Pages

Tuesday, April 19, 2011

நிலா மறைத்த மேகம்


பொன்மணலில்
இருட்டு கால்கள்
அடம்பன்கொடியும் சிக்கியது
தவறிவிழ மீசையில்லை

அதட்டும் கடலலை
மோதிவிளையாடும்
நண்டுக்கால்கள்
நிலாச்சோறு தின்னத்தான்
இத்தனை எடுப்புகள்

வருகிறாள் அவள்
வருகையில்
எத்தனை சுகம்
கண்களுக்கா
மனசுக்கா
பார்வை ஒன்றே போதும்

முரட்டு மின்னல்கள்
பொன்மகள் வருகையில்
தடங்கல்கள்

அவள் உலா வருகிறாளா
இருட்டிவிட்டது
இருண்டுவிட்டது மனசு
நிலா மறைத்த மேகம்
ஒழிக!!!


5 comments:

Mohamed Faaique said...

நல்லாயிருக்கு நன்பா.... கடசி வரிகள் பிடிதிருந்தது

Chitra said...

வருகிறாள் அவள்
வருகையில்
எத்தனை சுகம்
கண்களுக்கா
மனசுக்கா
பார்வை ஒன்றே போதும்


....lovely!

நிரூபன் said...

நிலா மறைத்த மேகம்- இராத்திரியின் காதலியாய் எங்கள் உள்ளங்களைக் கொள்ளை கொள்ள வரும் நிலவின் வருகையின் போது உள்ள தடங்கலினைப் பாடி நிற்கிறது.

படிமக் கையாள்கையும், மொழியினைக் கவிதைக்கேற்றாற் போல வளைத்துச் செல்லும் இலாவகமும் அருமையாக இருக்கிறது.

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள் றமேஸ்

Ramesh said...

நன்றி நண்பா மொகமட்
நன்றி சித்ரா
நன்றி நிரூபன்
நன்றி ரத்னவேல் ஐயா

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு