Pages

Friday, March 4, 2011

கழுத்தென்பு நெருசலும் அவதியுறுகையும்


அண்மைக்காலமாக கழுத்துவலியினாலும் மற்றும் முதுகுவலியினாலும் அவதிப்பட்டுவருகிறேன். இதனால் கணணிப்பாவனையிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன். அதிகூடியளவு உந்துருளி(motor bike)ஓட்டமும், நான் முன்னர் எனது நிறுவனம் வழங்கிய நெட்புக்(Netbook)இல் அதிக பாவனையும் அதற்குரிய சரியான நிலையமைப்பு இல்லாததாலும் எனது கழுத்தென்பு பகுதியிலும் அதனோடு தொடர்புபட்ட நரம்பு செல்லும் கைகளிலும் அதிக வலி ஏற்பட்டு அவதிப்படுகிறேன்.
இது சாதாரண கழுத்தென்பு X கதிர்ப்படம்.

கழுத்தென்பு தோற்றம்

இதில் C1 தொடக்கம் C7 வரையாக ஏழு கழுத்தென்புகள் இருக்கின்றன.

எனக்கு அதிகளவு வலி ஏற்படும் இடம் இந்தப்பகுதி.
இதனால் எனது முன்னவயமான எனது இடக்கைப்பகுதியும் அதிக வலியைஏற்படுத்துகிறது.

எனது கழுத்துப்பகுதி X கதிர் ஒளிப்படம்

இதனால் இப்பொழுது உந்துருளி ஓட்டத்தையும் கணணிப்பாவனையையும் குறைத்துக்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறேன். எத்தனையோ காரியங்களையும் தவிர்க்கிறேன். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரையலாம் என்று அடிக்கடி சிறுபராயத்தில் ஒரு ஆசிரியர் என்னை வற்புத்துவார் உடம்பைப் பாத்துக்கொள் என்று. இப்பதான் உணர்கிறேன்.
உடல் உள உறுதி குறைந்திருக்கிறேன். மீண்டும் வருவேன் என்பது இப்பொழுதுகளில் எனது மகுட வாசகமாகிறது.


10 comments:

ம.தி.சுதா said...

அண்ணரே அதிகமாக pain killers எடுத்து ulcer வாங்காமா கொஞ்சம் ஓய்வெடுங்க...

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா


பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

ம.தி.சுதா said...

பதிவுக்க நன்றாக நேரம் செலவழித்து படம் இட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன் நன்றி....

தமிழ் உதயம் said...

உண்மை தான். சுவரிருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். முதலில் உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள்.

Yaathoramani.blogspot.com said...

மிக விரைவில் நலம் பெற
எல்லாம் வல்லவனை
அனைவரின் சார்பாக
வேண்டிக்கொள்கிறேன்

Jana said...

இப்போதூன் அறிந்துகொண்டேன் ரமேஸ். தேவையான ஓய்வை எடுத்துக்கொள்ளுங்கள். அதிக அக்கறையுடன் உங்களை கவனித்துக்கொள்ளுங்கள். உடல் நலம் மிகப்பிரதானம். போனில் பேசுகின்றேன்.

Chitra said...

I am sorry to hear this. Get well soon. We are praying for your speedy recovery. Take care, Ramesh!

ஹேமா said...

றமேஸ் உங்களைக் கவனமாகப் பார்த்துக்கோங்க.பதிவு ஆறுதலா எழுதிக்கொள்ளலாம்.சுகமடையணும் !

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், உடலும் உள உறுதியும் தான் எப்போதும் முக்கியம். நன்றாக ஓய்வு எடுங்கள். உங்கள் எழுத்தாற்றலை கணினியினைத் தவிர்த்து கையெழுத்தாக்க்குங்கள். வெகு விரைவில் பூரண குணமாக இறைவன் அருள் புரிவாராக.

தர்ஷன் said...

விரைவாக குணமடைவீர்கள்
அப்புறம் உங்கள் கழுத்து வலியையும் ஒரு பதிவாகி இருப்பதைப் பார்த்தால் சுஜாதா ஞாபகம் வருகிறது.

Ramesh said...

அக்கறையில் என்னோடு இருக்கும் உறவுகளே நன்றி.

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு