Pages

Thursday, September 30, 2010

இரங்கற்பா

தேத்தாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலய வண்ணக்கர்
அமரர் கந்தப்பெருமாள் பரமலிங்கம் அவர்களின் மறைவுக்கு
இரங்கற்பா



குடிமரபின்கண் மக்கள் வாழ்
கோயில் வளர் தேனூர்
பதிவளரும் தமிழ் இயல்பினை
ஒட்டி பழம்பெரு பேனாச்சி
குடியின் பேர்கொண்ட
நீள் தலைவனே!

இன்று பரமனடி நீ சேர்ந்து
பரிதவிக்க எமை விட்டனயே!!
கார்மேகம் கலங்கி
கண்ணீர்ப் பூக்கள் தூவிச்செல்லும்.

கண்ணியமிகு காலனவனின்
கையினில் நழுவலாமோ...?
நீ செய்த சேவை போதுமென்று
எம்கண்ணில் விழுநீர் கங்கையாக
விட்புலம் சேர்த்தானோ எம்பெருமான்

கொம்புச்சந்தி பிள்ளையார்
ஆலய பரிபாலனசபை செயலாளராய்
பாலமுருகன் கோயில்
கண்ணகையம்மன் கோயில்
வண்ணக்கராய் நீவீர் ஆயினயே

கோயில் கோயில்
நடை நடந்து இன்று
இறைவனடி சேர்ந்தனயே
சிந்தை கலங்குதையா
நீ பிரிந்ததிலே
உன் ஆத்மா ஆறுதலடையட்டும்
உன் நித்திரை பூரணமடையட்டும்
இதய அஞ்சலி

4 comments:

கவி அழகன் said...

எனது இரங்கலும்

ஹேமா said...

றமேஸ்....அந்தப் பெரியவரைத் தெரியாவிட்டாலும் உங்கள் வரிகள் அவரைக் கண்முன் கொண்டு வருகிறது.அன்பானவர்களுக்கு என்றும் அழிவில்லை.

Ramesh said...

@@யாதவன் said...

//எனது இரங்கலும்///
நன்றி யாதவன்

Ramesh said...

@@ஹேமா said...

///றமேஸ்....அந்தப் பெரியவரைத் தெரியாவிட்டாலும் உங்கள் வரிகள் அவரைக் கண்முன் கொண்டு வருகிறது///
நன்றி ஹேமா
///அன்பானவர்களுக்கு என்றும் அழிவில்லை.///
உண்மை

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு