அண்மைக்காலமாய் நமது மட்டக்களப்பில் பெரிய பல நம்பமுடியா நிகழ்வுகள். வந்தாறுமூலையில் அம்மன் கோவிலில் சலங்கு ஓசையுடன் பெரிய சத்தம் பூட்டிய கோவிலில்.
பின்னர் கல்லடியில் அம்மன் கோவில் ஒன்றில் அம்மன் தெரிவதாய் புலம்பல், அதே கல்லடி பிரதான வீதியில் உள்ள ஒரு சிறிய அழகிய பிள்ளையார் கோவிலுக்கு பின்னால் உள்ள வேம்பு மரத்தில் (நம்மட வழக்கில் வேப்ப மரம்) இருந்து பால் வடிவதை அலை அலையாய் மக்கள் சென்று பார்த்து வழிபாடு செய்கிறார்கள். நமக்கு இதில பெரிய உடன்பாடில்ல
அதிக வெப்பமான நேரங்களில் சில திராவகம் பெறக்கூடிய இருவித்திலை தாவரங்களில் இருந்து இப்படி பால் நிற அல்லது பசைத் தன்மையாய் திரவம் வெளியேறுவது இயல்பு,ஆனால் நாம் அடிக்கடி பார்க்கும் சுத்தமான ஒரே இடம் ஆலயங்கள். ஆகவே இங்கு மட்டும் தான் இப்படி நடக்குது என்று நினைப்பது நமது மன இயல்பு.
இதோ நமது கிராமத்திலும்(தேற்றாத்தீவு) இப்படி ஒரு நிகழ்வு. அதே போல் வேப்பமரத்தில் இருந்து பால் நிறத்திரவம் வழிந்து கொண்டிருக்குது. இப்போ இங்க அலை அடிக்கும் மக்கள் கூட்டம் அதிசயம் நிகழுது என்று..... நீங்களும் பாருங்க சில காட்சிகள்
அந்த பால் நிறத் திரவத்தினைக் காண இல்ல வேப்பமரப் பாலினைக் காண படை எடுக்கும் நமது மக்கள்
இப்படி பால் நிறத் திரவம் வழிந்து கொண்டிருப்பதை பார்த்த ஒருவர் சிலவேளை உள்ளுக்குள் எதோ இருக்குதென்று வேப்ப மரப்பட்டையை உரித்து விட்டாரு, பாருங்க அதன் பிற்பாடும் சொட்டுச் சொட்டாய் அதே பால் வழியுது.
கடவுளை நினச்சா கல்லை வைத்து விடுவார்கள். பாருங்க பால் வழிந்து விழும் இடத்தில கல்லை கடவுளாய். பாலாபிசேகத்தின் லிங்கமாய்
வேப்பமரப் பால் எடுக்கும் ஒரு அம்மணி தீராத வினைகளை தீர்க்கும் மருந்தாகும் என்ற நம்பிக்கையில்
ஆனாலும் நம்மட மக்கள் மத்தியில் பெரிய மனக் கவலை மீண்டும் சுனாமி வந்துவிடுமோ என்று. நம்ப முடியாத பல நிகழ்வுகள். சுனாமீ வரமுன் இப்படித்தான் பாம்புகள் பல படை எடுத்ததை சொல்லுவர்.
அதால தான் எது நடந்ததோ அது நன்றாக நடந்தது எது நடக்கிறதோ அதுவும் நன்றாக நடக்கிறது .........
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
வேம்பிலிருந்து வழிவதை நாம் பிசின் என்போம்.
அங்கே பாலென்கிறார்களா?
நன்கு முற்றிய சுமார் 3 அடி விட்டம்முள்ள நல்ல
வயதான வேம்பு சிலசமயம் இயற்கையாக வெடித்து,
அதில் இருந்து ஒழுகும் பால் போன்ற நிறமுடைய
திரவத்தை வேப்பங்கள் எனக் கூறியதை சுமார் 40 வருடங்களுக்கு முன் கண்டுள்ளேன். இப்போ இவ்வளவு வயதாக மரங்கள் கிராமங்களில் அருகிவிட்டதால் இப்படியான செய்திகள் வெகுகுறைவு. இப்படத்தில் உள்ள மரம் அந்த அளவு வயதானதல்ல. நிச்சயம் வழிவது பிசினே!
ஆனாலும் எதையும் தெய்வீகமாக்கி அற்புதமாக்குவது
இப்போ நமது நாடுகளில் வியாதியாகிவிட்டது.
இந்த மரத்தடியில் உண்டியல் வரவிட்டுவிடவேண்டாம்.
பார்க்கலாம் என்ன நடக்குது என்று
எதை பார்க்கப் போகுரீங்க தீபன். நன்றி
யோகன்
முதல்ல நன்றி உங்கள் கருத்துக்களுக்கு நண்பரே
///வேப்பங்கள் எனக் கூறியதை சுமார் 40 வருடங்களுக்கு முன் கண்டுள்ளேன்///
இது நமக்கு புதிதாய் இருக்கு.
ஆனால், எல்லோரும் கேள்வி என்னவென்றால் அந்த திரவம் தொடர்ச்சியாக வழிந்து கொண்டு அதாவது கொட்டிக் கொண்டு இருக்கு, ஆனால் இது முற்றிய மரம் அல்ல அதே போல் மற்றைய முற்றிய மரங்களில் சிறிதளவே பிசின் வருவது வழமை. அதுதான் இங்கு இது புதினம்.
///ஆனாலும் எதையும் தெய்வீகமாக்கி அற்புதமாக்குவது
இப்போ நமது நாடுகளில் வியாதியாகிவிட்டது.
இந்த மரத்தடியில் உண்டியல் வரவிட்டுவிடவேண்டாம்.///
அதை நினைத்து தான் அந்த நபர் மரப் பட்டையை உரித்து விட்டாரு
Post a Comment