Pages

Saturday, November 20, 2010

பால்நிலை (Gender)

பால்நிலை (Gender) என்றால் என்ன?

பால்நிலை என்பது சமூகத்தினால் ஆணுக்கும் பெண்ணுக்கும் கொடுக்கப்பட்ட சமூகப்பாத்திரங்கள் அவை பின்வரும் விடயங்களை அடிப்படையாக வைத்து தீர்மானிக்கப்படுகின்றன
வேலை பெறுப்புக்கள்
தீர்மானம் எடுத்தல்
வெளிச்செல்லுதல்
வளங்களை அடையும் வழிகள்
சமூகவியல், சமூகப்பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார நடவடிக்கைகள் மற்றும் அதிகாரங்கள்.

இதனால் எமது அன்றாட வாழ்க்கை மேற்கூறப்பட்ட விடயங்களினால் பால்நிலை மிகைப்படுத்தப்பட்டுள்ளது.

எமது யதார்த்தத்திலிருந்து சில கேள்விகள்:
- சம அளவான வேலைக்கு ஆண் தொழிலாளர்களைவிட பெண் தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைவாகக் கொடுக்கப்படுவது ஏன்?

- குடும்பத் தலைவராக ஒரு பெண்ணை ஏன் குறிப்பிடுவது இல்லை? ( பெண் மட்டுமே குடும்பத்தில் வருமானத்தை ஈட்டுபவராக இருப்பினும் ஆண்களை மாத்திரமே குறிப்பிடுகின்றனர்.)

- ஆண்மை பெண்மை பற்றிய எமது விளக்கம் என்ன?

பால்நிலை வேறுபாட்டின் முக்கியத்துவம் யாது?

ஆண்களினதும் பெண்களினதும் அனுபவங்கள் வித்தியாசமானது! அவர்களின் தேவைகள் வித்தியாசமானவை! அவர்கள் பாவிக்கும் வளங்களும் வித்தியாசமானவை!

பால்நிலை பாரபட்சங்களை அடையாளப்படுத்தி, வெளிக்கொணர்ந்து தீர்ப்பதனால் மாத்திரமே வேலை செய்யும் சமூகத்திலுள்ள அனைவரும் பயனடைவார்கள். இவற்றை கவனத்தில் எடுத்துக்கொள்ளாவிட்டால் பலவீனமான குழுக்கள் மீண்டும் மீண்டும் குரல் கொடுக்க முடியாமல் பலவீனப்படுத்தப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.
(வயது முதிர்ந்தோர், பிள்ளைகள், விசேட தேவை உள்ளவர்கள்). இதனால் தங்களது தேவைகளை உரிய முறையில் வெளிக்கொணர முடியாதவர்களின் தேவைகள் நம்மை வந்து அடையாது.
ஆகவே அபிவிருத்திட்டத்திற்குரிய பயன் பெறப்பமாட்டாது. முயற்ச்சி வீணாகும். இவர்களும் இச்சமூகத்தை சேர்ந்தவர்களே! ஆகவே அவர்களை அடையாளம் கண்டு முன்கொண்டுவர முயற்சி செய்வோம்.

பால்நிலை பகுப்பாய்வு என்றால் என்ன?
Joan W. Scott ('பாலியலானது வரலாற்று பகுப்பாய்வுக்கு ஓர் பிரயோசனமான வகை'The American u;istorical Review, Vol. 91, No. 5, Dec. 1986, pp. 1053-1075), historian;
இவரின் நூலிலிருந்து

- ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் வேறுபாட்டை (தனிப்பட்டதும் குழுவாகவும்) ஏற்படுத்துவதுடன் பால்நிலை வேறுபாடானது பால்நிலை கோட்பாட்டுச் சமூக அமைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
- பால்நிலை வேறுபாட்டுக்கிடையேயான இடைவெளி சமூக உறவுகளுடன் தொடர்புபட்டதாக அமையும் (சமூக வாழ்வின் கோட்பாட்டை உருவாக்கும்) மற்றும் பால்நிலை வேறுபாடு ஓர் பகுப்பாய்வுப் பகுதியாகும்..

இப்பகுப்பாய்வு பின்வருவனவற்றின் அடிப்படையில் அமையும்
1. அடையாளங்கள்
2. நிறுவனங்கள் அல்லது அமைப்புக்கள்
3. அடையாளக் குறியீடுகளின் விளக்கப்படுத்தல்கள்

இதை நாம் எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம்?
1. உங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்படும் பிரச்சினைகளை ஆழமாக பகுப்பாய்வு செய்யவும்;. இதில்; பால்நிலை பாரபட்ச நிலைப்பாடுகளும் தாக்கங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
2. பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல். பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
3. பால்நிலை தொடர்பான விழிப்புணர்வும் வேறுபாட்டுத் தன்மையும் எமது சமூகத்திற்கிடையே அதிகரிக்கப்பட வேண்டும்;.
4. பால்நிலை பகுப்பாய்வை உங்கள் வேலைத்தளங்களில் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் நடைமுறைப்படுத்தவும்.

இது ஒரு பகிர்தல். ஒரு பயிற்சிப்பட்டறையின் போது பெற்றுக்கொண்ட விடயம். பால்நிலை சம்பந்தமான உங்கள் கருத்துக்களை பகிருங்கள் முடிந்தால்.விரிவாக பின்னர் எழுதுகிறேன்.

5 comments:

Jana said...

நானும் முன்னர் அதன்னடா 33 வீத ஒதுக்கீடு என்று யோசிப்பது உண்டு. நன்றாக எழுதியுள்ளீர்கள். நீங்கள் ஒரு கருத்தரங்கில் பெற்ற விடயங்களை பலருக்கு பகிரவேண்டும் என்ற உங்கள் எண்ணத்திற்கு ஒரு மெகா சலூட்.

கவி அழகன் said...

வழமைபோல் சுப்பர்

ம.தி.சுதா said...

தங்களின் பகிர்விற்கு நன்றி....

ஷஹன்ஷா said...

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் நெருங்கும் வேளையில் உங்களின் பதிவு அருமையான பதிவு....

Ramesh said...

@@Jana said...
அண்ணா எழுத்து முற்றுமுழுதாக எனதல்ல நானும் சேர்த்திருக்கன்
பகிர்தல் இது
சலூட்டிற்கு நன்றி கருத்துக்கும் சேர்த்து

@@யாதவன்
நன்றி யாதவ்

@@ம.தி.சுதா
நன்றி சுதா

@@ஜனகனின் எண்ண ஜனனங்கள்
நன்றி ஜனா
பதிவிடுங்கோ அதுபற்றி

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு