Pages

Friday, July 2, 2010

எரியும் தாகம் தொடர் 02

லிப்ட்ல இறங்கிய அவன் மீண்டும் தனது வேலை அறைக்குள் போக அவன் நண்பனும் அறைக்குள் வர நேரம் சரியாக இருந்தது. நண்பனிடம் இரகசியமாக தட்டுத்தடுமாறி நடந்ததை சொல்ல. ஆச்சரியமும் ஆமானுசமும் கலந்த பார்வையை உசுப்பிய நண்பன் "டேய்! இவளை இதுக்கு மேல விட்டுவைச்சா. சரிவராது குடும்பத்துக்கே கொள்ளி(விறகு)வைத்துடுவாள். கவனமா, சீரியசா கையாளணும் இந்தப்பிரச்சனைக்கு சரியான முடிவெடுக்கணும்" என்று என்ன முடிவெடுப்பதென்று மட்டும் சொல்லாமல் அட்வைஸ் பண்ணிணான்.
எத்தனையோபேருக்கு அட்வைஸ் பண்ணிய இவனுக்கு இப்போது அந்த அட்வைஸ ஏதோ சொன்னமாதிரி இருந்ததே தவிர. என்ன பண்ணுறது என்று மேலும் குழப்பம் அவனுக்கு.

அந்த வாரத்தின் கடைசிக்கு முதல் வேலைநாள் வியாழக்கிழமை. மதுவின் நண்பன் "டேய் மது நேரம் பார்க்கல ஐந்து மணியாயிட்டு இன்னும் போகல"
"வேலை கிடக்குடா. நீ போ நான் கொஞ்சம் பிந்திவாறன்"
"ஓகே நான் கிளம்புறன் பாய்" என்று அவன் கிளம்ப.
மதுவும் வேலையை முடித்து அலுவலகத்தை விட்டு வெளியேற நேரம் ஆறுமுப்பதைத் தாண்டியது.. அவசரமாய் லிப்ட்ல இறங்கி கார் பார்க் பக்கம் போய் காரின் பின்பக்க கதவைத்திறந்து உடமைகளைப் போட்டுவிட்ட முன் சீட்டுக் வந்து இருக்க
மற்றொரு பாறாங்கல் தலையில் விழுந்தது...

"ஹேய்" என்று அவள் உடம்பை வளைத்து உள்நுழைந்து,
"மாமன் பார்ப்பாரோ
மன்மதக்கண்ணாலே
காமன் கணைகள் சேர்ப்பாரோ
கட்டவிழ்ந்த
இந்தப்பெண்ணாலே
மதுரசம் நானிருக்க
திராட்சை ரசம்
உனக்கெதற்கு?
வா
ஸ்பரிசங்களாலே
காதல்
செய்""
என்று சொல்ல.
அவன் அடுக்கிவைத்த கோபங்களை கொட்டிவிடும் நேரம் இது என்று....

"போ வெளியேறு. வெளியேறு. என் காரின் முன்னிருக்கை என் மனைவிக்கு மட்டுமே சொந்தம்"
"போ போ தீண்டாதே"
"நான் அடிச்சா தாங்கமாட்ட" என்று அவளை உதறிவெளியேற்றினான் இன்னும் சில வார்த்தைகளால். அப்படியே கிபீர் வேகமாய் பறந்து போனான் ........


அடுத்தவாரம் வேலை நிமித்தம் பயிற்சிப்பட்டறைக்காக(Training workshop) அவன் கொஞ்சம் தூரமாய் வெளியூர் செல்லவேண்டியதாக இருந்தது. இருந்தாலும் இந்த நிலையில் தடுமாறிய மனது போவதா... விடுவதா என்று பல முறை கேட்டுக்கொண்டு.....
செய்யும் தொழிலை தெய்வமாய் போற்றி கடமையுணர்வு மிக்கதாக செய்யவல்ல இவன் மறுப்பானா போவதற்கு?

இவனுக்கான உடைகளையும் ஐந்து நாட்களுக்குத் தேவையான பொருட்களையும் கொண்டுபோக வேண்டிய பெட்டியில் பவ்வியமாக அடுக்கி வைத்துக்கொண்டிருந்தாள் சகி.. அந்த பாச உணர்வைப் புசித்துக்கொண்டு அவள் இடையில் நழுவிய இடைவெளியையும் அவன் கவனிக்கத்தவறவில்லை. பெருமூச்செறிந்து 'எப்போதும் என்னுடன் இருக்கணும் நான் உன்னுடன்" என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு தன் பிள்ளை அழும் குரல் கேட்க பிள்ளைத்தூக்கிக் கொள்ள விரைந்தான் அந்த பொறுப்புள்ள தந்தை.

பயிற்சிப்பட்டறையும் ஆரம்பித்துவிட்டது. சுமூகமாய் போய்க்கொண்டிருந்தது முதல்நாள். ஆனால் இது நடக்குமென்று அவன் எள்ளளவும் எதிர்பார்க்கவில்லை. அவன் எதை வெறுத்து கொஞ்சநாள் நிம்மதியாக இருக்கலாம் என்று முடிவெடுத்து வந்தானோ அது அவனை விடுவதாய் இல்லை.

பயிற்சிப்பட்டறையின் இடைநடுவே ஹொட்டல் வேலையாளி "சேர் உங்களைத் தேடி ஒருவர் காத்திருக்கிறார் அவசரமாக சந்திக்கணுமாம்"
"ஓகே வாரன்" "மன்னிக்க வெளியில் ஒருவர் காத்திருக்கிறார் சந்தித்துவருகிறேன்". என்று சொல்லிக்கொண்டு விரைந்தான். அறைக்கதவைத் திறந்து வெளியே தேடிக்கொண்டிருக்க....
அதே காட்டுச்சிறுக்கி "ஹேய்"
கண்ட ஒரு நிமிடம் அசந்து போய் இவன் "இவள் ஏன்டா துரத்துறாள்... சனியன் பெனியனுக்குள் புகுந்து புகுந்து விளையாடுதே." "சீ!" என்று பார்வை வெறுத்து திரும்பி அறைக்குள் போக எத்தனிக்க,
அவள் "இப்போதாவது உணருகிறாயா என்காதல் தூரம் பார்க்காது உன்னைத்தேடி இத்தனை கிலோமீட்டர் கடந்து........'என்று சொல்லி முடிப்பதற்கு முன் குறுக்கிட்ட அவன் "ஹேய் ஹேய் மிஸ் தயவு செய்து என்னை அணுகாத உன்னிட்ட இருக்கிறது காதல் இல்ல.நீ பொய் சொல்லுகிறாய். இருந்தாலும் அதை ஏத்துக்கிற எண்ணம் எனக்கில்ல. நீ ஒரு பிசாசு. நான் உன்ன வெறுக்கிறேன் . தயவுசெய்து போய்விடு" என்று மூச்செடுக்கச் சொல்லிவிட்டு அறைக்கதவைத் திறப்பதற்குள் அவள் "உன்ன அடைஞ்சே தீருவேன் எனக்காக நீதான் பாரு" என்று விரகதாகத்தின் உச்சியில் வந்த அந்த சூடான வார்த்தைகள் கேட்டும் கேளாததுமாய் அவன் பயிற்சிப்பட்டறைக்கு உள்ளே போனான்.
போன அவன் விரிவுரைகளை முழுமையாக விளங்கிக்கொள்ள முடியாமல் தவித்தான். அவள் வந்து உதிர்த்த அந்த அவசியமற்ற அநாதைவார்த்தைகள் திரும்பத்திரும்ப வந்து உலுக்கிக்கொண்டு அவனை முள்ளாய் குத்திக்கொண்டு........
தொடரும்..

எரியும் தாகம் தொடர் 01


(இந்த கதை எழுத்து வடிவம் எனது முதல் முயற்சி ஆனால் கதை பற்றி முடிவில் சொல்கிறேன். உங்கள் கருத்துக்களை வேண்டி நிற்கிறேன். ) 

9 comments:

ஹேமா said...

என்ன சொல்லப்போறீங்க...
எப்பிடிக் கொண்டுபோய் கதை
எப்பிடி ஆகப்போகுதோ.
தொடருங்கோ !

றமேஸ்-Ramesh said...

@ஹேமா said...

//என்ன சொல்லப்போறீங்க...
எப்பிடிக் கொண்டுபோய் கதை
எப்பிடி ஆகப்போகுதோ.
தொடருங்கோ !////

ஆகா இப்படியுமா.. தொடருவோமே..

சந்ரு said...

ஆஹா.... இது எங்கேயோ....
இது யாருடைய அனுபவக் கதை என்று புரிந்துவிட்டது...

அதுசரி ரமேஸ் நீங்கள் கடந்தவாரம் வேலை நிமித்தம் நீண்ட தூரம் சென்றிருந்திங்க என்ன ஆச்சு..

றமேஸ்-Ramesh said...

@சந்ரு said...
///ஆஹா.... இது எங்கேயோ.... ///
கேட்ட கதை மாதிரியா
///இது யாருடைய அனுபவக் கதை என்று புரிந்துவிட்டது...////

ஓ அப்படியா

////அதுசரி ரமேஸ் நீங்கள் கடந்தவாரம் வேலை நிமித்தம் நீண்ட தூரம் சென்றிருந்திங்க என்ன ஆச்ச////
நல்லபடியா முடிந்தது. நன்றி நலம் விசாரித்ததற்கு. அதனாலே தான் உங்களோடு தொடர்பு கொள்ள முடியவில்ல
ஆங்..

தமிழ் மதுரம் said...

ஏன் றமேஸ் பயமுறுத்துறீங்கள்? கதையின் இரண்டாம் பாகம் நன்றாக உள்ளது, முதற் பாகத்தை விடக் குறியீட்டு வடிவில் உரையாடல் கலந்து கொண்டு செல்கிறீர்கள்! தொடருங்கோ!

றமேஸ்-Ramesh said...

@தமிழ்மதுரம்
நன்றி

நா.பூ.பெரியார்முத்து said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி

www.periyarl.com - பகலவன் திரட்டிஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

Karthick Chidambaram said...

கதை நல்ல போகுது. தொடருங்கள். யாருடைய கதை நண்பரே .... இது ?

றமேஸ்-Ramesh said...

@Karthick Chidambaram said...

///கதை நல்ல போகுது. தொடருங்கள். யாருடைய கதை நண்பரே .... இது ?///
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

கடைசியில் தெரிந்திருக்கும்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு