Pages

Thursday, July 22, 2010

தொக்கிய நிஜங்கள்

இப்போதும்
தொக்கிக்கொண்டே இருக்கிறது

அவள் ஓரவிழியில் கசிந்த
காதல் சாயம்
சிவப்பு பச்சை
காட்டாத தெருவிளக்கு
பழுதடைந்தது போல்..

பசிக் குழந்தையின்
அழுகையும்
கண்களைக் கசக்கிய
தாயின் முந்தானையும்
இதயத்தைத் தொடடுப்பார்க்கிறேன்
உயிருடன் நானா???

பாளம்வெடித்த பயிர் நிலம்
பார்த்து
வற்றிய கிணற்றில் நீர் எடுக்க
வளைந்த அந்த ஐயா.....

அடிக்கடி மனதின்
மூலைகளில் உரசிக்கொண்டு....

16 comments:

யோ வொய்ஸ் (யோகா) said...

:)

Chitra said...

பாளம்வெடித்த பயிர் நிலம்
பார்த்து
வற்றிய கிணற்றில் நீர் எடுக்க
வளைந்த அந்த ஐயா.....

அடிக்கடி மனதின்
மூலைகளில் உரசிக்கொண்டு....

...... வலிதான்..... ம்ம்ம்ம்......

anuthinan said...

//பசிக் குழந்தையின்
அழுகையும்
கண்களைக் கசக்கிய
தாயின் முந்தானையும்
இதயத்தைத் தொடடுப்பார்க்கிறேன்
உயிருடன் நானா???
//

பிடித்து இருக்கிறது கவிதை

SShathiesh-சதீஷ். said...

வரிகள் இதயத்தை தொட்டன. வாழ்த்துக்கள் அண்ணே

ஹேமா said...

மனதை உரசி வலிக்கச் செய்த வரிகள் றமேஸ்.
அருமையான கவிதை.

Ramesh said...

@யோ வொய்ஸ் (யோகா) said...

//:)//

:))) வருகைக்கும் சேர்த்து

Ramesh said...

@Chitra said...

///
...... வலிதான்..... ம்ம்ம்ம்......///

ம்ம்
நன்றி சித்ரா

Ramesh said...

@ Anuthinan S said...
///பிடித்து இருக்கிறது கவிதை//
நன்றி தம்பி

Ramesh said...

@ SShathiesh-சதீஷ். said...
//வரிகள் இதயத்தை தொட்டன. வாழ்த்துக்கள் அண்ணே///
நன்றி சதீஷ்
வலிதான் வாழ்க்கை

Ramesh said...

@ஹேமா said...
////மனதை உரசி வலிக்கச் செய்த வரிகள் றமேஸ்.
அருமையான கவிதை.////

உரசிய வலி தான்
நன்றி ஹேமா

Karthick Chidambaram said...

பிடித்து இருக்கிறது கவிதை

Ramesh said...

@Karthick Chidambaram said...

///பிடித்து இருக்கிறது கவிதை//
நன்றி கார்த்திக்

அன்புடன் நான் said...

கவிதையின் நிஜங்கள்... பொய்யாகவேண்டியவை!
கவிதைக்கு பாராட்டுக்கள்.

Ramesh said...

@சி. கருணாகரசு said...
////கவிதையின் நிஜங்கள்... பொய்யாகவேண்டியவை!////
ம்ம்
///கவிதைக்கு பாராட்டுக்கள்///
நன்றி கருணாகரசு

Kala said...

நெகிழவைக்கும் வரிகள்
{நிஜங்கள்} நன்றி றமேஸ்

Ramesh said...

நன்றி kala

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு