நம்ம பிரதேசத்தில மட்டுமல்ல அநேக இடங்களில் சிறுவர் தலைமை தாங்கும் குடும்பம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. தவிர்க்கமுடியாத சூழல் என்றும் குடும்ப நிலைமை காரணமாகவே இதற்குச் சிறுவர்கள் ஆளாவதாகவும் கூறி சிறுவர்கள் எதிர்காலம் கல்வித்துறையில் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. பல வழிகளில் உழைத்து பெற்றோரையும் தமது சகோதரர்களையும் பார்க்க வேண்டிய நிலைமைக்கு அதாவது குடும்பத்தைத் தலைமை தாங்கிக் கொண்டுசெல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள். இதற்கு பல அடிமட்டக் காரணிகள் இருக்கின்றன. வறுமை, சரியான கல்வியறிவின்மை, கல்வியை விட பெற்றோரின் சுகபோகம், பெற்றோரின் அக்கறையின்மை, பிள்ளை தவறான வழியில் மாட்டுப்படல் போன்ற பல காரணங்களை அடுக்கிக்கொண்டு போகலாம். இவற்றிலிருந்து இச்சிறுவர்கள் விடுதலை காண்பதென்பது மிகக் கடினமானதொன்றாக உள்ளது. குடும்ப சூழ்நிலையையே இதற்கு மிக முக்கியமான காரணியாக பிள்ளைகள் கருதுகிறார்கள்.
உண்மையில் இச்சிறுவர்களும் மெழுகுவர்த்திகளே.....
இவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும். அவர்களின் கல்வித்துறையில் அக்கறை செலுத்தி அவர்களை படிப்பித்து அல்லது அவர்கள் படிப்புக்கு உதவியேனும் நல்வழிப்படுத்த வேண்டுமல்லா.நாங்கள் நல்ல இடத்தில், உயர்வான பொருளாதாரப் பின்னணியில் இருக்கும் போது இச்சிறுவர்களின் கஸ்ட நிலைமைகள் நமக்குத் தெரிவதில்லை.
வறுமையும் புலமையும் சேர்ந்தே இருக்கும் என்று சொல்லுவர். இளமையில் வறுமை கொடிது என்று ஒளவையார் சொல்கிறார். இதனை எல்லாம் நாம் படித்திருக்கிறோம். படிப்பு என்பது பிரயோசனப்படுத்தலுக்கே.
ஆகவே இச்சிறுவர்களின் கல்விக்கு உதவுதல் நல்ல கல்விக்கு வழிகாட்டுதல் கடவுளுக்குச் செய்யும் தொண்டு என்று நாம் கருதலாம். சகோதரர்களே.. சற்று யோசியுங்கள் சிறுவர்களுக்கு உதவும் எண்ணங்களை வளருங்கள்.
ஆகவே இச்சிறுவர்களின் கல்விக்கு உதவுதல் நல்ல கல்விக்கு வழிகாட்டுதல் கடவுளுக்குச் செய்யும் தொண்டு என்று நாம் கருதலாம். சகோதரர்களே.. சற்று யோசியுங்கள் சிறுவர்களுக்கு உதவும் எண்ணங்களை வளருங்கள்.
சிறுவர்களும் மெழுகுவர்த்திகளே.....
19 comments:
சமூக அக்கறை உள்ள சிறந்த பதிவு .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .
நல்ல பதிவு! /இளமையில் வறுமை கொடிது/ முற்றிலும் உண்மை!
படிக்கத் தக்க மதிப்பெண்கள் இருந்தும், ஆசையிருந்தும் குடும்பச்சூழல் காரணமாக படிப்பைவிடுத்த பலரின் நினைவு வந்துவிட்டது!
பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்!
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
நன்றி சங்கர்
சந்தனமுல்லை said...
///படிக்கத் தக்க மதிப்பெண்கள் இருந்தும், ஆசையிருந்தும் குடும்பச்சூழல் காரணமாக படிப்பைவிடுத்த பலரின் நினைவு வந்துவிட்டது!///
இதனாலேயே எழுதத்தூண்டியது நம்ம கிராமத்தில் இது அதிகம் என்பதால் உணர்வு கொதிக்குது
நன்றி நண்பரே
நன்றி உலவு.கொம்
நல்லதொரு சமூகச் சிந்தனயோடான பதிவு றமேஸ்.மற்றைய நாடுகளைப் பார்க்கையில் எங்கள் நாட்டில் இந்த நிலை குறைவென்றே நினைக்கிறேன்.கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் எங்கள் பெற்றோர்கள்.
ஹேமா said...
///நல்லதொரு சமூகச் சிந்தனயோடான பதிவு றமேஸ்.
நன்றி ஹேமா
///மற்றைய நாடுகளைப் பார்க்கையில் எங்கள் நாட்டில் இந்த நிலை குறைவென்றே நினைக்கிறேன்.கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் எங்கள் பெற்றோர்கள்.///
உண்மைதான் ஆனால் பெண்தலைமை தாங்கும் குடும்பங்கள் அதிகரித்த நிலையில் சிறுவர்களின் கல்வி மிக மோசமாக உள்ளது. அதேநேரம் இவர்கள் குடும்பத்தை சுமக்கின்ற நிலைமையும் இருக்கிறது எமது நாட்டு கிராமப்புறங்களில்
ம்ம்.
இதுதான் நிதர்சனமான உண்மை.....
இது தெரியாம குழந்தை கல்வி அது இதுன்னு பேசிகிட்டு இருக்கானுக......மொதல்ல கிராமத்தில இருக்கிறவங்களுக்கு தொழில் தொடங்க / வேலை கிடைக்க ஒரு நல்ல வழிய காமிக்கணும்.....அப்புறம் பேசுங்க...
கிராமதில எந்த வேலையும் கிடைக்காததுனாலதான் நகரத்தை நோக்கி மக்கள் பயணப்படுகிறார்கள்....(அங்கு அவர்களுக்கு வேலையும்,அவர்கள் பிள்ளைகளுக்கு கல்வியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்)
வானம்பாடிகள் said...
//ம்ம்.///
இது புரியல....
வருகைக்கு நன்றி
நல்லவன் கருப்பு... said...
//இதுதான் நிதர்சனமான உண்மை.....
இது தெரியாம குழந்தை கல்வி அது இதுன்னு பேசிகிட்டு இருக்கானுக......மொதல்ல கிராமத்தில இருக்கிறவங்களுக்கு தொழில் தொடங்க / வேலை கிடைக்க ஒரு நல்ல வழிய காமிக்கணும்.....அப்புறம் பேசுங்க...
கிராமதில எந்த வேலையும் கிடைக்காததுனாலதான் நகரத்தை நோக்கி மக்கள் பயணப்படுகிறார்கள்....(அங்கு அவர்களுக்கு வேலையும்,அவர்கள் பிள்ளைகளுக்கு கல்வியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்)///
நன்றி முதல்வருகை மற்றும் கருத்துக்கும். உங்கள் கிராமத்துவிடயங்களையும் எழுதுங்க
நாளைய சமூதாயத்தின் மேல் அக்கறை கொண்டு, எழுதப்பட்ட பதிவு. பாராட்டுக்கள்
நல்ல பதிவு....
malar said...
///நல்ல பதிவு....///
முதல் வருகை பின்னூட்டம் என்பவற்றிற்கு நன்றி மலர் தொடர்ந்திருங்கள்
நல்ல சமூக அக்கறையுள்ள பதிவு ரமேஸ் அண்ணா....
இலங்கையில் சிறிது குறைவென்றாலும் ஏராளமான சிறுவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்பது உண்மை.... :(
கன்கொன் || Kangon said...
நன்றி டா
///இலங்கையில் சிறிது குறைவென்றாலும் ஏராளமான சிறுவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்பது உண்மை.... :(///
ம்ம் மனவேதனைக்குரிய விடயம்..:((
வேதனைதான்!!
விவேகம் இல்லாத பெற்றோருக்கு
பிள்ளையாய்ப் பிறப்பது.....
விவேகமான பெற்றோருக்குப்
பிறந்தும்..
விடிவை நோக்காமல்
இருளை விரும்பி அணுகுவதும்...
விவேகமிருந்தும்.....குடும்பப்
பாரச் சுமை தாக்க
விவேகம் வெறுமையாவதும்
சில குடும்பங்களில் நடக்கின்றன
இனி வரும் காலங்களில்
நடக்காது ஏனெனில்
படித்த பெற்றோர்கள் தான்!!
நல்ல பதிவு நன்றி றமேஸ்
Kala said...
////
விவேகமிருந்தும்.....குடும்பப்
பாரச் சுமை தாக்க
விவேகம் வெறுமையாவதும்
சில குடும்பங்களில் நடக்கின்றன
இனி வரும் காலங்களில்
நடக்காது ஏனெனில்
படித்த பெற்றோர்கள் தான்!!
////
்ம்்ம்ம்.. வாழ்க்கைச்சுமை
///நல்ல பதிவு நன்றி றமேஸ்///
நன்றி கலா
Post a Comment