Pages

Saturday, July 3, 2010

எரியும் தாகம் தொடர் 03 (இறுதி அங்கம்)

எதிர்பார்த்த எதுவும் நடப்பதில்லை என்று அவனுக்கும் தெரியும் ஆனால் அவன் இப்படியெல்லாம் இருக்குமெண்டு கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அன்றிரவு அதே ஹோட்டலில் களியாட்ட நிகழ்வுக்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.அவனும் அங்கு ஒரு ரிலக்ஸா இருக்குமென்று கலந்துகொள்ளப் போனான். அங்கே அதே காட்டுச்சிறுக்கியும் வந்தாள். இவன் அடல் பாடல்களில் கலந்து மது அருந்திக்கொண்டு இருந்தவேளையில் தனது நாசுக்கான லீலையை ஆரம்பித்தாள். மயக்கமருந்து கலந்த ஒரு வைன்கிண்ணத்தை எடுத்து
"ஹேய் மதுரசம் அருந்தல்லையா?.. ஹெய் கோவிக்காதீங்க நான் மறந்துட்டேன். இவ் யூ டோன் மைண்ட் இந்த வைனைக் குடிக்கலாம்.... "
என்று ஒரு மாதிரியான புன்னகையை உதிர்த்துக்கொண்டு இவனிடம் நீட்ட இவனும் அதை அப்படியே வாங்கி ஒரே மூச்சில் குடித்தான். கொஞ்சம் கொஞ்சமாய் இவனுக்கு தலைவலியும் ஏதோ தனக்கு வித்தியாசம் ஏற்படுவதையும் உணர்ந்த இவன் தனது அறையை நோக்கி தட்டுத்தடுமாறி வந்து கட்டிலில் படுத்தான் மயக்கமுற்றுக்கொண்டிருக்கும் போது யாரோ தனது அறைக் கதவை திறப்பதை உணரக்கூடியிதாய் இருந்த இவனுக்கு அது யாரெண்டு கண்டுபிக்க முன் வாய் சத்தமில்லாமல் உளறிக்கொண்டிருக்க அதே காட்டுச்சிறுக்கி நுழைந்து இவனை ஆரக்கட்டிக்கொண்டு....
"கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள." என்று வள்ளுவர் குறளுக்கு அர்த்தம் புகட்டினாள் அஃறிணையான அவனுக்கு. முற்றிய மது மயக்கத்தில் அடுத்தநாள் நேரம் கடந்துதான் எழுந்தான்.அவசரமாய் வெளிக்கிட்டு பயிற்சிவகுப்புக்குச் செல்ல இடைமறித்த அவள் "நேற்றிரவு நல்லதாக இருந்ததா" என்று கேட்டு ஏதுமறியா அவனைக்குழப்பினாள். அவன் அதைக்காதில் வாங்கியும் வாங்காமலும் சென்றுகொண்டிருக்க ஆத்திரமுற்ற அவள் "இண்டைக்கு உணர்வாய் ".... என்று அவனிடம் சொல்லிக்கொண்டுபோனாள். பயிற்சி வகுப்பு முடிவடைந்து அறைக்கு வந்ததும் இவள் தனது கட்டிலில் குப்பற நித்திரையில் இருப்பதைக்கண்டு "ஹேய் எழும்பு எழும்பு இங்க வந்து ஏன் கொல்லுகிறாய்" என்று எழுப்ப முயன்ற போது அவள் கையில் இருந்த நஞ்சுக்குப்பியைப்பார்த்ததும் தான் தெரிந்தது அவள் நஞ்சருந்தி மயக்கநிலையில் இருப்பதை. உடனடியாக ஹோட்டல் அவசர தொலைபேசிக்கு அழைப்பெடுத்து வைத்தியசாலைக்குச் சேர்த்தான்.
இந்த பயிற்சிப்பட்டறைக்கு வந்து இன்னும் தனது வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு எடுக்காததால் மதுவின் மனைவி பயத்தின் மிகுதியால் மதுவின் நண்பனுக்கு அழைப்பெடுத்து விசாரித்தாள். அவனும் காடடுச்சிறுக்கியை வைத்தியசாலையில் அனுமதித்த விடயத்தை சொல்ல, மதுவின் மனைவி திடுக்கிட்டு அவசரஅவசரமாய் அந்த வைத்தியசாலைக்கு ஓடிவந்து மதுவைச்சந்திக்கும் நேரமும் உயிர்தப்பிய அவளின் வாக்குமூலத்தைப் பெறுவதற்கிடையில் போலீஸ் இவனை விசாரிக்கும் நேரமும் சரியாய் இருந்தது.
விசாரிக்கும் போது தனது கணவர் ஏதோ தப்புச்செய்திருப்பதாக தனது அவசரப்புத்திக்கு உணர்த்தியதும் இவனைவிட்டு விலகிச்சென்றாள். அவன் எத்தனைதடவை அவளிடம் சொல்லியும் அவள் கேட்க மறுத்து "இனிமேல் என்வீட்டுக்கு வரவேண்டாம் "என்று நெருப்பைக் கொட்டிச்சென்றாள். தன்மனைவிக்காக தனது பிள்ளைக்காக தனது மனிதத்துவத்துக்காகத் தான் எந்தவித தப்புச்செய்யாமலும் தன்னைப்புரிந்துகொண்ட தன் அன்புமனைவி நம்பாமல் போறாளே என்பது மதுவுக்கு பலத்த வேதனையைதத் தந்தது. அப்போதும் அவன் "என்னை நம்பமாட்டாயா நான் எந்த தப்பும் செய்யல்ல சகி"என்று மனதுக்குள் சொன்னது உதட்டின் வழியே சற்று சத்தமாகவே ஒலித்தது.
போலீஸ் விசாரணை தொடர்ந்து கொண்டிருக்க... இவன் பயிற்சிப்பட்டறையை முடித்துக்கொண்டு தனது வீட்டுக்குப்போனான்
வீட்டுக்கு வந்த இவனை வரவேண்டாம் என்று சொன்ன மனைவி வீட்டுக்கதவைப் பூட்டி திறக்காமல் இருப்பதும் வேதனைக்கு மேல் வலியைத்தந்தது மதுவுக்கு.அப்படியே யன்னல் வழியே "என் குழந்தையை மட்டும் கொடு இந்த புல்வெளி முற்றத்தில் விளையாடிவிட்டு உன்னிடம் தந்திட்டுப் போகிறேன்" என்று கெஞ்ச மனைவியும் தன் கணவன் பிழைசெய்திருக்கமாட்டான் இருந்தாலும் சிறுசந்தேகம் வந்ததால் பொறுக்கமுடியாததால் பிள்ளையைக் கொடுத்தாள்.
அவன் அடுத்துவந்த நாட்களில் தன்கணவன் முற்றத்தில் பிள்ளையோடு விளையாடிய தருணங்களை யன்னல்வழியே பார்த்து ரசித்து மனதுக்குள் மகிழ்ந்துகொள்ள மறுக்கவில்ல. மறைவிலிருந்து அவனையும் மகனயும் ரசித்த மனது அவனை எப்படியோ வீட்டுக்குள் அழைக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தது அவளுக்கு.

அன்று பிள்ளையிடம் விளையாடிவிட்டு மனைவியிடம் கொடுக்கப்போக அவன்"இன்னுமா என்னை நம்பவில்லை. நான் உனக்காகவும் பிள்ளைக்காகவும் வாழ்வதை இன்னுமா ஏற்கவில்லை" என்று கண்ணீர் வீழிகளில் வரைந்து விழாமல் கனத்திருந்து அவளிடம் கேட்டதும்... அவள் "நாளை உங்க பிறந்தநாள் சந்திப்போம். வீட்டிலில் இல்ல ஹோட்டலில் பார்ட்டி தாறன்". என்று சொன்னதும் எப்படா நாளை வருகிறது என்று மணித்தியாலங்களை எண்ணிக்கொண்டு இன்னும் விடியவில்லையே என்று நேரத்தைகடத்திக்கொண்டிருந்தான்.
அவளை அடுத்தநாள் தனது காரில் ஏற்றிக்கொண்டு பார்ட்டிக்கு கூட்டிச்செல்ல தன்பிள்ளையை பக்கத்துவீட்டு உறவினரை அழைத்து தனதுவீட்டில் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு புறப்பட்டான்.
இவர்கள் இல்லாத தருணம் பார்த்து காட்டுச்சிறுக்கி இவன் வீட்டுக்கு வந்து தான் நண்பி என்றும் பிறந்ததாள் பரிசுகொடுக்கணும் என்றும் சொல்லி "எங்க மது" என்று கேட்டு உள்நுழைந்தாள். பிள்ளையைப்பார்த்ததும் எரிச்சலுற்ற இவள் பிள்ளையை ஒழித்துபோக முற்படுகையில் மதுவின் கார் சத்தம் கேட்டதும் பின்வாசல் வழியாக ஓடிவிட்டாள். அவசரமாய் ஓடிவந்த மதுவும் மனைவியும் பிள்ளை எங்க என்று பக்கத்துவீட்டு உறவினருடன் கேட்கத்தான் மதுவுக்குப்பட்டது. காட்டுச்சிறுக்கி வந்திருக்காள் என்று.....
ஓடி ஓடி எல்லா இடமும் தேட பிள்ளை புல்வெளியில் விளையாடிக்கொண்டிருந்தான்.

தனது படுக்கை அறைக்குள் சென்ற மதுவின் மனைவி தானும் கணவரும் பிள்ளையுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தில் தனது தலையை மட்டும் கடித்து இருப்பதை பார்த்ததும் தான் உணர்ந்தாள். தன் கணவன் பிழையானவன் இல்லை இவள்தான் தன் கணவனைத்துரத்துறாள் என்று....போலீசுக்கு விசயத்தை அறிவித்து மது நடந்த முழுவிடயத்தையும் சொல்லும்போதுதான் தன்கணவன் நிரபராதி என்பதை மனப்பூவமாக ஏற்றுக்கொண்டாள்.
இருந்தாலும் அந்தக்காட்டுச்சிறுக்கி விடுவதாய் இல்லை. அடுத்தநாள் மது வேலைக்குப்போன பிறகு. பவ்வியமாய் வீட்டுக்குள்ளே நுழைந்தாள். பிள்ளைக்குப் பால்கொடுத்து தாலாட்டுப் பாடிக்கொண்டிருந்த போது ஏதோ சத்தம் மேல்மாடியிலிருந்த படுக்கையறையினுள் கேட்டதும் பிள்ளையை தூங்க விட்டுட்டு மேலே ஏறிப்போக அந்த காட்டுச்சிறுக்கியைக் கண்டதும் ஆத்திரமடைந்த சகியை கொல்ல முற்படவே சகியும் தடுத்து அவளோடு சண்டையிட்டுக்கொண்ருந்தாள். அப்போது மது வீட்டுக்கு தொலைபேசி அழைப்பெடுத்தான். சண்டை பிடித்துக்கொண்டிருந்த சகி அவன் அழைப்பை காலால் தொலைபேசி ஒலிபெருக்கியை தட்ட ஏதோ பிரச்சனை என்பதை உணர்ந்த மது போலீசுக்கு அறிவித்து வீட்டுக்கு ஓடி வந்துகொண்டிருந்தான்.
காடடுச்சிறுக்கி கடுமையாக தாக்கினாள்

சகியும் இவளை பலமுறை தடுத்து கடைசியில் சகி அவளை அடிக்க ஓங்க மேல்மாடியிலிருந்து தவறிவிழுந்தாள் காட்டுச்சிறுக்கி அப்போது அவளைக் காப்பாத்த முற்பட்டாள் சகி, ஆனால் காட்டுச்சிறுக்கி கீழே விழ போலீசும் வீட்டுக்கு வர சரியாய் இருந்தது.
இறுதியில் போலீஸ் விசாரணையில் மது நிரபராதி என்று அறிவிக்க மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட சகி மதுவைக் கட்டிப்பித்து முத்தமிட்டாள்.

-----------------சுபம்.

இதுவரை கதை எழுத்துவடிவம் முடிந்துவிட்டது .இந்தக்கதை அண்மையில் நான் பார்த்த திரைப்படத்தை அப்படியே முடிந்தளவு தந்திருக்கிறேன்.
இந்தப்படம் Obsessed இதுபற்றி இங்க பாருங்க
கதை எழுதணும் என்ற என் அவா எழுத்துருவாக்கியிருக்கன் அவ்வளவுதான்
இதுபற்றி கதை எழுத்துவடிவம் பற்றி தெளிவுபடுத்துக.

14 comments:

Bavan said...

//இந்தக்கதை அண்மையில் நான் பார்த்த திரைப்படத்தை அப்படியே முடிந்தளவு தந்திருக்கிறேன்.
இந்தப்படம் Obsessed இதுபற்றி இங்க பாருங்க//

ஆங்... பாத்திடுவோம்..:D

//கதை எழுதணும் என்ற என் அவா எழுத்துருவாக்கியிருக்கன் அவ்வளவுதான்
இதுபற்றி கதை எழுத்துவடிவம் பற்றி தெளிவுபடுத்துக.//

எழுத்துப்பற்றி திருத்தங்கள் சொல்லும் அளவுக்கு அனுபவமில்லை, ஆனால் எழுத்து நடை கதையை நீங்கள் கொண்டுபோன விதம் மிகவும் பிடித்திருந்தது..:)

Bavan said...

ஆனா படம் பாத்திட்டு காட்டுச்சிறுக்கிக்கு இருக்கு.. காட்டுச்சிறுக்கி கட்டயில போக..:P

றமேஸ்-Ramesh said...

@Bavan said...

////ஆங்... பாத்திடுவோம்..:D////
அங்க ரெயிலர் தான் இருக்கு தேடிப்பாருங்க கூகுலாண்டவர்ட்ட
ஹிஹிஹி

////
எழுத்துப்பற்றி திருத்தங்கள் சொல்லும் அளவுக்கு அனுபவமில்லை....///
உங்களுக்கு போட்டோசொப்ல தானே நல்ல அனுபவம்

///ஆனால் எழுத்து நடை கதையை நீங்கள் கொண்டுபோன விதம் மிகவும் பிடித்திருந்தது..:)///
நான் எங்க கொண்டுபோனன் பார்த்ததை எழுதிருக்கன் தமிழுக்கேற்ற அமைப்பில் அவ்வ்வ்வ
நன்றி வருகைக்கும் கருத்துக்க்கும்

றமேஸ்-Ramesh said...

@Bavan said...

////ஆனா படம் பாத்திட்டு காட்டுச்சிறுக்கிக்கு இருக்கு.. காட்டுச்சிறுக்கி கட்டயில போக..:P///

யார்காட்டுச்சிறுக்கி அவ மழைகொடுப்பாளோ.. இடி இடிப்பாளோ மாயமாய்.....
ஹாஹாஹா

ஹேமா said...

ம்ம் ...நல்ல கதை றமேஸ்.
ஆரம்பம்தானே.எழுத்து நடை போகப் போகத் திருந்திடும்.முயற்சி எடுத்து எழுதுறதுக்கே துணிவு வேணும்.
அதுக்குப் பாராட்டலாம் தாராளமா.

இப்படியான பெண்களால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன இயல் வாழ்விலும்.ஆண்கள் தைரியமாய் மனம் பிசகாமல் இருக்கவேணும்

றமேஸ்-Ramesh said...

@ஹேமா said...
///ம்ம் ...நல்ல கதை றமேஸ்.
ஆரம்பம்தானே.எழுத்து நடை போகப் போகத் திருந்திடும்.முயற்சி எடுத்து எழுதுறதுக்கே துணிவு வேணும்.அதுக்குப் பாராட்டலாம் தாராளமா.
/////
நன்றி ஹேமா.


////இப்படியான பெண்களால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன இயல் வாழ்விலும்.ஆண்கள் தைரியமாய் மனம் பிசகாமல் இருக்கவேணும்////

ம்ம் அண்மையில் இதே மாதிரி ஒரு நிகழ்வு கேள்விப்பட்டேன். அது போலவே இந்தப்படமும் அமைந்தது இந்த இரண்டு பாதிப்புக்களும் எழுத்துவடிவத்தில் கொணர்ந்துது.

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

Subankan said...

அருமையான கதை. படத்தைத் தேடிப் பார்த்துவிடுகிறேனே.

எழுத்துநடை ஆங்காங்கே உறுத்தினாலும் அருமையாகவே நகர்கிறது. :)

றமேஸ்-Ramesh said...

@Subankan said...
///அருமையான கதை. படத்தைத் தேடிப் பார்த்துவிடுகிறேனே.///
ம்ம்
பாருங்கள் பிடித்திருக்கு

///எழுத்துநடை ஆங்காங்கே உறுத்தினாலும் அருமையாகவே நகர்கிறது. :)///
நன்றி சுப்பாங்கன்

புலவன் புலிகேசி said...

ஒரு பெண்ணைப் பற்றி இப்படிப் பட்ட சித்தரிப்புகளில் எனக்கு உடன் பாடில்லை. கதை என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. வார்த்தைகளும் வாக்கியங்களும் சற்று சிறப்பாககாமைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

றமேஸ்-Ramesh said...

@புலவன் புலிகேசி said...
///ஒரு பெண்ணைப் பற்றி இப்படிப் பட்ட சித்தரிப்புகளில் எனக்கு உடன் பாடில்லை. ///
எனக்கும் தான்.
ஆனால் அங்கு ஒரு ஆணின் நல்ல இயல்பு அழகாக எடுத்தியம்ப்பட்டது. என்எழுத்துக்களில் அது தெரிகிறதா என்பது ??
///கதை என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. வார்த்தைகளும் வாக்கியங்களும் சற்று சிறப்பாககாமைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.///

இது என் முதல் கதை எழுத்து முயற்சியே. சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன்

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

தமிழ் மதுரம் said...

தலை கடைசியிலை கவிழ்த்துப் போட்டீங்களே! படம் என்று சொல்லி நெஞ்சைப் பஞ்சராக்கிட்டீங்கள். இருந்தாலும் எழுத்து நடை அருமை தான். இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் இனிய படைப்புக்களை வழங்கலாம். வாழ்த்துக்கள் தோழா!

றமேஸ்-Ramesh said...

@தமிழ்மதுரம்
நன்றி

Karthick Chidambaram said...

Arumayaana kathai. Nalla eluththu nadai. Obsessed patri erkanave kelvi pattu ullen. Paarkka vendiya padangalin pattiyalil ippothu athu inainthu vittathu. Nandri.

றமேஸ்-Ramesh said...

@Karthick Chidambaram said...
///Arumayaana kathai. Nalla eluththu nadai. Obsessed patri erkanave kelvi pattu ullen. Paarkka vendiya padangalin pattiyalil ippothu athu inainthu vittathu. Nandri.////

நன்றி நண்பரே..வருகைக்கும் கருத்துக்கும். மனதைப்பாதித்த படம்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு