Pages

Sunday, November 28, 2010

சிதறும் சில்லறைகள் - 08 (வாசிப்பு)

உலகம் உன் வசம்

பலநாட்களாக எழுத இருந்து எழுதாமல் போன விடயம் தொடா்பாடல் ஆனால் அதுபற்றி எழுதுவதற்கிடையில் என்கையில் ஒரு புத்தகம் கிடைத்தது.
அது உலகம் உன் வசம் - சோம. வள்ளியப்பன் எழுதியது. பல விடயங்கள் நமக்குத் தெரிந்த நாம் தவறிழைக்கின்ற நிறைய தகவல்கள் எளிமையாகவும் சிறப்பாகவும் எழுதி இருக்கிறார். அவசியம் அனைவரும் வாசிக்கவேண்டிய புத்தகம்.
"எந்த இடத்தில் எதைச் சொல்லவேண்டும் என்பதில் உள்ள தெளிவு, எந்த இடத்தில் எதைச்சொல்லக் கூடாது என்பதிலும் இருக்கவேண்டும்" இதுவே இந்தப்புத்தகத்தின் நோக்கக்கூற்றாக இருக்கிறது.
மற்றவர்களுடன் எப்படித்தொடர்பு கொள்ளவேண்டும் என்பதில் தெளிவான விளக்கங்கள் போதியளவு உதாரணங்களுடனும் மேற்கோள்காட்டி எழுதியிருப்பது வாசிக்க மனதோடு ஒத்துப்போகிறது.
பேச்சுப்பற்றி
"அழகாக, சாமர்த்தியமாக, கோர்வையாக, தெளிவாக, சுருக்கமாக, நகைச்சுவையாக, தேவையான நேரத்தில், புரியும்படி, தேவைப்படும் நேரங்களில் விளக்கமாக, சமயத்தில் உடனடியாக, வேறு சில சமயங்களில் கொஞ்சம் பொறுத்து, கவனமாக, சொல்ல நினைக்கும் பொருள் விளங்கும்படியாக... - எனப் பல்வேறு சந்தர்ப்ங்களில் பல்வேறுவிதமாக நாம் பேசவேண்டும் என்று அழகாக சொல்லியிருக்கிறார். இப்படி பலவிடயங்களை பல ஆதரங்களுடனும் புனைவுகளுடனும் எழுதியிருக்கிறார். நல்லதொரு கையாள்கை அந்த எழுத்துக்களில் தெரிகிறது. வாசியுங்கள் அதன்படியாவது முயற்சியுங்கள் நானும் முயற்சிக்கிறேன்.


திருவிழாவில்
ஒரு
தெருப்பாடகன்


தலைப்பே ஒரு கவிதையாகி நிக்கிறது. மு.மேத்தாவின் படையல்களில் அதிக வலிகள் பல இடங்களில் தெரிந்தாலும் கார்த்திகைக்கென நான் மீண்டும் ஒருமுறை படித்த இந்தபுத்தகம் கவிதையின் நுரைகளில் நுழைந்து அவதிப்பட்டேன்.
"
எங்கள் தேசத்தில்
ஒவ்வொரு கட்சிக்கொடியும்
உயரத்தில்தான் பறக்கிறது
எங்கள் சகோதரர்களின்
தாழ்ந்த குனிந்த
தலைக்கம்பங்களின் மீது!
"
எங்கேயே என்னை உசுப்பிவிட்ட வரிகள்.
தமிழனின் கதை என்ற தலைப்பில் தலைப்பே அத்தனையையும் அடுக்கிக்கிட்டு போகிறது.
விழிகளைத் திறக்கும் விறகுகள் என்ற கவிதை குடிசையின் இலட்சணங்களை படம்போட்டுக்காட்டுகிறது. அசோகவனத்தில் ஒரு சோகவனம் நம்ம நாட்டை.............

"பூந்தோட்டமே
அங்கு
பொசுங்கிப் போன பின்
மரங்கள்
இங்கே
மாநாடு போடுகின்றன"

இது ஈழத்துப்பூக்கள் என்ற கவிதையில் ..........
அதிக கவிதைகள் நமது நாட்டுக்காக எழுதப்பட்டவைகளாக இரசிப்பதா வெறுமனே வாசிப்பதா என்று தெரியாமல் கண்களின் ஓரங்களில் ஈரத்தை உதிர்த்துக்கொண்டு நான்.

கவிஞன்

முற்றுமுழுதாக மாதாந்தக் கவிதைச் சஞ்சிகையாக மட்டக்களப்பு புதுக்குடியிருப்பிலிருந்து வெளிவரும் இந்தக் கவிஞன் இதழ் கஸ்டப்பட்டு வந்துகொண்டு இருக்கிறது. இன்னுமின்னும் இளையோர்களையும் கவிஞர்களையும் காலத்தை தின்றவர்களையும் தேடி வாசியுங்கள் வாங்கிக்கொண்டு எழுதிக்கொள்ளுங்கள் இன்னுமின்னும் வளரவேண்டும் என்று வாழ்த்துவோம்.

8 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
http://mathisutha.blogspot.com/

ம.தி.சுதா said...

ஃஃஃஃபல்வேறு சந்தர்ப்ங்களில் பல்வேறுவிதமாக நாம் பேசவேண்டும் என்று அழகாக சொல்லியிருக்கிறார்ஃஃஃஃ

இதற்காகவாவது அந்தப் புத்தகம் தேடிப் படிக்கணும்...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃ"பூந்தோட்டமே
அங்கு
பொசுங்கிப் போன பின்
மரங்கள்
இங்கே
மாநாடு போடுகின்றன"ஃஃஃஃஃ

ஆமாம் இந்தப் புத்தகம் ஒரு முக்கிய நூல் நிலையத்தில் படிக்கக் கிடைத்தது...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஇன்னுமின்னும் வளரவேண்டும் என்று வாழ்த்துவோம். ஃஃஃஃ

நானும் வாழ்த்துக்கிறேன்....

ம.தி.சுதா said...

தங்கள் பதிவில் நல்ல தமிழ் ஆளுமை மூலம் என்னை குடைந்து எடுத்து விட்டீர்கள் நன்றிகள் சகோதரா...

ஹேமா said...

வாசிப்பின் பொறுமை இருக்கிறது றமேஸ் உங்களுக்கு.நல்ல விஷயம்.ஈழம் பற்றிய அந்த வரிகளில் கலங்கிவிட்டேன்.மூன்று நூல்களின் அறிமுகத்திற்கும் நன்றி.

Jana said...

வாசிப்பு என்பது தொலைந்துபோன ஒன்றாக காணப்படும் இந்த நாட்களில் வரவேற்கத்தக்க பதிவு இது.

வாசிப்பை கூட்டுவதற்கு " வாசிப்பு என்பது ஒருவனின் கௌரவம்" என்ற நிலையை இன்றைய தலைமுறைக்கு புரியவைப்பதே தலையாய கடமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

றமேஸ்-Ramesh said...

@@Jana said...
நல்ல பின்னூட்டம்
எனது பழைய வாசிப்புபழக்கத்துக்கு உரமூட்டியவர் நீங்களே'
நன்றி அண்ணா
உணர்வுகளின் உயிரில்
வாசிக்கிறேன்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு