Pages

Sunday, June 27, 2010

நினைவுகள் தொலைத்த தேசம்

அப்பா வருவாரா அம்மா
என்றது பிள்ளை
இந்தாடியம்மா என்று
பாலறுந்த முலை
தடவியவளாய்
அவள்
கருணைக் கண்கள்
கலங்கி
அவர் எங்க எண்டு
மணி அடிக்க
மனுநீதி கதை படித்த
நினைவுகளை
துப்பிக்கொண்டு

சோறு எப்படிம்மா வருது
இதோ பார்
உன் தந்தை விளைத்த
நிலம்
தண்ணீருக்கு தவித்து
கண்ணீருக்காய் மட்டும்

19 comments:

மதுரை சரவணன் said...

//அப்பா வருவாரா அம்மா
என்றது பிள்ளை
இந்தாடியம்மா என்று
பாலறுந்த முலை
தடவியவளாய் //

கவிதை வரிகள் அருமை. வாழ்த்துக்கள்

Chitra said...

தண்ணீருக்கு தவித்து
கண்ணீருக்காய் மட்டும்

..... கவிதையும் படமும் ஒன்றுகொன்று அர்த்தம் serkkirathu . arumai.

ஹேமா said...

றமேஸ்...வார்த்தைகள் வலி.அதைவிடப் படம் !

vasu balaji said...

ம்ம்:(

Ramesh said...

Blogger மதுரை சரவணன் said...

நன்றி சரவணா

Ramesh said...

Blogger Chitra said...
நன்றி சித்ரா

Ramesh said...

Blogger ஹேமா said...

நன்றி ஹேமா ம்ம்

Ramesh said...

Blogger வானம்பாடிகள் said...

ம்ம் நன்றி ஐயா

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

றமேஸ்...கவிதையும் படமும்
அருமை. வாழ்த்துக்கள்

Ramesh said...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

///றமேஸ்...கவிதையும் படமும்
அருமை. வாழ்த்துக்கள்
///
வாங்க ஆயிரத்தில் ஒருவன்
நன்றி முதல்வருகைக்கும் சேர்த்து

Riyas said...

VERY GOOD POEM...

Ramesh said...

Riyas said...

//VERY GOOD POEM...//
நன்றி றியாஸ்
முதல் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்

அன்புடன் நான் said...

மேலே உள்ளது சரியா புரியல...
கடைசி மட்டும் தான் புரிகிறது.

Ramesh said...

சி. கருணாகரசு said...

///மேலே உள்ளது சரியா புரியல...
கடைசி மட்டும் தான் புரிகிறது.
///
தவறு நடந்தது. இப்போது சரியாக வந்திருக்கு எண்டு நினைக்கிறேன்
நன்றி கருணாகரசு
"சிபி" அல்ல " மனுநீதி"
இப்போது புரியும் எண்டு நெனைக்கிறேன்
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

அன்புடன் நான் said...

கவிதை வடிவா இருக்கு....
கருதான் வலியா இருக்கு.

Ramesh said...

சி. கருணாகரசு said...

// கவிதை வடிவா இருக்கு....
கருதான் வலியா இருக்கு.//
வலித்ததாலே கவிதையானது ஆனால் இது நிஜத்தின் வெளிப்பாடு

தமிழ் மதுரம் said...

எங்களூரின் நரக ஞாபகங்களைக் கவிதையில் இயம்பியுள்ளீர்கள். காலங்கள் பல கடந்தாலும் எம் கண் முன்னே என்றும் படமாக விரிந்திருக்கும் நினைவுகளினை யாராலும் அழிக்க முடியாது.


இறுதியாக ஒரு சின்ன வேண்டு கோள்:
ஏற்றுக் கொள்வீர்களா தெரியவில்லை:
கவிதையில் ஒரு சில இடங்களில் குறியீடுகளைக் காட்டினால், வேறுபடுத்திக் காட்டினால் படிப்பதற்கு இன்னும் இலகுவாக இருக்கும்.

தமிழ் மதுரம் said...

அப்பா வருவாரா அம்மா
என்றது பிள்ளை
இந்தாடியம்மா என்று
பாலறுந்த முலை
தடவியவளாய்
அவள்//


இதனை


அப்பா வருவாரா அம்மா
என்றது பிள்ளை;
இந்தாடியம்மா என்று,
பாலறுந்த முலை
தடவியவளாய் அவள்,
கருணைக் கண்கள்
கலங்கி, அவர் எங்க எண்டு
மணி அடிக்க
மனுநீதி கதை படித்த
நினைவுகளை
துப்பிக்கொண்டு??


இப்படிச் சுட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

Ramesh said...

@தமிழ் மதுரம் said...
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
ஏற்றுக்கொள்கிறேன் உங்க கருத்தை அவசர அவரமாய் எழுதப்பட்டது அந்த கவிதை.

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு