மாதா, பிதா, குரு, தெய்வம்
இதில் சர்வ நிச்சயமாகத் தெரிந்தது மாதா
சந்தேகத்துக்கிடமாகத் தெரிவது தெய்வம்
சர்வ நிச்சயமாகவும் சந்தேகத்துக்கிடமாகவும் இருப்பது பிதாவும் குருவும். இவர்கள் இருவர் பற்றி சந்தேகம் எழலாம் சந்தேகங்கள் உண்மையாகவும் இருக்கலாம். தெய்வம் முழுக்க சந்தேகத்துக்குரியது ஆனால் அடையும் பொழுது முழுக்க உண்மையானது. இதனால் கடவுளைவிட கடவுள் நம்பிக்கையே நமக்கு தேவை.
இதனால் தாயானவள் நிலையாகிறாள். மாதா சந்தேகத்திற்கே இடமில்லாதவள். அவளிடமிருந்தே நமது ஜனனம் ஆரம்பமாகிறது. எவள் இல்லை என்றால் நான் இந்த பூமியில் பிறந்திருக்க முடியாதோ, எவளை இழந்து விட்டால் மீண்டும் அடையமுடியாதோ அவளே என் வாழ்க்கையின் தத்துவங்களைத் துவக்கி (தொடங்கி) வைக்கிறாள்.
எங்கள் குடும்பத்தின்
இலட்சியம்
மூலம்
தாய்
.........
இடப்பக்கம் வலப்பக்கம்
எண்டாலும் நான்
நீ வரும் பக்கமே
என் தலைப் பக்கம்
தானம்மா
உன் பத்துமாத
பரிசோதனையின் பின்
வெளியேறிய
“அக்கினிக்குஞ்சு” நான்.
கவலைப்படாதே….
அழிக்கப்பிறந்தவனல்ல
நான்
உலகம் வாழப்பிறந்தவன்.
4 comments:
ம்கும். நீ சொல்லலைன்னா அம்மா அறியமாட்டாளோ. ஆனாலும் சொல்லணும் என்ன. புள்ள வாயால கேட்டால் அம்மாக்கு பெருமைதானென்ன?
பரிசோதனையின் பின்
வெளியேறிய
“அக்கினிக்குஞ்சு” நான்.
கவலைப்படாதே….
அழிக்கப்பிறந்தவனல்ல
நான்
உலகம் வாழப்பிறந்தவன்.
...... wow! வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!
நன்றி வானம்பாடி ஐயா மற்றும் சித்ரா.
இது நீண்ட நாளைக்குப்பிறகு கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் எனும் சொற்பொழிவு கேடடேன் அதில் சில வரிகள் தான் மேலுள்ளது. கவிதை அம்மாவுக்காக எழுதப்பட்டது அதையும் இணைத்து போட்டேன்..
தங்களையும் இந்த பதிவையும் வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ் உள்ள முகவரியில் வந்து பார்க்கவும்.
http://blogintamil.blogspot.com/2011/10/5102011.html
Post a Comment