Pages

Thursday, September 30, 2010

இரங்கற்பா

தேத்தாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலய வண்ணக்கர்
அமரர் கந்தப்பெருமாள் பரமலிங்கம் அவர்களின் மறைவுக்கு
இரங்கற்பா



குடிமரபின்கண் மக்கள் வாழ்
கோயில் வளர் தேனூர்
பதிவளரும் தமிழ் இயல்பினை
ஒட்டி பழம்பெரு பேனாச்சி
குடியின் பேர்கொண்ட
நீள் தலைவனே!

இன்று பரமனடி நீ சேர்ந்து
பரிதவிக்க எமை விட்டனயே!!
கார்மேகம் கலங்கி
கண்ணீர்ப் பூக்கள் தூவிச்செல்லும்.

கண்ணியமிகு காலனவனின்
கையினில் நழுவலாமோ...?
நீ செய்த சேவை போதுமென்று
எம்கண்ணில் விழுநீர் கங்கையாக
விட்புலம் சேர்த்தானோ எம்பெருமான்

கொம்புச்சந்தி பிள்ளையார்
ஆலய பரிபாலனசபை செயலாளராய்
பாலமுருகன் கோயில்
கண்ணகையம்மன் கோயில்
வண்ணக்கராய் நீவீர் ஆயினயே

கோயில் கோயில்
நடை நடந்து இன்று
இறைவனடி சேர்ந்தனயே
சிந்தை கலங்குதையா
நீ பிரிந்ததிலே
உன் ஆத்மா ஆறுதலடையட்டும்
உன் நித்திரை பூரணமடையட்டும்
இதய அஞ்சலி

Tuesday, September 28, 2010

இது ஸ்டேடஸ் - 06

"சந்தோசமும் இன்பமும் நமது செயல்களே தரும்.
மற்வர்களுக்காக நீ வாழ்கிறாய் என்று சொன்னால் உனக்காக யாரும் வாழமாட்டார்கள்.
ஆக நீயாக உனக்காக வாழ்"

"என்னால் செய்யப்பட்ட உதவிக்காக அதே உதவியை எனக்கு, உடனே செய்யவதை விட, கைமாறாக உதவி தேவைப்படும் வேறொருவருக்கு தருணத்தில் செய்துவிடுங்கள். உதவுதல் சங்கிலியாய் தொடரட்டும். தேவைப்படும் போது நானே கேட்பேன் # பார்த்தது பிடித்தது## அனுபவமும் கூட"

"அவன் திருந்திரானுமில்ல கேட்கிறானுமில்ல.
என்னைத் திருத்திக்கொண்டிருக்கிறான் என்று தான் சொல்லத்தோன்றுகிறது.
அமைதியும் அடக்கமும் அதிகரிக்கிறது"

"எதிரி எப்போதும் எதிரியே நண்பன் தான் அடிக்கடி பரிசீலிக்கப்பட வேண்டியவன்" ##படித்தது பிடித்தது##

"நிகழ்வுகளின் நிழல் படங்களும் அவற்றைப் பகிர்தலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
நான் இல்லா வேளையில் யார் பகிர்வார் எனக்காய் என்று ஒரு ஏக்கம்"

"இதுவரை நல்லாத்தான் இருக்கு இனியும் நல்லாவே நடக்கும்"

"என் தவறுகளைத் திருத்திக்கொள்வதில் எப்போதும் ஆவலாய் இருப்பேன்.
எங்கு தவறிழைக்கின்றேன் என்று சொன்னால் தானே எனக்கு விளங்கும்"

"தவறுகளில் ஏதும் இருப்பின் தண்டனை கொடுங்கள்.
கொடுக்கும் போது காரணத்தையும் சொல்லிவிடுங்கள்.
மன்னிப்பு வேண்டாம்."

"ஒரு தந்தை குடும்பபிரச்சனையால் தன் பிள்ளைகளை பிரிந்திருந்து பல வருடங்களின் பின் இணைந்த மகிழ்ச்சியில் மனம்.
இணையக் காரணம் நானும் ஒருவானாக."

"முழுமனதுடன் இல்லாவிட்டாலும் சில மணிநேரம் செல்கிறேன்...."

"மற்றவர்கள் போல் இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது நீயாகவே இருந்துகொள்"

மட்டக்களப்பு கல்லடிப்பாலம் புதிதாக அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. பல வருடமாய் இளுபறி நிலையிலிருந்து இப்போது வேலைப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.

Monday, September 27, 2010

கரைதல்

மழை

உண்டு உய்த்து
கண்டு நுரைத்து
அண்ணாந்து
மென்று விழுங்கி
தலைகோதி
மயிர்ப்புடைத்து
கரைகின்றேன்
சர்க்கரையாய்


பழைய பதிவொன்னு பெய்யெனப் பெய்க

பாசம்
வேதனையின் வெப்பத்தில்
உகுக்கும் ஆயிரம்
கண்ணீர்த்துளிகளையும்
அத்தனை கஸ்டத்தையும்
உன் ஓரவிழியில் கசியும்
ஒரு சொட்டு
அடக்கிவிடுகிறது

ஆறு குளம் கடல்
எவ்வாறு ஆனது என்று
உன் ஒரு சொட்டு
கண்ணீர்ப்பூ
கண்டுபிடித்து தருகிறது
'அம்மா'
வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு