இன்று தொடக்கம் இந்த சிதறும் சில்லறைகள் இடுக்கையை இடையிடையே எழுத எண்ணியுள்ளேன் முழுமையாக எழுதமுடியாமல் போனவைகளுக்காகவும் சேர்த்து....
இன்று பிடித்த நாள்
ஆபிரிக்காவின் தங்கம் சின்னம் என்று போற்றப்படும் முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதி, திரு. நெல்சன் மண்டேலா பிறந்ததினம்.
இவரைக் கெளரவிக்கும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையினால் இன்றைய தினம் ஜூலை 18ஆந்திகதி "சர்வதேச நெல்சன் மண்டேலா தினம்" ஆக 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு இன ஒற்றுமைக்காக, மனித உரிமைகளுக்காக, போர் முரண்பாடுகளுக்குத் தீர்வு நாளாக கொண்டாடப்படுகிறது.
அமைதி மற்றும் சுதந்திரத்திற்கு நெல்சன் மண்டேலா செய்த பங்களிப்புக்கு மரியாதை செய்யும் விதமாக ஐ.நா உத்தியோக தகவலை இங்கு காண்க
சர்வதேச நெல்சன் மண்டேலா தினம்
கவலை
மட்டக்களப்பு ஏ-4 வீதி செப்பனிட்டு வீதி அகலப்படுத்தப்பட்டு திருத்தவேலைகள் நடைபெற்றுவருகிறது. இதற்காக வீதியோர மரங்கள் தவிர்க்கப்பட முடியாமல் வெட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இது மட்டக்களப்பு கல்லடியின் வீதியோரத்தில் கடந்தவாரம் வெட்டப்பட்டு கிடக்கும் புளியமரங்கள்.. நான் அடிக்கடி உந்துருளியில் செல்லும்போது அலைபேசியில் யாரோடும் அவசரதொடர்புகொள்ள நான் நிற்பாட்டி கதைக்கும் அந்த மரங்களின் நிழல் இனி இல்லை. நல்ல பழங்கள் (அனேகமாக மாம்மழம்) வாங்கும் அந்த இடம் இல்லை... வேறுவழியில்லாமல் வெட்டப்படுகின்றன. ஆனால் வெட்டப்பட்டவைகளுக்காக ஒருமரமாவது நடப்படுமா வேறெங்கிலும்... இதுக்குத்தான் எதையும் திட்டமிட்டு செய்திருந்தால் இந்தக் கொடுமை இருந்திருக்காது இல்லையா..
திருந்துவார்களா??
இந்தப்படத்தைப்பாருங்கள் என்னொட ஒரு நண்பன் சிகரெட் புகைக்கும் போது அவன் உறவுக்காரன் ஒருவனைக் கண்டதும் அவன் ஆறாம் விரல் இருந்த இடம்.
எதற்கு இந்தப் பொழைப்பு
அனுபவம் சொல்லுது:
"பிரச்சனைகள் வருவதில்லை என்றால் நீங்கள் வாழ்க்கை வாழவில்லை என்று அர்த்தம். எல்லாம் கிடைக்கிறது நீங்கள் நினைத்தபடி நடக்குது என்றால் வாழ்க்கை வேலைக்காவாது"
Sunday, July 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
////"சர்வதேச நெல்சன் மண்டேலா தினம்" /////
அந்த மாமனிதர் இன்னும் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்
/////மட்டக்களப்பு ஏ-4 வீதி செப்பனிட்டு வீதி அகலப்படுத்தப்பட்டு திருத்தவேலைகள் நடைபெற்றுவருகிறது. இதற்காக வீதியோர மரங்கள் தவிர்க்கப்பட முடியாமல் வெட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன////
கடந்த மாதம் மட்டகளப்பு செல்லும் போது பாதை செய்வதை பார்த்தேன்.
பாதையோரத்தில் மரம் வளர்ப்பதை அநேகமாக அரசியல்வாதிகளின் மரம் வளர்க்கும் திட்டமாகவ பார்க்கிறேன்
@யோ வொய்ஸ் (யோகா) said...
////
அந்த மாமனிதர் இன்னும் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்
////
வாழ்த்துவோம்..
///
கடந்த மாதம் மட்டகளப்பு செல்லும் போது பாதை செய்வதை பார்த்தேன்.
பாதையோரத்தில் மரம் வளர்ப்பதை அநேகமாக அரசியல்வாதிகளின் மரம் வளர்க்கும் திட்டமாகவ பார்க்கிறேன்
////
நீங்கள் சொல்வது பாதை நடுவில் ஓரத்தில்லல்ல என நினைக்கிறேன்.
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
//இவரைக் கெளரவிக்கும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையினால் இன்றைய தினம் ஜூலை 18ஆந்திகதி "சர்வதேச நெல்சன் மண்டேலா தினம்" ஆக 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு இன ஒற்றுமைக்காக, மனித உரிமைகளுக்காக, போர் முரண்பாடுகளுக்குத் தீர்வு நாளாக கொண்டாடப்படுகிறது.//
நானும்...!
நானும் மட்டக்களப்பில் பார்த்தேன்!!௧ பல இடங்கள் மரங்கள் இல்லாமல் வேரும்சியாகவே இருந்தது. அபிவிருத்தி என்ற பெயரில் சில இயற்கைகளை இழந்து வருகிறோம்.
//திருந்துவார்களா??//
அண்ணே இதற்க்கு பதில்...
"பிரச்சனைகள் வருவதில்லை என்றால் நீங்கள் வாழ்க்கை வாழவில்லை என்று அர்த்தம். எல்லாம் கிடைக்கிறது நீங்கள் நினைத்தபடி நடக்குது என்றால் வாழ்க்கை வேலைக்காவாது"
எல்லாத்திலும் த்ரில் வேணும்!!!:P
@Anuthinan S said...
///நானும்...!///
நன்றி
///நானும் மட்டக்களப்பில் பார்த்தேன்!!பல இடங்கள் மரங்கள் இல்லாமல் வேரும்சியாகவே இருந்தது. அபிவிருத்தி என்ற பெயரில் சில இயற்கைகளை இழந்து வருகிறோம்.
////
ம்ம்
////அண்ணே இதற்க்கு பதில்..
எல்லாத்திலும் த்ரில் வேணும்!!!:P///////
வேணும் த்ரிலே வாழ்க்கையாகாமல்
//இன ஒற்றுமைக்காக, மனித உரிமைகளுக்காக, போர் முரண்பாடுகளுக்குத் தீர்வு நாளாக கொண்டாடப்படுகிறது//
- மனித ஒற்றுமை வளரட்டும். நல்ல பதிவு.
@ Karthick Chidambaram said...
///- மனித ஒற்றுமை வளரட்டும். நல்ல பதிவு.///
நன்றி கார்த்திக்
வருகைக்கும் சேர்த்து
Post a Comment