Pages

Friday, December 31, 2010

சிதறும் சில்லறைகள் - 10 (திரும்பிப்பார்க்கிறேன்)

வருட ஆரம்பம்:
விடைபெறும் ஆண்டுக்காக சென்ற வருட இறுதி இடுகைக்கவிதை போ 2009 வா 2010
......
கண்ணாடி வாழ்கையை
கவனமாய்
கொண்டுசெல்ல
வா
புது வருடமே...
உன்னை விட
எனக்குத் தெம்பு
இருக்கிறது
இருந்தாலும்
உன் வரவு நல்வரவாகட்டும்

மனதுக்கு வெள்ளையடித்து
உன்னை வரவேற்போம்

கண்களில் விளக்கேற்றி
உன்னை
வெளிச்சப்படுத்துவோம்
...........

பதிவுலகில் இக்கவிதையே ஒரு வெற்றியானது. பின்பு தொடர்ந்து தொடர் பதிவுகளினால் 2010 ஆம் ஆண்டு மட்டுமே நூறு இடுகைகளை தாண்டக்கூடியதானது(இப்பதிவுடன் 106 இடுகைகள்)பதிவுலக திருப்தியாக கருதுகிறேன். அதற்காக கஸ்டப்பட்டு , மனம்கவர்ந்து, பிடித்து பிடிக்காமல் வாசித்து பின்னூட்டி எதை எதையோ எல்லாம் சாதிக்க(??) உறுதுணையான அனைவருக்கும் நன்றி. தொடர்ந்திருங்கள். இப்பதிவுகளை இணைத்த திரட்டிகளுக்கும் நன்றிகள்.

வெற்றிகள்:
எனது கிராமத்து பாடசாலை மற்றும் பிள்ளைகளின் வறுமை நிலைமை என்பவை தொடர்பாக எழுதிய பதிவுகளால் எமது புலம்பெயர் உறவுகளுக்கு ஒரு தூண்டுதலையும் எமது பாடசாலை மற்றும் பிள்ளைகளுக்கு உதவும் எண்ணத்தையும் ஏற்படுத்தியது கடந்த வருட வெற்றிகளில் ஒன்று.
கடந்த மாசி (February) மாதத்திலிருந்து பொருளாதார வசதி குறைந்த குடும்பச் சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தினை மூன்று பிள்ளைகளுக்கு என ஆரம்பித்து சித்திரை மாதத்தில் இன்னும் இருவர் சோக்கப்பட்டு (வரும் தை மாதத்திலிருந்து மேலும் இரு பிள்ளைகளை இணைக்கக்கூடியதாக இருக்கும்)இச்சேவைக்கு ஒரு பாலமாக இருப்பது மகிழ்ச்சி வெற்றி. இவ்வுதவிச்சேவையை எமது உறவு கனடா வாழ் திரு.இரா. இராஜேந்திரா அவர்களுக்கு நன்றி கூறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.
"கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது" இதற்காக யாரோ ஒரு பிள்ளைகளுக்காக அவர்கள் கல்விக்காக ஆற்றும் உதவி எப்போதும் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை. இவ்வுதவிச்சேவை கடவுளுக்கு செய்யும் திருத்தொண்டாகவே எண்ணுகிறேன். எங்கெல்லாம் படிப்பதற்கு பிள்ளைகள் கஸ்டப்படுவதை உணருங்கால் ஏதாவது முடிந்தளவு உதவுங்கள் நாளைய விருட்சங்கள் வளர வாழ்த்துங்கள். இது தொடர்பான எனது முந்தைய இடுகை
அதேபோல் எமது பாடசாலைக்காக எமது கனேடிய வாழ் உறவுகள் சேர்ந்து பெருந்தொகை நிதி உதவியளித்தமைக்கும் நன்றிகளை சொல்லுகிறோம். என்றும் இணைந்திருங்கள் எமது கிராமத்தோடு.

நட்பு வெற்றி:

இணையம் மூலம் யாரோ யாரோ ஆனவர்களையும் முகம் தெரியாமல் முகவரி அறியாமல் எழுத்துக்களால் இணைந்த இதயங்கள் எத்தனையோ பேர். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ஆனால் அகத்தின் எண்ணம் பதிவில் நுகரலாம். இவ்வாறு எங்கோ ஆனவர்களையும் இதயம் தடவிப்பார்க்க வைக்கும். சமூகவலைத்தளங்கள் மூலம் அவர்கள், நிலைமை அறிய அவர்களுக்கு நல்லதோ அல்லது அதற்கு எதிர்மாறாவோ ஏற்படின் அவர்களை எட்டிப்பார்த்து நலம் கேட்டு பங்கெடுக்கும் தன்மை வெற்றி என்றே சொல்லலாம்.
ஒரு எழுத்துப்பிழை கண்டு அதைச்சொல்லி மின்மடல் அனுப்ப அதன் பின் இணைந்த அந்த நல்லுறவு, அறிவாளன் எனக்கு கிடைத்த கடந்த வருட நட்பு வெற்றி. வாழ்த்துக்கள் தல. உங்களால் வாசிப்புப்பழக்கத்தை அதிகப்படுத்திக்கொண்டேன். புத்தகங்களை வாங்க முயற்சிகள் மேற்கொண்டேன். மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்திக்கொள்கிறேன். அதிகளவு பதிவெழுதும் எண்ணத்தை தந்தமைக்கு நன்றி. தொடர்ந்திருங்கள் என்னோடு எழுத்தோடு.

மனம் கவர்ந்த பாடல்:
எல்லோரையும் மனசு வலித்த பாடல் "பூக்கள் பூக்கும் தருணம் ..." இப்பாடல் பற்றி முன்பொரு பதிவிட்டிந்தேன். சிதறும் சில்லறைகள் - 2
அந்தப்பாடல் இங்க வீடியோவில் ஆனால் இந்த காணொளி அழகாக இருக்கு வரிகளுடன்.
பாருங்கள்


எனது வாழ்வில்
கடந்த வருட ஆரம்பகாலங்களில் கஸ்டங்களை எதிர்நோக்கியிருந்தேன். ஆனாலும் எனது மருமகள் சயுரந்திரி பிறந்த தருணம் எனக்கு தனியார் துறையில் வேலை ஒரு திட்டத்துக்காக கிடைத்தது. இரட்டிப்பு மகிழ்ச்சி. எல்லோரும் அதிஸ்டக்கார மாமா என்று சொன்னார்கள் அப்போது.
நன்றி எனது தூக்கத்தை கலைத்து இனிய மனதை தந்த எனது மருமகளே நன்றி உனது வெற்றிகளுக்கு துணையாக இருப்பேன்.
இப்பொழுது தடுமலும் இருமலுமாய் கஸ்டப்படுகிறாள்
என்தாயுடன் என் மருமகள்



பின்னர் ஆசிரியத்துவத்துக்கு போட்டிப்பரீட்சையின் மூலம் தெரிவாகி இணைந்துகொண்டேன். இவ்வாறு மீண்டும் பாடசாலையில் உருவாக உருவாக்க. மட்டற்ற மகிழ்ச்சி.

பதிவர் சந்திப்பு
அனேக உறவுகளை சந்திக்க கிடைத்தது சந்தோசம்.

கவலை:
சிங்களத்தில் மட்டும் தேசியகீதம் பாடவேண்டும் என்கிற செய்தி. அது ஓய்ந்துபோனாலும் தீ மூட்டப்பட்டதாக உணர்ந்தேன். தமிழிலும் முழுமயாக பாடவராது எனக்கு அதன்மேல் ஒரு விருப்பம் விருப்பபடாமல் போனதால்.ஆனாலும் மனசுக்கு கவலையளித்த விடயம் இது. இதற்கு வலுச்சேர்க்கும் படியாக இப்பொழுது ஆரம்பித்திருக்கும் "சிலோன்" சிறிலங்காவாக இருப்பது. தமிழில் இலங்கையா? இல்லை "சிறிலங்கா" வா "ஸ்ரீ லங்கா" வா என இன்னும் தெளிவாக இல்லை.

சில பேரை இழந்திருப்பது கவலையானது. அதேபோல் இணைந்திருக்காமல் இருப்பதும் அதே நட்பில் தவறானது.

தெளிந்தும் தெளியாமலும்
சீனா உலகநாடுகளில் முதன்மை பெற்று வருகிறது. அண்மைய ஒலிம்பிக் மற்றும் ஆசிய போட்டிகள் என்று விளையாட்டுத்துறைகளிலும் பொருளாதாரத்திலும் ஆதிக்கத்தையும் புரட்சியையும் ஏற்படுத்தியிருப்பது மற்றைய நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையா அச்சுறுத்தலா என்பதும் நமது நாடு இந்திய, சீன பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் சேர்ந்து உறவாடுவதும் இன்னொரு சிந்திக்ககூடிய பிரச்சனைக்க வழிவகுக்குமா?? என்பது.

ஒரு ஸ்டேடஸ்:

"அங்கு நான் இருக்கிறேனா என்பது எனக்கு நீ சொன்னால்தான் தெரிந்துகொள்வேன்.
என்மனதில் நீ இருப்பதை நான் உனக்கு சொல்லும் போதுதான் புரிந்துகொள்வாய் என்பதை நான் அறிவேன்."

ஊடுறுவல்
எப்போதும் மற்றவர்களை மற்றவர் விடயத்தை ஆராய்வதில் சிலருக்கு ஏன் மனிதருக்கு இருக்கும் இயல்பு. இது சிலநேரங்களில் தேவையாகிறது. சில நேரங்களில் வெறுப்புத்தன்மையை ஏற்படுத்துகிறது. இணையத்தில் இந்த புல்லுருவிகள் (ஹக்கர்ஸ்) இருப்பது விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்கள் போல.(அரசு அல்லது சமய நிறுவனங்களின் பாதுகாக்கப்பட்ட இரகசிய ஆவணங்களை பொது மக்களின் பார்வைக்கு வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்றது.) ஆனாலும் அந்த ஜூலியன் பால் அசாங் (julian paul assange) இன் நேர்மை பிடிச்சிருக்கு காரணம்
//வலையமைப்பின் பாதுகாப்பு வலையங்களை உடைத்து உட்புகுந்தால் கணினிகளுக்கோ, அதிலுள்ள கோப்புகளுக்கோ எந்த சேதத்தினையும் விளைவிக்காதீர்கள், உங்கள் உட்புகுதலுக்கான ஆதாரங்களை அழிப்பதைத் தவிர வேறெந்த சேதத்தினையும் செய்யாதீர்கள்', இவை ஜூலியனின் உபதேசங்கள். ///
மேலதிக தகவல்கள் சுடுதண்ணியில்
இருந்தாலும் மற்றவர்களின் தகவல்களை அறிய முயற்சிகளை மேற்கொள்ளுவது ???

நன்றி


விடைபெறும் வருடத்திற்கான முந்தைய கவிதையின் சில வரிகள்

ஒவ்வொருமுறையும்
ஒவ்வொன்றாய்
உதித்துக்கொண்டன
உயிர்த்தெழுந்து கொண்டேன்
கிழிக்கப்பட்டன
உயிர்ப்பிழிந்து கொண்டேன்

நீ போகிறாய்
நான்
காத்திருக்கிறேன்
இருட்டிலும்
விண்மீன்களுகாய்
இதுவரை
ஆனதுக்காக
நன்றி சொல்லுக்கொண்டு

நீ
உதித்து
உதிர்ந்தாய்
நான்
உயிர்ப்பித்திருக்கிறேன்

விடைபெறுகிறேன்
புதுவருட வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டு
அனைவருக்கும் இனிய வருடமாகவும் சந்தோசச்சாரல்கள் நிறைந்த வருடமாகவும் அமைய வாழ்த்துகிறேன்.

6 comments:

Jana said...

வருட ஆரம்பம்:
சம்பிரதாயம்தான் என்றாலும் அதே ஏக்கத்துடன்.

வெற்றிகள்:
இதுதான் உண்மையான, தூய்மையான வெற்றி, உங்களுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும்.

நட்பு வெற்றி: எழுத்துப்பிழை சரியான ஆழமான, உன்னதமான ஒரு நட்பை சுட்டிக்காட்டிவிட்டதே ஆச்சரியம்தான்.

மனம் கவர்ந்த பாடல்:ஒத்த கருத்து, ஒத்த லகிப்பு!!

எனது வாழ்வில்: தேவதையின் வரம்! மாமனின் சுகம்!!

பதிவர் சந்திப்பு:சுகமான அனுபவம்.

கவலை: 30 வருடம் இருண்டு கிடந்தும் திருந்தலையே இதயங்கள்.

தெளிந்தும் தெளியாமலும்: சார்பியல்????

ஒரு ஸ்டேடஸ்:கொஞ்சம் புரிகின்றது

ஊடுறுவல் : மிகத்தவறு

நன்றி :மிக்க நன்றி

Ramesh said...

@@Jana said...
நன்றி அண்ணா
புதுவருட வாழ்த்துக்கள்

anuthinan said...

முதலில் புது வருட வாழ்த்துக்கள்!!!

கவிதை நல்லா இருக்குது அண்ணா!!

//வெற்றிகள்://

வெற்றிகள் விரிவாக்கம் அடைய வாழ்த்துக்கள்

//பதிவர் சந்திப்பு//


2010இன் மீட்டி பார்க்கும் அழகிய தருணம்

மருமகள் விரைவில் குணமடைந்து மாமாவுடன் விளையாடுவார்

Bavan said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணே..:D

வெற்றிகள் - மென்மேலும் அச்சேவைகள் வெற்றிபெறட்டும், பெறும்..:D

//வாசிப்புப்பழக்கத்தை அதிகப்படுத்திக்கொண்டேன்//

நானும் நானும்..:D
இவ்வருடம் குறைந்தது 20 புத்தகங்களாவது படித்திருப்பேன், நீங்கள் பரிசளித்ததோடு சேர்த்து,நன்றி அண்ணே பரிசளித்த புத்தகத்துக்கு..:D

பூக்கள் பூக்கும் தருணம் - பலரின் ரிங்டோன் அதுதானே, எங்கள் வீட்டிலேயே 3 பேரின் ரிங்டோன் அது..:)

மீண்டும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணே..:D

யோ வொய்ஸ் (யோகா) said...

இனிய புதுவருட வாழ்த்துக்கள் சகோதரா..

Ramesh said...

நன்றி அனு, பவன், யோகா

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு