Pages

Sunday, April 25, 2010

எழுத்துக்களின் ஆசிர்வாதம் அப்பாவுக்கு

தோள் மீது வளர்ந்தபோதும்
உன்
தோள்கொண்டு வளர்ந்தபோதும்
என்னோடு ஒன்றாக வளர்ந்தது
உங்கள் பாசம்

உன் உடற்பொலிவில்
ஒருசொட்டுக் குறைவு
என்றாலும்
என் உயிர்த்துடிப்பின்
இடைவெளி கூடுகிறது
தந்தையே....

ஒவ்வொரு இருமலுக்கும்
உன் அவஸ்த்தைகள்
என் விலா
எலும்புகளைத்தானே
நோகடிக்கிறது

இருமலின் எச்சிலில்
இரத்தம் வருவதாய்
சொல்லுகிறீர்கள்
உண்மையில்
இரத்தக்கசிவு
என்நெஞ்சிலிருந்து
நிமிருங்கள் தந்தையே
நான் உங்களோடு....

எதையும் தாங்கும் இதயம்
என்னிடம்- இப்போது
உங்கள் கவலைகளால்
என்
தைரியத்தின் வேர்களுக்கு
தைரியம் இல்லை

நடுநிசி கடந்தாலும்
ஒவ்வொரு இரவும்
என் நித்திரைக்குப் பின்னே
உங்கள் உறக்கம்
இன்று இருவரும்
தூக்கம்கொள்ளவில்லை
இருமிக்கொண்ட காய்ச்சலால்.....

தைரியம் ஊட்டி வளர்த்த
தந்தையே
இப்போது தைரியமாய் இருங்கள்
நாளைய விடியல்
நமக்காக உதிக்கும்
கவலைகளால் துருப்பட்டு
கலாங்காதிருங்கள்
உங்கள்
கண்ணீர் துடைக்கும்
விரல்கள் எப்போதும்
என் வேர்வைகளும்
பேனை பிடிக்கும்
விரல்களும்...

நீங்கள் எழுதிய
கடைசி எழுத்து நான்
என் ஒவ்வொரு எழுத்தின்
முதல்ரசிகன் நீங்கள்
இலேசாக இருங்கள்
எல்லோரினதும் ஆசிர்வாதம்
கொணர்கிறேன்
எழுத்துக்களாலே.......

23 comments:

Theepan Periyathamby said...

அப்பாவின் அன்பை உண்மையாகவே எழுதியுள்ளீர்கள். அப்பாவின் நலத்துகாய் பிரார்த்திக்கின்றேன்

balavasakan said...

வருத்தப்படாதீரகள் றமேஸ் எங்கள் எல்லாரது பிரார்த்தனையும் தந்தைக்கு நல்ல சுகத்தை கொடுக்கும் தைரியமாக இருங்கள்..!!

vasu balaji said...

பார்த்துக் கொள்ளுங்கள் றமேஸ். ப்ரார்த்திக்கிறேன் உன்னோடும்.

Subankan said...

உங்கள் தந்தையின் நலனுக்காகப் பிரார்த்திக்கிறேன்

தீபன் said...

அப்பா மகனுக்கிடையான பாசத்தை அருமையாக சொல்லிருக்கீங்க... எப்போதும் அன்பு மிகுதியான நட்பே அது...

கவலைகளின் மருந்து காலம் இருக்கிறது.. கவலை ஏன் தைரியமாக இருங்கள்... அப்பா நலமடைவார்...

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

Ramesh said...

அனைத்துள்ளங்களுக்கும் நன்றிகள் அப்பாவோடு நான்....

S.T.Seelan (S.Thanigaseelan) said...

நான் உன்மையாகவே பிராத்திக்கிறேன்..அந்த பெறுமதியான உள்ளம் நலங் கொண்டு மீண்டு வர... கவலை படாமல் இருப்பா...

Chitra said...

Our sincere prayers for your father's recovery. My eyes were in tears, reading about the love that you have for him.

Kala said...

றமேஸ் பிராத்தனை மட்டும்
தீர்க்காது தீர்வு
நல்ல மருத்துவரிடம் பரிசோதித்து
அதற்கு நிவாரணம் தேடுங்கள்.
நானும் நம்பிக்கையுடன்.....
நாடி....{டுகிறேன்} “இறை”{ய} வனை

vasan said...

ற‌மேஷ்,
நாம் அ‌ப்பாவின் எச்ச‌ம்
உயர்வின் வ‌ழி, உயிரின் வ‌லி
வேண்டுத‌ல்களுக்கு விழி திற‌ப்பான்,
வேண்டுத‌ல் வேண்டானாகினும்.

ஹேமா said...

கண் கலங்கிவிட்டேன் றமேஸ்.
கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் அப்பாவை.உங்கள் கவலையை எழுத்துக்களுக்குள் கொட்டி வைத்திருக்கீர்கள் சகோதரா.
நல்லதே நடக்கும்.

Ramesh said...

Theepan said...
நன்றி ஜெயதீபன்

Ramesh said...

Balavasakan said...
நன்றி பாலா..

Ramesh said...

வானம்பாடிகள் said...
நன்றி ஐயா

Ramesh said...

Subankan said...
நன்றி சுபாங்கன்

Ramesh said...

தீபன்... said...
நன்றி தீபன்

Ramesh said...

Seelan said...
நன்றி அண்ணா

Ramesh said...

Chitra said...
நன்றி சித்ரா

Ramesh said...

Kala said...
நன்றி கலா.. வைத்தியசாலையிலேயே இருக்கிறார்

Ramesh said...

vasan said...
நன்றி வாசன் ஐயா

Ramesh said...

ஹேமா said...
நன்றி ஹேமா.

Ramesh said...

இப்பொழுது எங்க அப்பா குணமடைந்து வருகிறார்..
அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. அப்பாவோடு நான்....

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு