
பாடசாலை மட்டுமில்லை. பிரத்தியேக நடவடிக்கைகள்
பின்வருவனவற்றில் கவனம் செலுத்தினால் சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்புகளில் பெறுபேறுகளை அதிகரிக்க முடியும்.

ஆங்கிலப் புலமையை வளர்க்க பிரத்தியேக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆங்கில மொழித் தேர்ச்சி மற்றும் அதன் அவசியம் பற்றி தெளிவுபடுத்தி, இலகுபடுத்தப்பட வேண்டும். எமது மாணவர்களுக்கு ஆங்கிலச்சுமை உள்ளது.

உலக விஞ்ஞான, தொழிநுட்ப வளர்ச்சி பற்றியும் அதன் தேவை பற்றியும் விழிப்புணர்வூட்டல் வேண்டும். விஞ்ஞான கண்காட்சி, செயற்பாடுகள் மாணவர்ளை ஊக்கப்படுத்தலும் செயற்படுத்தலும் அவசியம். குழுவாக, ஒவ்வொரு வகுப்புக்களாக செயற்படுத்தல் வேண்டும். உதாரமாண Robotic, Automobile, Electrical and Energy, கண்காட்சி.

கணணித் துறை சார் நுட்பமுறைமைக் கையாளும் திறன் அவற்றைக் கொண்டு கற்றல் வளங்களை விரிவுபடுத்தல் வேண்டும். கணணி வளங்களை அதிகரிக்க வேண்டும். மாணவர்களைக் கையாளுவதற்கு இடமளிக்க வேண்டும். காட்சிப்படுத்தலே அனேகமாக நடைபெறுகின்றது.

இலகுவாக கணிதம் கற்பிக்கப்பட்டு கணிதத்தில் அனைவரதும் அடைவுமட்டங்களை அதிகரிக்க மாணவர்களை தூண்டுதல் வேண்டும். (கணிதத்தில் விருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்திட்டங்களை செயற்படுத்த வேண்டும்.) கணிதம் ஒரு மொழியாக வேண்டும்.

வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி, தமிழில் எழுத்துப்பிழை இல்லாத தன்மையும் பேச்சாற்றலும் அதிகரிக்கப்பட வேண்டும்.
மாணவர்களை சோம்பேறித்தனத்தை நீக்கலாக தொடர்ச்சியான செயற்பாடுகளுடன் இற்றைப்படுத்த வேண்டும்.

ஆளுமை வளர்ச்சி, ஆன்மீக மன ஒருமைப்பாடு பயிற்சி, தன்னடக்கம், தலைமைத்துவ பயிற்சி, அதிகரிக்கப்பட வேண்டும்.

இயற்கை மற்றும் சூழலியல் பற்றிய விளக்கங்களும் இவற்றை பாதுகாக்க மாணவர்களால் செயற்றிட்டங்களை செயற்படுத்தல் வேண்டும்.

மாணவர்களின் சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மட்டும் விமர்சிப்பதை விட வாய்ப்புகளை வளங்களை அதிகரிக்கவேண்டும்.

உயர்தர வகுப்பு துறைகளைப் பற்றி மாணவர்களுக்கு தெளிவுபடுத்தல் வேண்டும். துறை சார் நிபுணத்துவமானவர்களை அறிமுகம் செய்து மாணவர்களது ஆசை, ஆற்றல், தேடல் விழிப்புணர்வு அவசியம் வழங்கல் வேண்டும்.

மாணவர்களது உடல்நலம் சீராகப் பேணப்பட வேண்டும். இதற்கு உடற்பயிற்சி விளையாட்டு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய அறிவை மாணவர்களுடன் பெற்றோருக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.
றமேஸ்
No comments:
Post a Comment