இன்று சில சிந்தனைகள்..
"இதோ இந்த வார்த்தைகளை திரும்பத்திரும்பக் கூறுங்கள். இவற்றைத் தவறாமல் கடைப்பிடிப்பேன் என்று கூறுங்கள்"..
- கல்வியில் சிறப்படைய நான் நன்றாக உழைத்துப் படிப்பேன்
- என்னைச் சுற்றியிருப்பவர்களில் பத்துப்பேருக்கு எழுதப்படிக்கக் கற்றுக்கொடுப்பேன்.
- என் சுற்றுப்புறத்தில் போதைப்பழக்கத்துக்கு ஆளானவர்களில் குறைந்தது ஐந்து பேரையாவது அக்கொடிய பழக்கத்திலிருந்து மீட்பேன்.
- என்னுடைய வீட்டிலோ படிக்கிற இடத்திலோ பத்து மரக்கன்றுகளேனும் நட்டு அவை மரமாகும் வரை பாதுகாத்து வளர்ப்பேன்.
- *துன்பப்படுகின்றவர்களில் சிலருக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்து அவர்களுடைய முகத்திலே மலர்ச்சியை ஏற்படுத்துவேன்.
- நான் மதம்,சாதி, மொழி ஆகியவற்றின் பெயரால் நடக்கும் தீவிரவாதச் செயல்களுக்கு துணைபோக மாட்டேன்
- நேர்மையான வழியில் நடப்பேன். மற்றவர்களும் நேர்மையாக நடந்துகொள்ள உதவுவேன்.
- நான் நல்லவனாய் இருந்து நற்பணிகள் செய்து என் வாழ்வை மற்றவர்களுக்குச் சிறந்த உதாரணமாய்த் திகழச் செய்வேன்.
- மனநோயாலும் பிற ஊனங்களாலும் துயர்ப்படும் சகோதர சகோதரிகளுக்கும் என்னாலான முயற்சிகளைச் செய்து அத்துயரிலிருந்து மீட்டு சாதாரண மனிதர்களாய் வாழச்செய்வேன்.
- என் தாயத்திருநாட்டின் வெற்றியையும் என் நாட்டு மக்கள் பெறும் வெற்றியையும் நான் மகிழ்ச்சியோடு கொண்டாடுவேன்..
14 comments:
அத்தனையும் பொன் மொழிகள் றமேஸ்.ஒரு மனிதன் இத்தனையையும் கடைப்பிடித்தாலே போதும் நாடும் வீடும் முன்னேற.
/////என் தாயத்திருநாட்டின் வெற்றியையும் என் நாட்டு மக்கள் பெறும் வெற்றியையும் நான் மகிழ்ச்சியோடு கொண்டாடுவேன்..////
...... one royal salute for that!
ஹேமா said...
///அத்தனையும் பொன் மொழிகள் றமேஸ்.///
உண்மைதான் ஹேமா... கடந்த வாரம் எனக்கு கைகொடுத்த புத்தகம் இவரின் சிந்தனைகளே...
///ஒரு மனிதன் இத்தனையையும் கடைப்பிடித்தாலே போதும் நாடும் வீடும் முன்னேற.///
ம்ம்்ம்..
Chitra said...
///
...... one royal salute for that!
///
ம்ம் நன்றி சொல்லுவோம்
அத்தனை வரிகளையும் வாழ்வில் கடைபிடித்தால் நல்லது. நன்றி.
மதுரை சரவணன் said...
//அத்தனை வரிகளையும் வாழ்வில் கடைபிடித்தால் நல்லது. நன்றி.//
நன்றி சரவணன்...
நன்று.
வானம்பாடிகள் said...
///நன்று.///
நன்றிங்க
றமேஸ் அதில ஒண்ணை பாதி கடைப்புடிச்சாலாவது உருப்பட்டிரலாம் ...;(
Balavasakan said...
///றமேஸ் அதில ஒண்ணை பாதி கடைப்புடிச்சாலாவது உருப்பட்டிரலாம் ...;(
///
ம்ம் உண்மைதான் பாலா இத அழுமூஞ்சியிலா சொல்லுறது
அத்தனை சிந்தனைத் துளிகளும்
அவரிடம் இருந்து சிந்திய தேன்
துளிகள்தான்!அதைப் பவித்திரமாய்
எத்தனை பேர்கள் பருகுவார்கள்!!??
தகவலுக்கு நன்றி றமேஸ்
அப்பா நலமா?வீட்டுக்கு
வந்துவிட்டாரா?
Kala said...
/// தகவலுக்கு நன்றி றமேஸ்
///
நன்றி கலா.
///
/// அப்பா நலமா?வீட்டுக்கு
வந்துவிட்டாரா?//
வீட்டுக்கு வந்து மீண்டும் விடுதியில் இப்போது இருக்கிறார் நாளை discharge pannuvanaka
கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல...உன்னை தூங்கவிடாமல் பண்ணுவது எதுவோ அதுவே இலட்சியக் கனவு.. ஆம் கனவு காணுங்கள்...
- டாக்டர் அப்துல் கலாம்
செந்தில்வேல்குமார் said...
///கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல...உன்னை தூங்கவிடாமல் பண்ணுவது எதுவோ அதுவே இலட்சியக் கனவு.. ஆம் கனவு காணுங்கள்...
- டாக்டர் அப்துல் கலாம்
///
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
கனவு காணுவோம்
Post a Comment