும் பாடல் கேட்டும் போதே மனதில் ஏதோ ஆகிறது. ஆனாலும் தமிழ் உச்சரிப்பில் சில சறுக்கல்கள் இருந்தாலும் இசை மறுபடியும் அசைக்க வைக்குது உதடுகளில் பாடலை. எப்போதும் ஹரிணியின் குரல் பிடிக்கும் முந்திரியம் பழம் உண்டால் ஏற்படும் ஹ ஹ ஹ என்ற கரகரக்கும் இனிமை ஹரிணியின் குரலுக்கு வலிமை சேர்ப்பது போன்ற உணர்வு.
".........
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே...."

'பாஸ் என்கிற பாஸ்கரன்'-

ஹிரிச்சரனின் " யார் இந்தப் பெண்தான் ........" என்று யுவன்சங்கர்ராஜாவின் இசையில் அற்புதம். புதிதாக படிக்கணும் போல "... என்னை ஏதோ செய்யுது...." பாடல்
"......
மனம் நொந்த பிறகு முதல் வார்த்தை சொல்வாள்
மழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள்........"

அழகிய வரிகள் என்னை இன்னும் ஏதோ செய்கிறது...(நா முத்துக்குமார் என்று நினைக்கிறேன்)

'எந்திரன்'
வழமையாக இசைப்புயல் என்னை எப்போதும் பிடித்து வைத்துவிடுவார். நான் எப்போதும் ரசிகன்.. அதனால் மட்டும் இந்த எந்திரன் பாடல்கள் பிடிக்கும் என்று அல்ல. வைரவரிகள் வணங்கி விழுவதும் தவிர்க்கமுடியாது. ஆனாலும் பாடகர்களின் காந்த குரல்கள் வலிமை சேர்க்கும் இசைக்கோர்வை பாடல்களில் மிளர்வது ரசிக்கக்கூடியதாக இருக்கும். தமிழ் உச்சரிப்பு இடறுபடுவுது உண்மை. அதற்காக பழமைவாதியாய் அப்படியே பாடல்கள் இருக்கணும் என்று நான் இல்லை.
"கணக்கு (Mathematics) விளங்கல என்றால்
அது எனது பிழை அதே போல் தான் கவிதைகளும்" என்று கவிஞர் அறிவுமதி சொல்வதாய் நான் கேள்வியுற்றேன். அதேபோல் தான் இவர் பாடல்களும். எப்போதும் துல்லிய இசையையும் துள்ளிய இசையையும் ரசிக்கக்கூடியதாக இருக்கும். எந்திரன் இயந்திர இசைக்கலவை.
"... கிளிமாஞ்ராரோ..மலைக்கனி பாஞ்சாரோ..." முதலில் பதிவிறக்கம் செய்த பாடல் "அப்பப்போ பின்னிக்கொள்ளுது.." பிடிச்சபாடல்.
எங்க வைரம் என்று தேடல்களில் சிக்கியது. "அரிமா அரிமா " ஹரிகரனின் பாடல் உச்சம்.
".... நான் அட்லாண்டிக்கை ஊற்றிப்பார்த்தேன் அக்னி அணையலயே
உன்பச்சைத் தேனை ஊற்று..........." இது இதுக்குதான் ம்ம்....வைரமுத்து
"புதிய மனிதா பூமிக்கு வா..
மாற்றம் கொண்டுவா
மனிதனை மேன்மை செய்
உனது ஆற்றலால்
உலகை மாற்று
எல்லா உயிரிக்கும் நன்மையாயிரு
எந்த நிலையிலும் உண்மையாயிரு.........." என்று முதன் முதலாய் ஏ.ஆர்,ரஃமானின் புதல்வி கதீஜா பாடி ஆரம்பித்திருக்கிறார் திரையிசையில். எஸ்.பி. பாலுவுக்கு இன்னும் உயர்வாய் பாடல் கொடுத்திருக்கணும் இது போதாது.இது அவருக்கு இலகுவாக இருந்திருக்கும் ஆனாலும்
"...ரோபோ பன் மொழிகள் கற்றாலும் என் தந்தை மொழி தமிழ் அல்லவா...." ஆனந்தமாய் பாடியிருக்கிறார்.

இதய அஞ்சலி

மறைந்த நடிகர் முரளிக்கு எமது பதிவுலகம் சார்ந்து சிதறல்களின் இதய அஞ்சலி.
கண்ணீரை வரவழைப்பதில் உன் நடிப்புத்திறன் என்றும் மனதில் நீங்கா இடம் பிடிக்கும்.
இதய அஞ்சலி

பாலம் போடுவாங்களாஇந்தப்படம் மட்டக்களப்பின் பிரதான இறங்குதுறையான மண்முனை இறங்குதுறையின் படுவான்கரையையும் எழுவான் கரையையும் இணைக்கும் ஓடத்தில் பயணம். இன்னும் பாலம் அமைக்கப்படவில்லை. பல தடவைகள் அடிக்கல் நாட்டப்பட்டதாக அறிகிறேன்.

அனுபவம் சொல்லுது
"அவன் நல்லவனா கெட்டவனா என்பது பற்றி ஆராய்ச்சி நடத்துவதை விட நான் எப்போதும் நல்லவனா இருக்கணும் என்பதில் நிலையாக இருக்கப்பார்க்கணும்"

சிதறும் சில்லறைகள் - 01

Wednesday, September 8, 2010

இது ஸ்டேடஸ் - 02

"என்னைப்பற்றி யாரிடமும் கேட்காதீர்கள்
ஒரு பார்வையில் தப்பாகவும் இன்னொருபார்வையில் நல்லதாகவும் விடைவரும். விசாரிக்ககூடியது என்னிடமே....
பழகிப்பேசுங்கள் உணர்வீர்கள்.."

"ரோசாச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுங்கள்
பக்கத்திலிருக்கும் அரளிப்பூக்களுக்கு
வெந்நீர் ஊற்றாதீர்கள்.............. (எங்கோ படித்தது)"

"திருத்தி எழுதவேண்டிய தீர்ப்புக்களில் நானும் ஒருவன"

"நான் பல தடவைகள் காணாமல் போகிறேன்
சில தடவைகளிலே தான் கண்டுபிடிக்கிறேன் என்னை"

சில படங்களும் எங்க ஊரில பிடிச்சேன் பிடிச்சிருக்காநன்றி சூரியனே மேகங்களே அந்த நேரத்துக்கு என்னைக்கூட்டிச் சென்ற எனது பசுமாடுகளே.. அந்த புல்வெளி அழகை எனக்கு காட்டிய எனது கிராமமே வாழ்க

Tuesday, September 7, 2010

எங்கே செல்லும் இந்த பாதை

அண்மைக்காலமாய் நான் வேதனைப்படும் விடயங்களில்...
உந்துருளியில்(Motor-bike) பயணிக்கும் போது பல தடவை எனக்குள்ளே கேட்டுக்கொண்டவைகள்.

இந்த படம் மட்டக்களப்பு நகரிலிருந்து வவுணதீவுக்கு செல்லும் பாதை எழுவான் கரையையும் படுவான்கரையையும் இணைக்கும் ஒரு பிரதான "வலையிறவு பாலம்" உள்ள பாதை இது. மட்டக்களப்பு நகரிலிருந்து கிட்டத்தட்ட 5 கிலோமீற்றர் இருக்கும் இந்த பாலத்தில் எத்தனையோ பல கிராமவாசிகள் பயணிக்கும் இந்தப்பாதையில் இருக்கும் பாலம் பற்றிய அறிவிப்பு பலகை என்ன சொல்லுகிறது....

(இந்தப்பாலம் எப்போதோ உடைக்கப்பட்டதாக அறிகிறேன்.இன்னும் திருத்தப்படாமல்)

தமிழ் வளர்ப்பவர்களே! சமூகசிந்தனையில் இருக்கும் தலைவர்களே! அவர்களுக்காக இருப்பவர்களே! பாருங்கள் நமக்காக இல்லாவிடினும் நாம் வளர்ந்த மக்களுக்காகவாவது...

இந்தப்பாதையில் பயணிக்கும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களே உங்களால் நிச்சயம் இதற்கு விடைகாண முடியும் நமது மக்கள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காலம் இவர்கள் வள்ளம் கொண்டு செல்வதும் நீங்கள் அறிவீர்கள்.
இந்தபாதையை சீர்படுத்தி இந்த பாலத்தையும் நிர்மாணித்துக்கொடுக்க இன்றே கருத்திட்ட முன்மொழிவு (Project Proposal) எழுதுங்கள். "நாமக்காக நாம் ஆவோம்"

ஒரு ஸ்டேடஜ்:
"என்னால் வெட்டப்பட்ட மரத்தின் கிளைகளை வளர்க்க நான் தண்ணீர் ஊற்றுவேன்"

மேலுள்ள விடயத்துக்கு இந்த ஸ்டேடஸ் பொருந்தும் உற்றுநோக்குபவர்களுக்கு....

Thursday, September 2, 2010

இது ஸ்டேடஸ் - 01

பல நாட்களாய் எழுதவேண்டுமென்று எழுதாமல் போனவைகளுக்காக ....
பதிவுலகம் வந்து ஒரு வருடம் கடந்த 27 ஆந்திகதி ஆனதற்காக.....
முகநூலில் இடப்பட்ட எனது தகுநிலையை (status -சரியாக இருக்கும் என நினைக்கிறேன்)இங்கு பதிவிடுகிறேன். பிடித்திருக்கா பாருங்க.. தொடர்ந்து எழுதணும் என்ற நினைப்பில் தொடருகிறேன்....


"என்னிடம் தோற்றவர்கள் எல்லாம் என்னை எதிரியாக பார்ப்பதனால்
என்னிடம் வென்றவர்கள் எல்லாம் என்னை அன்பால் தின்றதனால்"
........... தபூசங்கரும் நானும்.........

"எனது அன்புகளை சேமித்து வைத்திருக்கிறேன்.
நீங்கள் பயன்படுத்திக்கொள்ள.
கவனம் மனதை காயப்படுத்தாமல் கையாளுங்கள்."

‎"தலைவர்களுக்காகக் காத்திருக்காதீர்கள். தனிமையாகவே செய்யுங்கள், தனி மனிதனாக தனிமனிதனுக்கு செய்யத் தொடங்குங்கள்" - அன்னை தெரேசா

"எவன் ஒருவன் தனது இன்பங்களை (பிரியங்களை) தெரிவிக்காமல் இருப்பானோ அவனுக்கு அதை தெரியப்படுத்தி மற்றவர்களுக்கு சொல்லுங்கள்"

"கண்களின் கலக்கத்தை
ஒத்தடம் கொடுத்து
என் மனதை ஈரப்படுத்த
உங்கள் அன்பினால் மட்டுமே முடியும்......"


"கடவுள் பற்றிய ஆராய்ச்சியை இப்பொழுது ஒதுக்கி வைக்கிறேன்
மனிதனை தேடிக்கொண்டு
எனக்குள்ளும் உங்களுக்குள்ளும்...."


"எத்தனை கண்ணீரின் ஈரங்களை துடைக்க உங்கள் கரங்கள்
எத்தனை தடவை நீட்டப்படுகிறதோ
அப்போதுதான் உங்கள் கண்ணீர் கழுவப்படும்....."

"நீ
யாராவாவது
இருந்துட்டுப் போ
நான் உனக்கு நானாக இருக்கிறன்....."

"எனது இருட்டுக்களிலும்
உனக்கு
ஒளி கிடைக்கவே விரும்புகிறேன்"

"நீ என்னை நண்பனாக பார்க்கும் போது நண்பனாகிறேன்.
எதிரியாய் எண்ணுகையில்
நான் என்ன பண்ண எனக்கு நீயும் எதிரியே சொற்களில் மட்டும்"

"எதிரிகளே உங்களாலே தான் நான் முன்னேறுகிறேன்.... இல்லாவிடில் நான் என்பாதைகளை சீர் செய்ய முடியாமல் போய்விடும்.."

"பார்வை அவஸ்தைகளில்
உலர்த்திக்கொள்கிறது மனது.....
அவள்(ன்) போகிறாளே(னே)"

"உன் கடமையைச் செய் இல்லயேல் உனக்கான கடமை தவறிவிடும்"

"எங்கெல்லாம் மனம் காயப்படுகிறதோ
அங்கெல்லாம் பூக்கவேண்டும்
எம்மனப்பூக்கள் தடைகளைத்தாண்டி"

"நான் கடந்துவந்த பாதை முட்களானாலும்
உனக்கு பூக்களையே பரப்புகிறேன்..."
வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு