Pages

Tuesday, May 31, 2011

சிதறும் சில்லறைகள் - 17

இன்றைய நாள்
உலக புகையிலை எதிர்ப்பு நாள்
வருடந்தோறும் மே 31 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வரும் இத்தினம் உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்த நாள் புகைத்தலின் பாதகவிளைவுகளுக்காக அதனை எதிர்க்கும் ஒரு விழிப்புணர்வாக இத்தினம் புகையிலை எதிர்ப்பு நாளாகிறது.

உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது.

நல்லதொரு விடயம் வீரகேசரியில் வந்தது இங்கு சென்றுபார்க்கAnti Tobacco Day 2011 from Bariq Sabzwari on Vimeo.

படம்


இங்கே ஆவணமாக்கபட்டுள்ளது போல் உள்ளது சினிமாவும் புகைத்தலும் அதன் தாக்கமும்..

பாடல்..
கடைசியில் இந்த பாட்டு உங்களுக்கு என்னத்தை சொல்கிறது. வா வா அன்பால் படி கட்டு..
நீ பிரிந்திருப்பது என்பது ஒன்றும் விசயமல்ல. ஆனால் சேர்ந்திருப்பதன் மகிழ்ச்சியையும் இன்பத்தையும் இழக்கநேரிடும் அல்லவா.. இங்கே வா இதயம் இணைந்து அன்பு காட்டு. இதற்கும் விளக்கம் தராதே மீண்டும் நாங்க நல்லவங்க நீங்க யோசிக்கிறதுக்கு என்னப்பா செய்ய. அன்பு நிரந்தரம் உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும். ஆனால் அதைக்கட்டிக்காப்பது தொடர்ந்து பேணுவது எவ்வளவு கஸ்டம் தெரியுமா..
எனக்கு சின்னவகுப்பில் படிப்பிக்கும்போது ஒர் ஆசிரியர்(சமூகக்கல்வி பாடம் படிப்பிப்பவர்)"டேய் நல்லவனா ஆகிறதோ சுலபம் ஆனால் அதைக்கட்டிக்காப்பது அதைவிடக் கடினம். இது எப்படி எண்டாடா சிறிய போக்குக்குள் புகுந்துபோயி வெளியேறுவது போல, பெரிய போக்குக்குள் இலகுவாக நடந்துபோகலாம் ஆனால் முன்னயது பெரும் கஸ்டம்" (அவர் போக்குக்குள் என்றது மதகு என்று சொல்லுவோம் அதில் சிறிய பாலங்களில் இருக்கும் நீர் வெளியேற்றும் குழாய்கள்)
அவர் சொன்னது அப்ப விளங்கல ஆனா இப்பவும் அவர் வந்து சொல்லிப்புட்டு போறது போல இருக்கு. ஆசிரிய ஐயாவே வணக்கம் என்றும் உங்களுக்கு
ஒரு ஸ்டேடஸ்
"அன்பு அளவிடலில் அலகு இல்லை
உணர்வுகளால் மட்டும் கலக்கும் உறவு அது..."

Friday, May 27, 2011

இது ஸ்டேடஸ் - 16


"நீ எறிந்து விட்டுப்போகிறாய்
கசங்கி கலங்குவது நான் தானே"
##உன் பார்வை##

"கண்டேன் கண்டேன் '
உன்னையும் என்னையும் , உள்ளும் புறமும், அவனையும் அவளையும், அவர்களையும்..."

"நீ வேண்டாம் அழைக்காதே உறவொன்று சொன்னது...
நான் தருகிறேன் எல்லாம் நீங்களே செய்க அவர் பகிர்ந்தார்
அவர் பொன் பொருள் வழங்கினார்
பொத்திக்கொண்டு வந்தது பாசமும் உறவும்..
கடைசியில் உறவுமுறை சேமிப்பு
காசுநடைமுறைக் கணக்கு
##நிதர்சனம்##

"டேய் காதல் வந்தா கண்ணடி லவ்வடி.. சும்மா தண்ணி அடிக்காத... "
##பொண்ணு அவனுக்கு##

"நீளமாகும் நட்பில் பள்ளங்களும் மேடுகளும் தெரியும்... விழுவதையும் எழுவதையும் காணலாம்..விழுக எழுக படை நகர்க."

"ஒரு மாதிரியா ஒரு ஆர்ப்பரித்த துடுப்பு விக்கட் ஆட்டமிழப்பு... மூன்றாம் நடுவருக்கு விடப்பட்டிருக்கு(மனசாட்சி). இதுக்கு முதல் எத்தனையோ பல விக்கட்டுகள் பறிபோயின.. இப்பொழுது அந்த பந்துவீச்சாளர்களிடம் துடுப்பு. பந்து பரிமாறப்போவது பற்றி ஓரமாய் பந்து..."
##கிரிகட் ##

"நீ என்னை முந்திப்போகணும் என்று வேகமாய் விழுந்துவிடாதே
அப்போதும் உன்னைத்தூக்கிக்கொள்ள மெதுவாக ஓட்டிக்கொண்டிருக்கும் என்னால் (தானே) முடிகிறது..."
##உந்துருளிப் பயணம்##

"உன் பிழை சொல்கிறேன் என்பதற்காக உன் நட்பை இழந்துவிடுகிறேன் என்று அர்த்தமில்லை. பிழையையும் சொல்லி அடிக்கிற உரிமை என்னைத் தவிர யாரிடமிருக்கும் சொல்..எனக்கும் ஒரு நாள் அடிக்கும் உன் கையில் தெரியும் இந்த வலி "
## நட்பு##

"உலகத்துதலைகள் எல்லாம்விட நல்லதொரு இதயம் போதும் "

"நீ வெற்றிபெறவேண்டும் பிராத்தனை மட்டுமே என்னால் செய்ய முடியும். உன்னால் முடியும்.
செல்க !வெல்க!
உனக்காக நான் வெற்றிபெறமுடியாது என் வெற்றிகளிலும் உன் வெற்றிகளிலும் இருவரும் சேர்ந்தே மகிழ்வுறுவோம்..
##Good luck my dear Sister##

"சில இறப்புக்களை கேட்வே முடிவதில்லை. கேட்டாலோ வழிகின்ற கண்ணீருக்கு துடைக்கின்ற விரல்களைத் தவிர யார் இருக்கா?
அவனின் அமைதியான நீண்ட உறக்கத்துக்கு இதய அஞ்சலி.. .."

"வெயிலிலிருந்து மழையை நோக்கி இன்று இரவுப் பயணம்"

இன்றைய படங்கள்
நாளை 28-05-2011 ஆம் திகதி நடைபெறவுள்ள இரு நிகழ்வுகளின் அழைப்பிதழ்கள்

Friday, May 20, 2011

இது ஸ்டேடஸ் - 15

"எதையும் சிறப்பாகவும் பொருத்தமான நேரத்திலும் செய்யக்கூடிய செயல்தகு நிலை எம்மில் வளரவேண்டும். வெற்றியும் மகிழ்ச்சியும் மலரும்."

"நீயாக அழைக்காமல் நானாக வந்து வினையாகேன்...
இலவசத்துக்கு மதிப்பில்லை. சொற்களுக்கும் காசுவேண்டும் விற்கப்படவேண்டும் அப்போதுதான் ஏற்றுக்கொள்ளப்படும் உலக நடைமுறை "
##நிதர்சன உண்மை##

"உன் மகிழ்ச்சியில் என்னை சேர்த்துக்கொண்ட நீ
உன் துன்பத்திலே நானே சேர்ந்துகொள்வேன்..
ஆதலால் உன் அழுகையை பகிர்ந்து கொள்கிறேன்."

"........... கடல்
........... வாய்க்கால்
உயிர்.. தமிழ்..
இடைவெளிகளிலும் மூன்றெழுத்துக் கொண்டே நிரப்பிக்கொள்வேண்டி இருக்குது..
கண்ணீர் அஞ்சலி.."

"விசாக வெண்மதி
கடற்கரை நிம்மதி
அலைகள் ஊடுருவும் சங்கதி
சொல்லும் சேதி என்ன
காற்றில் கரைந்த உள்ளங்களுக்கு வணக்கம்

"என்வீட்டு தூரிகை சுவரை புழுதிபடியச் செய்கிறது அடுத்த வீட்டு வர்ணச் சித்திரத்தை கேலி செய்து.."
##வாழ்க்கைக்கோலம்##

"மணல்வீடுகட்டி கடற்கரையோரத்தில் கால் புதைத்து நடந்து.. மணல்களால் கைகள் கழுவி... நானும் மருகளும்.. இனிய சூரியப்பொழுது ஆரம்பம்.."

"நீ பார்த்த பார்வையில் (கெ)கட்டியானது
என்னுள் இருந்தபோது திவலைகளாய்
போனபின்தான் ஆவியாகிறது
காதல்"
#பெளதீக நிலைமாற்றம்##

"எழுத்துக்கள் என்னை அடயாளப்பாடுத்தும்
உனக்கான எழுத்துக்கள்
காதலை அழகுபடுத்தும்"

"ஒருவரின் தோல்வி கொண்டாடப்படமுடிகிறது. இன்னொருவர் வெற்றியை ஏற்கவும் முடியவில்லை. இரண்டும் இலங்கைத் தமிழ் என்ற நினைப்பில். அப்போ இலங்கைத் தமிழரெல்லாம் உத்தமர்தானா என்கிறகேள்வியும்.."

"உனது வலிகளிலும் வழிகளிலும்
இன்பங்களிலும் துன்பங்களிலும் அத்தனையுமாய்
எனக்கான சில கடப்பாடுகளோடு உனக்காக இருப்பேன்
நண்பேன்டா"

"வசந்தன், பறைமேளம், வடமோடி, தென்மோடி என பழந்தமிழ் மரபுக்கலைகள் பற்றிய நல்லதொரு சம்பாசணை சதாகரன் அண்ணாவுடன் இனிதான மொட்டைமாடி நிலாப்பொழுது கரைந்தது ஒரு மணிநேரம்"

"யாரோ ஒருவர் வந்தார் யாரோ ஒருவரைக் கேட்டார். யாரோ ஒருவர் உங்ககிட்ட சொல்லவில்லையா என்றார், மீண்டும் நீங்க யார் என்றேன் அப்போதும் அவர் அந்த யாரோ ஒருவர் தான் உங்களை சந்திக்க சொன்னாரே என்றார்.
கடைசியில் நான் " வந்ததற்கு நன்றி சென்றுவருக" என்றேன்."

"'என்னை இலகுவில் மறக்கமாட்டேன்' சொல்லுகிறாய் நீ...
முகப்புத்தக நட்பிலா
உளப்புத்தக நட்பிலா? வந்தது"
... #சந்தேகப்பேர்வழிகள்#

"வெற்றிகளையும் சிறப்புக்களையும் கண்டு ஓளித்துக்கொண்ட புன்சிரிப்பில் வாழும் மனிதர்கள் குறைகளின் போது மட்டும் வாய்திறந்து பேசுவதால் என்னபயன்.??
*நிறைகளில் பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் போது நீ பிறரது குறைகளையும் குற்றங்களையும் சொல்லும்போது அவை ஏற்றுக்கொள்ளப்படும்."


"அண்ணா ஒருவர் அவர்கள் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலின் சில வரிகள்:
"சிதறல்கள் & தேனலை" (நான் கற்ற பாடசாலை, என் ஆசிரியர்கள், நான் வணங்கிய கோவில்கள், நான் சுற்றிய கடற்கரை மற்றும் குளத்தோரம் ஆக என் கண்கள் கலங்கின ) ...."

இன்றைய படங்கள்
எனது மருமகள் எனது விடுமுறைக் காலையில் கடற்கரையில் நானும் அவளும்


நடைபயிலல் மருகள்


Thursday, May 19, 2011

அம்மா

என்
அத்தனை உணர்வுகளிலும்
அன்புக் கணத்தாக்கங்களை
கடத்தும் ஒரே
நரம்பு நாண்
உன்
தொப்பூள்கொடிஅம்மாவும் மருகளும்..

Sunday, May 15, 2011

சிதறும் சில்லறைகள் - 16 ( செலவழியுங்கள்)


இன்றைய தினம்

"சர்வதேச குடும்ப தினம்"
குடும்பங்களில் ஏற்படும் உளப் பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே மருந்து குடுப்பத்வர்கள் சேர்ந்து கதைத்து பரஸ்பர தன்மையினூடு உல்லாச நிலையை மனதுக்குள் சேமித்துக்கொள்ளும் தன்மைதான்.
இதற்காகவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.

ஒரு கதை: "அம்மா வாங்கிய செல்போன்..."

"அவசர அவசரமாய் தேடிக்கொண்டிருந்தாள் சுமி செல்போனைக் காணல என்று தனது மகளும் கணவரும் அவளுமாய் மூலைமுடுக்கெல்லாம் தேடியும் செல்போன் கிடைக்கல. அந்த சீனத் தயாரிப்பான சிவப்பும் கறுப்புமாய் வர்ணம் பூசிய விலைகுறைந்த பார்க்க ஏதோ நல்ல மார்க்ட் உள்ள செல்போனாய் தனது அத்தனை அவசரங்களையும் வேகத்தையும் கொண்டுசெல்ல உதவிக்கொண்டிருந்த அது இப்ப அவசரமாய் தேவைப்பட்டது உயர்கல்வி நிலையத்திலிருந்து இப்ப உடனடியாக அழைப்பொன்று வரும் என்று பதறிக்கொண்டிருந்ததையெல்லாம் மெளமாய் பார்த்துக் கொண்டிருந்தான் தேசிகன்.

ஒரு தரமிக்க போனுக்கு இவ்வளவு கஸ்டப்படுறாங்களே... சே.. அம்மா உழைக்கிற உழைப்பில் ஏன் புதிசா ஒரு நல்ல தரம் கூடிய உடல்நலத்துக்கு பாதிப்பில்லாத ஒரு செல்போனை வாங்கினால் என்ன?? என்றெல்லாம் தனக்குள்ளே கேட்டுக்கொண்ட தேசிகன் நேற்று தனது அக்கா பாடசாலையில் செல்போன் சம்பந்தமாக நடந்த கருத்தரங்கில் சொன்னவற்றை அம்மாகிட்ட சொல்லும்போது கேட்டுக்கொண்டதை மீட்டுப்பார்த்துக்கொண்டான் மறுபடியும்.

அவள் " அம்மா இப்ப மிகவேகமாகவும் அதிமாகவும் பயன்பாட்டிலிருக்கும் செல்போனால் தான் வருத்தங்களும் பிரச்சனைகளும் அதிகரிக்கிறது. இப்பொழுது மலிவாகக் கிடைக்கும் செல்போன்களினால் உடல்நலத்துக்கு கேடும் காது மற்றும் பல உறுப்புக்களுக்கு பாதிப்பும் மூளையில் கட்டி இன்னும் புற்றுநோய் போன்ற பல நோய்கள் உருவாவதற்கும் காரணமாக இந்த தரமற்ற செல்போன்களே காரணமாய் அமைவதாய் .... என்று விரிவுரையில் நடந்த அத்தனை விடயங்களையும் சொல்லிக்கொண்டிருந்ததை கவனமாய் கேட்டுக்கொண்டிருந்த தேசிகன் அடிக்கடி அம்மாட செல்போனை பார்த்து அவள் சொன்னவற்றை பரீட்சித்துப் பார்த்துக்கொண்டே இருந்ததை வீட்டிலிருந்த யாரும் கவனிக்கல.

அப்படியே தேசிகன் வீட்டின் மேல்மாடியில் ஏறி பலமாக அம்மாவின் அந்த செல்போனை தரையை நோக்கி தனது பன்னீரெண்டு வயதுசக்திக்கேற்ப வீசி எறிந்தான் இனிமேல் அம்மாவோ யாரோ இதைப் பயன்படுத்தப்படக்கூடாதென்று...
அப்பா "தேசிகன் நீ ஏன் தேடல போனை நாங்கள் எல்லோரும் தேடும் போது நீ மட்டும் பேசாம இருந்தா "..
"அப்பா... அப்பா.... அம்மா.... நான் சொன்னா நீங்க என்னை அடிப்பீங்க..." கண்ணீரை பொலபொலவென விழுத்திக்கொண்டிருந்தான். "ஏன்டா என்ன.. என்ன பிழை செய்த"
"நான்.. நான் " . "சொல்லுடா".. " நான் அதை உடைச்சு எறிஞ்சிட்டேன்.. " அடிக்காதீங்கப்பா.. அப்பா"

என்று தான் அறிந்த அக்கா சொன்னவற்றையெல்லாம் சொல்லி " அம்மா எனக்கு நீங்க வேணும் அம்மா.. வீட்டில அதிக அழைப்புக்களும் தொலைபேசிக்கான அதிகமாகச் செலவழிப்பதும் நீங்க தானே அம்மா... உங்களுக்கு புற்றுநோய் அல்லது மூளைக்கட்டிகள் வந்தா நான் எப்படிமா வாழுற.. எனக்கு அம்மா என்று சொல்ல வேற யாரம்மா இருக்கிறா .. அம்மா .. அம்மா நான் பிழைசெய்யலம்மா... எனக்கு நீ வேணும்... "

வந்த கோபத்துக்கு அவனைத் திட்டித்தீர்த்துக்கொண்டு அந்த உடைந்த செல்போனைத் தேடி சிம்கார்ட்டை தேடிஎடுத்துட்டு அந்த இரவு கனமான இராத்திரியாகவும் வேனையாகவும் அமைந்தது அவர்கள் நால்வருக்கும்..
அடுத்த நாள் காலையில் தேசிகன் எழுந்து " அம்மா எனக்கு இரவெல்லாம் நித்திரையில்ல..என்னால நல்லா தூங்கிக்கொள்ள முடியல.. எனக்கு நீ வேணும்மா.."என்றவனை மீண்டும் ஏசிவிட்டு பாடசாலைக்கு கூட்டிக்கொண்டுவிட்டுட்டு அவளும் பாடசாலைக்கு போய் கண்கலங்கியவளாய்.. " அவன் செய்த அத்தனை செயல்களும் எனக்காகத் தானே என்வாழ்வு அவனோடு இருக்கவேணும் என்றுதானே இவன் அப்படிச் செய்திருக்கிறான்.. நான் மிகவும் அவசரமான விரைவான வாழ்க்கை நடத்தி உழைத்து வருகிறேன். யாருக்காக எல்லாம் எம்புள்ளைகளுக்குத் தானே.. அவன் யோசித்ததெல்லாம் என்னால் யோசிக்கவோ அவனோடு அளவளாவவோ நேரத்தை ஒதுக்கிக்கொள்ளாமல் நான்... என்ன வாழ்க்கை.. ஏன் அவ்வளவு ஏச்சு அவனுக்கு.. அவன் என்மகன்.. அவனுக்கு நான். அவன் ஆசை நான்.. .. "

பின்னேரம் தேசிகன் வந்து வீட்டிலே ஒரு பையில் அழகிய பெட்டி "அம்மா அம்மா" என்று பெருமிதத்தால் அவளைக்கட்டி அணைத்துக்கொண்டு அழுது இந்த போன் அழகானதும் பாதுகாப்பானதும்.. நீங்க என் அம்மா"... என்று அந்த புதிய போனை மீண்டும் பார்த்துக்கொண்ட தேசிகனை ஓரமாய் பார்த்துக்கொண்டிருந்தார் அப்பா....


செலவழியுங்கள்


பிள்ளைகளுக்காக நேரத்தை செலவழியுங்கள். குடும்ப உறவில் ஏற்படும் அத்தனை மனக்கஸ்டங்களுக்கும் காரணம் நாம் அனைவரும் மனம்விட்டு கதைப்பதில்லை. பணம், உழைப்பு, பொருளாதார பெருக்கம் அத்தனை சுகத்தைத் தராது நமது சுகபோக வாழ்க்கை என்கிற நினைப்பிலே அவை நிலைநிறுத்தப்பட்டிருக்கும். ஆனால் மனசு நலம்பெற அத்தனை குடும்ப உறவுகளோடும் ஒன்றிணைந்து கதைத்து பிரச்சனைகளுக்குத் தீர்வுகண்டு மகிழ்ந்து குலாவும் பொழுதிலே வாழ்க்கை இனிக்கும். எவ்வளவு செலவழித்தாலும் பணத்திலே நிம்மதி இல்லை. குறையுது என்ற நினைப்பே எண்ணத் தோன்றும். இல்லையே என்ற எண்ணமும் வாழ்க்கை வாழப்படாமல் போகும். ஆனால் அதற்கு பதிலாக பெற்றோர் பிள்ளைகளுடன் நேரத்தை செலவழித்து மகிழ்ச்சியை சேமிக்கலாம் இல்லையா..

"இன்றைய ஸ்டேடஸ்"

"அவசர யுகத்திலே மணித்தியாலங்களை செக்கன்களில் கடக்கும் வாழ்க்கை வாழும் நாம் ஆண்டுச் சந்தோசங்களை தவறவிடுகிறோம். "

எப்போதும் எதிர்காலத்துக்காக வாழுகிறோம் நிகழ்கால சுகத்தையும் இப்பொழுது கரைத்துக்கொண்டு வேதனைகளை தேக்கிக்கொண்டு.. வாழும் பொழுதுகளில் இனிய சொற்களையும் பரஸ்பர இன்பங்களையும் சேமியுங்கள் நேரத்தை செலவழித்து எதற்காக வாழ்கிறோம் என்பதன் அர்த்தமுணர்ந்து ...

குறும்படம்
last bell

Saturday, May 14, 2011

கிராமத்து வாசனை

கடற்கரை
பாதி பழுத்த நிலவு
தெளிந்த வானம்
சிதறிய மேகங்கள்

மெல்லிய காற்று
குளிர்ந்த மனது

வழிகாட்டும் மதங்கள்
சம்பாஷணையில்
நாங்கள்

மீன்பிடித்த தோணியின்
வருகை
கரையேற்றிய வேர்வைகள்
கைகொடுத்த எமது தோள்கள்

இனியபொழுது

அற்புதமான கிராமத்து
நிஜம்
விடைபெறுகிறது


தேனலையில் சில படங்கள் நான் முகப்புத்தகத்தில் முன்னர் பகிர்ந்தவை இங்கு சென்று காண்க. தேனலை

பிறந்தநாளும் இனிப்புகளும்..

எனது பாடசாலையின் ஒரு ஆசிரியரின் கணவரினது பிறந்தநன்நாள் நேற்று அதற்காக சகோதர ஆசிரியையின் இனியவிருந்துபசாரத்திற்காக அவருக்காக

மூன்று முடிச்சுக்கையின்
பிறந்த தினம்
மூன்று குழந்தைகளின்
தந்தையர் தினம்

சில சிற்றுண்டிகள்
வார்த்தைகள் பல
கொஞ்சம் தேநீர்
கொஞ்சும் சிரிப்புகள்
குலாவிய மகிழ்ச்சி
சிதறிய சில்லறைகளாய்...

இன்னும் எனக்கோர்
மனைவி இல்லை
இருந்திருந்தால்
அவளும்
அவர்களும்
நாங்கள் போலே
என் பிறந்தநாளில்
வெளிச்சங்களை விசிறிய
முகங்களையும்
சில இரவுகளையும்
கடந்திருப்பாள்

சே..
இன்று இந்த
சிறப்புக்களைக் காண
எனது மடிக்கணணி
இல்லையே
இருந்திருந்தால் ஸ்கைப்பில்
கூப்பிட்டிருக்கலாம்
வெளிநாட்டிலிலுந்து
தயாராகிருக்கும் விசா..
இன்பநுகர்வுகளுக்கு...
வாழ்துக்கள் சொல்லிவிடுக
கணவருக்கு..

Wednesday, May 11, 2011

கடற்கரையிரவு


முளைவிடும் நிலவு
கசிந்திடும் கனவு

கண்கள் கழுவிடும்
காற்று
பளிச்சிடும் ரேடியம்
இல்லாத நேரம்

ராத்திரி ராகம்
மீட்டும் புல்லாங்குழல்

அவளும் நானும்
கடலும் அலைகளும் காற்றும்
மணல்களுக்குள் கால்கள்


Tuesday, May 10, 2011

இது ஸ்டேடஸ் - 14

"நிஜமான வெற்றி எண்ணங்களைவிட கனமான தோல்விகளில் கண்ணீர் அதிகம்"

"வாழ்த்துச் சொன்னால் என்ன,
சொல்லாவிட்டாலும் உன்மடியினில் என்றும் நான் குழந்தை,
நீ இருக்கும் பொழுதும் இல்லாதபொழுதும்.
உனக்காக
சில கண்ணீரும் கண்ணீர்துடைக்கும் விரல்களும்
எப்பொழுதும் நானாய் .."

"என் கனவும் நிஜமும் ஒன்றுதான் இரண்டும் இருட்டிலேதான்... "
##வாழ்க்கை##

"வியர்வையும் புழுக்கமும் இக்காலத்து வெயிலும் வெக்கையும் சேர்த்து
தடிமலும் இருமலும் கொல்லுதே"

"உனது பிறந்தநாளில் உண்மையில் கொண்டாட்டம் எமக்கு திண்டாட்டம் உனக்கு. ஆனால் இன்று முழுவதும் நீ சந்தோசமாய் இருந்ததை எண்ணி எம் எண்ணம் நிறைவேறிய மகிழ்ச்சி. உன்னை மகிழ்விப்பதே இன்றைய நோக்கம்". ## செய்தோம்##
- மருமகளுக்கு பிறந்தநன்நாள் -

"மகிழ்வுற்ற மற்றொரு நாள் இனிதாக விடைபெறுகிறது."

"எத்தனையோ இறப்புக்களின் மத்தியிலே ஒரு இறப்பு. கொண்டாடப்படுவதற்கா துண்டாடப்படுவதற்கா???
துப்பாக்கிபிடித்த கைகளுக்கு துப்பாக்கி ரவைகளே துர்ப்பாக்கியமாகும்.
அப்படியானால் அகிம்சைவாதிகளுக்கும் துப்பாக்கிரவைகளே காரணமாயின??? "
## கேள்விகளாலே##

"உழைக்கும் கைகளுக்கு வணக்கம்."

"ஒவ்வொரு இரவுகளையும் நேசிக்கிறேன்
கனவு ஆபரணங்களை கழற்றிவிடும் நீ
அணிந்து அழகுபடுத்தும் நான்"

"அண்மைய நாட்கள் மோசமாகவே விடிந்து முடிந்தன. அவ்வப்போது சில சந்தோசங்களை கஸ்டப்பட்டே ஏற்படுத்தப்பட வேண்டியதாயிற்று"

"அவள் அப்படியொன்றும் அழகில்லை.... தேவாலயத்துக்கள் நான். ஆராதானைகள்
கல்யாணத்துக்கு.."

இன்றைய படங்கள்

அண்மையில் இலக்கிய விற்பன்னர் பாலசுகுமார் அவர்களின் தொகுப்பும் அமைப்புமான "கொட்டியாரம்" என்ற வரலாற்று இலக்கியத்தேடல் புத்தக அறிமுக விழாவுக்குபோயிருந்தேன். அங்கு எடுக்கப்பட்ட படங்கள் இன்றை படங்களாக... வலியும் நெகிழ்ச்சியுமாய் இருந்த அந்த புத்தகப்பயிர் நிலத்தில் எத்தனையோ காவியங்களும் தமிழ் இனத்தின் அடயாளங்களும் புதைக்கப்பட்டதை கண்டேன். பொதுக்கென்று கண்ணீர் வந்ததை யாரால் தடுக்கமுடியும்...

Sunday, May 1, 2011

இராக்கால அலறல்

நீ
வேண்டும் வேண்டாது
என்றவைகளுக்காகவும் சேர்த்து

தருவேன் என்று
தராதவைகளுக்காகவும்

கேட்டுக்கிறங்கி தேய்ந்து
அலைந்தவைளுக்காகவும்

இருட்டின் சப்தங்கள்
போர்வைக்குள் ஒளிர்ந்த
'செல்போன்கள்'
சிரித்துக்கொண்ட நண்பர்கள்
"நண்பர்கள் பேசிக்கொள்கிறார்கள்"
என்று குமுறிக்கொள்கிறார்கள்

காற்றின் முகவரிகளில்
ஈரக்காதல்
அதிகம் வாங்கிக்கொண்டது
செல்போன்கள்

உனக்கெங்கே புரியப்போகுது
அவஸ்தை வலையில்
நான்
சிலந்தியாய் நீ

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு