நண்பர் ஜெயமார்த்தாண்டன் அவர்கள் அழைத்தும் பல நாட்களாய் இல்லை பல வாரங்களாய் எழுத நினைத்து எழுதாமல் போன பதின்மவயது தொடர்பதிவு.(மன்னிக்க வேண்டுகிறேன் மார்த்தாண்டன், வேலைப்பளு தான் காரணம்)
முதலில் நன்றி கூடுசாலைக்கு
எத்தனையோ நாட்கள் இல்லை வருடங்கள் உதிர்ந்த போதும்.... வாழ்க்கைச் சக்கரத்தில் என் சிறகுகள் உலர்த்த தொடங்கிய நாட்கள் இன்னும் ஈரப்படுத்திக் கொண்டு உள்மனதில்.
எங்க ஊரில் கிரிக்கெட் மட்டுமே தெரிந்த விளையாட்டு. வாழைக்காலை என்று சொல்லும் சற்று களி நிறைந்ததரை ஆனா அங்கே தென்னைகளே இருந்தன வாழைகள் இல்லை.( வாழைக்காலை என்பது வாழைத்தோட்டத்திற்கு பேச்சு வழக்கில் இங்கு சொல்லப்படுவது) அந்தக்கிரிக்கட் பைத்தியங்களான காலம் தென்னை மட்டைகளும் டெனிஸ் பந்துகளும் விக்கட்டுகளுக்கு பூவரசு கம்புகளும் நாங்களும்....
ஆங்கில வகுப்புக்கு எண்டா எங்கள் ஆங்கில ஆசான் திரு.திருஞானசம்பந்தன் ஆசிரியர் தான் இவர் மட்டுமே இப்போதும் ஆங்கிலம் கற்பித்துக்கொண்டிருக்கிறார். இவரின் வகுப்புக்கு செல்ல என்னிடம் நீல நில சின்னச் சைக்கிள் இருந்தது.இதில் நான் ஓட முன்னுக்கு என் நண்பன் ஒருவன் கைபிடியில்(ஹேண்டிலில்) மற்றொரு நண்பன் பின்னுக்கு இன்னொரு நண்பனுமாக சைக்கிள் சவாரி..ஏஹே ஓஹோ லால லா.... இன்னும் கண்ணுக்குள் இருக்கு நாய்துரத்திக்கொள்ள நாங்கள் ஒரு வளைவில் விழுந்து முழங்காலில் உரசல் காயம் மனதுக்குள் டிக் டிக் எண்டு பயப்புட்டு வகுப்புக்குள் வேர்த்து இருந்த அந்த நாள்.............
(இவர்தான் எங்கள் ஆங்கில மொழி ஆசான்: திரு.திருஞானசம்பந்தர் சேர்)
தொலைக்காட்சியில் அதிக நாட்டம் இல்லாமையிலும் ஆனாலும் விரும்பிய ரொபின் கூட், டார்ஷான், நைட் ரைடர் தொடர்கள் இன்னும் பார்க்கணும் எண்டு ...
அப்போதுதான் தமிழ் ஊற்றெடுக்கத் தொடங்கவே.. சாண்டில்யனின் சரித்திர நாவல்களில் குழைந்த பருவங்கள். ரசித்து துவைத்த மனதுடன் கவிதை வரிகள் கோர்க்கத் தொடங்கிய போது.. என் பெற்றோர் "இவன் காதல் வயப்பட்டு விட்டான்" என்று எண்ணிவிடுவார்கள் என்று பயந்து பல நாட்கள் கவிதைத் தாள்களை ஒழித்து வைத்து அப்பா அக்கா இவர்களுக்கு காதல் தவிர்த்து கவி வரிகளை வாசித்துக்காட்டிய நான். என் கவிதைகளை என்னைவிட என்மற்றைய புத்தகங்களே அதிகம் படித்துக்கொண்டன ஒழித்து வைத்தததால்............
நான் சுதந்திரப்பறவையாக வேண்டிய தருணம் அது. உயர்தரம் படிக்க மட்டக்களப்பு நகர் வந்து படித்த பொழுதுகள்.அப்போதுதான் தனியாக பேருந்துகளில் பயணிக்கத் தொடங்கிய பொழுதுகள். உரசல்களும் திக் என்ற உணர்வுகளும் பஸ் நெருசல்களில் கண்ட காட்சிகளில் மனக்கிழிஞல்களும், மன எழுச்சிகளும்...
அப்படியாக........
தித்திக்கும் உணர்வுகள் இன்னும் ஈரப்பட்டுக்கொண்டு.......
சிதறல்கள் உலர்த்திய சிறகுகளை யாரும் தொடரலாம்.
Saturday, June 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
பதின்ம ஞாபகங்களை யாரால் தான் மறக்க முடியும். முக்கியமாய் திக் திக் என்ற உணர்வுகளை.
மிகவும் நன்று, ஆங்கில ஆசானையும் ஞாபக படுத்தியுள்ளீர்கள் . இளமைக்கால நினைவுகள் நேற்றும் பசுமையே
நல்ல பதிவு.
உங்களோடு நாமும் உலாவிய இனிய அனுபவம்.
நல்ல பதிவு.
உங்களோடு நாமும் உலாவிய இனிய அனுபவம்.
உங்கள் ஆதங்கங்கள் அழகாகச் சிதறியிருக்கிறது றமேஸ்.
@தமிழ் உதயம் said...
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
திக் திக்...ஹாஹாஹா
@ Theepan said...
நன்றி டா
@ LOSHAN said...
நன்றி லோஷன் வருகை பின்னூட்டலுக்கும்
@ஹேமா said...
நன்றி ஹேமா வருகை கருத்துக்கும்
மிக நல்ல பக்ரிவு நண்பரே.. உங்களின் பகிர்வுக்கு நன்றி..
@கமலேஷ் said...
///மிக நல்ல பக்ரிவு நண்பரே.. உங்களின் பகிர்வுக்கு நன்றி..///
நன்றி நண்பா உங்களிடமிருந்தே வந்தது எனக்கு
Post a Comment