நம்பிக்கைதான் வாழ்க்கை என்பது யாவரும் உணரக்கூடியதாக இருக்கும். வாழ்க்கை என்பது நாம் வாழும் போதுதான் இரு(னி)க்கும். நமது வாழ்க்கையின் ஏதோ ஒரு இடத்தில் உயிரோட்டம் என்ற சொல்லால் நிரப்பும் மூச்சுக்காற்றில் நம்பிக்கை மிதந்துகொண்டுதான் இருக்கும்.
இருந்தாலும் "நம்ப நட நம்பி நடவாதே" என்றும் சொல்லுவர்.
நாம் வாழும் சமுதாயத்தில் ஒவ்வொரு மனிதரையும் நம்புவதுதான் நல்லது என்று கருதும் போதே அதுவே நமக்கு வில்லனாக அமைவதும் உண்டு. ஆனாலும் நிம்மதியான வாழ்க்கைக்கு துணைநிக்கும் இந்த மந்திரச்சொல் "நம்பிக்கை".
பரஸ்பர துணையான வாழ்க்கை, அதாவது அது காதலாக இருக்கலாம், அது நட்பாக இருக்கலாம், ஏன் தாம்பத்திய குடும்ப உறவாக இருக்கலாம். இதைவிட நாம் பேசிகொள்ளும் யாரோ ஒரு நபரோடு இருக்கும் இனம்புரியா நல்லுறவாக இருக்கலாம். அத்தனை உறவுகளிலும் தித்திக்கும் நினைவுகளைப் பகிர்வதற்கு நம்பிக்கை அவசியம் தேவை.
வாழ்க்கையின் நம்பிக்கை பிழையாகும் தருணம் அவநம்பிக்கையாகிறது. அதாவது நமது சிந்தனையின் நடுவுநிலமையிலிருந்து சிந்திக்கத் தவறி, ஒரு குழப்ப மனதுடன் சிக்கல் உணர்வுடன் தீடீரென எடுக்கப்படும் முடிவுகள் இந்த நம்பிக்கையின் எதிரியாகின்றன. நாம் எப்பொழுதும் நமக்கு சார்பாக நமது எண்ணத்தோடு மட்டுமே சிந்தித்து ஒருதலைப்பட்சமாய், வாழ்க்கையின் நம்பிக்கையை இழந்து மற்றவர்கள் மீது சரியான நல்ல அபிப்பிராயத்தை விடுத்து நமது பார்வையில் நடைமுறைகளை எடைபோட்டுகொள்வது தவறான செயலாக அமைகிறது.
ஒருவரைப்பற்றிய முழுமையாக நமக்கு விளங்கிக்கொள்ள நிச்சயம் முடியாது. ஒருவருடன் பழகும் போது அவரது அந்த பழகும் தருணத்தில் அவரது நிலமையை புரிந்கொள்வதால் அவரை முழுமையாக அறிந்துகொண்டோம் என்ற எண்ணத்தில் நாம் இருப்பது இயல்பு. மாறாக அவர்கள் பற்றிய முழு விபரங்கள் தெளிவாக்கப்படுவதில்ல. அத்தோடு நமது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மற்றவர்களும் இருக்கவேண்டும் என்று சிந்திப்பது நமது பிழைகளில் ஒன்று.
இருந்தபோதும் மற்றவர்கள் கஸ்டப்படும் போதும், கண்ணீரின் காயத்தை உணர்கின்றபோதும் கட்டாயம் ஒரு உறவு நம்பக்கையோடு தேவையாகிறது. நமது வேதனையை துடைக்கும் யாரோ ஒருவருடைய விரல்களாய் இருக்கும் உணர்வுகள் நமக்கும் வேண்டும் மற்றவர்களுக்காக. ஆனால் அந்த உறவு வாழ்நாள் வரைக்கும் துணையாக இருக்கலாம் இல்லாமலும் போகலாம். அன்பில் ஆரத்தழுவும் எல்லை மீறாத அந்த உணர்வின் விரல்களுக்கு எப்போதும் சரண். உள உணர்வோடு உரசும் அன்பு வார்த்தைகள் போதும். வாழ்க்கை அர்த்தப்படும்.
பேசுவதற்கு காசுகொடுப்பதில்லை ஆக இருக்கும் போது, நல்வார்த்தைகளால் அன்பொழுகும் அந்த கண்களுக்கு எப்போதும் நன்றி சொல்லும் மனது இருக்கும் இல்லையா. என்னைப் பொறுத்தவரையில் எதிர்ப்பால்ய நண்பர்கள் இந்த உறவுகளை கட்டிக்காத்துக் கொள்ள கஸ்டப்படுவார்கள். அதாவது ஒரு ஆணுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்காய் இரங்கும் ஒரு பெண்ணையோ அல்லது மறுதலையாக ஒர் ஆண்ணையோ சந்தேகப் பேர்வழியாய் சமுதாயம் பார்க்கும் போதுதான் இந்த வாழ்க்கை வேண்டாவெறுப்பாகும். இதற்கு கலாசாரம், சமயம், நமது வாழ்க்கைப்பாங்கு போன்ற பல விடங்கள் இடியப்பச் சிக்கலாகிறது.
இது நமது கலாசாரத்தில் இருக்கும் ஒரு தவறான சிந்தனை என்று தோன்றுமளவுக்கு உண்மைச்சம்பவங்கள் சான்று பகர்க்கின்றன.
நாம் எப்பொழுதும் இயல்பாக சிந்திப்போமானால் நம்பிக்கையான வாழ்க்கை தித்திக்கும் அளவாக.
இந்தக்கவிதையும் நம்பிக்கையின் வெளிப்பாட்டில் உருவாகிய பழைய சிதறல்.
போய் வா
சில நினைவுகள்
நெஞ்சை அழுத்திய போது
கண்ணீரில் நீந்துவேன் - உன்னுடன்
போன் பண்ணி கதைக்கும் போது
உள்ளத்தின் கனம் குறைந்து
இதயம் இலேசாகும்
சந்தோசப்படுவேன் .......
உன்னைப் பிரியப்போகிறேன் என்ற
எண்ணத்தைக்கண்டு
இதையத்தின் வலி உணர்ந்து
கவிதை எழுதும் பேனாவை விட
கண்ணீர் முந்திக்கொள்கிறது
கனவுகளை நச்சரித்துக்கொண்டு ............
நினைவுகளை சுமந்துகொண்டு
இனி
நான் கஷ்டப்படும் போது
இங்கு நீ இல்ல
ஆறுதல் சொல்ல எனக்கு.........
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ஃஃஃஃஃபேசுவதற்கு காசுகொடுப்பதில்லை ஆக இருக்கும் போது, நல்வார்த்தைகளால் அன்பொழுகும் அந்த கண்களுக்கு எப்போதும் நன்றி சொல்லும் மனது இருக்கும் இல்லையா. ஃஃஃஃ
அத்தனை வார்த்தைகளும் உணர்ச்சி கொப்பளிக்கிறது... கவி கூட அப்படித் தான் அருமை...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அந்த மூன்று நாட்களும் இதயம் வென்ற மூவருக்கான வாழ்த்துக்களும்
ஒரு ஆணுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்காய் இரங்கும் ஒரு பெண்ணையோ அல்லது மறுதலையாக ஒர் ஆண்ணையோ சந்தேகப் பேர்வழியாய் சமுதாயம் பார்க்கும் போதுதான் இந்த வாழ்க்கை வேண்டாவெலறுப்பாகும். இதற்கு கலாசாரம், சமயம், நமது வாழ்க்கைப்பாங்கு போன்ற பல விடங்கள் இடியப்பச் சிக்கலாகிறது.
இது நமது கலாசாரத்தில் இருக்கும் ஒரு தவறான சிந்தனை என்று தோன்றுமளவுக்கு உண்மைச்சம்பவங்கள் சான்று பகர்க்கின்றன.
நாம் எப்பொழுதும் இயல்பாக சிந்திப்போமானால் நம்பிக்கையான வாழ்க்கை தித்திக்கும் அளவாக.
.......சிந்திக்க வைக்கும் கருத்து.
கவிதை சிதறலும் அருமை.
பேசுவதற்கு காசு கொடுப்பதில்லை... :( நீண்ட நாளாகிறது உங்களுடன் கதைத்து. கதைக்கவேண்டும். நலமோடு இருங்கள்.
nalla kavithai
Post a Comment