Pages

Friday, April 15, 2011

சித்திரையும் சிதறிப்போகும்(ன) மகிழ்வும்

முதல்ல சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் அனைத்து உள்ளங்களுக்கும்.
வருடங்கள் நகருதல் இயற்கையின் தோற்றப்பாடு. வருஷங்கள் புதுசு புதுசாவது நமது மனது வெளிச்சம் காணவேண்டும் என்கிற எண்ணத்தில்.

எந்த நிகழ்வாயினும் நாம் அதை சிறப்பாக கொண்டாடவேண்டியது தேவையும் அவசியமும். இதற்காகவே நமக்குள் நாம் உருவாக்கிக்கொண்ட பண்டிகைகளும் விழாக்களும். ஆயினும் அவை சமய, கலாசார, இனம் சார்ந்து இருப்பது வழமை. இதற்கு உதாரணமாக "சித்திரைப் புதுவருட" தினத்தைச் சொல்லலாம். இது கூட ஒரு தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்வது சற்று கஸ்டமாக இருக்கிறது. காரணம் தமிழ் என்பது மொழியை அடயாளப்படுத்துகிறதா? அப்படியானால் தமிழ் பேசும் மற்றய சமயத்தவர்கள் கொண்டாடமறுப்பதேன்? இல்லை எனில் இனம் சார்ந்ததா என்றால் அதே கேள்வி!!!

ஆக இதுவும் தமிழ்கலந்த இந்து சமயப்பண்டிகையே. எவ்வாறாயினும் பண்டிகை அல்லது விழா என்று வரும்போதே நமது மனதுக்கு இன்பமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக அமையவேண்டும். இல்லையேல் அமைத்துக்கொள்ளவேண்டும்.

என்னைப்பொறுத்தவரையில் இங்கு மகிழ்ச்சி என்பது எதைக் குறிக்கிறது என்பது சற்று சஞ்சலப்பட வைக்கிறது. காரணம் இதற்கு முந்தைய காலப்பகுதியில் அதாவது இலங்கையின் உள் நாட்டு யுத்தத்துக்கு முன்னர் இவ்விழாக்கள் பண்டிகைகள் மிகவும் சிறப்பாக கலாசார சமய விழுமியங்களின் வெளிப்பாடக அமைந்திருப்பதைக் காணக்கூடியதாக இருந்திருக்கிறது. இதற்காக பல அரங்கேற்ற நிகழ்வுகளும் விளையாட்டு போட்டிகளும் கலை கலாசார போட்டிகளும் அரங்கேறியுள்ளன. சான்றாக இந்த காணொளியில் வரும் குரல்வழியினூடு கேட்டுப்பாருங்கள்.
மட்டக்களப்பில் சித்திரைஆனால் இப்பொழுதுகளில் இந்த விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தாற்போல் இளைஞர் மற்றும் பெரியோர்களிடம் இருப்பது "குடியும் குடித்தனமும்" - அல்ககோல் பாவனை. ஆம் இப்போது (அதிகரித்த) இந்த மதுபான அதிமிஞ்சிய பழக்கமும் கெட்டுப்போகும் இளஞர்களின் அதனோடிணைந்த பாலியல் நடத்தைகளும்.

இப்பொழுது விருந்து (பார்ட்டி - party) என்று பொருள் பொதிந்த இந்த குடிப்பாவனை மட்டுமே என்கிற எண்ணம் மட்டுமே.
விருந்து அல்லது விருந்துபசாரம் என்பது ஓய்விலாமல் உழைத்து இயந்திர வாழ்க்கையில் ஓட்டிச்செல்லும் வாழ்க்கையில் தொடர்பாடலுக்காகவும் சமூகமயப்படுத்தலுக்காகவும் மனமகிழும் பொழுதுபோக்குக்காகவும் ஒன்றாக சேர்ந்து மகிழ்வுறும் நிகழ்வு. இது வழமையில் விருந்துணவுடன் குடிபானங்களுடன் சங்கீத நடன நிகழ்வுடன் நடைபெறும்.

ஆனால் இந்நிகழ்வில் பங்குகொள்வோர் மற்றவர்களை காயப்படுத்தக்கூடாது, எந்த இடைஞ்சலும் மற்றவர்களுக்கு வழங்கக்கூடாது என்பதில் கவனமாகவும் பொறுப்பாடாகவும் இருத்தல் வேண்டும். இல்லையேல் எந்த சந்தோசம் வேண்டும் என்று விரும்பினார்களோ அது கிடைக்காமல் அதற்கு மாறான கஸ்டங்களே வந்து சேரும்.

ஆனால் இப்பொழுது கிராமங்களில் இது வெறும் மதுபாவனையோடு மட்டும் அடிக்கடி நடைபெறுவதால் இதற்கு விருந்து அதாவது பார்ட்டி என்று சொல்வதா இல்லை 'குடித்தல்' என்ற சொல்வதா? இன்றைய காலத்தை நோக்கும் போது இன்னும் ஐந்து அல்லது சில வருடங்களிலே மதுப்பாவனை குறைந்த அல்லது ஏனைய ஒழுக்கமுள்ள பிள்ளைகளை (பெண், ஆண்) இனம் காண்பது இந்த அநாகரிக வளர்ச்சி என்று சொல்லும் ஒரு ஸ்டைலில் கிராமங்கள் வளருகின்றது. சந்தோசங்கள் எது என்பதைத் தவிர்த்து.

போர் என்ற போக்கில் வாழ்ந்த சமுதாயமா நாங்கள். இல்லை இதற்காகவா இவ்வளவு ஆசைகளை அடக்கிவைத்து இன்பம் காணுகிறோமா என்ற எண்ணம் பெரியவர்கள் மனதில் எழுவதை அவர்களுடன் உரையாடும் போது தெரிகிறது.

ஆனால் எமது கலாசார விழுமியங்களின் வெளிப்பாடாக இருக்கும் கவை கலாசார நிகழ்வுகள் என்பது ஒரு சமுதாயம் சார்ந்த மக்களுடன் பழகும் செயற்பாடு(Socialization)என்பதில் நின்று விலகி எமது போட்டி என்ற முனைப்பில் மற்றவர்களுடன் பிரச்சனைக்குள்ளாகி சந்தோசம் காண்பதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. ஒவ்வொருவரும் வெவ்வேறு சிந்தனைகளில் வித்தியாசமாக யோசித்து பல்வேறு விடயங்களை செய்யலாம். அதைவிடுத்து இந்த சித்திரைப் புத்தாண்டில் எங்கள் பிரதேசம் எல்லாம் 'தீ' இருப்பது விளையாட்டு ஒன்றே.
ஏனைய கலை நிகழ்வோ, கச்சேரிகளோ, கூத்து, கொம்புமுறி, நாட்டிய நாடக நிகழ்வுகளோ இடம்பெறுவது குறைவு என்பதை விட இல்லை என்றே சொல்லலாம். சின்னஞ்சிறிய பிள்ளைகளை ஊக்கிவிக்கும் பல நிகழ்வுகள், பாடசாலை மாணவர்களை ஊக்கப்படுத்தும் கலாசார போட்டி நிகழ்வுகள்... இப்படி இன்னோரன்ன நல்ல நிகழ்வுகளை நாம் மறந்துவிடுகிறோம். இவ்வாறான பல விடயங்களை சொல்லிச் செயற்படுத்தும் நோக்கில் நாம் தவறுகின்றோம். இதைப்பற்றி கதைக்கக்கூட நமக்கு நேரம் போதாமல் இருக்கும். இந்த அவசரப்பொழுதுகளில் நாம் வாழ்ந்துவருகிறோம். அல்லது யார் எப்படி செயல்படுத்துவது என்ற கேள்வி. நமக்கென்ன இதெல்லாம் நமக்கு வேண்டாக வேலை என்கிற அசமந்தத் தன்மை.
நமது சிந்தனையை சற்று அகலப்படுத்தும் போது விளங்கும் சிதறிப்போகின்ற மகிழ்ச்சி எதுவென்றும், எப்படியென்றும்


நாம் எதில் இன்பம் காண்கிறோம் என்பது மற்றவர்களின் இன்பத்தை சந்தோசத்தைக் கெடுப்பதிலா என்பதை நமக்கு மற்றவர்களிடமிருந்து வரும் இடைஞ்சல்களே போதும் யோசித்து செயற்படுவதற்கு.

எந்த விழா செய்யினும் நிகழ்வு செய்யினும் கவனமாக செய்யவேண்டும் என்பதை உணரவேண்டும்.
சேர்ந்து செயல்படுவோம்4 comments:

Ramani said...

சமூக உணர்வுள்ள பதிவு
உயரிய விழுமங்களின் இழப்பு
எத்தனை பேரிழப்பு என்பதை
மிக ஆழமாகச் சொல்லிப்போகும்
அருமையான பதிவு
தங்கள் பதிவுகளைத் தொடர்வதில்
பெருமிதம் கொள்கிறேன்
தொடர வாழ்த்துக்கள்

Jana said...

//இவ்வாறான பல விடயங்களை சொல்லிச் செயற்படுத்தும் நோக்கில் நாம் தவறுகின்றோம். இதைப்பற்றி கதைக்கக்கூட நமக்கு நேரம் போதாமல் இருக்கும். இந்த அவசரப்பொழுதுகளில் நாம் வாழ்ந்துவருகிறோம். அல்லது யார் எப்படி செயல்படுத்துவது என்ற கேள்வி. நமக்கென்ன இதெல்லாம் நமக்கு வேண்டாக வேலை என்கிற அசமந்தத் தன்மை. //


உண்மைதான் ரமேஸ். ஒருவகையில் இளையவர்கள் சீரழிவதற்கு பெரியவர்களும் காரணமாக இருக்கின்றார்கள். ஒவ்வொரு சமுக மட்டத்திலும், பெற்றோர், பெரியவர்கள், சமுக அக்கறையுள்ளோர்கள், மதகுருமார்கள் என்பவர்கள் கைகோர்த்து இவற்றை கவனிக்கவேண்டும்.

Chitra said...

ஆனால் இப்பொழுதுகளில் இந்த விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தாற்போல் இளைஞர் மற்றும் பெரியோர்களிடம் இருப்பது "குடியும் குடித்தனமும்" - அல்ககோல் பாவனை. ஆம் இப்போது (அதிகரித்த) இந்த மதுபான அதிமிஞ்சிய பழக்கமும் கெட்டுப்போகும் இளஞர்களின் அதனோடிணைந்த பாலியல் நடத்தைகளும்......வேதனையாக இருக்கிறது..... இந்த நிலை என்று மாறுமோ?

றமேஸ்-Ramesh said...

@@நன்றி ரமணி அண்ணே
@@நன்றி ஜனா அண்ணே
@@நன்றி சித்திரா மேடம்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு